Tuesday, September 9, 2025

உலகக்கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஜேர்மனி அணியில் மூன்று புதுமுகங்கள்,

 

  2026 ஆம் ஆண்டு   நடைபெறும் உலகக்  கிண்ண   தகுதிச் சுற்றுக்கான தொடக்கப் போட்டிகளுக்கான தனது 23 பேர் கொண்ட அணியை ஜேர்மனி தலைமைப் பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மேன் புதன்கிழமை அறிவித்தார், சில அனுபவமிக்க வீரர்களை விடுவித்து மூன்று புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார்.

 ஸ்லோவாக்கியா , வடக்கு அயர்லாந்துக்கு ஆகியவற்றுக்கு எதிரான  போட்டிகளில்  புதிய வீரர்களுடன்  ஜேர்மனி களம் இறங்கும்.

ஆக்ஸ்பர்க்கைச் சேர்ந்த கோல்கீப்பர் ஃபின் டாமென், ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட்டைச் சேர்ந்த டிஃபென்டர் நாம்டி கொலின்ஸ் ,மைன்ஸ் மிட்ஃபீல்டர் பால் நெபெல் ஆகிய மூவரும்  ஜேர்மனிய தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.. இந்த மூவரும் ஏற்கனவே ஜேர்மனியின் இளைஞர் அணிகளில் பிரகாசித்துள்ளனர். கொலின்ஸ் ,நெபெல் ஆகிய இருவரும் இந்த கோடையின் தொடக்கத்தில் U21 ஐரோப்பிய சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள்.

 , 2021 ஆம் ஆண்டில் முன்னாள் U21 ஐரோப்பிய சம்பியனாக டாமென் மதிப்புமிக்க அனுபவத்தைக் கொண்டு வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேஷன்ஸ் லீக் பிரசாரத்தில் ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து அணியை புத்துயிர் பெறச் செய்யும் நாகல்ஸ்மேனின் உறுதிமொழியை அவர்களின் அழைப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ரியல் மாட்ரிட்டின் அன்டோனியோ ருடிகர், மைன்ஸின் நதியம் அமிரி, , விஎஃப்பி ஸ்டட்கார்ட் இரட்டையர்கள் ஏஞ்சலோ ஸ்டில்லர்   ஜேமி லெவெலிங் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புகின்றனர்.   ரசிகர்கலுக்குப் பழக்கமான பல வீரர்கள் ஜேர்மனிய அணியில் இல்லை.

சமீபத்தில் பேயர்னை விட்டு வெளியேறிய பிறகு துருக்கியின் கலாட்டசரேக்குச் சென்ற‌ லெராய் சேன் சேர்க்கப்படவில்லை.  சேனின் வெளிநாட்டு குடிபெயர்வை சுட்டிக்காட்டி நாகல்ஸ்மேன் இந்த விடுபட்டதை நியாயப்படுத்தினார், விங்கர் இப்போது "ஐரோப்பாவின் உயர் மட்டத்திற்கு சற்று கீழே" ஒரு லீக்கில் போட்டியிடுகிறார் என்றும், திரும்ப அழைக்கப்படுவதற்கு அவர் "அங்கு இன்னும் தனித்து நிற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

அலெக்ஸாண்டர் பாவ்லோவிச், ராபின் கோசன்ஸ், திலோ கெஹ்ரர் , பெலிக்ஸ் நெமேச்சா ஆகியோர் பங்கேற்காத பிற வீரர்களாகும். காயங்கள் காரணமாக ஜமால் முசியாலா, கை ஹாவர்ட்ஸ், நிகோ ஷ்லோட்டர்பெக், முதல் தேர்வு கோல்கீப்பர் மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் போன்ற முக்கிய வீரர்களும் பங்கேற்கவில்லை.

ஜேர்மனி தனது தகுதிச் சுற்றுப் பயணத்தை வியாழக்கிழமை இரவு பிராட்டிஸ்லாவாவில் ஸ்லோவாக்கியாவுக்கு எதிராகத் தொடங்கி, மூன்று நாட்களுக்குப் பிறகு கொலோனில் வடக்கு அயர்லாந்தைச் சந்திக்கிறது.   வரலாற்று ரீதியாக, ஜேர்மனி  இரு எதிராளிகளுக்கும் எதிராக வலுவான சாதனையைப் படைத்துள்ளது: ஸ்லோவாக்கியாவுடன் 11 மோதல்களில் இருந்து எட்டு வெற்றிகள் , வடக்கு அயர்லாந்திற்கு எதிரான 19 போட்டிகளில் 13 வெற்றிகள்

 

ரமணி

  

 

No comments: