Friday, July 13, 2018

குதூகலிக்கும் குரோஷியா இடிந்துபோன இங்கிலாந்து



ரஷ்யாவின் லூஸ்னிகி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ண இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இருதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இங்கிலந்தின் வெற்றியைக் கடைசி நேரத்தில் தட்டிப் பறித்தது குரோஷியா

நட்சத்திர வீரர்கள், உலகக்கிண்ண வரலாற்று சாதனைப் பட்டியல் அச்சுறுத்தும் வீரர்கள் போன்ர எஅவையும் இல்லாத குரோஷியா உலகக்கிண்ன வரலாற்றில் சரித்திரம் படைத்தது. குரோஷிய வீரர்களில் சிலர் ஐரோப்பிய கிளப்களில் விளையாடுகிறார்கள். ஆனால், அவர்களுடைய சாதனைப் பட்டியலை பிரமிப்புடன் பட்டியலிட்டு யாரும் மிரட்டவில்லை. குரோஷிய வீரர்களைத் தமது கிளப்பில் இணைக்க வேண்டும் என சில கிளப் நிர்வாகங்கள் முடிவெடுத்திருந்தால் அது ஆச்சரியமான செய்தியல்ல


உதைபந்தாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்து அதிர்ச்சியான முடிவுகள் பல இந்த உலகக்கிண்ணப் போட்டியில் அரங்கேறியுள்ளன. 28 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்தும் 20 வருடங்களுக்குப் பின்னர் குரோஷியாவும் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 1998 ஆம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறிய குரோஷியா, பிரான்ஸிடம் தோல்வியடைந்தது நெதர்லாந்தைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 333 ஆண்டுகளின் பின்னர் சம்பியனாகும் கனவுடன் இங்கிலாந்து குரோஷியா

வை எதிர்கொண்டது. முதலாவது சம்பியன் கனவை நிஜமாக்க குரோஷியா களம் இறங்கியது
போட்டி ஆரம்பிப்பதற்கான விசில் ஊதப்பட்டதும் இங்கிலாந்து வீரர்கள் குரோஷியாவின் பகுதியை ஆக்கிரமித்தனர். குரோஷிய வீரர்கள் பதிலடி கொடுத்து விளையாடினர். 5 ஆவது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்'கை இங்கிலாந்தின் டிரிப்பியர் அடித்தார். அந்தரத்தில் பறந்த பந்துகுரோஷியாவின் கோல் கம்பத்துள் புகுந்தது. இங்கிலாந்து ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பதில் கோல் அடித்து சமப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விரயமாகின.


உலகக்கிண்ண நொக் அவுட் தொடரில் டேவிட் பெக்காமிற்கு (2006) பிறகு 'பிரீ கிக்கில்' கோல் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் டிரிப்பியர். 14வது நிமிடம் கோர்னர் வாய்ப்பில் மாகுய்ரே தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டுக்கு சற்று வெளியே சென்றது. 19, 32வது நிமிடங்களில் பெரிசிச், ரெபிச் எடுத்த கோல் முயற்சிகள் வீணாக முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர்கள் எழுச்சி பெற்றனர். எப்படியும் சமன் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அடுத்தடுத்து கோல் ஏரியாவை முற்றுகையிட்டனர். போட்டியின் 63 ஆவது நிமிடம் பெரிசிச் அடித்த பந்தை இங்கிலாந்தின் வாக்கர் தலையால் முட்டி வெளியே தள்ளினார். 68 ஆவது நிமிடத்தில் வஜல்ஸ்கோ அடித்த பந்தை பெற்ற பெரிசிச் முன்னால் இருந்த இங்கிலாந்து வீரரின் தலைக்கு மேலாக இடது காலை நீட்டி பந்தை உதைத்து கோல் அடிக்க 1-1 என சமன் ஆனது.


72வது நிமிடம் பெரிசிச் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பஇ இங்கிலாந்து கண்டம் தப்பியது. இருப்பினும் மீண்டும் முன்னிலை பெற இங்கிலாந்து வீரர்கள் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதன் முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (105+ 2வது நிமிடம்) பெர்சிச் கொடுத்த 'பாசை' பெற்ற மாண்ட்ஜூகிச் கோல் அடிக்க முயன்றார். இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்போர்டு காலால் தடுக்க மீண்டும் தப்பியது இங்கிலாந்து. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் மிரட்டியது பெரிசிச், மாண்ட்ஜூகிச் ஜோடி. இம்முறை 'ரிவர்ஸ் ஹெட்' முறையில் பெரிசிச் தலையால் முட்டிய பந்தை வாங்கிய மாண்ட்ஜூகிச் கோல் அடித்து மிரட்ட இங்கிலாந்து மீள முடியாத சோகத்துக்கு சென்றது. முடிவில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


ஒரு கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்திலும் நேரத்தைக் கடத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டனர். குஷோஷிய வீரர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் ஓர்மத்தில் விளையாடினர். அவர்களின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது.கூடுதல் நேரத்ஹ்டில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரோஷிய வீரர்களின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாது இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள்.


மூன்றுநொக் அவுட் போட்டிகளிலும் குரோஷியாவின் விளையாட்டு ஆச்சரியமளித்தது. குரோஷியாவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது. உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் 'ரவுண்டு-16' (0-1), காலிறுதி (0-1),அரையிறுதி (0-1) என மூன்று நொக் அவுட்' போட்டிகளிலும் முதலில் பின் தங்கி இருந்து பிறகு மீண்டு வந்து வெற்றி பெற்ற முதல் அணியானது குரோஷியா.


தவிர உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு அணிகளின் வரிசையில் 13வதாக இணைந்தது குரோஷியா. உலககிண்ண அரையிறுதி போட்டியில் 1-0 என முன்னிலையில் இருந்த 17 அணிகள் வெற்றி பெற்றன. இத்தாலி மட்டும் 1990ல் ஆர்ஜென்டினாவிடம் 'பெனால்டியில்' தோற்றது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவதாக இணைந்தது.


இங்கிலாந்து (1990), பெல்ஜியம் (1986) அணிகளுக்குப் பிறகு ஒரே உலககிண்ணத் தொடரில் 3 போட்டிகளில் கூடுதல் நேரத்தில் விளையாடிய அணியானது குரோஷியா அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் வெற்றி பெற்ற நான்காவது அணியானது குரோஷியா. இதற்கு முன் ஹங்கேரி (1954, உருகுவே), இத்தாலி (1970-மேற்கு ஜெர்மனி, 2006-ஜெர்மனி) அணிகள் இப்படி வென்றன. தவிர அரையிறுதியில் பின் தங்கி இருந்து பிறகு வெற்றி பெற்ற 7வது அணி என்ற பெருமையும் பெற்றது. இங்கிலாந்து அணி 1968, 1996 (யூரோ), 196, 1990, 2018 (உலக கோப்பை) என முக்கிய தொடர்களில் 5 முறை அரையிறுதியில் பங்கேற்றது. இதில் 1966 தவிர மற்ற நான்கிலும் தோற்றது. 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதியில் குரோஷிய அணி பிரான்சிடம் 1--2 என வீழ்ந்தது. 20 ஆண்டுகள் கழித்து இம்முறை இரு அணிகளும் வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் மோதுகின்றன. பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) அணிகள் முதன் முறையாக இறுதிப் போட்டியில் விஐயாடி சம்பியனாகின இந்த வரிசையில் குரோஷியாவும் (2018) சாதிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது
.


No comments: