Friday, February 5, 2016

இலங்கைத் தமிழரின் உண்மையான துயரத்தை பதிவிடுவரா வைரமுத்து?


உழவர் திருநாளை உவப்புடன் கொண்டாடிய மககளுக்கு வைரமுத்துவின் இலங்கை விஜயம்  பேசு பொருளாக  மாறிவிட்டது.  இன்றைய   இளைஞர்கள்  சிலரின் ஆதர்சன கவிஞர் வைரமுத்து. அவரின் கவிதைகளை சிலாகிப்பவர்கள் அவரின் வருகையால் பேருவகை  அடைந்தனர். வடமாகாண சபை  நடத்திய உழவர்விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு கவி மழை பொழிந்தார். அவரின் கவிமழையில் நனைந்தவர்கள்  புளாங்கிதமடைந்தனர்.

வைரமுத்து வருகிறார் என்றதுமே அவரைக்  காணவேண்டும். அவரது பேச்சைக்கேட்க வேண்டும் அவருடன் அளவளாவ வேண்டும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என பலர் விரும்பினர். வைரமுத்து எதுவித குறையும் வைக்கவில்லை.  அவருன் தமிழ் துள்ளி விளையாடியது. ஊடக  வெளிச்சம் வைரமுத்துவை பிரகாசிக்கச்செய்தது.  
   
இலங்கைக் கலைஞர்களைச்சந்தித்த வைரமுத்து அவர்களுடனான பொழுதை பிரயோசனப்படுத்தினர். வைரமுத்துவைச் சந்தித்தவர்கள்    மகிழ்ச்சியடைந்தனர் வைரமுத்துவின் புத்தகங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பவர்கள் தமது புத்தகங்களை அவரிடம் கொடுத்து பேருவகை அடைந்தனர். வைரமுத்தின் வீட்டில் எனது புத்தகம் இருக்கிறது என்ற கலைஞனுக்குரிய இறுமாப்பு அவர்களிடம்  உண்டாகியது.
இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைத்து வருபவர்கள் அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.  ஆனால்  வைரமுத்துவை அழைத்துவந்தவர்கள் அந்தகட்டுப்பாட்டைத் தகர்த்தனர்.வைரமுத்துவைச்சந்தித்த பிரமிப்பு சிலரிடம்  இருந்து இன்னமும் விலகவில்லை.

வடமாகாண சபை நடத்திய உழவர் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புடன் உழ்வர் பெருவிழாவை நடத்துவதை ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கிறது. பிரேமதாஸ தலைமையிலான மேதினம் இப்படித்தான் நடைபெற்றது. வடஇந்திய தெனிந்திய  சினிமா நட்சத்திரங்கள் மேதின விழாவில் கலந்துகொள்வதால் கூட்டம் அலை மோதியது.
ஈழத்தமிழரரின்  துயர  காவியத்தை எழுதப்போவதாக வைரமுத்து சூழுரைத்தார்   தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை காவியமாக எழுதும் ஆற்றல் அவரிடம் தேவைக்கு  அதிகமாக உள்ளது. அந்தக் காவியத்தில்  உண்மை  உள்ளபடி வெளிவருமா என்ற சந்தேகம்  பிரமாண்டமாக முன்னெழுந்துள்ளது  தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டதைப்பற்றிய உண்மையை எழுத அவருக்குத் துணிவு உள்ளதா.
இலங்கைத் தமிழரின் துயரத்தைப்போக்க கைகொடுத்த இந்தியா  இறுதியில் எல்லாவற்றையும் அழிக்க உதவியது. எம்.ஜி.ஆரும்,இந்திரா காந்தியும் இலங்கைத் தமிழரின் விடுதலைக்காக செயற்பட்டனர். ராஜீவின் கொலை எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டை இந்தியா கைவிட்டது. புலிகளை அழிக்கவேண்டும் என்ற  கோபத்தில்  இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை  வேடிக்கை  பார்த்தது இந்தியா. வைரமுத்து தனது வைரவரிகளில் இதனை பதிவிடுவாரா   என்ற கேள்வி பாமர மக்களிடமும் உள்ளது. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தை எழுதப்போவதாகக் கூறினார். அதனை அவர் மறந்துவிட்டார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக கருணாநிதி இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. அமைதி காக்கும் படையின் அட்டகாசத்தைப் பொறுக்கமாட்டாது  கொந்தளித்தார். அமைதி காக்கும் படை நாடுதிரும்பியபோது தனது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக முதலமைச்சரான கருணாநிதி அதனை வரவேற்கப்போகவில்லை.முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது தனது   ஆட்சியை தக்க வைப்பதற்காக அமைதி காத்தார்.கருணாநிதியின் தீவிர விசுவாசியான வைரமுத்துவின் காவியத்தில் இது பதியப்படுமா என்பதற்கான பதிலை யார் தருவர்.

தெனாலி,புன்னகை மன்னன், கன்னத்தில் முத்தமிட்டால்   போன்ற தமிழ்ப் படங்கள் இலங்கைத் தமிழ் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தின.இசைப்பிரியா பற்றிய படமும் வேதனையைத் தந்தது. தெனாலியில் கமல் பேசும் இலங்கைத்தமிழ் இலங்கைத் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியது.   கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற “விடைகொடு எந்தன் நாடே எனும் பாடலை கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வெளிவருவது தவிர்க்க முடியாததுதான். அதே போன்ற ஒரு உணர்ச்சியை வைரமுத்து எழுதப்போவதகக் கூறிய  காவியத்தில் காண முடியாது என்பது நிதர்சனம். வைரமுத்து சிறந்த கவிஞர் மட்டுமல்ல  அவர் பல் துறை விற்பன்னர்.  அவருடைய கதையைப் படித்த ஜெயகாந்தன் பாராட்டிய கடிதம் சஞ்சிகையில் வெளியானது. அது போலியான கடிதம் என நிரூபிக்கப் பட்டபோது  மெளனம்  காத்தார்.

இந்திய எழுத்தளர்களின் படைப்புக்கள் இலங்கைத் தமிழ் மக்களின் வீடுகளில் உள்ளன. இலங்கை எழுத்தளர்களின் நூல்களை இந்தியாவில் உள்ள பிரபல எழுத்தளர்களும் இலக்கியவாதிகளும் தேடி வாங்குவது இல்லை. தமக்குத் தெரிந்த ஒருசிலரின் புத்தகங்களை மட்டும் வாங்குவார்கள். இலங்கைப் புத்தகங்கள், சஞ்சிகைகள்,பத்திரிகைகள் என்பன தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை. இது ஒருவழிப் பாதையாக உள்ளது.  வைரமுத்துவிடம் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை எல்லாம் அவர் படிப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை
.
அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் ஆகியவற்றின் மூலம் கண்ணதாசனும், பாண்டவர் பூமி,அவதார புஷர், இராமானுஜர் ஆகியவற்றின் மூலம்  வாலியும் இன்றும் வாழ்கின்றனர். அவற்றைப் போன்ற ஒருகாகவியத்தைப்படைக்க வேண்டும்  என்ற ஆசை வைரமுத்துவிடம்  நீண்ட நாட்களாக உள்ளது.   அதற்குரிய களமாக இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.கவிஞர்  வைரமுத்துவை வரவேற்க இலங்கைத் தமிழ் மக்கள் தயாராக உள்ளனர். அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை 
ஊர்மிளா
சுடர் ஒளி

பெப்ரவரி 3/பெப்ரவரி 9

8 comments:

Anonymous said...


//தெனாலியில் கமல் பேசும் இலங்கைத்தமிழ் இலங்கைத் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியது.//

ஆக்சுவலி, அப்துல் ஹமீதின் ஒரு பேட்டி (மிலெனியம் ஆண்டில் வந்தது என்று நினைக்கிறன்) பார்த்தேன். அதில் இந்த மொழி விசயம் வந்தது. அதுக்கு அவர் கூறினார், முதலில் இலங்கை தமிழ் கதைச்சுத் தான் டப்பின் செய்தவையாம். அதுக்குப் பிறகு படத்தைப் பாத்த போது யாருக்கும் விளங்கவில்லையாம். அதனால் கொஞ்சம் மாத்தி கதைச்சவையாம். கேட்ட போது டீவுக்குள்ளால் அவருக்கு குத்த வேணும் போல இருந்தது. அதை சொல்லியே படத்தை வெளியிட்டிருக்கலாம் தான. வலையுலகில் இருக்கும் யாருமே அந்தப் பேட்டியைப் பார்த்த மாதிரி இல்லை. எப்படி தவறவிட்டார்கள் என்று தெரியவில்லை. நானும் அப்ப சின்னப்பிள்ளை தான். ஆனாலும் அந்தப் பேட்டி நல்லா ஞாபகம் இருக்கு.

Anonymous said...

உங்கள் பதிவில் கோவம், பாராட்டு, சார்காசம், எல்லாம் இருக்கு. எது எது எங்க இருக்கு என்று கொஞ்சம் குழப்பம் வந்தது. ஹி ஹி. சார்காசம் என்றால் சார்காசம் என்று பிராக்கட்டில் போடுங்க. பாராட்டு என்றால் நிசமாகவே பாராட்டு என்று போடுங்க. எவ்வளவு கஷ்டம் படிக்கிறதுக்கு. பாவம் நான். :)

THEVESH M said...

வைரமுத்து ஒரு பக்கா சுயநலவாதி, அங்கிடுதத்தி,விளம்பரமன்னன்
உண்மையான ஈழத்தமிழன் இவனைமதிப்பதில்லை

வர்மா said...

Anonymous Anonymous said...

//தெனாலியில் கமல் பேசும் இலங்கைத்தமிழ் இலங்கைத் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியது.//

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. அப்துல் ஹமீத்தின் பேட்டி பற்றி அறிந்தேன் பார்க்கவில்லை.
அன்புடன்
வர்மா

வர்மா said...

Anonymous said...
உங்கள் பதிவில் கோவம், பாராட்டு, சார்காசம், எல்லாம் இருக்கு


தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

வர்மா said...

THEVESH M said...
வைரமுத்து ஒரு பக்கா சுயநலவாதி

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா

கரிகாலன் said...

நானும் படித்தேன் .வைரமுத்து உண்மையில் ஒரு வைரம் என்று எண்ணுபவர்கள் ஏமாளிகள் .
உங்கள் ஆதங்கம் சரியே .கொஞ்சம் பந்தி பிரித்து பதிவிடுங்கள் வர்மா .படிக்க கஷ்டமாக இருக்கிறது .தொடருங்கள் .பாராட்டுக்கள் .

வர்மா said...

Anonymous கரிகாலன் said...
நானும் படித்தேன் .வைரமுத்து உண்மையில் ஒரு வைரம் என்று எண்ணுபவர்கள் ஏமாளிகள் .
உங்கள் ஆதங்கம் சரியே .கொஞ்சம் பந்தி பிரித்து பதிவிடுங்கள் வர்மா .படிக்க கஷ்டமாக இருக்கிறது .தொடருங்கள் .பாராட்டுக்கள் ///

தங்கள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா