Monday, November 25, 2013

ஏற்காட்டில் பலப் பரீட்சை தி.மு.க, அ.தி.மு.க. நேரடிப்போட்டி

ஏற்காடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கும் இடையே நேரடிப்போட்டி நடைபெற உள்ளது.இடைத்தேர்தலுக்காக  தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் சரோஜா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் மாறன் ஆகிய இருவருக்கும் இடையேயான  தான் போட்டி உள்ளது.
தமிழக்கத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் ஜெயலலிதாதான் முதலில் வேட்பாளரை அறிவிப்பார். ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கருணாநிதிதான் முதலில் அறிவித்தார். வைகோவும் ராமதாஸும் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் இடைத்தேர்தல்களில் வேட்பாளரைக் களமிறக்கும் விஜயகாந்த் இறுதிவரை மெளனமாக இருந்தார். கடைசி நேரத்தில் விஜயகாந்த் வேட்பாளரை அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட விஜயகாந்தின் வேட்பாளர் 10 ஆயிரம்  வாக்குகள் பெற்றார். 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் களம் இறங்கிய விஜயகாந்தின்மைத்துனர் சுதீஷ் 21 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.விஜயகாந்தின் கட்சிக்குரிய வாக்குகளை அள்ளுவதற்கு இரண்டு பெரிய கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.விஜயகாந்திடம் ஆதரவுகேட்டு கருணாநிதி பலமுறை தூது அனுப்பியும்  காரியம் எதுவும் நடைபெறவில்லை.கருணாநிதியை கவிழ்ப்பதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்த விஜயகாந்த் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டபின் வேறு தலைவர்களுடன் கூட்டணி சேரத்தயங்குகிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய அமைச்சர்களைக் களமிறக்கியுள்ளார்   ஜெயலலிதா. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர் கட்டுபணத்தை இழக்க வேண்டும் எனக் கடுமையான உத்தரவை விடுத்துள்ளார்.இதற்காக அரச வளங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தோல்வி  அடைந்தாலும்கெளரவமாக தோற்க வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம்.
இடதுசாரிகளும் சரத்குமாரும் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்து ஆதரவளிப்பார்கள். விடுதலைச்சிறு கதைகள்,   மனித நேயமக்கள்கட்சி, முஸ்லிம் லீக் ,  புதியதமிழகம் ஆகியன    திராவிட   முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கின்றன. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் பிராதன பங்காளியான காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக இன்னமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.ஏற்காட்டில் நடைபெறுவது தமிழக சட்டசபையின் இடைத்தேர்தல் தான்.என்றாலும்  இந்திய நாடாளுமன்றத்தின் முன்னோடித் தேர்தலாகவே இது கருதப்படுகின்றது.
ஏற்காடு தேர்தல் தொகுதியில் 240 290வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான முயற்சியை இரண்டு திராவிடக்கட்சிகளும் முன்னெடுக்கின்றன. தமிழக அமைச்சர்கள் ஏற்காட்டில்   முகாமிட்டுள்ளனர். அரசவளங்கள் தாராளமாகப் பயன்படுத்த ப்படுகின்றன. தேர்தல் சட்டாவிதிகள் மீறப்படுவதாக திராவிட முன்னேற்றக்கழகம் தமிழக தேர்தல் ஆணையத்தில்  புகார் செய்துள்ளது.புகாரில் உள்ள ஒரு சிலவற்றுக்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பல கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அம்மா குடிநீரிலும், அரச, சொகுசு பஸ்களிலும் இரட்டை இலைசின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை திராவிட முன்னேற்ற கழகம் கூட்டிக் காட்டியுள்ளது.அம்மா குடிநீர்போத்திலில் உள்ள இரட்டை இலைச்சின்னத்தை அகற்றிவிட்டு குடிநீர்ப் போத்தலை விநியோகிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஸ்டாவின்.
அம்மாகுடிநீரைத் தொடர்ந்து அம்மா உணவகத்தை 
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.குறைந்த  விலையின் சிறந்த உணவு என்ற கோ­ஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட  உணவகத்துக்கு செல்பவர்களின் தொகை அதிகாரித்து ள்ளது.பொது இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உணவகம் வைத்தியசாலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது.அம்மா என்றால் ஜெயலலிதா தான் என்பதை  அழுத்தம் திருத்தமாக மக்களின் மனதில் பதிப்பதற்கு இவை உதவுகின்றன.

வெற்றியை வெளிப்படுத்துவதற்கு கையை உயர்த்தி இரண்டு விலைக் காட்டுவதே  உலகில் உள்ளவர்களின் வழமையான நடவடிக்கை இரண்டாவது உலகமகாயுத்தத்தின்போது வின்ஸ்ரன் சேர்ச்சில் அறிமுகப்படுத்தியதையே உலகம் இன்றும் பின் தொடர்கிறது.அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்து எம்.ஜி.ஆர்.இரண்டு விரல்களைக் காட்டி இரட்டை சின்னத்தை அறிமுகப்படத்தினார்.அன்றிலிருந்து தமிழகத்தில் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கு எதிரானவர்கள் யாருமே கையை உயர்த்தி இரண்டு விரலைக் காட்டுவதில்லை.
 திராவிட   முன்னேற்றக்கழகத்தின் சின்னம் உதயசூரியன் கையை விரித்துக் காட்டி உதயசூரியன் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள்.
 காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை, தமிழகத்திர் அவர்கள் இரண்டு கைகளையும் உயர்த்திக் காண்பிப்பார்கள். அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்வர்கள் ஜெயலலிதாவை அம்மா என்கிறார்கள். தமிழக சட்டசபையிலும் பொது இடங்களிலும்  அவரை அம்மா என்றே விழிப்பார்கள். அம்மா குடிநீர், அம்மாஉணவகம் எல்லாம் ஜெயலலிதாவை ஞாபகப்படுத்துவதாக கூறுகிறார் ஸ்டாவின்.
அம்மா என்றால் என்ன என்று நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. அண்ணா திராவிட   முன்னேற்றக்கழக விளம்பரங்களில் ஜெயலலிதாவின் படத்துக்கு அருகில் அம்மா என்று எழுதுகிறார்கள்.   ஜெயலலிதாவின் பெயரைக் குளிபிடுவதில்லை.அம்மா என்றால் ஜெயலலிதா என்றே அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்தவர்களின் மனதில் பதிந்துள்ளது.மற்றவர்களின்  மனதில் அது இறுக்கமாப்  பதிய வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவின் படத்துடன் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதனைக்  கருத்திற்கொண்டே ஸ்டாவின் வழக்குத் தொடர்ந்துள்ளது.
திராவிட   முன்னேற்றக்கழகம்,அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகம்  ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் மோதலை  ஏனைய கட்சிகள் உன்னிப்பாக  அவதானித்து வருகின்றன. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் பங்காளியான தமிழக  காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கு எதிராகச் செயற்படுகிறார். அமைச்சர்களான சிதம்பரம், இளங்கோவன், ஜெயந்தி நடராஜா ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர்களாக உள்ளனர்.கடைசிநேரத்தில் காடகிரஸ் பிரகாரத்துக்கு வரும் என்று கருணாநிதி கருதுகிறார்.
வைகோவும், டாக்டர் ராமதாஸுடம் திராவிக் கட்சிகளைவிட்டு வெகுதூரத்திலேயே உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தான் அவர்கள் குறியாக உள்ளனர்.ஆகையினால் , ஏற்காடு இடைத்தேர்தலில் அவர்கள் அக்கறைகாட்டவில்லை.தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களாக வைகோவும் ராமதாஸும் ஒரு காலத்தில் விளங்கினர். அவர்களின் வாக்குவங்கி குறைந்ததனால் கருணாநிதியாலும்,ஜெயலலிதாவாலும் ஒதுக்கப்பட்டனர். அதனால் திராவிடக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ததில்லை என இருவரும் சபதம் செய்துள்ளார்.
பலமான கூட்டணி  தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்த வைகோவும், டாக்டர் ராமதாஸும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பது வெளிப்படையானது.இந்திய நாடாளுமன்றத் தேர்தல்  நெருங்கும் போதுதான் இவர்களில் உண்மையான முகம் வெளிவரும்.அதுவரைஇவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது இருப்பை வெளிக்காட்டுவார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் திராவிட   முன்னேற்றக்கழக த்துக்கும், அண்ணா திராவிட.   முன்னேற்றக்கழகத்துக்கும் பலப்பரீட்சைக்களமாக உள்ளது.வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் பாதை ஜெயலலிதாஉள்ளார். தோல்வியடைந் தாலும் கட்டுப்பணத்தை இழக்கக்கூடாது என கருணாநிதி நினைக்கிறார்.மக்களின் விருப்பத்தை தேர்தலுக்குப்பின்தான் தெரிந்து கொள்ளலாம் விஷேட  கவனிப்புகளால் மக்கள் மகிழ்ச்சியடையப்போவது உறுதி.
வர்மா
சுடர் ஒளி 24/11/13


No comments: