Monday, June 3, 2019

கைநழுவிப்போன தமிழக அமைச்சர் பதவி


இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப்பெற்ற மோடியின் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முயற்சி கைகூடவில்லை. கடந்த தேர்தலின்போது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமே பெற்றுள்ளது. அதுவும் பன்னீரின் மகன் ரவீந்திரநாத மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றார். மகனின் வெற்றியால் பன்னீர்ச்செல்வம் பூரிப்படைந்துள்ளார். ரவீந்திரநாத்தின் வெற்றியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தால் ஜீரணிக்க முடியாத நிலை உள்ளது.

நாடாளுமன்றத்தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணுவதற்கு முன்பாகவே  தேனீ எம்.பி எனும் அடைமொழியுடன் ராவீந்திரநாத்தின் பெயர் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. பலரும்  எதிர்த்ததால் கல்வெட்டு மறைக்கப்பட்டது.   மோடியின் தலைமையிலான அமைச்சரவை  அறிவிக்கப்படுவதற்கு முன்னர் மாண்புமிகு அமைச்சர் என சுவரொட்டி  ஒட்டப்பட்டது. மோடியுடனும் ஏனைய பாரதீய ஜனதாக் கட்சித்  தலைவர்களுடனும் பன்னீர் மிக நெருக்கமாக இருப்பதனால் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி உறுதி என அனைவரும் நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி மண் அள்ளிப்போட்டுள்ளார்.

பன்னீரின் மகன் அமைச்சராகாமல் தனக்கு வேண்டிய ஒருவர்  அமைச்சராக வேண்டும் என எடப்பாடி காய் நகர்த்தினார். அனுபவம் உள்ள மூத்த அரசியல்வாதியும் ராஜ்யசபா எம்.பியுமான வைத்திலிங்கத்தை அமைச்சராக்குவதற்கு எடப்பாடி முயற்சி செய்தார். ரவீந்திரநாத்துக்கு எதிராக எடப்பாடி செக் வைத்ததால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி கைவிட்டுப்போனது. மோடியிடன் பேரம் பேசி அமைச்சர் பதவியைக் கேட்கும் நிலையில் கூட்டணிக்கட்சிகள் எவையும் இல்லை. என்ராலும் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்க  பாரதீய ஜனதாக் கட்சி முடிவு செய்தது.
பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் கிடைத்த ஒருஅமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டன. ஒரு அமைச்சர் பதவி காணாது இன்னும் ஒன்று வேண்டும் என நிதீஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். ஒன்றுக்கு மேல் இல்லை என பாரதீய ஜனதாக் கட்சி கைவிரித்தது. கோஷ்டிப் பூசனைத் தவிர்ப்பதற்காக அண்னா திராவிட முன்னெற்றக் கழகம் இரண்டு அமைச்சர் பதவியை கேட்டது. ஒன்றுக்கு மேல் இல்லை என பாரதீய ஜனதாக் கட்சி கறாராகக் கூறிவிட்டது.

தர்மயுத்தப் பிரகடனத்துடன் அண்னா திராவிட முன்னெற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய பன்னீர்ச்செல்வம் மீண்டும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.  அதன் பின்ணணியில் பாரதீய ஜனதாக் கட்சி இருந்தது. இணைப்பின் பிற்பாடு எடப்பாடியின் கை ஓங்கியது.  பன்னீரின் மதிப்பு இறங்கியது. நாடாளுமன்றத்த் ஏர்தலில் பன்னீரின் தொகுதியில் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. 22 சட்ட மன்றத்தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேறக் கழகம் தோல்வியடைந்த  13 தொகுதிகள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் போட்டியிட்டவை. வெற்ரி பெற்ற ஒன்ப்து தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி வேலைசெய்தனர்.

பன்னீரின் செல்வாக்கு கட்சிக்குள் அதிகரிப்பதால் பன்னீர்செல்வத்தின் ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பன்னீரின் மகன் அமைச்சராகிவிட்டால் தனது நிலை இறங்கிவிடும் என எடப்பாடி அஞ்சுகிறார். அதனால் பன்னீர்ச்செல்வத்தை எதிர்ப்பதற்காக அவரது மகனுக்கு குழி பறிக்கிறார். அமைச்சுப் பதவி தொடர்பாக அண்னா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரிச் சொல்கிறார்கள். அமைச்சுப்பதவி தருவதாகத்  பாரதீய ஜனதாக் கட்சி தெரிவிக்கவில்லைஎன அமைச்சர் ஜெயக்குமார் கூரினார். இரண்டு மூன்று அமைச்சுப்பதவி பெறுவது தொடர்பாகபாரதீய ஜனதாக் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடந்ததாக அமைச்சர்  ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் படு தோல்வியடைந்ததற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே காரணம் என்ற கருத்து உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேராமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். பாரதீய ஜனதாவுடன் சேர்ந்ததனால்தான் நாம் தோல்வியடைந்தோம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பகிரங்கமாக கருத்துத் தெரிவிக்கின்றனர். டெல்லித் தலைமை அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஓரம் கட்ட இவையும் காரணமாக இருக்கலாம்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  உறுப்பினர்கள் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது என கழகத்தில் உள்ள சிலர் நம்புகின்றனர். ஜூலை மாதம் காலியாகும் ஆறு ராஜ்ய சபா உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்களை பெரும் வாய்ப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒருவரை எம்பியாக்கி அமைச்சராக பாரதீய ஜனதாக் கட்சி விரும்புகிறது. ஒரு ரஜ்யசபா பதவியை பாரதீய ஜனதாவுக்கு விட்டுக்கொடுத்து இரண்டு அமைச்சர்களை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அல்லது  தனது கட்சியைச் சேர்ந்த மூவரை  எம்பியாக்கி கட்சியைப் பலப்படுத்தும் வாய்ப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது.எந்த முடிவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை ராஜ்ய சபா  தேர்தல்  வெளிப்படுத்தும்.

No comments: