Monday, August 2, 2021

அவுஸ்திரேலியாவின் தங்க மங்கை எம்மா

டோக்கியோ ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையான எம்மா மெக்கியோன்  4 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களைப் பெற்று புதிய  நீச்சல்  வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

காலையில் நடந்த பெண்களுக்கான 50 மீற்றர் பிரீஸ்டைலில் 23.81 வினாடிகளில் இலக்கை கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கிய எம்மா மெக்கியோன், அதன் பிறகு அணிகளுக்கான 4x100 மீற்றர் மெட்லே தொடர் நீச்சலில் கைலீ மெக்கியோன், செல்சி ஹோட்ஜ்ஸ், கேட் கேம்ப்பெல் ஆகியோருடன் இணைந்து 3 நிமிடம் 51.60 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 3 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை அறுவடை செய்து மலைக்க வைத்த எம்மா மெக்கியோன் ஒரு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை பெற்றநீச்சல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

  ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெற்றவரான சோவியத்யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மரியா கோரோகோவ்ஸ்கயாவின் சாதனையை (1952-ம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் 2 தங்கம், 5 வெள்ளியுடன் 7 பதக்கம்)  எம்மா சமன் செய்தார்.

ஒலிம்பிக் ஆடவர் நீச்சலில்  பெல்ப்ஸ் அதை மூன்று முறை செய்தார்,  2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டிகளில் எட்டு தங்கங்களைப் பதிவு செய்தார். ஸ்பிட்ஸ் (1972 இல் ஏழு தங்கம்), கிழக்கு ஜேர்மனி கிறிஸ்டின் ஓட்டோ (1988 இல் ஆறு தங்கம்), பியோண்டி  (  88 இல் ஐந்து தங்கம்,  ) உள்ளன.நீச்சலில் அதிக பதக்கம் பெற்ற மகளி எனும் சாதனையை எம்மா படைத்துள்ளார்.எம்மாவின் பதக்கங்களினால் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியாமுன்னிலை பெற்றது.

1956ம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலியா  அதிக பதக்கத்தை நீச்சல் போட்டியில் பெறுவது இதுவே முதல்முறை.   ஒலிம்பிக்கில் தகுதிகாண்  50 மீற்றர் போட்டியில் கலந்துகொண்ட எம்மா மெகியோன்  24.02 வினாடிகளில் நீந்தி ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார், மீண்டும் அரையிறுதியில் 24  விநாடிகளில் முடித்தார். எம்மாவின் தந்தையும், சகோதரர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகலில் பங்குபற்றினார்கள்.

 டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில்  அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.மொத்தம் 30 பிரிவுகளில் நடைபெற்ற இந்த நீச்சல் போட்டிகளில்  அமெரிக்கா 8 தங்கம், 9 வெள்ளி , 9 வெண்கலம் என 26 பதக்கங்களை வென்றுள்ளது. அதிகபட்சமாக காலெப் டிரஸ்ஸல் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

No comments: