Wednesday, May 2, 2018

சென்னை அடித்த இமாலய இலக்கை விரட்டித் தோற்றது டெல்லி


சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ் ஆகியவற்றுக்கிடையே புனேயில் நடைபெற்ற போட்டியில் 13 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது. கம்பீரிடம் இருந்து தலமைப் பொறுப்பைக் கையேற்ற ஸ்ரேயாஸ் அய்யர் முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் எதிர்பார்ப்பு அதிகமாகியது. கொல்கட்டா நைற் ரைடர்ஸ் எதிரான போட்டியில் வெற்றி பெற்றதால் டெல்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் தலமையிலான இரண்டாவது போட்டியிலும் கம்பீர் விளையாடவில்லை.

சென்னை அணியில் இம்ரான் தாஹிர், சாம் பில்லிங்ஸ், தீபக் சஹார், ஸ்ரதுல் தாகுர் ஆகியோர்  அணியில் இடம் பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் லுங்கி இங்கிடி, கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிஃப், சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா , டூபிளஸி ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.  தென்னாப்பிரிக்க வேகம் இங்கிடிக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில்விக்கெற்களை இழந்து  211 ஒட்டங்கள் எடுத்தது. 212 என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 198  ஓட்டங்கள் எடுத்ததுஇரண்டு அணி வீரர்களும் பவுண்டரி சிக்ஸர்கள் அடித்து  ரசிகர்களைக் குஷிப்படுத்தினர்.

முதல் ஓவரை எதிர்கொண்ட வட்சனை நோக்கி டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே அட்டகாசமான ஒரு இன்ஸ்விங்கர் டெல்லி அணி வீரர்களும் ரசிகர்களும் நடுவரை நோக்கினர். அவர் அமைதியாக நின்றார். டெல்லி அணித்தலைவர் ஆர்டிஎஸ் சமிக்ஞையைக் காட்டினார். நடுவரின் தீர்ப்பை  ஆர்டிஎஸ் உறுதி செய்தது. டெல்லி வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க் முடியாத சென்னையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான வட்சனும்டூபிளசியும் தடுமாறினர்.   ஆரம்பத்தில் தடுமாறிய இருவரும்  அடித்தாடினார்கள். ஐந்தாவது ஓவரில் மட்டும் 20 ஓட்டங்கள் எடுத்தது சென்னை. பவர் பிளே இறுதியில், விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்தது.

  25 பந்துகளில் அரைசதம் கடந்தார் வாட்சன்.   10 ஓவர் முடிவில் 96  ஓட்டங்கள் எடுத்திருந்தது சென்னை. 31 பந்துகளுக்கு முகம் கொடுத்த வட்சன் 64 ஓட்டங்கள் எடுத்தார்டுபிளசி 29 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். சென்னை அணி 102 ஓட்டங்கள் எடுத்திருந்த போது  விஜய் சங்கரின்பந்தில் 33 ஓட்டங்கள் எடுத்த டுபிளசிஸ் ஆட்டமிழந்தார்ரசிகர்கள் பெரிதும் எதிர் பார்த்திருந்த ரெய்னா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

வட்சனுடன் அம்பதி ராயுடு இணைந்தார்மிஸ்ராவின் பந்தை பிளங்கட்டிடம் பிடிகொடுத்த வட்சன் ஆட்டமிழந்தார். 40 பந்துகளுக்கு முகம் கொடுத்த வட்சன் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 78 ஓட்டங்கள் எடுத்தார். அப்மதி ராயுடுவுடன் டோனி இணைந்தார். கடைசி நேரத்தில் இருவரும் அதிரடியாக விளையாடினர். பவுல்ட் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து  இரு சிக்சர், ஒரு பவுண்டரி என, டோனி 'சூறாவளியாக' சுழன்ற அடிக்க, 21 ஓட்டங்கள் கிடைத்தன

அவேஷ் கான் வீசிய 19 ஆவது ஓவரில் டோனி கொடுத்த எளிதான பிடியை முன்ரோ தவறவிட்டார்போல்ட் வீசிய 19.5 ஆவது ஓவரில் டோனி 49 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது  பந்து விக்கெற்கீப்பரிடம் இருந்த வேளையில் ராயுடு அவசரப்பட்டு ஓடி ரன் அவுட்டானார். 24 பந்துகளைச்சந்தித்தராயுடு 41 ஓட்டங்கள் எடுத்தார்.கடைசி  பந்தில் டோனி இரண்டு ஓட்டங்கள் அடித்தார். சென்னை அணி 20 ஓவர்களில்  4 விக்கெட்டுக்கு 211 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா, விஜய் சங்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


22 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி 2 பவுண்டரி 5 சிக்ஸர் அடாங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார். . இவரது ஸ்ட்ரைக் ரேட் 231.82. இந்த ஐபிஎல் தொடரில்டோனி ஆடிய மிக முக்கியமான போட்டிகளில் இதும் ஒன்றாகும். எந்த இடத்தில் இறங்கினாலும்  டோனி அதிரடியைக் காட்டுகிறார். முதல் 7 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த டோனினி மீதம் உள்ள 13 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்தார்

சென்னை நிர்ணயித்த 212 என்ற இலக்கை எதிர்கொண்டு களம் இறங்கியது டெல்லி. கடின இலக்கைத் துரத்திய டில்லி அணியின் 'டாப் ஆர்டர்' அப்படியே சரிந்தது. பிரித்வி 9, முன்ரோ26 இருவரும், ஆசிப் 'வேகத்தில்' சரிந்தனர். ஸ்ரேயாஸ்  13 ஓட்டங்களில்  ரன் அவுட்டாக, மேக்ஸ்வெல்  6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  8.5 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 74   ஓட்டங்கள் எடுத்தது டெல்லி. ஜடேஜா வீசிய 11 வது ஓவரில் ஒரு பவுண்டரி , ஒரு சிக்சர்  என பொண்ட் அடிக்கத் தொடங்க டெல்லி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் பொண்டும் அதிக நேரம் நீடிக்கவில்லை.

விஜய் சங்கரும், ரிஷப் பன்ட்டும் நம்பிக்கையுடன் விளையாடினர். இவர்கள் இருவரும் கடைசிவரை  நம்பிக்கையுடன் சென்னை வீரர்கலின் பந்து வீச்சை எதிர் கொண்டனர்.
கே. எம். ஆசிப் வீசிய 16 ஆவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஐம்பது ஓட்டங்கள் எடுத்தார்  ரிஷப் பன்ட்  பிராவோ வீசிய 17 ஆவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் பன்ட் .

18 பந்துகளில் 55 ஓட்டங்கள் தேவை என்ற மிகக் கடினமாக இலக்கில் லுங்கி நிகிடி வீசிய 18 வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார் பன்ட். அந்த ஓவரின் நான்காவது பந்து டெல்லி அணியின் நம்பிக்கையை தகர்த்ததுபன்ட் விளாச அதை கவர் திசையில் ஜடேஜா கேட்ச் பிடித்தார். சென்னை அணி வீரர்கள் அத்தனை பேரின் முகத்திலும் அவ்வளவு நிம்மதி. 45 பந்துகளில் 79 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பன்ட் வெளியேறினார்.
  பிராவோ வீசிய 19 வது ஓவரில் விஜய் சங்கர் அடித்த மூன்று சிக்சர்கள் அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உத்வேகம் போன்றே தோன்றியது.  

 விஜய் ஷங்கர் 28வது பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 28 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 14 ஓட்டங்கள் மட்டும் எடுக்கப்பட்டன. டில்லி அணி  20 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள்  எடுத்தது. சென்னை அணி  13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷங்கர் 54  ஓட்டங்களுடனும் டிவாட்யா மூன்று ஓட்டங்களுடனும்  இருந்தனர்.  ஆட்டநாயகன் விருதை வட்சன் பெற்றுக்கொண்டார்.


டில்லி அணிக்கு எதிராக  சென்னை அணி கப்டன் டோனி  22 பந்தில் அரைசதம் அடித்தார். இது இவரது இரண்டாவது அதிவேக அரைசதம். இதற்கு முன், 2012ல் மும்பை அணிக்கு எதிராக 20 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

  ரெய்னாவை போல்டாக்கினார் பஞ்சாப்பின் மேக்ஸ்வெல். இது இவரது இரண்டாவது .பி.எல்.  விக்கெட். இதற்கு முன்பும், ரெய்னாவைத் தான் வீழ்த்தி இருந்தார்.
.பி.எல். 11வது சீசனில் சென்னை அணி இமாலய குவிப்பை வெளிப்படுத்துகிறது. கோல்கட்டா (205/5), ராஜஸ்தான் (205/5), பெங்களூரு (207/5) அணிகளை தொடர்ந்து  இத்தொடரில் நான்காவது முறையாக 200 ரன்களுக்கும் மேல் எடுத்தது.
 தவிர   டில்லிக்கு எதிராக எடுத்த 211/4 ஓட்டங்கள் தான், இந்த சீசனில் சென்னை எடுத்த அதிகபட்ச ஸ்கோர்.

டில்லி வீரர் அவேஷ் கான் வீசிய, 19வது ஓவரின் 6 வது பந்தில் டோனி அடித்த சிக்சர், 108 மீ. துாரத்துக்கு சென்றது. இது இத்தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது நீண்ட சிக்சர். முதலிடத்தில் டிவிலியர்ஸ் (112 மீ.) உள்ளார்.





No comments: