Friday, September 24, 2021

மும்பையை முடக்கிய வெங்கடேஷ் அய்யர்


அபுதாபியில் வியாழன் இரவு நடைபெற்றை ஐபிஎல் 2021 தொடரின் 34-வது போட்டியில் கொல்கத்தா அணியின் புதுமுகம் மும்பையின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். திரிபாதி, வெங்கடேஷ் அய்யரின் காட்டடி தர்பாரில் ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

நானயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற கொல்கட்டா  ப்டன் மார்கன், துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து  155ஓட்டங்கள் எடுத்தது. 156 எனும் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கட்டா 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து  159 ஓட்டங்கள் எடுத்தது.

 மும்பை அணிக்கு குயின்டன் டி காக், ப்டன் ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது.வருண்சக்ரவர்த்தி வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார்ரோகித். பெர்குசன், பிரசித் கிருஷ்ணா பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட குயின்டன், ரசல் வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் சேர்த்த போது நரைன் 'சுழலில்' ரோகித் (33) சிக்கினார்.

சூர்யகுமார் யாதவ்5 ஓட்டங்களில் வெளியேறினார்..குயின்டன் (55) அரைசதம் கடந்தார்.இஷான் கிஷான் (14),போலார்டு (21),குர்னால் பாண்ட்யா (12). மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. சவுரப் திவாரி (5), ஆடம் மில்னே (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய கொல்கட்டா அணிக்கு சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. பவுல்ட் வீசிய முதல் ஓவரில் சுப்மன், வெங்கடேஷ் தலா ஒரு சிக்சர் விளாசினர். ஆடம் மில்னே வீசிய 2வது ஓவரில் அசத்திய வெங்கடேஷ், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 40 ஓட்டங் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' சுப்மன் (13) விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி, பவுல்ட், மில்னே பந்தில் தலா ஒரு பவுண்டரி அடிக்க, 'பவர்பிளே' ஓவரில் கொல்கட்டா அணி 63 ஓட்டங்கள் எடுத்தது. குர்னால் பாண்ட்யா பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார் வெங்கடேஷ். இவருக்கு ஒத்துழைப்பு தந்த திரிபாதி, ராகுல் சகார், குர்னால், பும்ரா பந்தில் தலா ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய வெங்கடேஷ், 25 பந்தில் அரைசதமடித்தார். பும்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய திரிபாதி, தன்பங்கிற்கு அரைசதமடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் சேர்த்த போது பும்ரா பந்தில் வெங்கடேஷ் (53) ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து
அசத்திய திரிபாதி, ராகுல் சகார் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ப்டன் மார்கன் (7)  ரோகித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிதிஷ் ராணா வெற்றியை உறுதி செய்தார். கொல்கட்டா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ஓடங்கள்  எடுத்து வெற்றி பெற்றது. திரிபாதி (74 ஓட்டங்கள், 3 சிக்சர், 8 பவுண்டரி), ராணா (5) ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

அதிரடி வெற்றி மூலம் 8 புள்ளிகள் 0.363 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4ம் இடத்தில் கொல்கத்தா மற்ற அணிகளை அச்சுறுத்துமாறு முன்னேற, ராஜஸ்தான் ரோயல்ஸ் 5ம் இடத்தில் இருக்க முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்த தோல்வி மும்பைக்கு பலத்த அடியாக உள்ளது. பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அற்தமாக வெற்றி பெற்றது.

கொல்கட்டாவுக்கு எதிராக ரோஹித் சர்மா 1000 ஓட்டங்கள் எடுத்தார்.ஒரு அணிக்கு எதிராக வீரர் ஒருவர் பெற்ற அதி கூடிய  ஓட்டம் இதுவாகும்.


அடுத்த இடங்களில் உள்ள வீரர்களின் விபரம்

டேவிட் வானர்     943 எதிர்  பஞ்சாப்

டேவிட் வானர்     915 எதிர்  கொல்கட்டா

விராட் கோலி      909 எதிர்  டெல்லி

விராட் கோலி      895 எதிர் சென்னை

ஷிகர் தவான்      894 எதிர் பஞ்சாப்

ரோஹித் சர்மா    862 எதிர் டெல்லி

ஷிகர் தவான்      862 எதிர் சென்னை

எம்.எஸ்.டோனி    825 எதிர் பெங்களூரு

சுரேஷ் ரெய்னா    824 எதிர் மும்பை

 

 

 

No comments: