Monday, June 21, 2021

இத்தாலியிடம் தோல்வியடைந்த வேல்ஸ் அடுத்த சுற்றுக்கு தெரிவானது.


  ரோம் நகரில் ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் இத்தாலியை  எதிர்த்து  வேல்ஸ்  விளையாடியது.  அடுத்த  சுற்றுக்குத்  தெரிவான  இத்தாலி  நம்பிக்கையுடன்  களம்  இறங்கியது. அடுத்த  சுற்றுக்குத்தெரிவாக  வேண்டும்  எனும்  வெறியுடன்  விளையாடிய   வேல்ஸ்  வீரர்கள் இத்தாலியின்  தாக்குதலை  சமாளித்ததால்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவானது. வேல்ஸுக்கு எதிரான  போட்டியில் 1 - 0  எனும்  கோல்  கணக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது.

இத்தாலி வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலானது. தொடர்ந்து 30-வது போட்டியில் இத்தாலி அணி தன் தோல்வியற்ற சாதனையை நீட்டித்துள்ளது. 1935- 39-ல் இதே போன்று இத்தாலி 30 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்துள்ளது.   இத்தாலி  31  கோல்கள்  அடித்துள்ளது. இத்தாலிக்கு எதிராக எதிரணிகள் எவையும் ஒரு  கோல்கூட அடிக்கவில்லை.

குழு ஏயில்  உள்ள  துருக்கி, சுவிட்ஸர்லாந்து  ஆகியவற்றுக்கிடையேயான  போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்ற  சுவிட்ஸர்லாந்து அடுத்த  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து, வேல்ஸ்  ஆகிய  இரண்டு  அணிகளும்  4 புள்ளிகளைப்  பெற்றன. சுவிட்சர்லாந்து அணியை விட கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற வேல்ஸ் அணி நேரடியாக  அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. சுவிட்ஸ‌ர்லாந்து அணி சிறந்த 3வது அணியாக இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

 

 

No comments: