Monday, October 17, 2022

போராட்டக் களத்தில் குழந்தைகளுக்குத் தடை



  காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தையுடன் நின்றவப்    பொலிஸார் கைது செய்ய முயன்றபோது அவர்  குழந்தையைத் தூக்கிப் பிடித்தார்.  குழந்தியுடன் சேர்த்து அவரைக் கிது செய்ய பொலிஸார் இழுபறிப் பாட்டபோது  போராட்டக் காரர்கள் குழந்தையையும் அவரையும் பாதுகாத்தனர். தொலைக் காட்சிகளில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறினர். ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கவையும் அந்தக் காட்சி பதற்றப்பட வைத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததைப் போன்றதொன்றை அவர்களும் செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குழந்தைகளை பயன்படுத்தி போராட்டங்கள் நடத்தி  அவர்களின் உயிருக்கு ஜேவிபி ஆபத்தை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.   சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தியது, அவர்களில் சிலர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஒரு டசனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களின் எலும்புக்கூடுகள் சூரிய கந்தாவின் உச்சியில் உள்ள பாரிய புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டன, பின்னர் அது 'மரண மலை' என்று அழைக்கப்பட்டது.

கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி காலி முகத்திடலில்   'அறகலய' நிகழ்வின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து சிறுவர்களை போராட்ட தளங்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது. நினைவேந்தலுக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பொலிஸார்  முயற்சி செய்தபோது 15 வயது சிறுவன்கைது செய்யப்பட்டார். அங்கு நடைபெற்ற தளு ம்,உள்ளு காரணமாக  குழந்தை  ஒன்றுமருத்துவமனையில் அனுமதிக்கப்படது.

  ஒக்டோபர் 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெற்ற  போராட்டத்தின் போது, ​​சிறுவர்கள் மீது பொலிஸாரின் அட்டூழியங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் (NCPA) முறைப்பாடு செய்துள்ளது.குழந்தைகளை நடத்தவும், கையாளவும் காவல்துறைக்கு இப்படித்தான் கற்றுக் கொடுக்கப்பட்டதா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

  இந்த சம்பவம் குறித்து NCPA ஆராயும் என்றும், பொதுமக்கள் போராட்டங்களில் குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என்றும்  NCPA தலைவர் உதயகுமார அமரசிங்க, மக்களை கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொலிஸ் அதிகாரிகளை எச்சரித்துள்ளார், சட்டவிரோதமான உத்தரவின் பேரில் செயற்படுபவர்கள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு என்றாவது ஒரு நாள் பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 சிறுவர்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பது இலங்கைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகும்   இதனைத் தடுக்க பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் ஈடுபடக் கூடாது என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து சரியானதுதான்.  கடந்த பல மாதங்களாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுமந்து செல்வதைக் காண முடிந்தது. போரட்டம் அல்லாத  பொது வெளியிலும் சிறுவருடன்  பெற்ரோரை அல்லது சிறுவருடன்  இருக்கும் பெரியவரை பொலிஸார் கைது செய்த சம்பவங்கள் பல  உள்ளன. குழந்தைகளை, அல்லது சிறுவர்களை ஆபத்தில் தள்ளி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் நிலையத்திலிளைஞனின் நெஞ்சில் காலால் உதைத்த  இராணிவ அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

  குழந்தைகளைப் பாதுகாப்பதில் ஜனாதிபதியும், அரசாங்கமும் கொடுக்கும் முன்னுரிமையைப் போற்ர வேண்டும்.  ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள்  ஆகியோர வரவேற்பதர்கு மாணவர்கள்  மணிக்கணக்கில் வெயிலில் நின்றதை  ஜனாதிபதி  மறந்து விட்டார். வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வந்த போதும் இந்தக் கூத்து நடைபெற்றது. ஏசி காரில் தலைவர்கள் செல்ல, கொளுத்தும் வெயிலில் மாணவர்கள்  கொடி பிடித்து அசைத்த ஆவணங்கள்  உள்ளதை ஞாபகப்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளின் உயிரைப் பணயம் வைக்க பெற்றோருக்கு   உரிமை  இல்லை. அரசாங்கத்தின்  விழாக்களில்  குழந்தைகளும், சிறுவர்களும்  கலந்துகொண்ட போது வரவேற்றவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக  குழந்தைகளும், சிறுவர்களும் நின்றபோது   ஸுறுவரைக் கேடயமாகப் பாவிக்க வேண்டாம் என்கிறார்கள்.

வடக்கு, கிழக்கில் சுற்றிவளைப்பு நடைபெற்ற போது  குழந்தைகளுடனும், சிறுவர்களுடனும் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும், குழந்தைகளுக்காக கைது செய்யாமல் சென்ர சம்பவங்களும் வரலாற்றில்  பதிவாகி உள்ளன.

அரசியல்வாதிகளின் விழாக்களிலும், அரசாங்க உயரதிகாரிகளின் விழாக்களிலும் மாணவர்களை கால்கடுக்க நிற்கவைப்பதைத் தடுப்பதற்கும் சட்டம் இயற்ற வேண்டும்.

No comments: