Sunday, January 11, 2015

ஜனநாயகத்தை நிலைநாட்டிய வாக்காளர்கள்

  இலங்கை அரசியல் களத்தில்  அசைக்க முடியாத தலைவராக மிளிர்ந்த மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித்தேர்தலில் எதிர்பாரதவிதமாகதோற்ற்கடிகப்பட்டார். மஹிந்தவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் திராணி யாருக்கும் இல்லை  என்றநிலையை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று மாற்றிக்காட்டி உள்ளன. 2005 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவிடமிருந்து ஜனாதிபதிப்பதவியைப் பொறுப்பேற்றபின் அவரின் வெற்றிக்கொடி உயரத்தில் பறக்கத்தொடங்கியது.

மஹிந்த ராஜபக் ஷ்வின்  வெற்றியிலும் தோல்வியிலும் வடக்கு கிழக்கு மக்களின் பங்களிப்பு மிக அதிகம் 2005 ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிக்காது மகிநதவை ஜனாதிபதியாக்கிய தமிழர்கள் 2015 ஆம் ஆண்டு வாக்களித்து அவரைத்தோல்வியடையச்செய்தார்கள்.மகிந்தவை எதிர்த்து ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதுவித செல்வாக்கும் இல்லை.மஹிந்தவுக்கு எதிரான வாக்குகளே மைத்ரியை ஜனாதிபதி ஆக்கியது. தமிழிழவிடுதலைப் புலிகள அழித்ததனால் சிங்கள மக்களின் மீட்பராக அவர் கருதப்பட்டார். தேர்தலில் தோல்விகிடையாது என்ற எண்ணமே  மூன்றாவதுமுறை ஜனாதிபதியாகும் ஆசையை அவருக்கு அருக்கூட்டியது.

சகல அதிகாரங்களும் கையில் இருந்ததனால் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகும் திட்டத்தை வகுத்தார். அதற்கானதடைக்கற்கள் எல்லாவற்றையும் நிறைவேற்று முறை ஜனாதிபதி என்றதோரணையில் அகற்றினார்.காலம் கனிந்து வரும் வேளையில் அவரின் ச்சல்வைக்குள் பத்திரமாக இருந்த மைத்திரி வெளியேறினார்.சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் ஆகியோருடன் மைத்திரி கை கோர்த்ததால் மஹிந்தவின் தோல்விப்பாதை ஆரம்பமகியது.

 மஹிந்தவின் வெற்றிக்கணக்கு அழிக்கப்பட்டு தோல்விக்கணக்கு எழுத ஆரம்பிக்கப்பட்டதும்  அவருடன் கூட இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறத்தொடங்கினர். அரசாங்கத்தில் இருந்து வெளியேறுபவர்களி முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அன்றைய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். அவர்களை புனிதர்களாக கருதிய எதிரணி  பதிலடி கொடுத்து ஏற்றுக்கொண்டது.  குடும்ப அரசியலுக்கும்,ஊழலுக்கும் எதிராக போரடப்போவதாக அணிமாறியவர்கள் அறிக்கை விட்டார்கள். ஒப்பந்தம் எதுவும் இலலாமல் இவர்கள் அணிமாறி இருக்க மாட்டார்கள் என்பது வெளிவராத இரகசியம்
மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்கவேண்டும் என முடிவெடுத்த ஜேவிபி எதிரணிகளுடன் எதுவித ஒப்பந்தமும் இன்றி மறைமுக ஆதரவு தெரிவித்தது.இலங்கை அரசியலில் கிங்மேக்கராக ஒருகாலத்தில் விளங்கிய ஜேவிபி மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்று தனியாகப்பிரசாரம் செய்தது.அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ரிஷாட்  அரசியல் நிலவரத்தை உணர்ந்து எதிரணிக்குத்தாவினார். ரிஷாட்டைஎதிர்த்து அக்கட்சியில் இருந்து முதலில் வெளியேறியவரை எதிரணி நடுத்தெருவில் விட்டு விட்டது. 

 தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முடிவெடுகாது காலத்தைக்கடத்தின. தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும்  யாருக்கு வக்களிக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டனர். வாக்காளரின்  ம்னநிலையை தலைமைகளும் உணர்ந்து கொண்டன  மக்களின் மன நிலைக்கு அவர்களும் பச்சைக்கொடி காட்டினர். இந்தத் தேர்தல் முடிவுக்கு முற்று முழுதாக மக்கள்தான் பொறுப்பு  அரசியல் வாதிகள் மக்களின் பின்னால் போய் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக தமிழ்மககள் எதுவித ஒப்பந்தமும் இன்ன்றி வாக்களித்துள்ளனர்.தமிழ் மக்களின்மீது முன்னைய அரசாங்கம்  அடக்குமுறையைபிரயோகித்தபோது முஸ்லிம் மக்கள்  மெளனமாக அங்கீகரித்தனர். மசூதிகள் தகர்க்கப்பட்டபோதுதான் தமிழர்களின் வலியை அவர்கள் உணர்ந்தார்கள். முன்னைய அரசின் செல்லப்பிள்ளையான பொதுபலசேனாவின் கொடூரம் முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டியது. முஸ்லிம் தலைவர்கள் சற்று தாமதமாக முடிவெடுத்தார்கள்.

ஆட்சிமாறிவிட்டது  காட்சிகள் மாறத்தொடங்கிவிட்டன. செயலாளர்கள்  மாறுகின்றனர், அரசதிணக்கள தலைவர்கள் மாறுகின்ற்னர். சிலர் இராஜினாமச் செய்துவிட்டனர்.  சிலர் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் சில்ர் தப்பி ஓடிவிட்டதாக வதந்தி பரவுகிறது.எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி  மைத்திரியை ஜனாதிபதியாக்கிய தமிழர்களுக்கு  அவர் என்ன செய்யப்போகிறார். அவருடைய 100 நாள்  வேலைத்திட்டத்தில்  தமிழ்மக்களுக்கு சாதகமான செய்திகளெவையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது மஹிந்த சொன்னவற்றையே கிளிப்பிள்ளைபோல் மைத்திரி திருப்பிக்கூறினார்.  போர்க்குற்ற விசாரணை  இல்லை.வடக்கில் இருந்து இராணுவம்  குறைக்கப்படமாட்டாது இதை எல்லாம் தெரிந்து  கொண்டுதான் தமிழ்மககள் மைத்திரியைத்தேர்வு செய்தார்கள். நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்திய மஹிந்தவுக்கு உரிய கெளரவம் வழங்கப்படும் என ரணில் அறிவித்துள்ளார். அதை எல்லாம் பொருட்படுத்தாது எதிர்ப்புக்க்காட்டி உள்ளனர் தமிழ் மக்கள்.

ஜனாதிபதி மைத்திரியின் முன்னால் பல பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. ஊழல்,அதிகாரதுஷ்பிரயோகம்,போதைவஸ்து வியாபாரம்,விலைவாசி என்பன் அவருக்குமுன்னல் உள்ள பொதுவான பிரசினைகள்.

அதிஉயர் பாதுகாப்பு என்றபெயரி சுவீகரிகப்பட்ட தமிழ்மக்களின்  நிலம்,வெற்றிக்கொண்டாட்டத்தின் நினைவுச்சின்னங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, குற்றம் சுமத்தப்படாது சிறையில் வாடும் கைதிகளுக்கு நிவாரணம், பொதுமக்களின் இடங்களில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவமுகாம்கள்,,புற்றீசல்கள்போல் முழைத்துள்ள விகாரைகள் இவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.இறந்தவர்களை நினைத்து அழுவதற்குக்கூட மஹிந்த அரசு அனுமதிக்கவில்ல. 

வடக்கு மாகாண்சபை இயங்குவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டை நீக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கெல்லாம் புதிய ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை அறிய உலகம் ஆவலாக உள்ளது. முகாம்களில் வாடுபவர்கள்  தாம் சொந்த இடத்துகுச்செல்லும் நாளை ஆவலுடன் எதிபார்த்துள்ளனர்.

தமிழ்மககளால் தோற்கடிக்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.  தனிச்சிங்கள் வாக்குக்களால் மூன்றாவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறலாம் என்று நினைத்த மஹிந்தவுக்கு  தமிழ்,முஸ்லிம் வாக்குகள் பதிலடி கொடுத்துள்ளன.எங்களை அரவணைத்தால் ஆட்சியில் இருக்கலாம் என்பதை தமிழ்,முஸ்லிம் மக்கள்  பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா,சீனா,இந்தியா ரஷ்யா போன்ற உலக நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்தாலும் வாக்களிப்பது இலங்கை மக்கள்தான் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி உள்ளது.

2 comments:

Unknown said...

மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி.....ஆனாலும் புதியவரின் ஆட்சியில் உதவிகள் வேண்டாம்,சுதந்திரமேனும் கிடைத்தால் சரி.....

வர்மா said...

Srinivasan V MEG said...
மிக தெளிவாக விளக்கினீர்கள் நன்றி.....ஆனாலும் புதியவரின் ஆட்சியில் உதவிகள் வேண்டாம்,சுதந்திரமேனும் கிடைத்தால் சரி....//

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. மறைமுகமான முடிவை புதியவர் புரிந்து கொண்டால் நல்லது.
அன்புடன்
வர்மா