Sunday, February 7, 2021

நூறாவது போட்டியில் இரட்டைச் சதம் ஜோ ரூட் சாதனை

இந்தியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் 218 ஓட்டங்களில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.   இரட்டைச் சதம் அடித்த இங்கிலாந்தின் கப்டன் ஜோ ரூட்  புதிய சாதனைகள் படைத்ததுடன் சச்சின் , இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

நூறாவது போட்டியில்  இரட்டைச் சதம் அடித்த முதலாவது வீரர், அதேவேளை சிக்ஸருடன் இரட்டைச் சதம் அடித்த இங்கிலந்தின் வீரர் என்ற புதிய மைல் மைல் கல்லை எட்டினார்.

2005 ஆம் ஆண்டு நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இன்சமாம் உல் ஹக்   184 ஓட்டங்கள் எடுத்ததை  ஜோ ரூட் முறியடித்தார். இன்சமாம் உல் ஹக் இந்தியாவுக்கு எதிரான் போட்டியிலேயே 184  ஓட்டங்கள் எடுத்தார்.

நூறு டெஸ்ட் போட்டிகளில் 8.405 ஓட்டங்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடித்த ஜோரூட் 8,458 ஓட்டங்கள் எடுத்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களான  டேவிட் கோவர் [8,235] , அலெக்ஸ் டீவேட் [8,476] ஆகியோரை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார் ஜோ ரூட்.  12,472 ஓட்டங்களிடன் அலெக்ஸ் குக் முதலாம் இடத்திலும், 8,900 ஓட்டங்களுடன் கிரகம் கூச் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர்.  அடுத்தடுத்த  போட்டிகலில் இதே  போன்றுவிளையாடினால் கிரகம் கூச்சை  பின்னுக்குத் தள்ளி  இரண்டாம் இடத்துக்கு ஜோ ரூட் முன்னேறிவிடுவார்.

ஜோ ரூட்டுக்கு இது ஐந்தாவது இரட்டைச் சதம். 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 254 ஓட்டங்கள், 2014 ஆண்டு இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்கள், 2021 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு எதிராக 224 ஓட்டங்கள், 2019 ஆம் ஆண்டு  நியூஸிலாந்துக்கு எதிராக 226 ஓட்டங்கள் அடித்தார்.

தற்போது டெஸ்ட் விளையாடும் வீரர்களில் 150 ஓட்டங்கலுக்கு மேல் எடுத்த வீரர்கள் பட்டியலில்  கோஹ்லியுடன் முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இருஅவ்ரும் தலா 10 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித், நியூஸிலாந்து இவ்வ்ர வில்லையம்சன் ஆகியோர் தல  8 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்திய வீரர் புஜாரா 7 முறை 150 ஓட்டங்கலுக்கு மேல் அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 150  ஓட்டங்களுக்கு மேல் அடித்த நூறாவது வீரராக ஜூ ரூட்டின் பெயர் பதியப்பட்டுள்ளது.  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 228 ஓட்டங்களும், 186 ஓட்டங்களும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 218 ஓட்டங்களும் அடித்தார். முன்னதாஅக் இங்கிலாந்து வீரர் ஹம் மண்ட் [ 1929], அவுஸ்திரேலிய வீரர் பிரட் மன்  [1937], பகிஸ்தான் வீரர் முடார் நாஸர் [1983], பாகிஸ்தான் வீரர் ஜகிர் அபாஸ் [ 1984] , இலங்கை வீரர் சங்ககார [2007]  ஆகியோர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்தனர்.

 இங்கிலந்து கப்டன் ஒருவர் 45 ஆனுகளின் பின்னர் முதன்  முதலாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். ஜோ ரூட்டின் அறிமுகப் போட்டியும், 50 ஆவது போட்டியும், 100 ஆவது  போட்டியும் இந்தியாவுக்கு  எதிராக  இந்தியாவில் நடைபெற்றன.

No comments: