Friday, September 4, 2026

பிரதமர் கனவில் ராகுல் காந்தி முட்டுக்கட்டை போட்டவிஜய்


 

பிரதமர் கனவில் ராகுல் காந்தி

முட்டுக்கட்டை போட்டவிஜய்

 தமிழக அரசியலில் சம்பவம் செய்த விஜய்  இந்திய அரசியலை நோக்கிக் குறி வைத்திருக்கிறார். அவருடைய ஆஸ்தான ஜோதிடரும், அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனவும் உசுப்பிவிட்டுள்ளனர். வெளிப்படையாக எட்ய்ஹையும் பேசாமல் மெளனமாகக் காரியமாற்றும் விஜயின் நெஞ்சிலும் பிரதமர் ஆசை குடிகொண்டுள்ளது.

அறுதிப் பெரும்பானமை இல்லாமல் தமிழகத்தை ஆட்சி செய்கிறார் விஜய். ஜெயலலிதாவின் பாசஹியில் இது மைனாரிட்டி சர்கார். விஜய் முதலமைச்சராவதற்கு முதலில் கைகொடுத்தவர் ராகுல் காந்தி. ராகுல் கந்தியின் உதவியுடன் முதல்வரான விஜய்  இன்று அவருக்கே வில்லனாக மாறியுள்ளார்.  விஜய் உடைய பிரதமர் ஆசையால் ராகுல் காந்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.

திமுகவை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இதுவரைகாலமும் விஜய்யையும் அவரது ஆட்சியையும் போற்றிப் புகழ்ந்து பாடிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தமிழக அரசுக்கு எதிராகத் திரும்பி உள்ளார்.

தவெக இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறது.நாங்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவில் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறோம். ஆனால் தவெகவினர் இன்னும் தங்களை ரசிகர் மன்றமாகவே நினைத்துக்கொண்டு இப்படி பேசுகிறார்கள் என அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.  கார்த்தி சிதம்பரம் போன்ற காங்கிரஸ் எம்பிக்களும்,  யாருக்கு வேண்டுமானாலும் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், கனவு காண்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது மட்டுமே ஒருவரை பிரதமராக்கும்" என்று யதார்த்தத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் தவெகவுக்கும்,காங்கிரஸுக்கும் இடையே முட்டல்  மோதல்கள் எழுந்துள்ளன.

தென் இந்தியாவில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என ஆதவ் அர்ஜுனா ஆதங்கப்படுகிறார். அவரது ஆதங்கத்துக்குப் பின்னால் சுயநலமும் மறைந்துள்ளது. விஜய் பிரதமரானால்  தமிழக முதல்வராகலாம் என ஆதவ் அர்ஜுனா கனவு காண்கிறார். ஆனால் ஆதவ் அர்ஜுனவுக்குப் போட்டியாக ஆனந்த்,நிர்மல்குமார் போன்றோர் வரிசையாக நிற்கிறார்கள்.

இந்தியாவின் பிரதமர்களை உருவாக்கியவர்களில் காமராஜரும், கருணாநிதியும் முக்கியமானவர்கள். பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தபோது எனது உயரம் எனக்குத் தெரியும் என தட்டிக்களித்தவர் கருணாநிதி. ஸ்டாலினும் அதையே சொன்னார். விஜய் உடைய ஆசைக்கு அளவில்லை.அதனால் இதனைக் கடந்து சென்றுவிட முடியாது.

 டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடமும் இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருக்க்க்கிறது. தமிழகத்தில் ஆட்சி நிலைத்தன்மைக்காக தவெகவுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் தங்களது முதன்மை தலைவரான ராகுல் காந்தியின் இடத்திற்கு எந்தவித சவாலும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. மாநில அளவில் கூட்டணி அமைத்துவிட்டு, தேசிய அளவில் தனி பாதையை விஜய் தேர்ந்தெடுத்தால், அது கூட்டணி தர்மத்திற்கு முரணானது என்ற வாதமும் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இப்போதே பிரதமர் வேட்பாளர் பற்றிப் பேசுவது தேவையில்லாத அவசரம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். 

தவெகவின்  தேசிய அரசியல் ஆசை, தமிழகத்தில் அமைந்துள்ள தவெக - காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை பாதிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வெறும் மாநிலக் கட்சியாக மட்டும் இல்லாமல், தென்னிந்தியாவின் உரிமைக் குரலாக விஜய்யை முன்னிறுத்த தவெக திட்டமிடும் அதே வேளையில், தங்களின் தேசிய செல்வாக்கை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. 2029 தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், இப்போதே தொடங்கியுள்ள இந்த பிரதமர் பதவி மோதல், வரும் நாட்களில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

விஜய்யின் இந்த தேசிய அரசியல் நகர்வுக்கு வரலாற்று உதாரணம் ஒன்றை தவெகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். 1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜனதா தளம் கட்சி வெறும் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அசாதாரண அரசியல் சூழல் மற்றும் கூட்டணிக் கணக்குகள் காரணமாக, அக்கட்சியின் தலைவர் தேவகவுடா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதேபோன்ற ஒரு அரசியல் மாற்றம் மற்றும் வாய்ப்பு 2029-ல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தவெக தலைமை கணக்கு போடுகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் தீவிரமாகப் பணியாற்றி சுமார் 100 இடங்களை தவெக கைப்பற்றினால், மத்தியில் உருவாகும் கூட்டாட்சி சூழலில் விஜய் பிரதமர் ஆவதற்கான கதவுகள் தானாகவே திறக்கும் என்பது அக்கட்சியின் வியூகமாக உள்ளது. 

விஜய் உடைய பிரதமர் கனவுக்கு மோடி,அமித்ஷாகூட்டணி நிச்சயம் வேட்டு வைக்கும்.  பாரதீய ஜனதா விரும்பியதிமுக,அதிமுக இல்லாத தமிழகம் இப்போது செயல் படுகிறது. மோடிக்கு எதிரான தலைவராக விஜய் இருக்க மாட்டார். விஜய் உடைய ஆசைக்கு  பாரதீய ஜனதா முட்டுக்கட்டை போடும் என்பதே யதார்த்தம்.

இந்திய நாடாளுமன்டத்  தேர்தல் இன்று நடைபெற்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று  Mood of the Nation கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.  நடத்திய சர்வே முடிவுகளில் மோடியின் செல்வாக்கு குறையாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இன்று தேர்தல் நடைபெற்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்கள் வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் நடத்திய இதே சர்வேயில் 352 இடங்கள் மோடிக்கு கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் 8 மாதங்களில் மோடி அரசுக்கு 26 இடங்கள் குறைந்துள்ளன.  இந்த சர்வே முடிவுகளின் படி பார்த்தால், ஜென்சி இளைஞர்களின் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை இருப்பதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான என்டிஏவுக்கு செல்வாக்கு பெருமளவில் குறையவில்லை என்பதே தெரிகிறது.  காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 185 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான சர்வேயில் 182 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்டு இருந்தது. இதை வைத்து பார்க்கும் போது கடந்த 8 மாதங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு சற்று செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவின் அடுத்த பிரதமராக யாரை விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக 9.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி என்று 48.7 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வரான விஜய், பிரதமர் ரேசிலும் டாப் 3 க்குள் இடம் பெற்று இருக்கிறார் என்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன. இந்தியா முழுவதும்  அங்கத்தவர்களைக் கொண்ட ராகுல் காந்தியால் மோடியை எட்ட முடியவில்லை. விஜய் எம்மாத்திரம்  என விமர்சகர்கள் கேட்கின்றனர்..

மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக அரசியல் இல்லை. மாற்றம் ஏமாற்றமாக இருப்பதாக சலசலப்பு எழுந்துள்ளது. தமிழகத்தைக் கட்டமைத்த பின்னர் இந்திய அரசியலைப் பற்றி யோசிக்கலாம் என எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன.

 

No comments: