Wednesday, May 9, 2018

முளையிலேயே கருகிய மூன்றாவது அணி


இந்தியா சுதந்திரமடைந்தபின்னர் சுமார் அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ்கட்சியின் கையில் ஆட்சி இருந்தது. இடையிலே ஜனதாதளமும் பாரதீய ஜனதாவும் ஆட்சி செய்தன. மோடி தலமையிலான பாரதீய ஜனதாவின் ஆட்சிக்கு எதிராக இந்தியாவெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. ஆனால், அந்த எதிர்ப்புகளுக்ல்கு மத்தியிலும் மாநிலத் தேர்தல்களில் பாரதீஜ ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுவருகிறது.

வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கூட்டணியில் பாரதீய ஜனதா இந்தியாவில் ஆட்சி  செய்தபோது  அக்கட்சியின் கொள்கைகளை எதிர்த்தவர்களையும் அரவணைத்து ஆட்சியை நடத்தியது. மோடி, அமித் ஷா ஆகிய இருவரும்  தம்மை எதிர்ப்பவர்களை ஏறிமிதித்து ஆட்சியை நடத்துகின்றனர். சட்டசபை தேர்தலின் போது அறுதிப் பெரும்பான்மை இல்லாதபோது கூடுதல் ஆசனங்களைப்பெற்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்யவிடாது அம் மாநிலத்தின் சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்தியப் பொதுத்தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பாரதீஜ ஜனதாக் கட்சிக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க வேண்டும்  என்று சோனியா திட்டமிட்டுள்ளார்.இந்த நிலையில் கங்கிரஸ், பரதீய ஜனதா இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கப் போவதாக வங்கதேச முதலமைச்சர் மம்தா பார்னஜி அறிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஜார்கண்ட மாநில முக்தி மோட்சா தலைவர் ஹேமந்த் ஆகியோர் மம்தாவின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். மூன்றாவது அணி முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகச் செயற்தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை மூன்றாவது அணி பிரித்து விடும் என்பது வெளிப்படையானது. சோனியாமீதும் காங்கிரஸ் கட்சியின்  மீதும்  வெறுப்புக் கொண்ட மம்தாவின் அறிவிப்புக்கு சில மாநிலக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.மம்தா தலமையில் ஆட்சி அமைந்தால் முக்கியமான அமைச்சுப் பதவியைப் பெறுவதே அவர்களின் நோக்கம். மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததும் காங்கிரஸைக் கழற்றிவிட அவர் முயற்சி செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஸ்டாலின் காய் நகர்த்துவதை அவர்கள் அறியவில்லை. தமிழகத்தில் காங்கிரஸுக்குச் செல்வாக்கு இல்லை. காங்கிரஸிசின் வாக்குவீதம் வெறும் நான்கு சதவீதம்தான். தமிழக காங்கிரஸில் கோஷ்டிகள் அதிகம். அதை எல்லம் மனதில்கொண்டு ஸ்டாலின் மூன்றாவது அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியையும் செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்த பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மூன்றாவது நான்காவதுஅணி எதுவும் இல்லை பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே முக்கியம் எனச் சொல்லியுள்ளார். கங்கிரஸ், பாரதீய ஜனதா இல்லாத மூன்றாவது அணி என முழக்கமிட்ட மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என இறங்கி வந்துள்ளார். மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக வேண்டும் தேசியக் கட்சிகளின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் மம்தா அறிவித்துள்ளார்.

மூன்றாவது அணி இல்லை என மாம்தா தெரிவித்தாலும் அந்த முயற்சியை அவர் கைவிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகி ஆட்சியமைக்கலாம். இல்லை என்றால் நாங்கள் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்கிரார் மம்தா. மாம்தாவின்  இந்த அறிவிப்பு பலமுள்ள மாநிலக் கட்சித் தலைவர்களைக் குழப்பிவிடும் சாத்தியமுள்ளது. மத்திய அமைச்சில் ஆசை உள்ள அரசியல் தலவர்களை மம்தாவின் வார்த்தை உசுப்பிவிடும் சாத்தியமுள்ளது.


பாரதீய ஜனதாவின் எதிர்ப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா,ஜார்க்கண்ட் மாநில முக்தி மோர்ட்சா தலவர் ஹாமந்த் சோரன் ஆகியோர் கருணாநிதியையும் ஸ்டாலினையும் சந்தித்துள்ளனர். பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்ப்பவர்கள்அனைவரும் ஓரணியில் இணையத் தொடங்கி உள்ளனர். தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை தலைவர்கள் அனைவரும்  இப்படித்தான் இருப்பர்கள் என்பதை உருதியாகக் கூறமுடியாது.

No comments: