Wednesday, April 29, 2015

விசித்திர வழக்கு

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெறும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கு அதிரடியான திருப்பங்க்ளும் விசித்திரங்கள் பல நிறைந்ததுமாக உள்ளது.

குற்றம் சாட்டபட்டு நிதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுபவர் தான் சுற்றவாளி என நிரூபிப்பதற்காக திறமையான வழக்கறிஞர்களை நியமிப்பார். குற்றம் சாட்டப்பட்ட தனக்கு எதிராக அரச தரப்பில் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்த விசித்திரமும் விந்தையும் இங்கு அரங்கேறி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதாசொத்துச் சேர்த்தார் என்ற திரியை முதன் முதலில் கொளுத்திப்போட்டவர் சுப்பிரமணியன்சுவாமி. பின்னர் அரசியல்வாதியாகி அவருடன் கைகோர்த்து தேர்தலைச் ச்ந்தித்தார். ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் கசந்ததனால் அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பேன் என சபதமிட்டு வழக்கு ஆவணங்களுடன் கர்நாடக நீதி மன்றத்தில் போய் அமர்ந்தார்

ஜெயலலிதாவின் வழக்கு  நீதிமன்றத்தில்விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  சுப்பிரமணியன்சுவாமி ஆஜரானபோது நீயார்? உன் பெயரென்ன? உனக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என நீதிபதி கேட்டதால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன்சுவாமி  தன்னை அறிமுகப்படுத்தி இந்தவழக்கின் சூத்திரதாரி  நான் என    விளங்கப்படுத்தினார்

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெறும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கு அதிரடியான திருப்பங்க்ளும் விசித்திரங்கள் பல நிறைந்ததுமாக உள்ளது.

குற்றம் சாட்டபட்டு நிதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படுபவர் தான் சுற்றவாளி என நிரூபிப்பதற்காக திறமையான வழக்கறிஞர்களை நியமிப்பார். குற்றம் சாட்டப்பட்ட தனக்கு எதிராக அரச தரப்பில் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்த விசித்திரமும் விந்தையும் இங்கு அரங்கேறி உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதாசொத்துச் சேர்த்தார் என்ற திரியை முதன் முதலில் கொளுத்திப்போட்டவர் சுப்பிரமணியன்சுவாமி. பின்னர் அரசியல்வாதியாகி அவருடன் கைகோர்த்து தேர்தலைச் ச்ந்தித்தார். ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் கசந்ததனால் அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பேன் என சபதமிட்டு வழக்கு ஆவணங்களுடன் கர்நாடக நீதி மன்றத்தில் போய் அமர்ந்தார்

ஜெயலலிதாவின் வழக்கு  நீதிமன்றத்தில்விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  சுப்பிரமணியன்சுவாமி ஆஜரானபோது நீயார்? உன் பெயரென்ன? உனக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்? என நீதிபதி கேட்டதால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன்சுவாமி  தன்னை அறிமுகப்படுத்தி இந்தவழக்கின் சூத்திரதாரி  நான் என    விளங்கப்படுத்தினார். 

ஜெயலலிதா குற்றம் செய்தார் என நிரூபிக்க வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்  அவருக்கு சாதகமாக  வாதாடினார்.வழக்கை  இழுத்தடிப்பதிலேயே குறியாக இருந்தார். சட்டம் தெரியாதவர்களே அவரின்  வாதத்தில் சந்தேகப்பட்டனர். நீதிபதி அவரை  எச்சரித்து அபராதம் விதித்தார். அதனை பெரிதாக பவானிசிங் கருதவில்லை. நீதிபதி குன்ஹா கடுமையான தீர்ப்பு வழங்கியும்ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க பவானிசிங் மறுப்பு தெரிவிக்கவில்லை

பவானிசிங்  தொடர்ந்தும் வாதாடினால் ஜெயலலிதா விடுதலையாகி விடுவார் என நினைத்த திராவிட முன்னேற்றக்கழகம் அன்பழகனின் மூலம் மனுதாக்கல் செய்தது.தமிழகத்தில்  நடைபெற்ற ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகர்நாடகத்துக்கு மற்றப் படுவதற்கு வழிஅமைத்தவர் அன்பழகன்.   

அரச தரப்பு வழக்கறிஞராக ஆஜராகும் தகுதி பவானிசிங்குக்கு இல்லை என்ற வழக்கு இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு  வந்தபோது ஒரு நீதிபதி  எதிர்த்தும்  மற்றவர் சரி என்றும் தீர்ப்பு வழங்கினர். ஆகையினால் மூன்று நீதிபதிகள்  பெஞ்சுக்கு  பாரப்படுத்தப்பட்டது. 

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஜெயலதாவுக்கு எதிரான வழக்கின் போக்கை மாற்றியது. பவானிசிங்கின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிக்ள் அவருடை வாத்த்தை   ஏற்கக்கூடாது என்றனர். எழுத்து பூர்வமான் வாதத்தை  முன்வைக்க அன்பழகனுக்கும் கர்நாடக அரசுக்கும் ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. இப்படிஒரு தருணத்துக்காக காத்திருந்த அன்பழகன் 81 பக்கங்களில் தனதுதரப்பு வாதங்களை சமர்ப்பித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரைத்தேடிய கர்நாடகவின் கண்களில் ஆச்சரியா தென்பட்டார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஏழு வருடங்களாக அரச தரப்பு வழக்கறிஞராக வாதாடியவர் ஆச்சாரியா. ஆச்சாரியாவின் வாதங்களும் கேள்விகளும் ஜெயலலிதாவை திக்குமுக்காடச் செய்தன. ஆச்சாரியாவை அகற்றுவதற்கு அரசியல் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. பதவி உயர்வு கொடுக்கப்பட்டு வெளியேற்ற முயற்சி செய்யப்பட்டது. எதற்கும் அசைந்து கொடுக்காத ஆச்சாரியா மனம் வெறுத்து தானாக விலகினார்.

ஆச்சாரியாவின் வெளியேற்றத்தால் ஜெயலலிதாதரப்பு நிம்மதி அடைந்தது.  தன்னை வெளியேற்ற பாரதிய ஜனதாக் கட்சி கொடுத்த நெருக்கடிகளையும் ஜெயலலிதாதரப்பின் மிரட்டல்களையும் தனது சுய சரிதையில் விபரித்தர். ஆசுவாசமாகமூச்சுவிட்ட ஜெயலலிதாவுக்கு  ஆச்சாரியாவின் மீள்வருகை கலகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விபரங்களை விரல் நுணியில் வைத்திருந்த ஆச்சாரியா 18 பக்கங்களில்  கார்நாடக அரசதரப்பு வாதத்தை முன்வைத்தார்.

சசிகலா. இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு சார்பாக வாதாடியபோது உங்கள்  பிரதிவாதிக்கு  ஆதரவாக வாதாடுங்கள்   என நீதிபத் எச்சரித்தார். காவேரிப்பிரச்சினையின் போது கார்நாடகத்துக்கு ஆதரவாக் ஜெயலலைதாவை எதிர்த்து வாதாடிய பாலிநரிமன் ஜ்ர்யலலிதா நிரபராதி என வாதாடினார்.

 சொத்துக்குவிப்பு வழக்கை 18 வ்ருடங்களாக இழுத்தடித்து சாதனை செய்த ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதும் விரைவாக அதிலிருந்து மீளவேண்டும் என எதிர்பார்க்கிறார்.  இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக  அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

No comments: