Sunday, February 7, 2016

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே

 இலங்கை இசை வரலாற்றில் பொப் இசைக்குத் தனி அத்தியாயம் உண்டு. கர்நாடக இசை,தமிழ் இசை ஆகியவற்றுக்கு மத்தியில் ஈழத்து மெல்லிசை வளர்ச்சி கண்டது. மெல்லிசைப் பாடல்கள் மேலெழுந்து வரும்போது பொப் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகின. இலங்கை வானொலி ஈழத்து மெல்லிசைப்படல்களுக்கும் பொப் இசைப்படல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததனால் இலங்கையைத்தாண்டி தமிழகத்திலும் அப்பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது.
ஏ.ஈ.மனோகரன்,நித்தி கனகரத்தினம்,அமுதன் அண்ணாமலை,ஸ்ரனி சிவானந்தன், அனரன் டேவிட். எம்.பக்கியராஜன் போன்றவர்கள் பொப் பாடல்களினால் பிரபலமனார்கள்.  சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே அன்றைய  பொப் பாடல்களில் மிகவும் பிரபபமனது. நித்தி கனகரத்தினம் இயற்றி இசை அமைத்து படிய பாடல் என அன்றைய வானொலியில் ஒலிபரப்பானது. உண்மையில் அப்பாடலை இயற்றி இசை அமைத்து முதலில் பாடியவர் எம்.எஸ்.கமலநாதன் என்ற உண்மை காலம்பிந்தி வெளியானது.
மாமிக்கும் மருமகனுக்குமிடைஎயியன் உரையாடலாக  இப்பாடல் உள்ள இப்பாடலைக்   கேட்கும்போது தன்னை .  ஆடவேண்டும்  போன்ற எண்ணம் ஏற்படும்.

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ  படிக்கச்  சென்றாளோ
 அட வாடா மருமகா என் ஆழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர் சுழளும்   பொடியளெல்லாம் கன்னியரைக்
கண்டவுடன் கண்ண‌டிக்குக் காலமல்லவோ    சின்ன மாமியே



தனது மச்சாள் மீது அதிக அன்பு கொண்டவர் அவள் எங்கே என மாமியிடம் கேட்பது போலவும் அதற்கு மாமி பதிலளிப்பது போலவும்  நகைச்சுவையுடன் பாடல் எழுதப்பட்டுள்ளது.
சின்ன மாமியிம் அவளது சின்ன மகள் எங்கே என மருமகன் கேட்ட போது அவள் படிப்பதற்காக பள்ளிக்குச்சென்றதாக மாமி கூறுக்கிறாள். வேலை இல்லாமல் உள்ள  இளைஞர்கள் அவளை தம் வசம் திருப்பி விடுவார்களோ என்ற அச்சமவனுக்கு இருக்கிறது. அதனை மாமியிடம் தெரிவிக்கிறான். ஊர் சுழளும் பொடியள் என்ற யழ் மண்ணின் சொல்லை கச்சிதமாக அந்த இடத்தில் பொருத்தி உள்ளார்.


ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள்  நில்லாதே
அடக்கமில்லா  பெண்ணிவள் என்றா   
என் மகளை  நினைத்து விட்டாய்  
இடுப்பொடிய தந்திடுவேனே  சின்ன மாமியே


தன் மகளைப்பற்றி அவதூறு எதுவும் சொல்ல வேண்டாம் என அன்பாக கடிந்து கொண்ட சின்ன மாமி    மகளுக்கு தெரிந்தால் உதைப்பாள். என் மகள் அடக்கமில்லாதவள் அல்ல  கனக்க கதைத்தால் இடுப்பை ஓடிச்சுப்போடுவன்  என மண்ணின் மனத்தை பாடல் வரியில் கோர்த்துள்ளார்.



 ஏனணை மாமி மேலே மேலே துள்ளுகிறாய்
 பாரணை மாமி படு குழியில் தள்ளுறியே
 தேனணை மாமி அவள் எனக்கு தெவிட்டதவள் எனக்கு
 பாரணை மாமி கட்டுறேன் தாலியே   சின்ன மாமியே

கொஞ்சம் கனக்க கதைத்தால் துள்ளாதை என்பார்கள் அதனால் மாமியை . துள்ள வேண்டாம் என மருமகன்  கூறுக்கிறான். பின்னர் இறங்கி வந்து  அவளுக்கு தான் தாலி கட்டப் போவதாக தெரிவிக்கிறான்.
தமிழ் உச்சரிப்பு கிராமிய வாடையுடன் வருகிறது.  அன்றைய பிரபல பொப் இசைப் பாடகரான பொலி பஸ்ரியனின் தாக்கம் இப்பாடலில் உள்ளது. 1965களில் பொப்  பாடல்கள் பிரபலமாகத் தொடங்கின. 1962 ஆம் ஆண்டு இபாடல்  கமலனதனின் கிராமமான வதிரியில் பிரபலமாகியது. .க.கமலாகரன், வ. இராஜேஸ்வரன்,க.பாலச்சந்திரன்,மு.பக்கியராஜன்  ஐ.சாந்தகுமார்,ச.குணசேகரன் போறவர்கள் தாம் படித்த பாடசாலைகளில் இப்பாடலைப் பாடினார்கள். யாழ்ப்பாணம்,கொழும்பு,வவுனியா,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய இடங்களில் இப்பாடல் பலரால் பாடப்பட்டது.
யாழ்ப்பணத்தில்  அன்று பிரபலமாக இருந்த இரட்டையர்,கண்ணன், அருணா,ரங்கன்,ராஜன் இசைக் கோஷ்டிகள்  பொப் பாடல்களை படி வரவேற்பைப் பெற்றன.

ரமணி

மேட்றோநியூஸ்
05/02/16



Saturday, February 6, 2016

தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் விஜயும்

மத்திய அரசு வழங்கும் விருதுகள் அவ்வப்போது சில அரசியல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. திறமையின் அடிப்படையில் விருது வழங்காது தமக்கு விருப்பமானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் போது அவ்விருதுகள் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.பத்மபூஷன்விருதுக்கு   ரஜினிதேர்வுசெய்யப்பட்டது அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.  தமிழக அரசியலில் கால் பதிக்க முயலும் பாரதீய ஜனதா ரஜினியை இழுக்கும்  முயற்சியில் தோல்வியடைந்தது. தமிழகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிக்கு விருது வழங்குவதை அரசியல் கண்ணாடியால் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழக அரசியல் நாடகம் மூலம் வளர்ந்தது. பின்னர் திரைப்படம் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பரிணமித்தது. அண்ணாத்துரை,கருணாநிதி,,எம்.ஆர்.ராதா,சிவாஜி,எம்.ஜி.ஆர்,எஸ்,எஸ்,ஆர் ஜெயலலிதா போறவர்கள் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்.  புதிய நடிகர்களும் அரசியலில் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கு  சினிமாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.

தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரஜினி,விஜய் ஆகியோரை தமது கட்சியில் சேர்ப்பதற்கு பாரதீய ஜனதா பலமுறை முயன்றது. இந்தியப்பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரையும் சந்தித்தார். அப்போது அவர்கள் பாரதீய  ஜனதாவில் சேரப்போவதாக செய்தி பரவியது. அரசியல் எனற மாயையில் வீழ்வதற்கு ரஜினியும் விஜயும் தயாராகவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் ரஜினியும்,விஜயும்  அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டவர்கள். தம்மைப் பாதுகாப்பதற்காக ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அவர்கள் இணைவர்கள் என்ற எதிர்பார்ப்பை இருவரும் முறியடித்தார்கள்

தமிழக அரசியல் சூடாகும் போது ரஜினியும் விஜயும் அரசியலுக்கு இழுக்கப்படுவர்கள். இம்முறையும் இவர்களின் பெயர் அரசியல் களத்தில் விவாதமாகி உள்ளது.  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்ற ரஜினி பத்மவிபூஷன் விருதுக்குத் தகுதியானவர்தான். என்றாலும் தமிழகத் தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினியின் ரசிகர்களை குறிவைத்து இவ்விருது வழங்கப்பட்டிருக்கலாம் எனற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விருதில் அரசியல் சாயம் இருப்பதை மறுக்க முடியாது ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள் இவ்விருது குறித்து பெரிதாக வாய்திறக்கவில்லை.  இதனை அரசியலாக்கினால் தமது அரசியல் வாழ்க்கை படுத்துவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. 


ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதில் அரசியல் இல்லை என பாரதீய ஜனதாக் கட்சித்  தலைவர்கள் கூறுகின்றனர். குதிருக்குள் அப்பன் இல்லையென்பதை இது நினைவூட்டுகிறது     தமிழக அரசியலில் ரஜினியின் பங்களிப்பு மறை முகமாகவும் நேரடியாகவும் இருக்கிறது.  ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற வதந்தி அவ்வப்போது கால் கை முளைத்து வெளிவரும்.  திரைப்படங்களில் அதிரடியான அரசியல் வசனம் பேசும் ரஜினி அரசியலில் கால் வைக்கத் தயாராக இல்லை.  தனக்குப் பாதிப்பு ஏற்படும் போது  சில கருத்துக்களை கூறி தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்துகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பம்பாய்  படத்துக்கு எதிர்ப்ப்பு எழுந்தது மணிரத்தினம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டபோது தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் ஆரம்பமாகி விட்டது என்றார். சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதாவின்  முன்னாலேயே சிவாஜிக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று  அவரை எரிச்சலூட்டினர்   1996 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால் தமிழகத்தை  ஆண்டவனாலும்  காப்பாற்ற முடியாது என்றார். கருணாநிதி மூப்பனார் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.அத்தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைப்பறி கொடுத்தார்.  1998 இந்திய   நாடாளுமன்றத் தேர்தலிலும் கருணாநிதியையும் மூப்பனரையுய்ம் ஆதரித்து குரல் கொடுத்தார். கோவைக்கு அத்வானி சென்றபோது குண்டு வெடித்து பலர் பலியானார்கள். அத்தேர்தல் கருணாநிதியிடம் இருந்த ஆட்சியைப் பறித்து ஜெயலலிதாவிடம் கொடுத்தது.


2001  ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும்  1999 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலிலும் ரஜினி குரல் கொடுக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாபா படப்பிரச்சினையால் ராமதாஸை எதிர்த்தார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் உள்ள ராமதாஸை தோற்கடிப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாரதீயா ஜனதாவையும் சில தொகுதிகளில் ஆதரித்தார். அவரது குரல் எடுபடவில்லை.


மீண்டும் ரஜினியின் குரலுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதத்திலிருந்து பழ.கருப்பையா தூக்கி எறியப்பட்டுள்ளார். துக்களக் ஆண்டுவிழாவில்  ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்ததனால் அவரின் பதவியை ஜெயலலிதா பிடுங்கினர். பழ.கருப்பையாவுக்கு அதரவாக பல அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ரஜினியும் அவருடன் தொடர்பு கொண்டதால் அரசியல்  சாயம் பூசப்பட்டுள்ளது.  பிரபல படத்தயாரிப்பாளரான   பழ. கருப்பையாவுக்கு திரை உலக நண்பர்கள் பலர் உள்ளனர், ரஜினியும் அப்படிப்பட்ட நண்பர்தான். படப்பிடிப்புக்காக ரஜினி மலேஷியாவுக்குச் சென்றுள்ளார். மலேஷியாவிலிருந்து திரும்பியது சந்திக்கப்போவதாக பழ.கருப்பையவிடம் கூறியுள்ளார் 


விஜயகாந்துக்காக காத்திருந்த கருணாநிதி விஜயின் பக்கம் சாய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. துப்பாக்கி,கத்தி,புலி ஆகிய படங்கள் வெளியாவது தாமதமாகியத்தில் அரசியல் பழிவாங்கல் இருப்பதாக சந்தேகமுள்ளது.  படப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஜெயலலிதாவைச்சந்திக்க விஜயும் தகப்பனும் முயற்சி செய்தார்கள்.  நீண்ட தாமதத்தின் பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச்சந்தித்தர். அதன் பின்னரும் விஜயின் படங்களுக்கு இருந்த சிக்கல்கள்  தீரவில்லை.

தமிழத்தில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் அவர்களது வாக்கு வங்கியை குறிவைத்து திராவிட முன்னேற்றக் கழகம் காய் நகர்த்துகிறது.  விஜயின் தகப்பன் சந்திரசேகருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருப்பதாக  தெரிகிறது. விஜயகாந்துக்கு அதிக தொகுதிகளை அள்ளிக்கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகவில்லை. விஜயை  வளைத்துப் போட்டால் விஜயகாந்த்துக்கு கொடுக்கும் தொகுதிகள் மிஞ்சும் என திராவிட முன்னேற்றக் கழகம் கணக்குப் போடுகிறது. ரஜினியும் விஜயும் சிக்குவார்களா என்பது தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தெரிந்துவிடும்.

ரமணி
தமிழ்த்தந்தி
07/02/16

Friday, February 5, 2016

அரசியல் குட்டையைக் குழப்பும் புதிய கட்சி அறிவித்தல்


நல்லிணக்க அரசாங்கத்துக்கு குடைச்சல் கொடுப்பவர்களின் முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் முறியடிக்கிறார்கள். சோர்வடையாத விக்கிரமாதித்தன் போல குடைச்சல் கொடுப்பவர்கள் புதிய கோணத்தில் சிந்திக்கிறார்கள். மைத்திரி ஜனாதிபதியானதும் ஜனாதிபதித்தேர்தலில் தோல்வியடைந்த மகிந்தவை பிரதமராக்க முயற்சி செய்தார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்துகொண்டு தமது காரியத்தைச்சாதிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள். நல்லிணக்க அரசுக்கு எதிரானவர்களில் சிலர்  மெதுமெதுவாக அரசின் பக்கம் சாய்கிறார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் குழப்பம் செய்பவர்களை கட்சித்தலைவரான ஜனாதிபதி மைத்திரி களைஎடுக்கிறார். இருந்த போதிலும் சிலர் பூச்சாண்டி  காட்டுவதை நிறுத்தவில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது பல அரசியல் கட்சிகள் இரண்டாகின. எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பதவி என்ற எலும்பைக்கண்டதும் தமது கொள்கையை மறந்து அரசாங்கத்துக்கு துதிபாடினார். ஆட்சி மாறினதும் சிலர் செல்லாக் காசாகினர். அரசியலில் இதெல்லாம் சகஜம் என உணர்ந்தவர்கள்  கட்சிமாறி தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தினர். 

. ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியைச்சேர்ந்த மைத்திரியும்,மகிந்தவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாகிவிட்டது. அரசியல் கட்சிகளை உடைத்து இரண்டாக்கியவரின் கட்சி இரண்டகியதால் ஜனாதிபதித் தேர்தலில் அவர்  தோல்வியடைந்தார். மஹிந்த என்ற அரசியல் விருட்சத்தின்  நிழலில் சுகம் கண்டவர்கள் அந்த நிழலில் இருந்து வெளிவர மறுக்கின்றனர். தமது அரசியல் இருப்பை வெளிக்காட்டுவதற்காக அவ்வப்போது அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு திருப்தியடைகின்றனர். நல்லிணக்க அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்தவர்கள்  மாற்று எதிரணியாகச செயற்படுகின்றனர். முன்னாள் ஜனாதிபதியை முதன்மைப்படுத்துவதே அவர்களின் நோக்கம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி மைத்திரியிடன் இருந்து கைப்பற்ற முடியாது எனத்திட்டவட்டமாக உணர்ந்தவர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது பற்றி சிந்திக்கிறார்கள். அக்கட்சிக்கு மஹிந்தவைத் தலைவராக்க முயற்சி  செய்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்க முடியாத கட்சிக்கு தலைவராக மஹிந்த விரும்பவில்லை. ஆகையினால் அவர்களது பார்வை கோத்தபாயவை நோக்கி திரும்பி உள்ளது. புதிய அரசியல் கட்சி ஒன்றின் தோற்றம் பற்றி கோத்தபாய கருத்துத் தெரிவித்திருப்பதால் அவரின் தலைமையில் புதிய கட்சி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய,போது பலசேன ஆகியவற்றின் அட்டகாசம் கடந்த ஆட்சிக் காலத்தில்  அதிகமாக இருந்தது.  இப்போது அக்கட்சிகள் அதிரடியகச்செயற்படமுடியாத நிலை உள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாத அரசியல் கட்சிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசியல் தலைமையை விரும்புகின்றனர். தேசிய சுதந்திர முன்னணி,மித்துரு ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக இடதுசாரி லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை  கொம்யூனிஸ்ட் ஆகியன ஒன்றிணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குக் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த வர்கள் சிலர் இக்கட்சியில் இணைவார்கள்.
ஜனாதிபதி மைத்திரியின் தலைமையை விரும்பாத ஸ்ரீலங்கா 
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளூளூராட்சித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது. ஆகையினால் தமதி அரசியல் இருப்பை உறுதிப் படுத்துவதற்காக  புதிய கட்சியின் தேவை ஒன்று அவர்களிடம் உள்ளது. ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் ஒன்றிணைக்க சிலர் முயற்சி செய்தார்கள் அந்த முயற்சி தோல்வியடைந்தது. பாராளுமன்றத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அவர்களது  ஆதரவாளர்களும்  போட்டியிட் ஜனாதிபதி மைத்திரி அனுமதி வாழங்கினார். உள்ளூளூராட்சித் தேர்தலில் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.

   .  . ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தயவு இல்லாது தேர்தலில்  வெற்றி பெற முடியாது தெரிந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அழைத்துகொள்பவர்கள் சிங்கள இனம் என்ற கொதி நிலையில்  தேர்தலில் போட்டியுட முயற்சிக்கிறார்கள். இதன் ஒரு அங்கம் தான் சிங்ஹலே என்ற கோஷம் என்ற சந்தேகம் உள்ளது. இனவாதத்தைத் தூண்டி தேர்தல் வெற்றியை அனுபவித்தவர்கள் பின்னாளில்  புலியைப் பற்றிய கிலியை விதைத்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள் புலிகளை அழித்த அடையாளம் நிரந்தர வெற்றியைக் கொடுக்கும் என்ற கனவு பொய்த்துப் போனது. தேர்தல் வெற்றிக்காக எதாவது ஒன்றைச்செய்யவேண்டிய நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உள்ளது  

தமிழ் முஸ்லிம் வாக்குகள் இல்லது  பாராளு மன்றத்தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஆனால் உள்ளூளூராட்சித் தேர்தலில் சிங்கள இனவாத வாக்குகளால் வெற்றி பெற முடியும் என நினைப்பவர்கள் புதிய அரசியல்  கட்சியைப்பற்றி சிந்திக்கிறார்கள். புதிய அரசியல் கட்சியின் தோற்றத்துக்கு மஹிந்த  ஆதரவு வழங்கவில்லை என்றாலும் அவரது  ஆசி உள்ளது என்பது இரகசியமானதல்ல. விகாரைகளுக்கு வணங்கச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அங்கு அரசியல் பேசுகிறார். அவரது அரசியல் பேச்சுகள் அனைத்தும் நல்லிணக்க அரசாங்கத்துக்கு எதிரானதாகவே உள்ளன. புதிய கட்சியின் தோற்றப்பாட்டை வலியுறுத்துவதாக அவரது பேச்சுகள் அமைகின்றன.

கிராமங்களில் உள்ள சிங்கள மக்கள் இன்னமும்  மஹிந்தவின் ஆதரவாளர்களாக உள்ளனர். தமது  மீட்பராக அவரை நோக்குகின்றனர்.  இனவாதத்தில் குளிர் காய்பவர்கள் மீண்டும் மேலெழ முயற்சி செய்கின்றனர். இவர்களைச்சமாளிக்க  பாரிய பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளது. கொஞ்சம் அசந்தால் உள்ளூளூராட்சித்  தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கோலோச்சிவிடும். ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களையும் ஒரே நேரத்தில்  சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் ஜனாதிபது உள்ளார்.
வானதி
சுடர் ஒளி

ஜனவரி 3/ஜனவரி  9

இலங்கைத் தமிழரின் உண்மையான துயரத்தை பதிவிடுவரா வைரமுத்து?


உழவர் திருநாளை உவப்புடன் கொண்டாடிய மககளுக்கு வைரமுத்துவின் இலங்கை விஜயம்  பேசு பொருளாக  மாறிவிட்டது.  இன்றைய   இளைஞர்கள்  சிலரின் ஆதர்சன கவிஞர் வைரமுத்து. அவரின் கவிதைகளை சிலாகிப்பவர்கள் அவரின் வருகையால் பேருவகை  அடைந்தனர். வடமாகாண சபை  நடத்திய உழவர்விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு கவி மழை பொழிந்தார். அவரின் கவிமழையில் நனைந்தவர்கள்  புளாங்கிதமடைந்தனர்.

வைரமுத்து வருகிறார் என்றதுமே அவரைக்  காணவேண்டும். அவரது பேச்சைக்கேட்க வேண்டும் அவருடன் அளவளாவ வேண்டும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என பலர் விரும்பினர். வைரமுத்து எதுவித குறையும் வைக்கவில்லை.  அவருன் தமிழ் துள்ளி விளையாடியது. ஊடக  வெளிச்சம் வைரமுத்துவை பிரகாசிக்கச்செய்தது.  
   
இலங்கைக் கலைஞர்களைச்சந்தித்த வைரமுத்து அவர்களுடனான பொழுதை பிரயோசனப்படுத்தினர். வைரமுத்துவைச் சந்தித்தவர்கள்    மகிழ்ச்சியடைந்தனர் வைரமுத்துவின் புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பவர்கள் தமது புத்தகங்களை அவரிடம் கொடுத்து பேருவகை அடைந்தனர். வைரமுத்தின் வீட்டில் எனது புத்தகம் இருக்கிறது என்ற கலைஞனுக்குரிய இறுமாப்பு அவர்களிடம்  உண்டாகியது.
இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைத்து வருபவர்கள் அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.  ஆனால்  வைரமுத்துவை அழைத்துவந்தவர்கள் அந்தகட்டுப்பாட்டைத் தகர்த்தனர்.வைரமுத்துவைச்சந்தித்த பிரமிப்பு சிலரிடம்  இருந்து இன்னமும் விலகவில்லை.

வடமாகாண சபை நடத்திய உழவர் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புடன் உழ்வர் பெருவிழாவை நடத்துவதை ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கிறது. பிரேமதாஸ தலைமையிலான மேதினம் இப்படித்தான் நடைபெற்றது. வடஇந்திய தெனிந்திய  சினிமா நட்சத்திரங்கள் மேதின விழாவில் கலந்துகொள்வதால் கூட்டம் அலை மோதியது.
ஈழத்தமிழரரின்  துயர  காவியத்தை எழுதப்போவதாக வைரமுத்து சூழுரைத்தார்   தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை காவியமாக எழுதும் ஆற்றல் அவரிடம் தேவைக்கு  அதிகமாக உள்ளது. அந்தக் காவியத்தில்  உண்மை  உள்ளபடி வெளிவருமா என்ற சந்தேகம்  பிரமாண்டமாக முன்னெழுந்துள்ளது  தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டதைப்பற்றிய உண்மையை எழுத அவருக்குத் துணிவு உள்ளதா.
இலங்கைத் தமிழரின் துயரத்தைப்போக்க கைகொடுத்த இந்தியா  இறுதியில் எல்லாவற்றையும் அழிக்க உதவியது. எம்.ஜி.ஆரும்,இந்திரா காந்தியும் இலங்கைத் தமிழரின் விடுதலைக்காக செயற்பட்டனர். ராஜீவின் கொலை எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டை இந்தியா கைவிட்டது. புலிகளை அழிக்கவேண்டும் என்ற  கோபத்தில்  இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை  வேடிக்கை  பார்த்தது இந்தியா. வைரமுத்து தனது வைரவரிகளில் இதனை பதிவிடுவாரா   என்ற கேள்வி பாமர மக்களிடமும் உள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தை எழுதப்போவதாகக் கூறினார். அதனை அவர் மறந்துவிட்டார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக கருணாநிதி இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. அமைதி காக்கும் படையின் அட்டகாசத்தைப் பொறுக்கமாட்டாது  கொந்தளித்தார். அமைதி காக்கும் படை நாடுதிரும்பியபோது தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக முதலமைச்சரான கருணாநிதி அதனை வரவேற்கப்போகவில்லை.முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தனது   ஆட்சியை தக்க வைப்பதற்காக அமைதி காத்தார்.கருணாநிதியின் தீவிர விசுவாசியான வைரமுத்துவின் காவியத்தில் இது பதியப்படுமா என்பதற்கான பதிலை யார் தருவர்.

தெனாலி,புன்னகை மன்னன், கன்னத்தில் முத்தமிட்டால்   போன்ற தமிழ்ப் படங்கள் இலங்கைத் தமிழ் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தின.இசைப்பிரியா பற்றிய படமும் வேதனையைத் தந்தது. தெனாலியில் கமல் பேசும் இலங்கைத்தமிழ் இலங்கைத் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியது.   கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற “விடைகொடு எந்தன் நாடே எனும் பாடலை கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வெளிவருவது தவிர்க்க முடியாததுதான். அதே போன்ற ஒரு உணர்ச்சியை வைரமுத்து எழுதப்போவதகக் கூறிய  காவியத்தில் காண முடியாது என்பது நிதர்சனம். வைரமுத்து சிறந்த கவிஞர் மட்டுமல்ல  அவர் பல் துறை விற்பன்னர்.  அவருடைய கதையைப் படித்த ஜெயகாந்தன் பாராட்டிய கடிதம் சஞ்சிகையில் வெளியானது. அது போலியான கடிதம் என நிரூபிக்கப் பட்டபோது  மெளனம்  காத்தார்.

இந்திய எழுத்தளர்களின் படைப்புக்கள் இலங்கைத் தமிழ் மக்களின் வீடுகளில் உள்ளன. இலங்கை எழுத்தளர்களின் நூல்களை இந்தியாவில் உள்ள பிரபல எழுத்தளர்களும் இலக்கியவாதிகளும் தேடி வாங்குவது இல்லை. தமக்குத் தெரிந்த ஒருசிலரின் புத்தகங்களை மட்டும் வாங்குவார்கள். இலங்கைப் புத்தகங்கள், சஞ்சிகைகள்,பத்திரிகைகள் என்பன தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை. இது ஒருவழிப் பாதையாக உள்ளது.  வைரமுத்துவிடம் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை எல்லாம் அவர் படிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை
.
அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் ஆகியவற்றின் மூலம் கண்ணதாசனும், பாண்டவர் பூமி,அவதார புஷர், இராமானுஜர் ஆகியவற்றின் மூலம்  வாலியும் இன்றும் வாழ்கின்றனர். அவற்றைப் போன்ற ஒருகாகவியத்தைப்படைக்க வேண்டும்  என்ற ஆசை வைரமுத்துவிடம்  நீண்ட நாட்களாக உள்ளது.   அதற்குரிய களமாக இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.கவிஞர்  வைரமுத்துவை வரவேற்க இலங்கைத் தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை 
ஊர்மிளா
சுடர் ஒளி

பெப்ரவரி 3/பெப்ரவரி 9

Wednesday, February 3, 2016

ஒலிம்பிக்குக்கு தயாரான பிரேஸில்

உலகின் மிகப் பிரமாண்டமான  போட்டியான ஒலிம்பிக்கின்  அரம்பபணிகள் பிரேஸிலில் மிக வேகமாக நடைபெறுகின்றன. உலகின் பல நாடுகளில் தகுதிகான் போட்டிகள் நடைபெற்று  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 42 போட்டிகளுக்காக 206  நாடுகளில் இருந்து  10,500 போட்டியாளர்கள் தகுதிகாண் போட்டியில் பங்குபற்றுகிறார்கள். 112  வருடங்களின் பின்னர் கோல்ப் 92  வருடங்களின் பின்னர் ரகர் ஆகியன இம்முறை ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளன.
  .
7.5 மில்லியன்  நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3.8 மில்லியன்  நுழைவுச்சீட்டுகள் ஐரோப்பாவில் விற்பனையாகும் 25.000 ரெனிஸ் பந்துகள்  8400    பூப்பந்துகள் 60,000  ஹங்கர்கள் 315 குதிரை லாடன்கள் 100,000 கதிரைகள்  72,000  மேசைகள் 34,000   கட்டில்கள் 11 மில்லியன் கரண்டிகள் தயாராக உள்ளன.
45,000 தொண்டர்கள், 85,000 ஊழியர்கள்,6.500  உத்தியோகத்தர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கி.மு 796ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது   கி.பி 392 ஆம் ஆண்டு இடை நிறுத்தப்பட்டு பின்னர்   1896 ஆம் ஆண்டு மீண்டும் ஆரம்பமானது.
 வட அமெரிக்காவிலிருந்து  6  ஐரோப்பாவிலிருந்து   16 ஆசியாவிலிருந்து   3 ஓசியானிக் தீவுகளில் இருந்து   2 போட்டிகளுக்கான வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.

 தமிழ்த்தந்தி
 31/01/16


Monday, February 1, 2016

தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இரகசிய பேச்சுவார்த்தைகளையும் மறைமுக பேரம் பேசல்களையும் திரைமறைவில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து விட்டன. கூட்டணி பற்றி  இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என  வீராவேசமாக அறிக்கைகளை விட்டு மக்களை திசை திருப்புகின்றனர்.  தமிழக தேர்தல் ஆணையம் சட்டசபைத் தேர்தலுக்கான பணியை வெளிப்படையாக ஆரம்பித்துவிட்டது. தமிழக வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களி
ல்      2.88 கோடிஆண்களும்  2.91 கோடி பெண்களும்   4383  திருநங்கைகளும் உள்ளனர். 12.33 கோடி புதிய வாக்காளர்கள் புதிதாக பதியப்பட்டுள்ளனர். ஆறு இலட்சம் வாக்காளர்கள் புதியவர்கள். இவர்கள் முதன் முதலாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் மோசடியானது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.  ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கும் அடுத்த சட்ட மன்றத் தேர்தலுக்கும் இடையே 12  முதல் 10  சதவித  வாக்காளர்களே  அதிகரிப்பார்கள்   22 .சதவிதமனவர்கள் அதிகரித்ததை  ஏற்றுக்கொள்ள முடியாது.  வாக்காளர் பதிவில் மோசடி நடைபெற்றுள்ளது  என  கருணாநிதி குற்றம் சட்டி உள்ளார்.


வாக்களர்களைப்  பதிவு செய்வதில் தேர்தல் ஆணையம் அதிக அக்கறை கட்டியதே வாக்காளர் அதிகரிக்கக்  காரணம். கடந்த ஐந்து வருடங்களில் பீகார், ஜார்கண்ட் போன்ற வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர். அவர்களும் தம்மை வாக்காளர்களாகப  பதிவு செய்துள்ளன. வாக்காளர் தொகை அதிகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையும் கருணாநிதி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையம்  அறிவித்தது போன்று தொகையான வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இல்லை என கருணாநிதி கூறுகிறார். ஆளும் கட்சியின் தலையீட்டினால் வாக்காளர் தொகை அதிகரித்ததென கருணாநிதி குற்றம் சாட்டுகிறார்.



ஆண்களை விட பெண்களே அதிக தொகையில் உள்ளனர். தமிழகத்தில் தலைவிதியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு மிக முக்கியம். பெண் வாக்களர்களைக் குறி வைத்து இலவசங்களை திராவிட முன்னேற்ற‌க் கழகம் அறிமுகப்படுத்தியது. திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின் வழியைப் பின்பற்றிய அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகமும் இலவசங்களை அள்ளி வழங்கி ஆட்சியைப் பிடித்தது.  திராவிட முன்னேற்ற‌க் கழகம் அரிசி,த்தொலைக் கட்சிப் பெட்டி என்பனவற்றைக்  கொடுத்தது.அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகம் மிக்சி,கிரைடண்டர், மின்விசிறி என்பனவற்றைக் கொடுத்து மக்களை மயக்கி ஆட்சியைப் பிடித்தது.

திராவிட முன்னேற்ற‌க் கழகம் அறிமுகப்படுத்திய சில திட்டங்களை இடைநிறுத்தி விட்டு புதிய பெயரில் அதே திட்டங்களை அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகம் அறிமுகப்படுத்த்தியது. அட்சியில் இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகம் அம்மா உணவகம் ஆரம்பித்து  குறைந்த்த விலையில் பசியை தீர்த்தது.

இலவச சைக்கிள்,இலவச லப் டொப் என்பனவற்றை வழங்கி மாணவர்களைக் கவர்ந்தது.  பெண்களையும் மாணவர்களையும் அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகம் தான் பால் கவர்ந்துள்ளது.  இதனை முறியடிப்பதற்கான புதிய திட்டங்களை திராவிட முன்னேற்ற‌க் கழகம் தனது தேர்தல்  விஞ்ஞாபனத்தில் இணைக்க வேண்டிய சூழ் நிலை   திராவிட முன்னேற்ற‌க் கழகத்துக்கு  ஏற்பட்டுள்ளது.  இது தவிர ஆறு இலட்சம் புதிய வாக்காளர்களின் மனதை தம் வசம் இழுக்கும் திட்டத்தை  இரண்டு  பிரதான கட்சிகளும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி அதிக வாக்களர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அங்கு 5.75 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.   2.91 இலட்சம் ஆண்களும்,  2.83 பெண்களும் 45 திருநங்கைகளும் உள்ளனர். 18 ­_19   வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் உள்ள தொகுதியோகவும் இது விளங்குகிறது.   7214 ஆண்களும்  5583 பெண்களும் உள்ளனர். நாகபட்டணம்  மாவட்டத்தில் உள்ள    கீழ்வேளூர்  தொக்தியில் மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 1.63  இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 81031  ஆண்களும்  82151 பெண்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதியில்  இராணுவ வீரர்கள் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் அதிகமாக உள்ளனர். 2402  வாக்காளர்கள் உள்ளனர். முத்ன் முறையாக 47 வெளிநாட்டு வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளனர். இடப்பெயர்ச்சி,இறப்பு இடப்பெயர்வு காரணமாக 3.85 இலட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

வாக்கு வங்கி கூட்டணி போன்றவை தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. பலமான கூட்டணியை அமைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். எதிரணிகள் சிதற வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறார். இந்தக் களேபரத்தில் புதிய  வாக்களர்களையும் இளம் வாக்களர்களையும் கவர வேண்டிய தேவை பிரதான கட்சிகளுக்கு உள்ளது. கட்சிசாராத வாக்களர்களையும் தம்பக்கம் திருப்பவேண்டிய நிலையில் பிரதான கட்சிகள் உள்ளன.

தேர்தல்காலத்தில் வெளியிடப்படும் தேர்தல்  விஞ்ஞாபனம்  வெற்றியை நெருங்குவதற்கு உதவி செய்யும். கடந்த தேர்தலின் போது  வெளியிட்ட   தேர்தல்  விஞ்ஞாபனத்தை மறந்துவிட்டு போலியான வாக்குறுதிகளுடன்  புதிய தேர்தல்  விஞ்ஞாபனம்   தயாராகும் காலம் நெருங்குகிறது. தேர்தல் கால வாக்குறுதிகள் பொய்யானவை எனத்தெரிந்து கொண்டும்  அடுத்த அரசங்கத்தி அமைக்க மக்கள்  தயாராகி விடுவார்கள்.
வர்மா
தமிழ்த்தந்தி
31/01/16