Monday, October 24, 2022

பரபரப்பான போட்டியில் வென்ற‌து இந்தியா

இந்தியாபாகிஸ்தான் போட்டி என்றால்  பரபரப்புக்குப் பஞ்டசம் இருக்காது. மெல்பேனின் நடைபெற்ர  ரி20 உலகக்கிண்ணப் போட்டியின் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு  16  ஓட்டங்கள் தேவை,விக்கெற்,நோபோல், வைட் போல் ,உதிரி ஓட்டங்கள் என நடக்கக்கூடாத அனைத்தும் டந்து முடிந்து முடிவிட்டது.

20 ஆவது  ஓவரை சுழல் பந்து வீச்சாளர் நவாஸ் வீசினார். 40 ஓட்டங்க எடுத்த ஹர்த்திக் ஆட்டமிழந்தார்.

களத்துக்கு வந்த கார்த்திக் இரண்டாவது பந்தில் ஒரு  ஓட்டம் எடுத்தார்.

3 ஆவது பந்தில்   கோலி ஒரு ஓட்டம் எடுத்தார்.

இடுப்புக்கு மேல் வந்த   4 ஆவது பந்தை கோலி சிக்ஸருக்கு அனுப்பினா. அது நோபோல் என அற்விக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

பிறீகிட் பந்து ஸ்டம்பை தகர்த்தது, பிறீகிட் எனபதால்  மூன்று ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

அடுத்த பந்தில் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

ஒரு  ந்து இரண்டு ஓட்டங்கள். அஸ்வின் களம் இறங்கினார்.வைட் போல்  ஒரு ஓட்டம் கிடைத்தது. அடுத்த பந்தை அஸ்வின்பவுண்டரிக்கு அனுப்பினார்மைதானத்தின் ஆரவாரம் விண்னைத் தொட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா களத் தடுப்பைத் தேர்வு செய்தார். உலகக்கிண்ணப் போட்டியில் முதல் பந்தை வீசிய அஷ்ரப் சிங் பாகிஸ்டானின் கப்டன்   பாபர் அசாமை கோல்டன் டக்கில் அவுட்டாக்கினார்  2வது ஓவரில் முகமது ரிஸ்வானை 4 (12) வெளியேற்ரினார்..   15/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்து நங்கூரத்தை போட்ட ஷான் மசூட்இப்திகர் அஹமத் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.   அக்சர் படேல் வீசிய 12வது ஓவரில் 21 ஓட்டங்களை விளாசிய இப்திகர் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மி  சடாப் கான் 5 (6), ஹைதர் அலி 2 (4), முகமத் நவாஸ் 9 (6) என முக்கிய வீரர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் சீரான இடைவெளியில் சிக்கினர்.

  நங்கூரமாக நின்ற ஷான் மசூட் 5 பவுண்டரியுடன் 52* (42) ஓட்டங்களும் ஷாஹீன் அப்ரிடி 16 (8) ஓட்டங்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் பாகிஸ்தான் 8 விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில்   அர்ஷிதீப் சிங்   ஹர்திக் பாண்டியா ஆகியோர்  தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

 160 ஓட்டங்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே  கேஎல் ராகுல் 4 (8) ஓட்டங்களிலும் ப்டன் ரோஹித் சர்மா 4 (7) ஓட்டங்களிலும் வெளியேறினார்சூரியகுமார்ம் 15 (10) ,   அதிர்ச்சி கொடுத்த நிலையில் ஆச்சரியப்படும் வகையில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 2 (3) ஓட்டங்களில் ரன் அவுட்டானார்.

 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய இந்தியாவை விராட் கோலிஹர்திக் பாண்டியா ஜோடி நங்கூரமாக நின்று போராடினார்கள். அதனால் கடைசி 3 ஓவரில் 42ஓட்டங்கள் தேவைப்பட்ட போது ஷாஹீன் அப்ரிடி வீசிய 18வது ஓவரில் 17 ஓட்டங்களை அந்த ஜோடி விளாசியது

அதனால் கடைசி 12 பந்துகளில் 36 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது ஹாரீஸ் ரவூப் 1, 1, 0, 1 என சவால் கொடுத்தாலும் கடைசி 2 பந்துகளில் விராட் கோலி மெகா சிக்சர்களை பறக்க விட்டார். அதனால் நவாஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் 40 (36) ஓட்டங்களில் பாண்டியா அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த பந்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்  ஒரு ஓட்டம் எடுக்க 3வது பந்தில் விராட் கோலி 2 ஓட்டங்கள் எடுத்து 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார். அதிர்ஷ்டவசமாக இடுப்பளவு வந்ததால் அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்ட போது அதே பந்தை பவுலர் மீண்டும் ஒய்ட் போட்டார். அதனால் 3 பந்தில் 5  ஓட்டங்கள் தேவைப்பட்ட போது விராட் கோலி க்ளீன் போல்ட்டானாலும் அந்த பந்து பிரீ ஹிட் என்பதை பயன்படுத்தி 3 ஓட்டங்களை இந்தியா எடுத்தது. அதனால் கடைசி 2 பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் 1 (1)   ஸ்டம்ப்பிங் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய அஷ்வினுக்கு   ஒய்ட் போட்டார். அதனால் ஒரு பந்தில் ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது வீரர்கள் உள்ளே இருந்தாலும் லாவகமாக தூக்கி அடித்த அஷ்வின் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது..20 ஓவர்களில் 160/6 ஓட்டங்களை எடுத்து வென்றது 

No comments: