Wednesday, August 24, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 31

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் பாரதிராஜாவுக்கென்று தனி இடம்  உள்ளது.  ஸ்ரூடியோவில் முடங்கிக் கிடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா. சினிமாவின் ரகசியங்களை வெளியில் பகிரங்கப்படுத்தினால் அதன் தரம் குறைந்து விடும் என பலர் குற்றம் சுமத்தினார்கள். அதை எல்லாம்  உடைத்தெறிந்து பல புதுமைகளை அறிமுகப்படுத்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியபெருமைக்குரியவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்ற பெயர் அவருக்கு சாலப் பொருந்தும்.

கே.ஆர்.ஜியிடம்  உதவியாளராக கே.பாரதிராஜா பணியாற்றிய போது அறிமுகமானவர் சித்ராலட்சுமணன். பத்திரிகையாளர்,பத்திரிகைத் தொடர்பாளர் ஆகிய சித்ராலட்சுமணனுடன்  கே. பாரதிராஜா நெருக்கமாகப் பழக அதிக சந்தர்ப்பம் கிடைத்தது.கே.ஆர்.ஜி யின்  பத்திரிகைத் தொடர்பாளராக சித்ராலட்சுமணன் பணியாற்றியதால்  இருவரும் அலுவலகத்தில் அதிக நேரம் விவாதித்தார்கள்.கதைத்துக் கதைத்து  நடந்து பஸ் நிலையத்துக்குச் செல்வது, பஸ் வரும்வரை கதைப்பது என  இருவரும் உரையாட அதிக சந்தர்ப்பம்  கிடைத்தது.பஸ் நிலையத்தில் நிற்கும்போது "மயிலு" எனும்  பெயரில்  பாரதிராஜா சொன்ன கதையை சித்ராலட்சுமணன் பாராட்டினார். வித்தியாசமான அக்கதை படமாகினால் வெற்றி பெறும் என்பதை  சித்ராலட்சுமணன் கணித்தார். மூன்று மாதங்களின்  பின்னர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு  "மயிலு" படத்தைத் தயாரிக்க முன்வந்தார். "16 வயதினிலே " எனப் பெயரிட்ட அந்தப் படத்தில் கமல்ஹாசன், ஶ்ரீதேவி  ஜோடியாக நடிக்க வேன்டும்  என பாரதிராஜா விரும்பினார். கமலுடன் சித்ராலட்சுமணன் மிக நெருக்கம் என்பதால் அவருடையை உதவியை நாடினார். கமலை  ஒப்பந்தம் செய்வதற்காக சித்ராலட்சுமணனுடன் கே.பாரதிராஜா அருணாசலம் ஸ்ரூடியோவுக்குச் சென்று கதையைப் பற்றிக்கூறியதும்  கமல்  ஒப்புக்கொண்டார்.

பாரதிராஜாவின் அணுகு முறையில் புதியதொரு மாற்றம் உள்ளதை அவதானித்த சித்ராலட்சுமணன் அந்தப் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  சிவசமுத்திரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் 16 வயதினிலே படப்பிடிப்பு நடைபெற்ற போது சென்னையில் இருந்து பத்கிரிகையாளர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்றார் சித்ராலட்சுமணன். பத்திரிகையாளர்களின் மத்தியில்  பாரதிராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு பேசுகையில்,

" இவரை சாதாரண டைரக்டர்  என நினைத்துவிடாதீர்கள்.தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போடும் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கப்போகிறார். பிரபல டைரக்ட்ர்களுக்கு  சவால் விடப் போகிறார்" எனக் கூறினார். அவர் கூறியது போலவே பாரதிராஜாவின் வெற்றி பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

  முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து  "செந்தூரப்பூவே " பாடல் காட்சியைப் , வேறு சில காட்சிகளையும் பார்த்த சித்திராலட்சுமணன்  தன்னை மறந்து ரசித்தார்.  அதனைப் பார்க்கும் வரை தயாரிப்பலளராக வேண்டும் என்ற எண்ணம் சித்ராலட்சுமணனுக்கு இருக்கவில்லை.   நான் படம் எடுத்தால் நீக்ன்கள் தான் டைரக்டர் என பாரதிராஜாவிடம் அவர் கூறினார். 16 வயதினிலே பட போஸ்டர்களிப் பார்த்த கமலின் சகோதரர் சாருகாசன் கடுப்பாகினார். முன்னேறிவரும் நடிகரை கோவணத்துடன் படம் எடுப்பதா எனச் சீறினார். கலம் சகோதரனை அமைதிப்படுத்தினார். 16 வயதினிலே   பிரமாண்டமான  வெற்றியைப்  பெற்றது.

"கிழக்கே போகும் ரயில்" படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் பாரதிராஜாவிடம் 5000 ரூபாவைக் கொடுத்த சித்ராலட்சுமணன் எனது படத்தின் டைரக்டர் நீங்கள்தான்  என்றார். புதிய முகங்களைப் போட்டு படம் எடுக்கிறேன். படத்தின் ரிசல்ட் தெரிந்த பின்னர் பேசலாம் என்றார் பாரதிராஜா. சித்ராலட்சுமணன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ரிசல்டைப் பற்றிக் கவலை இல்லை  இன்ங்கள்தான் டைரக்டர் என்றார்.

"கிழக்கே போகும் ரயில்" , "சிகப்பு ரோஜாக்கள்"   ஆகிய பாரதிரஜாவின் இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு  பெருவிருந்தாக அமைந்தன.  மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற சொந்த நிறுவனத்துக்காக "புதிய வார்ப்புகள்" படத்தி தயாரித்து இயக்கினார் பாரதிராஜா.  "புதிய வார்ப்புகள்" பட கதாநாயகனுக்காக அப்பாவி இளைஞனைத் தேடிக் களைத்த பாரதிராஜா , தனது  உதவியாளரான கே.பாக்கியராஜை துணிச்சலுடன் கதாநாயகனாக்கினார்.  பாரதிராஜாவின் வேண்டுகோளை முதலில் மறுத்த  பாரதிராஜா பின்னர் ஒபுக்கொண்டார். பாரதிராஜாவின் கண்டு பிடிப்பான பாக்கியாராஜும்  திரை உலகைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

16 வயதினிலே,கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் ஆகிய நான்கு படங்களும் வெற்றி பெற்றதால் பாரதிராஜாவின் மீதான எதிர் பார்ப்பு அதிகமாகியது. பாரதிராஜாவின் ஐந்தாவது படமான "நிறம் மாறாத பூக்கள்" வெள்ளி விழாக் கொண்டாடியது. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிப்படங்களுடன் அறிமுகமான  இயக்குநர் என்ற பாரதிராஜாவின் சாதனை இன்று வரை நிலைத்துள்ளது.

அலைகள் ஒய்வதில்லை உட்பட பத்துப் படங்களை இயக்கியபின்னர்  சித்ராலட்சுமனனின் காயத்திரி பிலிம்ஸுக்காக மண்வாசனை " படத்தை பாரதிராஜா கையில் எடுத்தார். "மண் வாசனை" படத்தில் நடிப்பதற்காக ராதாவிடம் 40 நாட்கள்  தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கினர் சித்திராலட்சுமணன். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக  இருந்தார். அழைப்பிதழில் ராதாவின் படம் போடப்பட்டிருந்தது. புதிய நடிகர்களை வைத்து படம் எடுக்கலாம் என பாரதிராஜா சொன்னதும்  ஷோபனாவை ஒப்பந்தம் செய்தனர்.

மண் வாசனை" படத்திதின் நாயகி ஷோபனா என்பதை பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டு  பாரதிராஜாவும், சித்ராலட்சுமணனும் பம்பாய்க்குச் சென்று விட்டனர்.  நிறம் மாறாத பூக்கள், கிழக்கே போகும் ரயில் ஆகியன இந்தியில் படமாக்கப்பட்டன. சித்ராலட்சுமணன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அவர்கள் திரும்பி வந்ததும் ஷோபனா  நடிப்பதற்கு  மறுத்துவிட்டார்.  மாணவியான அவர் நடித்தால் படிப்பு தடைப்பட்டுவிடும் என  தெரிவிக்கப்பட்டது. மூன்றாவதாக தெரிவான ரேவதி கதாநாயகியானார். அப்போது  ரேவதியும் மாணவிதான். தேனிக்கு அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனித்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ரேவது,வினுக்கரவர்த்தி, வை.விஜயா,விஜயன்  போன்றா  நடிகர் நடிகைகளுடன் தொழில் நுட்பக்கலைஞர்களும் அங்கு சென்று விட்டனர். சமையலுக்குரிய  பொருட்கள், பாத்திரங்களுடன் சமையல்காரர்களும் சென்று விட்டனர்.  கதாநாயகன்  இன்னமும் கிடைக்கவில்லை.பாரதிராஜா,சித்ராலட்சுமணன், கலைஞானம் ஆகிய மூவரும் சல்லடை போட்டு கதாநாயகனைத் தேடினார்கள்.நூற்றுக் கணக்கான  இளைஞர்களைப் பார்த்தாகி விட்டது. பாரதிராஜா எதிர்பார்த்த  கதாநாயகன் கிடைக்கவில்லை.  மதுரை மீனாடசியம்மன்  கோவிலைக் கும்பிட்டுவிட்டு பாரதிராஜா கரில் ஏறும்போது பலர் முண்டியடித்து கைகொடுத்தார்கள். அவர்களில்  ஒருவரைக்  காரில் ஏற்றும்படி சித்ராலட்சுமணனிடம்  பாரதிராஜா கூறினார். பாரதிராஜாவின் ஊர்  தேனி என்பதால் அவருக்குத் தெரிந்தவர் என சித்ராலட்சுமணன் நினைத்தார்.

கோட்டலுக்குச் சென்றதும் அந்த இளைஞனை பார்த்துக்கொண்டிருந்த பாரதிராஜா சில கேள்விகள்  கேட்டு சிரி, முறைத்துப் பார் என்றார்.  பின்னர் இவந்தான்யா கதாநாயகன் என்றார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலையல் கடை வைத்திருந்த பாண்டியன் என்ற அந்த இளைஞன் மண் வாசனை படத்தின் கதாநாயகனானார். வெள்ளிவிழா கொண்டாடிய மண் வாசனை மதுரையில் 231 நட்கள்  ஓடியது. மண் வாசனையில் அறிமுகமான பான்டியன் 75 படங்களில் 30 நாயகிகளுடன் நடித்தார்.

No comments: