Monday, July 2, 2018

ஸ்பெய்னை வெளியேற்றிய ரஷ்ய கோல்கீப்பர் அகின்ஃபீவ்


ரஷ்யாவில் நகரில் நடந்த லீக் போட்டியில் பலம் வாய்ந்த  ஸ்பெய்னை பனால்ரியில்  வென்றதன் மூலம் முதன் முதலாக கால் இறுதிப்  போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது ரஷ்யா.  உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்துடன் உலகக்கிண்னத் தொடரில் விளையாடுவதற்கு ரஷ்யா தகுதி பெற்றது. ஸ்பெய்ன்,எகிப்து,சவூதி அரேபியா ஆகியவற்றுடன் ஏ பிரிவில் ரஷ்யா இடம் பிடித்தது. பலமான ஸ்பெய்ன், எகிப்து ஆகியவற்றுக்கு எதிராக விளையாடும் ரஷ்யாவின் இரண்டாம் சுற்று வாய்ப்பு சந்தேகத்துடன் நோக்கப்பட்டது.


லீக் சுற்றில் சவூதியுடனான முதல் போட்டியை அதிரடியாக 5-0 என்ற கோல் கணக்குடனும். எகிப்துடனான போட்டியை 3-1 என்றகோல் கணக்குடனும்   வெற்றியுடன் முடித்தது ரஷ்யா.  போத்துகலுடனான போட்டியை 3-3 , மொராக்கோவுடன் 2-2 என சமப்படுத்திய ஸ்பெய்ன் .1-0 எனும் கோல் அடிப்படையில் ஈரானை வென்றது.


2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய ரஷ்யாவும் ஸ்பெய்னும் முதல் சுற்றுடன் வெளியேறின. முதன் முதலாக கால் இருதிப் போட்டியில் விளையாடும் முனைப்பில் விளையாடிய ரஷ்யா வெற்றி பெற்றது. . 1986 ஆம் ஆண்டு ஒன்ருபட்ட சோவியதாகக் களம் இறங்கி கால் இறுதிப் போட்டியில் விளையாடியபின் தனி நாடான ரஷ்யா இப்பொழுதுதான் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஸ்பெய்னுக்கு பிறீகிக் வாய்ப்பு கிடைத்தது.  அந்தரத்தில் வந்த பந்தை ரமோஸ் கோலாக்க முயற்சிக்க இக்னாஷேவிச் அவரை முரட்டுத்தனமாகத்தள்ளினார். அப்போது இக்னாஷேவிச்சின் காலில் பட்ட பந்து கோல் கம்பத்தினுள் சென்று ஓன் கோலானது. . 11 ஆவது நிமிடத்தில் 1-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது.

38 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ரிவாய்ப்பை சரியாகப்பயன் படுத்திய ரஷ்யா கோல் அடித்ததால் 1-1 என சமநிலையானது. பெனால்ரிக்குக் காரணமான ஸ்பெய்ன் வீரர் ஜெரார்ட் பிகே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக போட்டி முடிந்ததும் அறிவித்தார்.

ஸ்பெய்னும் ரஷ்யாவும் தலா ஒரு கோல்  அடித்த நிலையில் போட்டி முடிவடைந்ததால் மேலதிகமாக30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.   அப்போதும் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால் வெற்றியை முடிவு செய்ய இரண்டு அனிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.
ஸ்பெயினின் வீரர்கள் வசம் 70% பந்து இருந்தது. ஆனாலும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.  மேலதிக 30 நிமிடங்களில் ரஷ்யா சுமார் 5% மட்டுமே பந்தை வசப்படுத்தியது.
ஸ்பெயினின் அணித்தலைவர் முதலில் பெனால்ரியை அடிக்க  விருப்பம் தெரிவித்தார்.
இனியெஸ்டா முதலாவது பெனால்ரியை  கோலாக்கினார். 1-0 என ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது.
ரஷ்யாவின் ஸ்மோலோவ் முதல் பெனால்ரிய கோலாக்க 1-1 என சமமானது.

ஸ்பெயினின் பிகே கோல் அடிக்க 2-1 என ஸ்பெய்ன் முன்னிலை பெற்றது.

ஓன் கோல் அடித்து ஸ்பெயினை முன்னிலைப்  படுத்திய இக்னோஷேவிச் கோல் அடிக்க 2-2 என ரஷ்யா சமப்படுத்தியது.

மூன்றாவது பெனால்ரியை ஸ்பெயினின் கோக்கோ அடிக்க,  ரஷ்யாவின் கோல் கீப்பர் அகின்ஃபீவ் அதனைத் தடுத்தார்.  ரஷ்ய  ர்சிகர்களின் உற்சாகக்குரலால் மைதானம் அதிர்ந்தது. 2-2 என்ற சமநிலை தொடர்ந்தது
.
ரஷ்யாவின் கோலோ பெனால்ரி அடிக்கத் தயாரான போது, அது கோலாகக்கூடாது என ஸ்பெய்ன் ரசிகர்களும், கோல் அடித்து முன்னிலை பெற வேண்டும் என ரஷ்ய வீரர்களும் பிரார்த்தித்தனர். கோலோ கோலடிக்க மைதானம் மீண்டும் அதிர்ந்தது. 3-2 என ரஷ்யா முன்னைலை பெற்றது

.ரோமோஸின் பெனால்ரி கோலாக 3-3 என போட்டி சமமானது.

ரஷ்ய வீரர் செரிஷேவ் நேர்த்தியாகக் கோல் அடித்தார். 4-3 என ரஷ்யா முன்னிலைபெற்றது.

அஸ்பாஸ் பெனால்ரி அடிக்கத் தயாரானபோது ஒட்டு மொத்தக் கவனமும் அவர் மீது விழுந்தது. அஸ்பாஸ் ஓடிச்சென்று பந்தை அடித்தார். ரஷ்ய கோல்கீப்பர் அகின்ஃபீவ் வலது பக்கமாகப் பாய்ந்தார். பந்து அவருக்கு இடது பக்கமாகச் சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் தனது இடதுகாலை  அகின்ஃபீவ்  உயர்த்தினார்  அப்போதுஅவருடைய அதிர்ஷ்டம், ஸ்பெயினின் துயரம் காலில் பட்ட பந்து வெளியே போனது. 4-3 கோல் என ரஷ்யா முன்னிலை பெற்றதால் ஐந்தாவது பெனால்ரி கைவிடப்பட்டது. 25 முறை கோல் அடிப்பதற்கு ஸ்பெய்ன் முயற்சித்தது.
உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டுக்கு எதிராக பெனால்ரியில் தோல்வியடையும் துயர சம்பவம் இம்முறையும் தொடர்ந்தது.

 1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக்கிண்னப் போட்டியில் இத்தாலியிடம்  பெனால்ரியில் தோல்வியடைந்தது. தென்.கொரியா, இங்கிலாந்து  ஆகியவற்றிடமும்  பெனால்ரியில் ஸ்பெய்ன் தோல்வியடைந்தது. அலகக்கிண்ணம் ,ஐரோப்பிய சம்பியன் போட்டி ஆகியவற்ரில் நடத்தும் நாடுகளிடம் நொக்  அவுட் சுற்ரில்  பெனால்ரியில் தோல்வியடைந்த துயரம் இன்று வரை தொடர்கிறது.

No comments: