Saturday, April 18, 2015

தாமதமாகும் தீர்ப்பு


வருமானத்துக்கு  அதிகமாக சொத்து குவித்த வழக்கில்     ஜெயலலிதா,சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோரை     குற்றவாளிகளாக  தீப்பளித்த கர்நாடக  சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு  சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது. அதனை எதிர்த்து நால்வரும் மேன் முறயீடு செய்தார்கள். மேன் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வழங்குவதில் சட்டப் பிரச்சினை எழுந்துள்ளது.

ஜெயலலிதா,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கு எதிரான வழக்கில் அரசதரப்பு வழகறிஞராக  பவானிசிங் வாதாடியது தவறு எனபேராசிரியர் அன்பழகன்  தொடுத்தவழக்கினால்   மேன் முறையீட்டு மனுமீதானதீர்ப்பு வழங்கப்பட முடியாத நிலை எழுந்துள்ளது.


ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழக்கு 1996 ஆம் ஆன்டு தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு அன்பழகனின் முயற்சியினால் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா தெரிவானதால் தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கை தமிழக அரசு நடத்துவது தவறென நீதிமன்ற்த்தில் மனு தாக்கல் செய்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த வழக்கு கர்நாடகத்தில் நடைபெற்றது.        



  
நீதிபதி குன்ஹாவின் கடுமையான தீர்ப்பு ஜெயலலிதாவின்  அரசியல் எதிர்காலத்தைப்   பாதித்தது.நான்கு பேருக்கும் நான்கு ஆண்டு சிறை ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபா அபராதம். ஏனைய மூவருக்கும் 10 கோடிரூபா அபராதம். இந்தக் கடுமையான தண்டனைக்கு எதிராக நான்கு பேரும் மேன் முறையீடு செய்தனர்இந்தவழக்கில் அரச வழக்கறிஞராக யார் ஆஜராகுவது என்ற கேள்வி எழுந்தபோது பவானிசிங்கை தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை நியமனம் செய்தது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் பவானிசிங் நீதியாகச்செயற்படவில்லை எனக்குற்றம் சுமத்தி  அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவை ஏற்க நீதிபதி குமாரசாமி மறுத்துவிட்டார்கர்நாடக உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில்  மனுத்தாக்கல் செய்தார் அன்பழகன்.அன்பழகனின் மனுவை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.   மதன்பி லோகூர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.பவானிசிங்கின் நியமனம் சரி என லோகூரும்   தவறு என பானுமதியும் தீர்ப்பளித்தனர். இரன்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டுத் தீர்ப்பு தள்ளிப்போனது.  


நீதிபதி குன்ஹாவால்  பலமுறை   எச்சரிக்கப்பட்ட  பவானிசிங் நீதிபதி குமாரசாமியின் கேள்விகளுக்கு    சரியான பதில் கூறவில்லை.ஜெயலலிதா குற்றவாளி என பவானிசிங் வாதிடுகிறாரா?அல்லது அவரின் விடுதலைக்காக வாதிடுகிறாராஎன்ற குழப்பநிலை தோன்றியது குன்ஹாவின் கடுமையான தீர்ப்பின் பின்னர் ஜெயலலிதாவிக்கு பிணை வழங்க பவானிசிங் எதிர்ப்பு காட்டாதபோதே அவரின் மீது சந்தேகம் உண்டானது. அவர் தொடர்ந்து வாதிட்டால் ஜெயலலிதா விடுதலையாகி விடுவார் என்ற கருத்து நிலவியது.அதனி உறுதி ப்படுத்துவது போலவே பவா னி சிங்கின் நடவடிக்கையும் இருந்தது.


சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மூன்றுமாதங்களுக்குள் நீதிபதி குமாரசுவாமி விசாரணையை முடித்துவிட்டார். தீர்ப்பை எழுதுவதற்கு தயாரான போதுஅன்பழகனின் மனு முட்டுக்கட்டையாக வந்தது. பவானிசிங் வாதாடக்கூடாது என அன்பழகன் கூற பவானிசிங்தான் வேண்டும் என ஜெயலலிதா அடம்பிடிக்கிறார். தனக்கு எதிராக வாதாடும் வக்கீல் பலவீனமனவராக இருப்ப தையே ஜெயலலிதா விரும்புகிறார்.

அன்பழகனின் மனுவை விசாரிப்பதற்கு தீபக்மிஸ்ரா,ஆர்.கே.அகர்வால்,பிரபுல் சி.பந்த் ஆகிய மூவரடங்கிய  பெஞ்ச் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு அரச வழக்கறிஞருக்கு எதிராக திரும்பி உள்ளது.பவானிசிங் வாதாடியது சரியா தவறா என்ற என்ற தீர்ப்புக்காக  நீதிபதி குமாரசாமி காத்திருக்கிறார்

No comments: