Monday, May 29, 2023

அரசியல் சர்ச்சையில் அகப்பட்ட இந்திய நாடாளுமன்றம்

டெல்லியில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் இருவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் மிகப்பழமையானதால்  புதிய நாடாளுமன்றத்தை நவீன் முறையில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக்  கட்டடம் எதிர் வரும் 28 ஆம் திகதி திறந்து  வைக்கப்பட  உள்ளது.

புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு  எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. பழையன கழிந்து  புதியன புகுவது வழமை. ஆனால்,  புதுமை என  அடையாளப் படுத்தப்பட்ட கட்டடத்தை இந்தியப் பிரதமர்  மோடி திறந்து  வைக்கப்போகிறார். இந்திய  நாட்டின் அதி உயர் தலைவராக  ஜனாதிபதி  இருக்கும் போது பிரதமர்  மோடியை  முன்னிலைப் படுத்துவதை எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.  மோடி அரசு  ஜனாதிபதிய அவமானப் படுத்தி விட்டதாக எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி  தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன‌ .

 இதுதொடர்பாக அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காததன் மூலம், அவரை அவமதித்திருப்பது மட்டுமின்றி, ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   சாவர்க்கரின் பிறந்தநாளான   மே 28‍ம் திகதியைத் தேர்ந்தெடுத்ததற்கும்  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.


 தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதன் தொடரச்சியாக புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10‍ம் திக‌தி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

543 உறுப்பினர்கள்  உள்ள  இந்திய நடாளுமன்றத்தில் 1.280 உறுப்பினர்கள் அமரும் வண்ணம் ஏன் அமைக்கப்பட்டது.  ஏன் என்ற கேள்வுக்கு விடை கிடைக்கவில்லை.

 நான்கு அடுக்கு மாடிகளுடன் 64 ஆயிரத்து 500 சதுர அடியில் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதுசினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதாக் கட்சி,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  உட்பட 15 கட்சிகள் பாராளுமன்றக் கட்டடத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமாகவும், உறுப்பினர்கள் அமர்வதற்கு போதுமான இடமில்லாமலும் இருப்பதால், சுமார் 200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. .

முக்கோண வடிவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடம், நூலகம், பல்வேறு அரங்கங்கள், பல்துறை கமிட்டி அலுவலகங்கள், உணவருந்தும் அறைகள், பார்க்கிங் வசதிகள் அனைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவையும் இடம்பெறவுள்ளன.


 குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களுக்கு சிறப்பு நுழைவு வாயில்களுடன் சேர்த்து கட்டடத்தில் 6 நுழைவாயில்கள்  இருக்கும். நெருப்பு நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்தச் செங்கோல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாட்டில் இருந்து ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது.

 ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆகஸ்ட் 14, 1945 அன்று, சுமார் 11:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுக்கொண்டார். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார். இந்தச் செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்நாட்டு மக்களிடம் அதிகாரம் மாறியதற்கான அடையாளம்.

 குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. சோழ வம்சத்தின் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். பிரதமர் மோடி இந்த செங்கோலை ஏற்று, அது சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வைக்கப்படும். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும். ஜனநாயக அமைப்பின் மீதான மரியாதையின் அடையாளமாக செங்கோல் நிறுவப்படும் என அமித் ஷா அறிவித்துள்ளார்.

எதிர்க் கட்சியின் கோரிக்கைகள் எவையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. தான் நினைத்ததை மோடி அரசு செய்து முடிக்க  உள்ளது. நாடாளுமன்றத் திறப்பு விழாவின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.

No comments: