Wednesday, June 12, 2019

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்தியா


இலண்டன் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய  இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றா இந்திய அணித்தலைவர் கோலி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஐந்து விக்கெற்களை இழந்து 352 ஓட்டங்கள் எடுத்தது. 353  எனும் இமாலய இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா, 50 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் கடைசி விக்கெற்றை இழந்து 316 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது..  முதலில் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக ஆடியது. ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் அரை சதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் சேர்த்தபோது, ரோகித் சர்மா 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவானுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார்  ஒரு நாள் அரங்கில் 17வது அடித்த தவான் ஸ்டார்க் பந்தில்   117 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தவான் வெளியேறியதும் ராகுலை  எதிர்பார்த்திருந்தபோது கப்டன் கோஹ்லியுடன், ஹர்திக் பாண்ட்யா இணைந்தார்.ர். கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 50வது அரை சதம் அடித்தார். பண்டைய்யாவின் அதிரடியால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 27 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசிய பண்டைய்யா ஆட்டமிழந்தார். அடுத்து களம்  இறங்கிய டோனி 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோஹ்லி 82 ஓட்டங்கள் எடுத்தார்.இந்திய அணி 50 ஓவர்களில்   ஐந்து விக்கெற்களை இழந்து 352 ஓட்டங்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்கள் எடுத்தார்.   அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் இரண்டு விக்கெற்களை வீழ்த்தினார்.
353 எனும் கடின இலக்கை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான அணித்தலிவர் பிஞ்சும், வானரும் களம் இறங்கினர். பிஞ்ச் 36 ஓட்டங்களிலும் வானர் 56 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித், கவாஜா ஜோடி இந்திய அணி வீரர்கலின் பந்துவீச்சை சமாளித்து விளையாடியது.   பும்ரா பந்தில் கவாஜா (42) ஆட்டமிழந்தார். ஸ்மித் (69) அரை சதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் ஓட்டமெடுக்காது வெளியேறினார்.
மேக்ஸ்வெல் 28, கூல்டர் நைல் ,4 கம்மின்ஸ் 8, ஓட்டங்களில் ஆட்டமிழக்க கேரி அரை ஆட்டமிழக்காது 55 ஓட்டங்கள் எடுத்தார்.   அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 316 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், பும்ரா ஆகியோ தலா  மூன்று விக்கெற்களை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சதம் விளாசிய தவான் தேர்வு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  இந்திய அணி 352 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணியின் அதிக பட்ச ஓட்டங்களாக இந்தியாவின் ஒட்டங்கள் பதிவானது. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 289 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனை.
உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச்சென்றுள்ளது. இதற்கு முன் அவுஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் விளாசியிருந்தனர்.
  உலகக் கிண்ணப் போட்டியில்  அவுஸ்திரேலியா அணி சேசிங்கில் தொடர்ந்து 19 போட்டிகளில் வென்றிருந்தது. இந்தியாவுக்கு எதிராகத் தோல்வி கண்டதன் பலனாக, 20 ஆண்டு சாதனைக்கு இந்தியா வலுவான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.  . மேலும், ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 11 வெற்றிகளை குவித்த அவுஸ்திரேலியாவின் சாதனைக்கும் இந்தியா முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.
  இந்திய வீரர் பும்ரா 2வது ஓவரின் முதல் பந்தை வீசும் போது வார்னரின் காலில் பட்டு ஸ்டெம்பை உரசியது. ஆனால், பெயில்ஸ் கீழே விழாததால் வார்னர் அவுட்டில் இருந்து தப்பி அரைசதம் அடித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் 5 முறை இதுபோல் நடந்துள்ளது.
 ரோஹித் சர்மா, 20 ஓட்டங்கள் சேர்த்த போது, அவுஸ்திரேலியாவுக்குஸி.க்கு எதிராக 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம், குறைந்த இன்னிங்களில் இந்த மைல் கல்லை எட்டிய 2-வது இந்தியர், 4வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார்


No comments: