தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அன்று சமாதி கட்டியவர் அண்ணா. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு இன்று புத்துயிர் கொடுப்பவர் விஜய் அண்ணா.
அசைக்கு முடியாத தலைவராக இருந்த எடப்பாடியைத்
தூக்கி எறிந்த அதிமுகவின் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
சுமக்க முடியாத கடன் சுமை. முதல் நாளே புலம்பிய முதல்வர் விஜய். மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பயணம் ஆகியவற்றுக்குச் சிக்கல்
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழக தேர்தலில் வாக்களித்த
17 பேர் விமான நிலையங்களில் கைது. சர்கார் படபாணியில் நியாயம் கிடைக்குமா?
தமிழக அரசியல் எதிர் பார்த்ததைவிட மிகுந்த பரபரப்பாக உள்ளது. ஆட்சியைத்
தக்க வைப்பேன் என நம்பிக்கையுடன் இருந்த ஸ்டாலின்
தோல்வியடைந்துள்ளார். விஜய்யைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் காலி எகன் கணக்குப் போட்டவர்கள்
அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தனது சட்ட மன்ற உறுப்பினர் யார் எனத் தெரியாமலே, விஜய்
சொன்னதற்காக கொத்துக் கொத்தாக வாக்களித்தனர்.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 118 தொகுதிகளில்
வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.
10 பேருக்கு விஜய் என்ன செய்யப்போகிறார் என காத்திருக்கையில் திமுகவுடன் உரசுப்பட்ட காங்கிரஸ், ஓடிப்போய் கைகொடுத்தது.
திமுகவின் கூட்டணியில் வெற்றி பெற்ற க்கங்கிரசை
மகிழ்ச்சியுடன் கைகுலுகி வரவேற்றார் விஜய். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதென திமுக கண்டனம் தெரிவித்தது.
நகமும் சதையுமாக இருந்த திமுகவும், காங்கிரஸும் கீரியும் பாம்புமாக
மாறிவிட்டன. காங்கிரஸின் திட்டம் வேறு விதமாக
இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, தெலுங்கு தேசம் எங்கும் ஆழமாகக் கால் வைப்பதற்கு விஜய் உதவுவார்
என்ற தூரநோக்கு என்கிறார்கள் விமர்சகர்கள். விஜய் இல்லாமலே கேரளத்தில் காங்கிரஸ்
ஆட்சியைப் பிடித்துவிட்டது. விஜய்யுடன் சேர்ந்தால் தென் மாநிலங்களில் அறுவடை செய்யலாம்
என ராகுல் காந்தி நினைக்கிறார். அரசியல் சதுரங்கத்தில் ராகுல் காந்தி பெரிய தவறு செய்து
விட்டார். வட மாநிலக் கட்சிகள் ராகுலை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ராகுல் பிரதமராவதை,
மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் மட்டும்தான் ராகுல் காந்தியைத்
தூக்கிப் பிடித்தார். இந்திய அரசியலில் ராகுல்காந்தியை தனது தோளில் தூக்கிச் சுமந்தவர்
ஸ்டலின் என்ற உண்மை என்றைக்கும் நிலைத்து நிற்கும்.
சட்டசபை தேர்தலில்
108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக
உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்காக நான்கு முறை ஆளுநர் மாளைகைக்கு விஜய் சென்றார். போதிய பெரும்பான்மை இலாததால் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். அரசியல்
தெரியாதவர்களின் வழி காட்டலால் விஜய் அவமானப்படுத்தப்பட்டார். ஆட்சி அமைக்க
தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் திமுக
கூட்டணியில் வெற்றி பெற்ற கொம்யூனிஸ்டுகளும், விடுதலைச் சிறுத்தைகளும் விஜய்க்கு ஆதரவளித்துள்ளன.
ஆளுநரின் தலையீடு ஜனாதிபதி ஆஅட்சி என்பன தமிழகத்துக்குள் புகுந்து விடக்கூடாது என்பதே முக்கிய
கருப்பொருளாகப் பேசப்பட்டது.
பெரும்பான்மையைக் காட்டியதால் பதவி ஏற்பு வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்பே விஜய்க்கு
எதிரான விமர்சனங்கள் வெளியாகத்தொடங்கின.
பதவி ஏற்பின் போது வந்தே
மாதரம் முதலில் பாடப்பட்டௌ, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப்பாடப்பட்டதால் தமிழகமே
கொந்தளித்தது. அரசாங்கம் அனுப்பிய சுற்று நிருபத்தின் பிரகாரமே பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றதாக
தமிழக அரசு குறிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், வங்க தேச மாநிலத்தில் பதவி ஏற்பின்
போது வந்தே மாதரம் பாடப்படவில்லை என்ற கேள்விக்குப்
பதில் இல்லை.
விஜக்கு போதிய பெரும்பான்மை
இல்லாத நிலையில் திமுகவும், அதிமுகவும் இணைந்து
ஆட்சி நடத்தப்போவதாக செய்தி தீயாகப் பரவியது. இந்தச் செய்தியால் திமுக தொண்டர்களும்,
அதிமுக தொண்டர்களும் கடும் கோபமடைந்தனர்.
இந்த வதந்தீக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய ருடேக்கு பேட்டியளித்த ஸ்டாலின் ஆரு மாதங்களுக்குப் பொறுமையாக இருக்கப்போவதாகத் தெரிவித்தாஅர். அதிமுகவுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கப்போவது கற்பனை என்றார்.
இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி
மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக
தகவல் வெளியானது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, தவெக ஆட்சியமைப்பதில் எந்த இடையூறும்
செய்யமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதேவேளை எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையில், சுமார்
30 எம்எல்ஏ-க்கள், தனியார் விடுதியில் தங்கியது
அதிமுகவில் உள்ள பிளவை வெளிச்சம் போட்டுக்
காட்டியுள்ளது. ஆதவின் மாமியார் லீமாதான் இதன் பின்னணியில் உள்ளதாக எடப்பாடிக்கு ஆதரவானவர்கள்
தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர்
மூலம் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில், அதனை பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார். ஆனால், அந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எடப்பாடி
பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக செயல்படுவார்
என 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், மாலையில், எஸ்பி வேலுமணிக்கு
ஆதரவாக 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டதால், அதிமுகவின் உட்கட்சி மோதல்
வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவத்தின் மூலம்,
எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலும் அதிமுக
இரண்டாக உடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. காலையில் இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி
மறுத்த நிலையில், மாலையிலேயே அவர் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அரசியல்
வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்க்கு ஆதர்வான
25 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 29 பேரின் பதவிகளைப் பறித்த எடப்பாடி புதியவர்களை நியமித்தார்.
அதிமுக எடப்பாடியின் கையில் இருக்கிறது. ஆனால், தமிழக சட்ட சபையில் 25 பேர் எடப்பாடிக்கு
எதிராக இருக்கிறார்கள்.அங்கு சபாநாயரின் தீர்ப்பே
இறுதி முடிவாகும்.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட
22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எஸ்.பி. வேலுமணி அணி நடவடிக்கை எடுத்திருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கும் கொறடாவுக்கே
அதிகாரம் உண்டு என எடப்பாடி தரப்பு சொன்னாலும், பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில்
எஸ்பி வேலுமணி தரப்புக்கே கொறடா அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என கூறுகின்றனர். ஒருவேளை
எஸ்பி வேலுமணி தரப்பு அங்கீகரிக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் எம்எல்ஏ
பதவி பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.
விஜய் தலைமையிலான தவெக
அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடியின்
அனி எதிர்த்து வாக்களித்தது. மற்றைய அணி ஆதரவு தெரிவித்தது. அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்க
வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், வேலுமணி அணி இதை ஏற்காமல், தாங்களே சட்டமன்றக்
குழுவின் உண்மையான பெரும்பான்மை அணி என்றும், சி. விஜயபாஸ்கர்தான் கொறடா என்றும் வாதிட்டு
வந்தது. அதன்படி, அவர்கள் தனியாக முடிவு எடுத்து விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி நடந்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்
தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு
ஏற்கனவே வலியுறுத்தி வந்தது.
இந்த சூழலில் தற்போது எஸ்.பி. வேலுமணி அணியும் அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "உண்மையான அதிமுக சட்டமன்றக் குழு நாங்கள் தான். எங்கள் கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி நியமித்த அக்ரி
கிருஷ்ணமூர்த்திக்கே சபாநாயகர் அங்கீகாரம் வழங்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், வேலுமணி அணியினர் தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக வாதிட்டு
வருகின்றனர். இதனால் சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும்
முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்பும்
இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் அதிமுகவின்
எதிர்கால தலைமை யார்? சட்டமன்றக் குழு கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்ற கேள்விகளுக்கு
விடை தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தவெக தனிக் கட்சி வெற்றி
பெற்று ஆட்சி அமைத்துவிட்டால் அமைச்சர் பதவி கிடைக்கும் எனப்பலர் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களும் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படுவதால்
விஜய் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
சட்டசபையில் கேட்கும்
கேல்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தடுமாறுவதால்
தவெகவினர் நொந்துபோயுள்ளனர். இதை எல்லாம் தாண்டி
விஜய் சமாளிப்பாரா எனப்தும் கேள்விக்குரியாகவெ
உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காகப்
பலர் வெளிநாட்டில் இருந்து சென்றார்கள். விசிலுக்கு வாக்களிக்கப்போவதாக அவர்கள் சொன்னார்கள்.
அவுஸ்திரேலியா, இலங்கை,
கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள் வாக்களித்ததாகப் பேட்டி கொடுத்தார்கள். பலர் வெளிநாட்டு
குடியுரிமை பெற்றிருந்தும் தமிழகத் தேர்தலில்
வந்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுமார் 17 பேர் வாக்களித்த குற்றாச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய நாட்டு குடிமக்கள்
மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத்
தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விட்டால் அவர்களுக்கு
இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும்.
அப்படிப்பட்ட வெளிநாட்டு
குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்டிருக்கலாம்.
ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.
இந்நிலையில்தான் நடந்து
முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான
தமிழர்கள், இங்கு வந்து சொந்தத் தொகுதியில் வாக்களித்ததாக தகவல் வெளியானது.
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. அவர்கள்
அறிவுறுத்தலின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள
குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாடுகளுக்குச் செல்ல
விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த
அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால்,
அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
அவர்களின் விமானப் பயணங்களை
இரத்துசெய்து, அவர்களை பொலிஸ் நிலையங்களில்
ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம்
வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குமாறாக, தமிழக சட்டப்பேரவைத்
தேர்தலில் வாக்களித்துள்ளது தெரியவந்தது.
அவர்கள் சென்னை உள்ளிட்ட
பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில்
உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர்.விஜய்
நடித்த சர்கார் பட பாணியில் மறு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் நிரந்தர
குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment