Wednesday, October 1, 2014

கருணாநிதிக்கு எப்போது ?


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளிஎன நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கிய பின்னர் கருணாநிதிக்கு எப்போஎனப் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஜெயலலிதாவுக்குத்தண்டனை கிடைத்ததனால் கருணாநிதியும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.

இரண்டு பிரதான திராவிடக்கட்சிகளும் யுத்தத்துக்குத்தயாரான அண்டை நாடுகளைப்போன்றே எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளன. ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமனறத்தீர்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொதிப்படைய வைத்துள்ளது.தாம் வீழ்ந்து விட்டோம் என அவர்கள் நினைக்கின்றனர். திராவிட முன்னேற்றக் க‌ழகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டாது அமைதியாக இருக்கிறது.

 இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளும்  க‌ருணாநிதி அணி ஜெய‌ல‌லிதா அணி என‌ப்பிரிந்துள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ ப‌து ஆண்டுக‌ளாக‌ காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு முட்டுக் கொடுத்த‌ க‌ருணாநிதியின் மீது ப‌ல‌ர் க‌டுப்பாக‌ உள்ள‌ன‌ர். க‌ருணாநிதிக்குத் த‌ண்ட‌னை கிடைக்க‌ வேண்டும் என அவ‌ர்க‌ள் விரும்புகின்ற‌ன‌ர். ஜெய‌ல‌லிதாவுக்குத் த‌ண்ட‌னை கிடைக்கும் என‌ அவ‌ர‌து அபிமானிக‌ள் எதிர்பார்க்க‌வில்லை.




கருணாநிதிக்கு எதிராக வலுவான வழக்கு எதுவும் இல்லை. ஜெயலலிதா முதல்வரானபின்னர் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்குற்றம்சாட்டி நள்ளிரவில் கருணாநிதிகைது செய்யப்பட்டார். பிணை பெறமிடுயாதவகையில் வெள்ளிக்கிழமை ந‌ள்ளிரவு கருணாநிதி கதறக் கதற இழுத்துச்செல்லப்பட்டார். அப்போது ஸ்டாலினையும் பொலிஸ் தேடியது வெளியூர் சென்ற ஸ்டாலின் மறுநாள் சரணடைந்தார். இன்றுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழக முதல்வராக‌ 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் அழகிரி கைது செய்யப்படுவார் என்ற எதிப்பார்ப்பு எழுந்தது.  அழகிரியை நெருங்குவதற்குரிய ஆதாரங்கள் வலுவானதாக இல்லை. சண் தொலைக்காட்சிக்கு பணம் வழங்கிய முறைகேட்டில் கருணாநிதியின் மனைவி விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். ஸ்பெக்ரம் வழங்கியதில் அரசுக்கு இழப்பு என்ற குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகி உள்ளார். ஸ்பெக்ர‌ம் விநியோக‌ம் செய்த‌தில் அர‌சுக்கு இழ‌ப்பு. இழ‌ப்பு ஏன் ஏற்ப‌ட்ட‌து. இல‌ஞ்ச‌ம் கைமாறிய‌தா என்ற‌கோண‌த்திலே விசார‌ணை ந‌டைபெறுகிற‌து. ஸ்பெக்ர‌ம் விவ‌கார‌த்தில் முன்னாள்பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்குக்கு எல்லாம் தெரியும் என‌ ஆர். ராசா கூறியுள்ளார்.

ஏர்செல், மேக்சிம்,பி.எஸ்.என்.எல்  விவ‌கார‌ங்க‌ளில் மாற‌ன் ச‌கோத‌ர‌ர்க‌ள் மீது குற்ற‌ப்ப‌த்திரிகை தாக்க‌ல் செய்ய்யும் நிலை உள்ள‌து.ஏர்செல் வாங்கிய‌தில் முன்னாள் அமைச்ச‌ர் சித‌ம்ப‌ர‌த்தின் ம‌னைவி ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தாக‌ தக‌வ‌ல் வெளிவ‌ந்துள்ள‌து. ஆகையினால் இந்த‌ வ‌ழ‌க்குக‌ளில் பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சி அதிக‌ ஆர்வ‌ம் காட்டும் நிலை உள்ள‌து


எம்.ஜி.ஆரும் க‌ருணாநிதியும் இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌  போட்டிபோட்டு குர‌ல் எழுப்பினார்க‌ள்.தெரிந்தும் தெரியாம‌லும் ப‌ல‌வ‌கையிலும் உத‌விசெய்தார்க‌ள்.  க‌ருணாநிதி ஆட்சியை இழ‌ப்ப‌த‌ற்கு இல‌ங்கை விவ‌கார‌த்தில் அவ‌ர் க‌டைப்பிடித்த‌ கொள்கையும் ஒரு கார‌ண‌ம்.  காங்கிர‌ஸ் அர‌சைக்காப்பாற்றுவ‌த‌ற்காக‌ அவ‌ர் இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ள‌க் கைவிட்டுவிட்டார்.

இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ள் விவ‌கார‌த்தில் அதிக‌ அக்க‌றை காட்டாத‌ ஜெய‌ல‌லிதா பல சந்தர்ப்பங்களில் இலங்கைத்தமிழர்களுக்கு எதிராகச்செயற்பட்டவர்.. அண்மையில்‌ இல‌ங்கை விவ‌கார‌த்தைக் கையில் எடுத்தார். 18 வ‌ருட‌ங்க‌ளாக‌ இழுத்த‌டித்த‌ வ‌ழ‌க்கின் தீர்ப்பை தாம‌த‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ த‌ன‌க்கு பாதுகாப்பு  இல்லை  புலிகளினால் தனக்கு ஆபத்து என‌க்கூறி தீர்ப்பை வேறு மாநில‌த்துக்கு மாற்றும் முய‌ற்சி ந‌டைபெற்ற‌து. 

ஜெயலலிதாவின் இன்றைய நிலைக்கு தெரிந்தோதெரியாமலோ ராகுலும் ஒரு காரணம். பதவியில் இருக்கும் அரசியல்வாதி ஓருவர் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால்  உடனடியாக பதவி இழக்கும் சட்டத்தில் திருத்தம் செய்ய பல அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர். ராகுலின் கடுமையான எதிர்ப்பினால் அத்திருத்தச்சட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. குற்றவளியான அரசியல்வாதி பிணையில் வெளிவந்து பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்பது முன்னைய சட்டம். இப்போது பிணையில் வெளிவந்தாலும் மேன் முறையீட்டின் தீர்ப்பில் நிரபாராதி என்றால்தான் பதவி ஏற்க முடியும். 

Saturday, September 20, 2014

தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு

பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வருமானத்துகு அதிகமாகச் சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு  ஜெயலலிதாவின் தலைவிதியை மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறது. ஜெயலலிதா,அவரின் உடன் பிறவாசகோதரி சசிகலா, இளவரசி,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோருக்கு எதிராக  1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி  சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 18 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்படப்போகிறது.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி தெரிவித்தால் ஜெயலலிதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் த‌லைமைக்கு போட்டி ஏற்ப‌டும். அவ‌ர் நிரப‌‌பாராதிஎ‌ன‌ விடுவிக்க‌ப்ப‌ட்டால் திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்துக்கு பாரிய‌ சிக்க‌ல்நிலை உண்டாகும்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எப்படி இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனக்குச் சார்பாகப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடும். குற்ற‌வாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பழிவாங்கல் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நிரபராதி என்றால் வெற்றிக்கொண்டாட்டம் விண்ணைத் தொட்டுவிடும்.ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்டதென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொ ண்டர்களுக்குத் தெரியாது.


 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முலமைச்சராக ஜெயலலிதா வீற்றிருந்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்தார் . அந்தம‌னு விஸ்வரூபமெடுத்து மாநிலம்தாண்டிய வழக்காக மாறியது. முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்த‌ ஜெய‌ல‌லிதா மாத‌ம் ஒரு ரூபா ச‌ம்ப‌ள‌ம் பெற்றார்.1991 ஆம் ஆண்டு 2 கோடியே  ஒரு இல‌ட்ச‌த்து 83 ஆயிர‌த்து 957 ரூபா சொத்து இருந்த‌தாக‌ தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு அவ‌ருடைய‌ சொத்தின் ம‌திப்பு 66 கோடியாக‌ அதிக‌ரித்த‌து. இன்று அச்சொத்தின் ம‌திப்பு 2847 கோடி ரூபா என‌ ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. 




உடன்பிறவாச் சகோதரி சசிகலா அவரது உறவினர் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்தன.  ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்பட்ட சுதாகரனுக்கு 100 கோடி ரூபா செலவில் திருமணம் நடைபெற்றது. இவை எல்லாம் சுப்பிரம‌ணியன் சுவாமியின் மனுவில் குறிப்பிடப்பட்டன.  18வருடகால இடைவெளியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்துதேர்தல்கள் நடைபெற்றுள்ளன.தமிழக சட்டசபை மூன்று தேர்தல்களைச் சந்தித்த‌து. வலுவான‌ ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக மனுச்செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது ஜெயலலிதாவின் கொள்கை.

  தமிழகத்திலும் பெங்களூரிலும் நடைபெற்ற இந்த வழக்கை தாமதப்படுத்துவதிலேயே எதிரிகள் முனைப்பாக இருந்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடுப்படைந்தனர். நீதிப‌திக‌ள்‌ எதிரிக‌ளை க‌டுமையாக‌ எச்ச‌ரித்த‌ன‌ர். பெங்க‌ளூர் சிற‌ப்புநீதி ம‌ன்ற‌த்தில் நான்கு நீதிப‌திக‌ள் மாறிவிட்ட‌ன‌ர். அர‌ச‌த‌ர‌ப்பு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் வெறுப்ப‌டைந்து வெளியேறிவிட்டார். உச்ச‌நீதிம‌ன்ற‌ம் சென்னை உய‌ர் நீதிம‌ன்ற‌ம் ஆகிய‌வ‌ற்றின் நீதிப‌திக‌ள் மாறிவிட்ட‌ன‌ர்.  வ‌ழ‌க்கிலே ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ அதிகாரிக‌ள் ஓய்வுபெற்றுவிட்ட‌ன‌ர். வ‌ழ‌க்கின்தீர்ப்பு வெளியாவ‌த‌ற்கு  இப்போதுதான் நாள்குறிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கில்  அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் சமாதானமாகப்போக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது   

ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் எதிரிகளும் தீர்ப்பின் நாளை  திகிலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி பறிக்கப்படும் சட்டம் அமுலில் உள்ளது.ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுவிடும். இது ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கே அவமானமாகும். குற்றவளியாக அறிவிக்கப்பட்டதால் லல்லு பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்கள் பதவி இழந்தனர்.2001  ஆம் ஆண்டு பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டபோது பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.மேன் முறையீடு செய்தபின்னர் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதைய சட்டத்தால் அப்படிச்செய்யமுடியாது. மேன்முறையீடு செய்தாலும்  நிரபராதி என தீர்ப்பு வழங்கப்படும் வரை பதவி ஏற்கமுடியாது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா  குற்ற‌வாளியாக‌ தீர்ப்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌பின்ன‌ர் த‌மிழ‌க‌மே ப‌ற்றி எரிந்த‌து.த‌ர்ம‌புரியில் ப‌ஸ்ஸுட‌ன் சேர்த்து மூன்று மாண‌விக‌ள் கொளுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர்.சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மிக பெரிய அளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு வழக்குக்காக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. 150 பேர் மீது வழக்கு போட்டு சி.பி.ஐ விசாரித்து வருகிறது. என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்

20 ஆம்திகதியும் நீதிமன்றமும் ராசியானது இல்லை என ஜெயலலிதா நினைக்கிறார்.ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக.நீதிமன்றத்தைமாற்ற நீதிபதி ச‌ம்மதம் தெரிவித்து 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 27 ஜெயலலிதாவுக்கு ராசியான இலக்கம். தீர்ப்பு வழ‌ங்கப்படும் நாளன்று  எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்த‌ரவிட்டுள்ளார்.

 தீர்ப்பு வழங்கப்படும் நாள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகமுக்கியமான நாளாக அமையப்போகிறது.முதலமைச்சர் கனவில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் சிலர் மிதக்கின்றனர். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.


Thursday, September 11, 2014

நான் ரசித்த பாடல்


நான்  ரசித்த‌  பாடல்


படம்; பாரதி கண்ணம்மா
பாடல்;பூங்காற்றே.....
பாடியவர்;கே.ஜே.ஜேசுதாஸ்
இசை;தேவா



காதலர்கள் இற‌ந்து போகலாம் காதல் என்றும் இற‌ந்து போவதில்லை.பூமி சுற்றும் வரை, சூரிய சந்திரன் காயும் வரை காதல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சாதி, மதம்,பணத்துக்கு முக்கிய‌த்துவம் கொடுக்கும் மனிதர்கள் காதலர்களின் உடலைத்தான் பிரிப்பார்கள். ஆனால், அவர்களின் காதலை பிரிக்க முடியாது. அழிக்கவும் முடியாது.

பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. 
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு 
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது 
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது 

சாதி,ம‌த‌ம்,ப‌ண‌ம் இவை எவையும் நிஜ‌க்காத‌லுக்குத்தெரியாது.விழியில் விழுந்து இத‌ய‌ம் புகுந்து இரு ம‌ன‌ம் இணைவ‌தே காத‌ல்.இங்கே ஏழைக்காத‌ல‌ன்த‌ன்காத‌லிக்கு பூங்காற்றுமூல‌மாக‌த்தூது விடுகிறான். சாதி,ம‌தம்‌ பார்க்காம‌ல் இணந்த‌ காத‌ல‌ர்க‌ள் மாண்டுபோய்விட்ட‌ன‌ர். அத‌ற்குச்சாட்சி க‌ல்ல‌றைக‌ள். ஆனாலும், காத‌ல் வாழ்ந்துகொண்டேஇருக்கிற‌து. மனச்சாட்சி  இல்லாத‌ ம‌னித‌ர்க‌ளின் ம‌த்தியில் என்மீது காத‌ல் கொண்டு க‌ல‌ங்கித் த‌விக்கிறாயே நீ க‌ல‌ங்கினால் நான் தா‌ங்குவேனோ?


வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய் 
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் 
விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய் 
வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய் 
அறியாமல் பிழை செய்தாய் 
மணலாலே சிலை செய்தாய் 
அடி பாரதி கண்ணம்மா 
மனம் கலங்குவதேனம்மா
(பூங்காற்றே.....


ஏழை என‌க்கும் உன‌க்கும் ஒத்துப்போகுமா? அப்ப‌டி நாம் சேர்ந்தாலும் மூட‌ ம‌னித‌ர்க‌ள் ந‌ம்மைச்சேர‌ விடுவார்க‌ளா? சாமியே இல்லாத‌ ஆல‌ய‌த்தில் விள‌க்கேற்றினாய்.எப்படிய‌ம்மா சாமி வ‌ர‌ம்  த‌ரும்.பூங்கொடியே நீ சிலையை உருவாக்கி வ‌ர‌ம் கேட்க‌ நினைக்கிறாய். நீ ம‌ணலால் அல்ல‌வா சிலை செய்ய‌ நினைக்கிறாய்.



வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் 
வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் 
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் 
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் 
இளம் பூவே வருந்தாதே 
உலகம்தான் திருந்தாதே 
அடி பாரதி கண்ணம்மா 
நீ பாரத பெண்ணம்மா....
இது பாழ் பட்ட மண்ணம்மா

(பூங்காற்றே.....)


இந்த ஜென்மத்தில் எமக்கு காதல் வேண்டாம்  .அடுத்த‌ ஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உன் மீது உள்ள நிஜமான காதலால் சொல்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நீயும் நானும் காதலித்து
அன்பால் வென்று ஒன்று சேர்ந்து வாழ்வோம். அப்போது எமது உண்மைக்காதலை உலகுக்கு உணர்துவோம். இப்போது எமக்கு காதல் வேண்டாம்.


இந்த உலகம் திருந்தாது கண்மணியே. நீ பாரதி கண்ட புதுமைப்பெண்.

ஞா.கவிதா,நெல்லியடி


மெட்ரோ நியூஸ் 04/08/2004