Tuesday, August 9, 2022

பொருளாதார பிரச்சினையைத் தீர்க்குமா சர்வகட்சி அரசாங்கம்

 இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை  அரசாங்கத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. மக்களால் போற்றப்பட்ட தலைவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். மக்கள்  போராட்டம் விறுகொண்டெழுந்தபோது  மெளனம் காத்த அரசியல்வாதிகள்  மீண்டும் தமது  வழமையான அரசியலை ஆரம்பித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானதும் போராட்டத்தின் திசை மாற்றமடையத் தொடங்கியது. ராஜபக்ஷ குடும்பத்தின் மீதிருந்த கோபம்  ரணிலை நோக்கித் திருப்பப்பட்டது. ஜனாதிபதியைத் தொடர்ந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய அரசாங்கம்  போல்  பந்தா காட்டப்பட்டது.

பொருளாதாரத்தின் வீழ்ச்சி இலங்கையை படுகுழியில் தள்ளியது. இலங்கையை மீட்டெடுப்பதர்காக ஜனாதிபதி பல  முயற்சிகளை மேற்கொண்டார். அவை எஅவையும் அகிகொடுக்கவில்லை. கடசியாக அவர் தொடுத்த அசிரம்  இப்போது வேலை செய்யத் தொடங்கிவிட்டது. சர்வகட்சி அரசாங்கம் எனும் அஸ்திரத்துக்கு மயங்கிய அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.  அவர்களால்  நீட்டப்பட்ட ஆதரவுக் கரத்தில் அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் சாத்தியக்கூறு உள்ளது.

  இலங்கை தற்போது பாரிய விகிதாச்சாரத்தில் பொருளாதார ,அரசியல் நெருக்கடியில் உள்ளது, அதன் உச்சக்கட்டத்தை சமீபத்தில் அதன் கடனை செலுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் கிட்டத்தட்ட காலியாக உள்ளது.இறக்குமதிகளை வாங்கும் திறன் குறைகிறது மற்றும் பொருட்களுக்கான உள்நாட்டு விலைகளை உயர்த்துகிறது.இந்த நெருக்கடிக்கு பல காரணங்கள் உள்ளன.ம் பொருளாதார கொந்தளிப்பு நாடு முழுவதும் வெகுஜன எதிர்ப்புகளையும் வன்முறையையும் தூண்டியுள்ளது.  அரசுக்கு எதிரான போரட்டங்களில் கலந்துகொண்டவர்களில் சிலர் தமது வன்மத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றே பலரும் எதிர் பார்த்தனர்.  உலக நாடுகள் பல இலங்கைக்கு உதவிகளை வழங்கின.   இலங்கையின் வருமானத்தில் பலத்த அடி விழுந்தபோது அதைக் கண்டுகொள்ளாமல்  கடன் வங்கிவதிலேலே அரசாங்கம் குறியாக இருந்தது.  வருமானம்  இல்லாத தேவையற்ற செலவுகள்   மக்களின்  தலைவிதியை மாற்றியது.   கொரோனா கால கட்டுப்பாடுகள் வருமானத்தி முற்றாக முடக்கியது.

வெளிநாட்டில் இருந்து பொருட்களை  இறக்குமதி செய்வதற்குரிய கையிருப்பு இலங்கையிடம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கலுடன் கடலில் கத்திருக்கும் கப்பல்களுக்கு  கொடுப்பதற்குரிய பணம்  இல்லாததால்  கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை உள்ளது. டீசல் ,பெற்றோல் என்பனவற்றை வாங்குவது மிகவும் கடினமானதாக  உள்ளது. கப்பல் வந்து விட்டது. பணம் கடப்பட்டு விட்டது என்பவை எல்லாம் செய்தியாகின்றன. மூன்று நான்கு நாட்கள் வரிசையில் நின்று எரிபொருள்  கிடைக்காமல் செல்பவர்களின் சாபம் எப்போ பலிக்குமோதெரியாது.

 பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து எம்மை விடுவிப்பது யார் என்பதே  இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும். சர்வ கட்சி அரசியல் எனப்து அரசியல்வாதிகளுக்குரியது. அவர்கள்  கூடிப்பேசி, அமைச்சுப்பதவிகளை பங்கிட்டு  ஆசுவாசமாக  பொருளாதாரப் பிரச்சினை  பற்றி விவாதிப்பர்கள். அதுவரை மக்கள்  பொறுமையாக இருக்க வென்டும் என்பதே அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு.

  இலங்கை பெற்றுள்ள கடன் மிகப்பெரியது. இது  இலங்கையின்  இருப்புக்களை அதிகரிப்பதற்கான   திறனை மேலும் தடுக்கிறது. சமீபத்தில்,  சர்வதேச கடனாளர்களிடமிருந்து $78 மில்லியன் கடனை இலங்கை திருப்பிச்  செலுத்தவில்லை, மொத்தமாக $50.7 பில்லியன் கடனாகப் பெறப்பட்டுள்ளது.   அதைத் தொடர்ந்து ஆசிய வளர்ச்சி வங்கி, சீனா   ஜப்பான் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கடன்கள்  மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாடப் பொருட்களை வாங்கும் திறனை விரைவாக இழந்து வருகின்றனர். மே மாத இறுதியில் நுகர்வோர் பணவீக்கம் 39% ஆக இருந்தது.எரிசக்தி ,எரிபொருளைச் சேமிக்கும் வகையில் மின்வெட்டு அமுல் படுத்தப்படுகிற்து. இதனால் சிறு கைத்தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.  மின்சாரத்தை நம்பிய தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்தியாவும் சீனாவும் நாட்டிற்கு உதவி அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன மற்றும் பிணை எடுப்பு பற்றி விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் நாட்டிற்கு வந்தது. கூடுதலாக, தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அரசாங்கம் அமைச்சர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கங்களுக்கு வெளிநாட்டு நாணயம் தேவை. வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் அல்லது கடன் வாங்கும் திறன் இல்லாமல், இலங்கை அரசாங்கத்தால் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் உட்பட மிகவும் தேவையான இறக்குமதிகளை வாங்க முடியாது, இதனால் உள்நாட்டு விலைகள் உயரும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  ஆறு தமிழ்க் கட்சிகளும்,  மூன்று முஸ்லிம் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தனது நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபை, பாராளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி உள்ளிட்ட சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு   இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணக்கம் தெரிவித்துள்ளன.எனினும், சர்வகட்சி அரசில் பங்காளிகளாகுவது பற்றி அவை  வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அதேவேளை, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.டி.பி.டி.), செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன சர்வகட்சி அரசில் பங்காளியாகுவதற்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

இலங்கையின் முன்னோக்கி செல்ல வேண்டிய முக்கியமான விடயம் அரசியல் ஸ்திரத்தன்மை. அது இல்லாமல் சர்வதேச சமூகத்திடம் இருந்து  உதவிகள் கிடைக்காது.சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச செயற்பாட்டாளர்களின் உதவியின்றி இலங்கை தனது பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீளப் போவதில்லை . இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பங்காளிகளின் உதவியும் இதற்கு தேவைப்படுகிறது.2023 ஆம் ஆண்டு இறுதி வரை நாடு சரக்கு பற்றாக்குறையை சந்திக்கும் என  ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் உதவிக்கு வர வேண்டுமானால், செலவுகளைக் குறைக்க வலிமிகுந்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு நாணயங்களை அனுப்புவதற்கு வங்கி முறையல்ல - அதிகாரப்பூர்வமற்ற  தொடர்புகளைப் பயன்படுத்துவதால் , இலங்கையின் நாணயத்தை டொலருடன் இணைக்காமல், அதை சுதந்திரமாக மிதக்கச் செய்ய வேண்டும் என்று அது பெரும்பாலும் வலியுறுத்தும் . எனவே அது ஏற்கனவே உள்ளதை விட அதன் நாணய மதிப்பை குறைக்க வேண்டியிருக்கும் . தற்போது சுமார் 1.5 மில்லியன் மக்களாக உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைக்கும் என்று ஈMF எதிர்பார்க்கலாம் .  இலங்கையின் முன்னோக்கி செல்ல வேண்டிய முக்கியமான விடயம் அரசியல் ஸ்திரத்தன்மை. அது இல்லாமல் சர்வதேச சமூகத்திடம் இருந்து  உதவிகள் கிடைக்காது.சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச செயற்பாட்டாளர்களின் உதவியின்றி இலங்கை தனது பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீளப் போவதில்லை . இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பங்காளிகளின் உதவியும் இதற்கு தேவைப்படுகிறது.2023 ஆம் ஆண்டு இறுதி வரை நாடு சரக்கு பற்றாக்குறையை சந்திக்கும் என  ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் உதவிக்கு வர வேண்டுமானால், செலவுகளைக் குறைக்க வலிமிகுந்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிநாட்டு நாணயங்களை அனுப்புவதற்கு வங்கி முறையல்ல - அதிகாரப்பூர்வமற்ற  தொடர்புகளைப் பயன்படுத்துவதால் , இலங்கையின் நாணயத்தை டொலருடன் இணைக்காமல், அதை சுதந்திரமாக மிதக்கச் செய்ய வேண்டும் என்று அது பெரும்பாலும் வலியுறுத்தும் . எனவே அது ஏற்கனவே உள்ளதை விட அதன் நாணய மதிப்பை குறைக்க வேண்டியிருக்கும் . தற்போது சுமார் 1.5 மில்லியன் மக்களாக உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைக்கும் என்று ஈMF எதிர்பார்க்கலாம் . 

நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றிணைந்த முயற்சி அவசியமானதால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை வரவேற்பதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தெரிவித்துள்ளது.

"இலங்கைக்கு இந்த மிக முக்கியமான தருணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்த்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு மேல் இலங்கையை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று CCC ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை சமமாக பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி அரசாங்கமும், பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை நோக்கி செயல்படுவது, தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கான முதல் படியாகும். அனைத்து தரப்பினரின் பரந்த ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது, எனவே ஒப்புக் கொள்ளப்பட்ட சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் முதலீட்டாளர்கள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் உலகளாவிய நம்பிக்கையை ஊக்குவிக்கும்.

"தற்போது நிலவும் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, போதிய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய போதுமான உரங்களை வழங்குதல் உள்ளிட்ட பொருளாதார அழுத்தங்களின் விளைவாக பற்றாக்குறையை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த பற்றாக்குறைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது,” என்று CCC குறிப்பிட்டது. 

சமீப காலங்களில், ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை விரைவாக எட்டுவதற்கான நோக்கத்துடன், ஈMF பேச்சுவார்த்தைகளை அவசரமாக மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தையும், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கான (ஸோஏ) தேவையையும் அது முன்னிலைப்படுத்தியதாக சேம்பர் கூறியது. ) முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக சீர்திருத்தங்கள்.

"ஒரு நிலையான பொருளாதார மீட்பு திட்டத்தை செயல்படுத்துவது பலனைத் தருவதற்கு நேரம் எடுக்கும் மற்றும் முக்கிய மைல்கற்கள் அமைக்கப்பட வேண்டும். எனவே இலங்கைக்கான புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் பொறுமை காக்குமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என CCC குறிப்பிட்டுள்ளது.

சர்வகட்சி அரசாங்கம் மக்களை மீட்குமா அல்லது தம்மைப் பாதுகாக்குமா என்ற கேள்விக்கு விடை  எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொருளாதார  பிரச்சினையைத் தீர்க்குமா சர்வகட்சி அரசாங்கம்

சர்வகட்சி அரசாங்கம் மக்களை மீட்குமா அல்லது தம்மைப் பாதுகாக்குமா என்ற கேள்விக்கு விடை  எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments: