Saturday, December 17, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 48

 கதாநாயகனாகக்கொடி கட்டிப் பறக்கும் நடிகர்கள் வில்லன் பாத்திரம் ஏற்றூ நடிப்பது மிகவும் குறைவு. கதாநாயகனாக நடித்து  ரசிகர்கலின் மனதில் இடம் பிடித்த கார்த்திக்கை வில்லனாக்கிப் பார்க்க எஸ்.பி.முத்துராமன் ஆசைப்பட்டார். அதற்கு கார்த்திக் ஒப்புக்கொள்ளவில்லை.

வில்லனாக நடித்தால் கதாநாயகன் வாய்ப்பு பறிபோய் தொடர்ந்து வில்லன் பாத்திரம்  தேடிவரும் என்பதால் கார்த்திக் மறுத்தார்.  இதுபற்றி .வி.எம். சரவணனிடம் எஸ்.பி.முத்திராமன் ஆலோசனை செய்தார். கார்த்திக்கை அழைத்தசரவணன் , அடுத்த படத்தில் உடனடியாக கதநாயகன் வாய்புத் த்ருவதாக  உறுதியளித்தா. அதன்  பின் " நல்லவனுக்கு நல்லவன்" எனும் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்தார்.சரவணன்  வாக்குக் கொடுத்தபடி கார்த் திக்கை கதாநாயகனாக நடிக்க வைத்துநல்லதம்பிஎன்ற படத்தை எடுத்தார்கள்.ரஜினி, ராதிகா ஜோடியாக நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்து அசத்தினார்.


நல்லவ னுக்கு நல்லவன்படத்தில் கார்த்திக்கு ஜோடி துளசி. கார்த்திக் துளசிக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கும்போது இரு வருக்கும் பழக்கம் ஏற்படும். துளசிக்கு கார் டிரைவிங்கோடு காதலையும் சேர்த்து கற்றுக் கொடுத்துவிடுவார் கார்த்திக். அந்தக் காதலை இருவரும் கொண்டாடும் விதமாகமுத்தாடுதே முத்தாடுதேஎன்று ஒரு பாட்டு வைத்தோம். இருவருமே இள ரத்தம். பாடலிலும் இளமை ததும்பியது. அந்தப் பாடலுக்கு புலியூர் சரோஜா நடனம் அமைத்தார்  படத்தில் அந்தப் பாட்டு அவ்வளவு சிறப்பாக அமைந்தது.

பொதுவாக கம்பெனி ஸ்டிரைக் என்றால் ஊழியர்கள் சிவப்பு கொடி பிடித்து, ‘முதலாளி ஒழிகஎன்று குரல் கொடுத்து தங்களுடைய ஆர்ப்பாட் டத்தை வெளிக்காட்டுவது வழக்கம். இதற்கு மாறாகநல்லவனுக்கு நல்லவன்படத்தில் தொழிலாளர்கள் வெள்ளைக் கொடி பிடித்து வந்து, தங்களுடைய கோரிக்கையை முன் வைப்பார்கள். ‘‘எங் களை வாழ வைக்கும் முதலாளியிடம் எங்களுடைய கோரிக்கைகளை சமா தான முறையில் எடுத்து வைக்கிறோம். அதனால் முதலாளியை ஒழிக என்றும் சொல்ல மாட்டோம். வாழ்க என்றுதான் சொல்வோம். சமாதானம் பேச வந் திருப்பதால் வெள்ளைக் கொடி பிடித்து வந்திருக்கிறோம்!’’ என்று விளக்கம் சொல்வார்கள்.இந்தக் காட்சியை அப்போது பல பத்திரிகைகளும் பாராட்டின. வித் தியாசமான காட்சியமைப்பு என்று மக்களும் ரசித்து மகிழ்ந்தனர். .வி.எம் நிருவனத்தில் நடந்த உண்மையான வேலை நிருத்த சம்பவ்த்தை மையம்மாக வைத்து அந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

 தொழிலாளி முதலாளி உறவுகள் சரி யாக இருந்தால்தான் அந்த நிறுவனம் ஒழுங்காக நடக்கும். அதுக்கு உதாரணம் ஏவி.எம்.ஸ்டுடியோ. தொழிலாளர் களுக்கு செட்டியார் செய்யாத உதவி களே இல்லை. நிலம் வாங்கிக் கொடுத் தார். அரசாங்கத்திடம் கடன் பெற்று வீடு கட்டிக் கொடுத்தார். தொழிலாளர் கள் வாழ்கிற பகுதியில் பள்ளிக்கூடங் கள் கட்டினார். ஹெல்த் சென்டர் திறந்தார். தொழிலாளர்கள் வீட்டு விஷேசத்துக் காகவேமேனாதிருமண மண்டபம் கட்டினார். தொழிலாளர்களுக்கும், அவ ருக்கும் இடையே அப்படி ஓர் உறவு இருந்தது.

அப்படிப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் சில வெளியாட்கள் புகுந்தனர். ‘‘எவ்ளோ உழைக்கிறோம். எங்களுக்கு இவ்வளவுதான் சம்பளமா? இன்னும் கொடுக்கணும்!’’ என்று தொழிலாளர்களை தூண்டிவிட்டனர். ஒரு கட்டத்தில் தொழிலாளர்களைச் சேர்த் துக்கொண்டு வேலைநிறுத்தம் செய்ய வும் ஆரம்பித்தனர்.

ஏவி.எம் ஸ்டுடியோ வாசலில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு தினமும் கோஷம் போடத் தொடங்கினார்கள். செட்டியார் ஸ்டுடியோவை மூடிவிட்டார். மூன்று மாதங்கள் ஸ்டுடியோவில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஒரு கட்டத் தில் மெய்யப்ப செட்டியார் ஸ்டுடி யோவை பெங்களூருக்கு மாற்ற திட்டமிட் டார். அதன் ஆரம்பமாக சவுண்ட் டிபார்ட் மென்டை பெங்களூரு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  எஸ்.பி.முத்துராமனும் ஏவி.எம்மில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த என்.எஸ். மணியும்ம் (பின்னாளில் இந்த மணி அவர்கள்தான்புவனா ஒரு கேள் விக்குறிபடத்தை தயாரித்தவர்) மெய் யப்ப செட்டியாரை  சந்தித்து    வேலை நிருத்த்தத்தை முடிவுக்குக்க்கொண்டுவர  முயற்சி செய்தார்கள்.  ‘‘ஒரு வாரம்தான் பார்ப்பேன். சமாதானம் ஆகலைன்னா பெங்களூ ருக்கு மாத்திடுவேன்!’’ என்று முடிவாக சொன்னார்.முத்துராமனும்,  மணியும் மவுண்ட் ரோடு ராஜி பில்டிங்கில் இருந்து சைக் கிளில் ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு சென்றார்கள்.

தொழிலாளர்கள், ஸ்டுடியோவுக்கு முன் போடப்பட்ட குடிசையில் இருந்து கோஷங்கள் போட்டுக்கொண்டிருந் தனர். அவர்களை ஸ்டுடியோவுக்குள் போக அனுமதிக்கவில்லை.   ‘‘ஸ்டுடியோவுக் குள்ள இருக்கிற தென்னை மரங்கள், செடிங்க எல்லாம் மூணு மாசம் தண்ணி ஊத்தாம வாடிப் போயிருக்கும். இனி மேலும் தண்ணி விடலைன்னா செத்துப் போய்டும். நாளைக்கு திரும்ப ஸ்டுடியோ திறக்கும்போது வெறிச்சோடி போயிருக் கும்!’’ என்று சொன்னார்கள்.

‘‘சரி போங்க!’’ என்று சொல்லி, உள்ளே போக அனுமதித்தார்கள். அவர்கள்  உள்ளே போய் தண்ணி ஊத்திட்டிருந் தோம். அப்போ நாலு, ஐந்து தொழி லாளர்கள் மட்டும் உள்ளே  பொய் ‘‘ஏன் சார் செட்டியார் ஸ்டுடி யோவைத் திறக்கும் மூடில் இருக் காரா?’’ என்றார்கள். ‘‘நீங்க சரின்னு சொன்னா செட்டியாரிடம் பேசி, சமா தானமா ஒரு முடிவு எடுக்கலாம்!’’ என்றார்கள்.  போராட்டக் காரர்களும்  இணங்கினார்கள்.

சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஸ்டுடியோ முன்பு மூன்று மாதங்களாக ஸ்டி ரைக் நடத்திய தொழிலாளர்கள், எங்கள் வேண்டுகோளின்படி ஏவி.எம். செட்டியா ரைப் பார்க்க அவர் வீட்டு வாச­லில் வந்து நின்றனர். அப்போது அங்கே கூடியிருந்த தொழிலாளர்கள் செட்டியார் காலில் விழுந்து, ‘‘எங்களை மன்னிச் சுடுங்க அப்பச்சி. முதல்ல ஸ்டுடியோ வைத் திறங்க. நாங்க ஒழுங்கா வேலை பார்க்குறோம்!’’ என்றார்கள். அப்போது ஏவி.எம் செட்டியார் அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘‘எழுந்திருக்கப்பா, இனிமேல் யார் சொல்றதையும் கேட்காதீங்க. நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தப் பட்ட ஒரு குழுவை அமைப் போம். உங்களுக்கு என்ன பிரச் சினைன்னாலும் அந்தக் குழுவிடம் சொல்லுங்க. எந்தப் பிரச்சினைன்னாலும் உடனடியாத் தீர்வு காண்போம்!’’ என்றார். அவர் சொன்னதுபோலவே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இருந்தேன். ஒருநாள் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘‘தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதை நிறுவனம் நிறைவேற்றிக் கொடுக்கும். நாமும் அதை சரியாக உணர்ந்து உழைக்க வேண்டும்’’ என்று சொன்னேன். அதை எல்லோரும் புரிந்துகொண்டு வேலை பார்த்தனர். ஸ்டிரைக் நடந்தது என்ப தற்கு எந்தச் சுவடும் தெரியாத அளவுக்கு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஏவி.எம். ஸ்டு டியோ இயல்பு நிலைக்கு மாறியது.

இந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டுதான்நல்ல வனுக்கு நல்லவன்படத்தில் தொழிலாளர் கள் வெள்ளைக் கொடி பிடித்துக் கொண்டே ஸ்டி ரைக் நடத்தும்  அந்தக் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

வைதேகி காத்திருந்தாள் 1984 அக்டோபர் 23 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதற்கு ஒருநாள் முன்பு 22 ஆம் திகதி ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் வெளியானது. அந்த வருட தீபாவளியில் இவ்விரு படங்களுடன் போட்டியிட்ட மற்றொரு திரைப்படம், மலையாள டப்பிங் படமான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற 3டி திரைப்படம். இந்த மூன்றுமே மாபெரும் வெற்றி பெற்றன.

 நல்லவனுக்கு நல்லவன் படத்துக்கு போட்டிப் படமாக அமைந்த வைதேகி காத்திருந்தாளின் 100 வது நாள் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு விஜயகாந்த் உள்ளிட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். இன்றைய இளையத்தலைமுறை நடிகர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது.

No comments: