Wednesday, July 12, 2023

தமிழக ஆளுநருக்கு அமைச்சர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு


 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது.

மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

மேலும், இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் வழங்கவில்லை.

ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலும் வழங்க வேண்டும்" என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்

அமைச்சர் செந்தில பாலாஜிக்கு எதிராக  அரசியல் செய்யும் தமிழக ஆளுநர்  ரவி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள அமைச்சர்கலுக்குப் பாதுகாப்பு வழங்குவது ஏன் ஏன்ற  கேள்வி எழுத்துள்ளது.  தமிழக ஆளுநர்  தன் பங்குக்கு  ரசியல் செய்கிரார் என்பதை பலமுறை நடு நிலையாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு ஒரு சட்டமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இன்னொரு சட்டத்தையும் ஆளுநர்  பின்பற்றுகிறார்.

 பாரதீய ஜனதா, ஆளுநர் ரவி, அண்ணாமலை ஆகிய  அனைவருக்கும்  பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே பொழுதா பொழுதுக்கும் சர்ச்சைதான். கருத்தியல்ரீதியாகவும், ஆட்சியில் மூக்கை நுழைப்பதன் மூலமாகவும் அதிகார அத்துமீறலில் ஈடுபடுவதைத் தனது வழக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தமிழக ஆளுநருக்கு   மென்மையாக எதிர்ப்பைக் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்  மிகத் தீவிரமாக ஆளுநரை  எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம், சட்டமன்ற மரபை மீறிய கவர்னரைக் கண்டித்து, குடியரசு தினத்தையொட்டி அவர் வழங்கிய தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்தன. ஆனால், முதல்வர் அந்த விருந்தில் பங்கேற்றார். கடந்த ஏப்ரல் 12-ம் திகதி, ‘சட்ட மன்ற மாண்பைக் குலைக்கும் ஆளுநரைக் கண்டித்து’ மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பார் எனக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் பங்கேற்கவில்லை. அன்றைய தினம், சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைத் தன் நண்பர்களுடன் ரசிக்கப் போய்விட்டார் அமைச்சர் உதயநிதி. கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழிதான் பங்கேற்றார்.

 செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட நிலை மற்றைய அமைச்சர்களுக்கு ஏற்படக்கூட என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அக்கறை காட்டுகிறார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் ஆலத்தில் நடந்த  ஊழல் வழக்குக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற  கேள்வியும் எழுந்துள்ளது.  மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைதான் ஆளுநருக்கான எதிர்ப்பு என  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பதில் வருகிறது.

இந்திய அரசியலைமைப்பு வழங்கிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்துக்குக் குடைச்சல் கொடுக்கப் பார்க்கிறார்ஆளுநர் . அவரது அதிகப்பிரசங்கித் தனத்தை, நடவடிக்கை களை திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் அனுமதிக்காது.  ஆளுநர் எதிர்ப்பில்திராவிட முன்னேற்றக் கழகம்  இப்போது காட்டும் தீவிரத்தைத் தொடர்ந்து காட்ட வேண்டும். மீண்டும் மென்மைப் போக்குக்குப் போய்விடக் கூடாது  என்ற கருத்து கழகத்தினுள்  இருக்கிறது.

ஊழல் குற்றம் சுமத்தப் பட்டவர்கள்  பாரதீய ஜனதாவில்  எம்பிக்களாக, சட்டசபை உறுப்பினர்களாக  இருக்கிறார்கள்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் எல்லோரும் பதவியில் இருக்கிறார்கள்.  செந்தில் பாலாஜி மட்டும் பதவி விலக வேண்டும் என ஆளுநர் சொல்வது எப்படிச் சரியாகும். எதிர்க் கட்சியில் இருந்தபோது வருமான வரித்துறையால் சோதனிசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டவர்கள் பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தாவிய  பின்னர்  புனிதர்களாகிவிட்டனர்.

 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழகத்தில்  இருந்து எம்பிக்களைப்  பெற வேண்டும் என பாரதீய ஜனதா விரும்புகிறது.  அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊழல் கட்சியாக மக்கள்  முன்  நிறுத்த முயல்கிறது.  ஜி2  அலைக்கற்றை குற்றச்சாட்டு என்னவானது என தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

 

No comments: