Sunday, October 15, 2017

உலகின் பெரிய போட்டியில் உலகின் சிறிய நாடு

உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிச்சுற்றுப் போட்டியில் கொசாவோ அணியை 2-0 என்று வீழ்த்திய ஐஸ்லாந்து அணி ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெறும்  உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது.
 உலகக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்குத் தகுதி பெற்ற முதல் ஆகச்சிறிய நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து தட்டிச் சென்றது. ஐஸ்லாந்து மக்கள் தொகை சுமார் 3,50,000 என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கு முன்னதாக உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடருக்குத் தகுதி பெற்ற சிறிய நாடு டிரினிடாட் டொபாகோவாகும் இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியனாகும். 2006-ம் ஆண்டு டிரினிடாட் அணி தகுதி பெற்றது. இப்போது ஐஸ்லாந்து தகுதி பெறும் வரை உலகின் மிகவும் சிறிய நாடு ஒன்று உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் பட்டியலில் டிரினிடாட் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

  2016 ஆம் ஆண்டு  யூரோ கிண்ணத் தொடரில் இருந்து   இங்கிலாந்தை வெளியேற்றியது ஐஸ்லாந்து, அதற்கு சரியாக 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது உலகக்கிண்ண உதைபந்தாட்தடத்துக்குத்  தகுதி பெற்றுள்ளது.
ஐஸ்லாந்து அணியின் ஜில்ஃபி சிகர்ட்சன் மற்றும் ஜொஹான் குட்மண்ட்சன் ஆகியோர் இரண்டு கோல்களை கோசாவா அணிக்கு எதிராக அடித்து    அணியை தகுதி பெறச் செய்தனர்.

இந்த அணியின் பயிற்சியாளர் ஒரு பல் மருத்துவராவார். இவர் பெயர் ஹெய்மிர் ஹால்கிரிம்சன். இவரது பயிற்சியின் கீழ் சாதனைகளை நிகழ்த்தி வரும் ஐஸ்லாந்து தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களில் 22 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Saturday, October 14, 2017

அமெரிக்காவை வெளியேற்றிய டிரினிடாட் அண்ட் டுபாக்கோ

 சோகத்தில் அமெரிக்க வீரர்
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதை ஒரு கெளரவமாக  உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கருதுகின்றன. உலகை அச்சுறுத்தும் நடன அமெரிக்கா  மிகச்சிறிய நாடான டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோல்வியடைந்ததால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப்      போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளையாடின. 4 சுற்றுகளின் முடிவில் மெக்சகோ, கோஸ்டா ரிகா, பனாமா, ஹோண்டுராஸ், அமெரிக்கா, டிரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய 6 அணிகள் ரவுண்ட் ராபின் சுற்றுக்கு முன்னேறின.

இதில் இருந்து 3 அணிகள் மட்டுமே  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதால் இந்த அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் மிக முக்கியமான ஆட்டத்தில் அமெரிக்காவும் டிரினிடாட் அண்ட் டுபாக்கோவும் செவ்வாய்க்கிழமை இரவு மோதின. இதில் அமெரிக்கா 2-1 என தோல்வி அடைந்தது. அதேசமயம், ஹோண்டுராஸ், பனாமா அணிகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

எனவே, புள்ளி பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்திற்கு பின்தங்கியதால்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்விளையாடும்  வாய்ப்பு பறிபோனது. இந்த பிரிவில் இருந்து கோஸ்டா ரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய அணிகள்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.


1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அணி  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

Thursday, October 12, 2017

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை


இந்தியாவுடனான சகல போட்டிகளிலும் தாய்நாட்டில் தோல்வியடைந்த இலங்கை, துபையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஆறுதலடைந்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல் - இரவு ஆட்டமாக துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில்   வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இலங்கை 482 ஓட்டங்கள்  குவித்து ஆட்டம் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 262 ஓட்டங்களில் சகல விக்கெற்களையும் இழந்தது.

  220 முன்னிலையுடன்  முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 96 ஓட்டங்களில் சுருண்டது.

இலங்கை 96 ஓட்டங்கள் எடுத்ததாலும் பாகிஸ்தானை விட 316ஓட்டங்கள்  முன்னிலை பெற்றது. இதனால் 317 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கையின் துல்லியமான பந்து வீச்சால் 52 ஓட்டங்கள்  எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து பாகிஸ்தான் தத்தளித்தது.
 196 அடித்த கருணாரத்ன‌
6-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்,  பாகிஸ்தானின் அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் வளர்த்தது.

இருவரது ஆட்டத்தாலும் பாகிஸ்தான் அணி   4-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198ஓட்டங்கள்  எடுத்திருந்தது. ஆசாத் ஷபிக் 86 ஓட்டங்களுடனும்  சர்பிராஸ் அஹமது 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 119 ஓட்டங்கள்  மட்டுமே தேவைப்பட்டது.

  ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அசாத் ஷபிக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஆனால் சர்பிராஸ் அஹமது 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்தில் ஆட்டம் இழந்தார். அதன்பின் பாகிஸ்தான் அணி தோல்வியை நோக்கி சென்றது.
மொகமது அமிர் 4 ஓட்டங்களுடனும்  யாசிர் ஷா 5  ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேற, சதம் அடித்த ஷபிக் 112 ஓட்டங்களில் வெளியேறினார். வஹாப் ரியாஸ் ஒரு ஓட்டத்துடன்  வெளியேற, பாகிஸ்தான் 90.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து 248 ஓட்டங்கள்  எடுத்தது.  இதனால் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

முதல்  இன்னிங்சில் 196 ஓட்டங்கள் எடுத்த கருணாரத்னே ஆட்ட நாயகன் விருதையும், இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 300 ரன்களுக்கு மேல் குவித்ததால் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா

 
கிரிக்கெற் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவுஸ்திரேலிய தற்போது வெற்றி பெற முடியாது தவித்துவருகிறது. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அவுஸ்திரேலியாவை வார்னர் தலைமையிலான வீரர்கள்  வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ரி20 போட்டியில் தொடர்ந்து ஏழு வெற்றிகளைப் பெற்ற இந்தியாவின் வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.  2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரி 20யில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது.

இரண்டு  அணிகளுக்கும்  இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இங்கு அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதன் மூலம் இந்தியாவின் 49-வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்தது. இந்திய அணியில் மாற்றம் இல்லை.அவு அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ் சேர்க்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  வார்னர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

அவுஸ்திரேலியாவின் ஜாசன் பெரென்டோர்ப் பந்து வீச்சில் அச்சுறுத்தினார். வரிசையாக இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, மணிஷ் பாண்டே, ஷிகர் தவான் ஆகியோரை  வெளியேற்றினார். முதல் 5 ஓவர்களிலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 4 பேரை வெளியேற்றினார் ஜாசன் பெரன்டோர்ப்.  கோஹ்லி ரி20 யில் முதன் முதலாக டக் அவுட்டானார்.


4.3 வது ஓவரில் இந்திய அணி வெறும் 27 ஓட்டங்கள் கள் எடுத்து இருந்த நிலையில் 4 விக்கெட்களை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜாதவுடன், டோனி களம் இறங்கினார். இருவரும் நின்று விளையாட தொடங்கினர். இதனால் இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் சிறிது மகிழ்ச்சி காணப்பட்டது. ஆனால் அதனையும் அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் ஜம்பா விடவில்லை. 9.5 வது ஓவரில் இந்திய அணி 60 ஓட்டங்கள் கள் எடுத்து இருந்த நிலையில் டோனி 13 ஒட்டங்களில் வெளியேறினார். ஜாதவுடன், ஹர்திக் பாண்டியா இணைந்து  விளையாடினார். இந்த கூட்டணியும் நிலைக்கவில்லை, ஜாதவும், ஜம்பாவின் பந்துவீச்சில் 27 ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
11.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் தவித்தது. புவனேஷ் குமார் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.இதனையடுத்து இந்திய அணியை 100 ஓட்டங்களைக் கடக்க செய்த ஹர்திக் பாண்டியாவும் 25 ஓட்டங்களில் அட்டம் இழந்தார்.  பும்ரா 7 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். எதிர்முனையில் ஆடிய குல்தீப் யாதவ் 19.6 வது ஓவரில் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்தியா சகல விக்கெற்களையும் இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தது. . அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் 21 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து  4 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

  119 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் விளையாடிய அவுஸ்திரேலியா இரண்டு  விக்கெற்களை இழந்து வெற்றி பெற்றது.
  அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டன் டேவிட் வார்னர்  இரண்டு ஓட்டங்களுடனும் ஆரோன் பிஞ்ச்  எட்டு ஓட்டங்களுடனும் சீக்கிரம் வெளியேற்றப்பட்டாலும், மோசஸ் ஹென்ரிக்சும், டிராவிஸ் ஹெட்டும் அணியை தூக்கி நிறுத்தினர்.

சிறிய இலக்கு என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சை பின்னியெடுத்தனர். குறிப்பாக ஹென்ரிக்ஸ், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்பின் ஓவர்களில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டார்.

அவுஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து  122ஓட்டங்கள்  எடுத்து  8 விக்கெற் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹென்ரிக்ஸ் 62 ஓட்டங்களுடனும் களுடனும் (46 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களுடனும்  (34 பந்து, 5 பவுண்டரி,  ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.


ஆர்ஜென்ரீனாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி

 ஈக்குவாடோருக்கு எதிரான கடைசிப் போட்டியில்  வெற்றி பெற்ற   ஆர்ஜென்ரீனா 2018 உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது. ரஷ்யாவில், அடுத்த ஆண்டு  உலகக்கிண்ண உதைபந்தாட்டப்  போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் மிகவும் சுமாராக விளையாடி வந்த  ஆர்ஜென்ரீனா அணி, ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2014 -ம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியில்  'ரன்னர்-அப்' ஆக இருந்த  ஆர்ஜென்ரீனா அணிஇ தகுதிச்சுற்றில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியது,   ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில்தான், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஈக்குவாடோர் அணியுடன் மோதியது  ஆர்ஜென்ரீனா அணி.  ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக இரண்டு கோல்களைப் போட்டார் நட்சத்திர   வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர்  3-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது  ஆர்ஜென்ரீனா மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்  தகுதிபெற வழிவகுத்தது மட்டுமல்லாமல், பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது. 

Wednesday, October 11, 2017

அமெரிக்காவை வெளியேற்றிய டிரினிடாட் அண்ட் டுபாக்கோ

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதை ஒரு கெளரவமாக  உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கருதுகின்றன. உலகை அச்சுறுத்தும் நடன அமெரிக்கா  மிகச்சிறிய நாடான டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோல்வியடைந்ததால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப்      போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளையாடின. 4 சுற்றுகளின் முடிவில் மெக்சகோ, கோஸ்டா ரிகா, பனாமா, ஹோண்டுராஸ், அமெரிக்கா, டிரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய 6 அணிகள் ரவுண்ட் ராபின் சுற்றுக்கு முன்னேறின.

இதில் இருந்து 3 அணிகள் மட்டுமே  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதால் இந்த அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் மிக முக்கியமான ஆட்டத்தில் அமெரிக்காவும் டிரினிடாட் அண்ட் டுபாக்கோவும் செவ்வாய்க்கிழமை இரவு மோதின. இதில் அமெரிக்கா 2-1 என தோல்வி அடைந்தது. அதேசமயம், ஹோண்டுராஸ், பனாமா அணிகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

எனவே, புள்ளி பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்திற்கு பின்தங்கியதால்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்விளையாடும்  வாய்ப்பு பறிபோனது. இந்த பிரிவில் இருந்து கோஸ்டா ரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய அணிகள்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன..


1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அணி  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

Tuesday, October 10, 2017

உலகக் கிண்ணப் போட்டியில் 28வருடங்களின் பின் எகிப்து


ரஷ்யாவில் 2018-ம் ஆண்டு  நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்   தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்பிரிக்க நாடுகள் இடையிலான தகுதி சுற்று போட்டியில்  வெற்றி பெற்ற எகிப்து அணி 28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது

 எகிப்து - காங்கோ அணிகள் நேற்று கெய்ரோவில் மோதின. இதில் எகிப்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரரான முகமது சலாஹ் 63-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.   
  
போட்டி  முடிவடைய 2 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் காங்கோ அணி பதிலடி கொடுத்து 1-1 என சமநிலையை ஏற்படுத்தியது. 88-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அர்னால்டு போகா அசத்தலாக கோல் அடிக்க எகிப்து வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கடைசி நிடத்தில் எகிப்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி முகமது சலாஹ் கோல் அடிக்க எகிப்து அணி அபார வெற்றி பெற்றது.

பிரிவில் இடம் பிடித்துள்ள எகிப்பது அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதுடன் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது எகிப்து கடைசியாக 1990-ம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடியது.

ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே நைஜீரியாவும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.