Monday, August 30, 2021

பராலிம்பிக்கில் தங்கம் வென்ற‌ மருத்துவர்

டோக்கியோவில்   நடைபெறும்  பராலிம்பிக்கில்   ஸ்பெய்ன்   நாட்டைச்   சேர்ந்த   மருத்துவரான   சுசானா ரொட்ரிக்ஸ், தங்கப்பதக்கம்    பெற்றார். ஸ்பெய்ன்   சார்பாக   ட்ரையத்லானில்   கிடைத்த  முதலாவது  தங்கம்  இதுவாகும். உயிருடன்  போராடிய  கொரோனா  நோயாளிகலுக்கு  சிகிச்சையளித்த   சுசானா  ரொட்ரிக்ஸ்,பராலிம்பிக்  போட்டியில்    முதலிடம்  பெற்றார்.

அல்பினிசம், கடுமையான கண் குறைபாட்டுடன் பிறந்த சுசானா ரொட்ரிக்ஸுக்கு  பராலிம்பிக்கில்  விளையாட   வேண்டும்  என்ற  ஆர்வம்  சிறுவயது  முதலே  இருந்தது. பாரா ட்ரையத்லானைக் கண்டுபிடித்து, தனது புதிய விளையாட்டில் கவனம் செலுத்தினார்.

பெய்ஜிங் 2008  பராலிம்பிக்  அணியில் சுசானா  ரொட்ரிக்ஸ்   இடம்   பெறவில்லை. அது   அவருக்கு  ஏமாற்றமாக  இருந்தது.  பயிற்சியை  இடைவிடாது   தொடர்ந்ததால்  பலபோட்டிகளில்  முதலிடம்  பிடித்து   தேர்வாளர்களின்   பார்வையை  தன்  பக்கம்  திருப்பினார்.

சுசானா  ரொட்ரிக்ஸின்  திறமை   அவரை  உலக சம்பியன்ஷிப் பிக்கு  அழைத்துச்  சென்றது. எட்மண்டன் 2014, சிகாகோ 2015   உலக சாம்பியன்ஷிப்பில் மூன்றாம் இடத்தையும், ரோட்டர்டாமில் 2016 இல் நான்காவது இடத்தையும் பிடித்தார். 2018 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், 2019 இல் ஸ்பெயினின் வலென்சியாவில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் முதல் இடத்தைப் பெற்றார். மாரடைப்பால்  பாதிக்கப்பட்ட சுசானா  ரொட்ரிக்ஸ், விளையாட்டுக்கு  ஓய்வு  கொடுத்துவிட்டு   மருத்துவத்தைக்  கவனிக்கத்தொடங்கினார். பராலிம்பிக்கில்  போட்டியிடுவதற்காக  மீண்டும்   விளையாட்டில்  கவனம்  செலுத்தத்  தொடங்கினார். ரைம்ஸ்   சஞ்சிகை  அட்டைப்படத்தில்  சுசானா  ரொட்ரிக்ஸின்  படத்தை   அட்டைப்பட‌த்தில்   பிரசுரித்து இவருக்கு  கெளரவம்  வழங்கியது.

No comments: