Tuesday, June 8, 2021

காணாமல் போகும் கமலின் அரசியல் கட்சி


 சினிமாவில் கால் பதித்து  திரைப்படம் சார்ந்த  சகலதுறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் கமல்ஹாசன். தமிழ்  பேசும்  பிக்பொஸ்ஸில்  முகம் காட்டி சின்னத்திரை மூலம் தமிழர் வாழும்  வீடுகளில் தினமும் வந்துபோனவர்  சிந்தனையாளர் கமல். தடம்  பதித்த  அனைத்துத்  துரைகளிலும்  வெற்றிக் கம்பத்தைத் தொட்ட  கமல் அரசியலில்  புகுந்ததனால் படுகுழியில்  விழுந்துவிட்டார்.

தமிழக அரசியலில் ஒட்டியிருக்கும் சினிமாவை எந்தக்  காலத்திலும் பிரித்துப்  பார்க்க  முடியாது. அண்ணாத்துரை,  கருணாநிதி,  சிவாஜி,  எம்.ஜி.ஆர்,  எம்.ஆர்.ராதா, எஸ்,எஸ்,ஆர், ஜெயலலிதா என அரசியலில்   வெற்றிக்கொடி நாட்டிய சினிமா நட்சத்திரங்களின் பட்டியல்  நீளமானது. சினிமாவில்  முகம்  காட்டினால் அரசியலில்  வெற்றி பெறலாம் என நினைதவர்களின்  பட்டியல்   வெதமிழகத்தின் அரசியல்   ஆளுமைகளான  ஜெயலலிதாவும்,  கருணாநிதியும்  அடுத்தடுத்து காலமானதால் தமிழக அரசியல் தலைமையில்  வெற்றிடம்  தோன்றியுள்ள‌தென பலர்  நினைத்துவிட்டனர். சசிகலா, எடப்பாடி  பழனிச்சாமி,  ஓ.பன்னீர்ச்செல்வம். தினகரன்,  ரஜினி,  கமல்  தமிழக  அரசியலுக்குத்  தலைமை  தாங்கி  முதல்வராக  ஆசைப்பட்டனர். சொத்துக்குவிப்பு  வழக்கில்  சிறைக்குப்  போனதால் சசிகலாவின்  ஆசை முடக்கப்பட்டது. அண்ணா  திராவிட  முன்னேற்றக்  கழகத்தின்  தலைமைப்  பதவியைப்  பிடிக்க  முட்டுப்பட்டதால் எடப்பாடி, பன்னீர் ஆகியோரின்  தலமை   நிராகரிக்கப்பட்டுவிட்டது. அரசியல்  பலம்  இல்லாத  தினகரன்  காணாமல்  போய்விட்டார். அடுத்த  முதல்வர்  என  ரசிகர்களால்  கொண்டாடப்பட்ட  ரஜினி தேர்தலுக்கு  முன்னரே  கட்சியை  கலைத்துவிட்டார்.சினிமா,  பிக்பொஸ் ஆகிய  மாயைகளால் மினுமினுத்த   கமல் அரசியலில்  படுதோல்வியடைந்தார். அண்ணாத்துரை,  கருணாநிதி,  சிவாஜி,  எம்.ஜி.ஆர்,எம்.ஆர்,ராதா, எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதா என  அரசியலில்  வெற்றி பெற்ற சினிமா  பிரபலங்களின் பட்டியல்  நீளமானது. சினிமாவில்  முகத்தைக்  காட்டினால்  வெற்றி பெறலாம் என்ற  நம்பிக்கையில் அரசியலில்  கால் பதித்து  தோல்வியடைந்தவர்களின்  பட்டியல், வெற்றி  பெற்றவர்களின் பட்டியலை  விட  மிக  நீளமானது.

சினிமாவின்  ரஜனியுடன்  போட்டிபோட்ட  கமல்  அரசியலிலும்  போட்டிபோட்டார். சினிமாவில்  மட்டுமல்ல  அரசியலிலும்  இருதுருவங்கள்தான் என்பதை  இருவரும்  நிரூபித்தனர். "மக்கள்  நீதி   மய்யம்" எனும்  பெயரின்  கமலின்  அரசியல்  கட்சி பதிவாகியது. கவிஞர்  சினேகன், நடிகை  ஸ்ரீபிரியா , சமூக  வலைத்தள  பிரபலமான பத்மபிரியா  போன் றோர்  கமலின் கட்சியில்  இணைந்தனர். கமலைத்தவிர  பிரமலமானவர்கள் எவரும் கட்சியில்  இல்லை.

தமிழக  சட்ட  மன்றத் தேர்தலின்போது கமல்  வெற்ரி  பெற  வேன்டும்  என  எதிர்க்  கட்சியில்  உள்ள  அவரது  ரசிகர்களும்  விரும்பினார்கள். வாக்கு  எண்ணிக்கையில் முன்னுக்கு  நின்ற  கமல்  இறுதியில்  தோல்வியடைந்தார். கமலின்  கட்சியில்  போட்டியிட்ட  அனைவரும்  தோல்வியடைந்து  கட்டுப்பணத்தை  இழந்தனர். கமலுடன்  கூட்டணி  சேர்ந்த  சரத்குமார்,  பாரிவேந்தர் ஆகியோரின்  நிலையும் இதுதான்.

பலம்  மிக்க  இரண்டு  திராவிடக்  கட்சிகளின்  துணை  இல்லாமல்  தேர்தலில்  வெற்றி  பெற  முடியாது  என்பதை இன்னொரு  தேர்தல் முடியு   நிரூபித்துள்ளது.கமலின்  கட்சி  தொல்ல்வியடைந்தது  ஒரு  புறம்  இருக்க  அவரது  கட்சியின்  நிர்வாகிகள் கட்சியை  விட்டு  வெளியேறிவிட்டனர்.

டாக்டர் மகேந்திரன்,பத்மபிரியா, சந்தோஷ்பாபு  போன்றவர்கள் கட்சியில்  இருந்து  வெளியேறிவிட்டனர். கமல்  மீது  கொண்ட  மதிப்பின்  நிமித்தம் அவரது  அரசியல்  கட்சியில்  சேர்ந்தவர்  டாக்டர்  மகேந்திரன். வெற்றி,தோல்வி, இணைவு, பிரிவு  என்பன அரசியலில் சர்வசாதாரணம். மகேந்திரன்  வெளியேறியதும், அவர்  துரோகி,  எப்போதோ  களைஎடுக்கப்பட  வேண்டியவர் என சாரப்பட  கமல்  கடிதம் எழுதியது அவரது  அரசியல்  முதிர்ச்சியின்மையை  வெளிக்காட்டுகிறது. நிர்வாகிகள்  வெளியேறுவதால் கமலின்  கட்சி கரைந்துகொன்டு  போகிறது. சினிமாவில்  விழுந்து  எழுந்த  கமல்,  அரசிலில்  என்ன  செய்யப்போகிறார் எனபதை  அறிய  அவரது  ரசிகர்கள்  ஆவலாக  உள்ளனர்.

No comments: