Tuesday, October 15, 2024

மின்னணு லைன் முடிவுகளை விம்பிள்டன் ஏற்றுக்கொள்கிறது

 2025 முதல் விம்பிள்டன் சம்பியன்ஷிப்பில் லைவ் எலக்ட்ரானிக் லைன் காலிங் (லைவ் இஎல்சி) ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் புதன்கிழமை அறிவித்தது.

இந்த ஆண்டு சம்பியன்ஷிப்பின் போது விரிவான சோதனைக்குப் பிறகு அடுத்த ஆண்டு அனைத்து சம்பியன்ஷிப் மற்றும் தகுதிப் போட்டி மைதானங்களுக்கும் நேரடி ELC தொழில்நுட்பம் இருக்கும்.

"சம்பியன்ஷிப் போட்டிகளில் நேரடி எலக்ட்ரானிக் லைன் அழைப்பை அறிமுகப்படுத்துவதற்கான முடிவு குறிப்பிடத்தக்க காலகட்டத்தின் பரிசீலனை மற்றும் ஆலோசனையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது" என்று ஆல் இங்கிலாந்து கிளப் தலைமை நிர்வாகி சாலி போல்டன் கூறினார்.

"இந்த ஆண்டு சம்பியன்ஷிப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், தொழில்நுட்பம் போதுமான அளவு வலுவானதாக இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், மேலும் எங்கள் நிர்வாகத்தில் அதிகபட்ச துல்லியத்தை தேடுவதில் இந்த முக்கியமான நடவடிக்கையை எடுக்க இது சரியான நேரம். வீரர்களுக்கு, இது அவர்களுக்கு வழங்கும். சுற்றுப்பயணத்தின் பல நிகழ்வுகளில் அவர்கள் அதே நிலைமைகளின் கீழ் விளையாடியுள்ளனர்."

யுஎஸ் ஓபன் , அவுஸ்திரேலியன் ஓபன் ஆகியவை ஏற்கனவே லைவ் எலக்ட்ரானிக் லைன் காலிங்கைப் பயன்படுத்தியுள்ளதால், க்ளே-கோர்ட் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மட்டுமே இதுவரைஇதனை ஏற்ற்றுக்கொள்ளவில்லை.

கிராண்ட்ஸ்லாம் வேட்டைக்காரன் ரபேல் நடால்


 டென்னிஸ் உலகை 20 வருடங்களாகக் கட்டி ஆண்ட ஜாம்பவான் ரபேல் நடால்  சர்வதேச டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

22 முறை கிராண்ஸ்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், அடுத்த மாதம் மலாகாவில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு விட்டு அத்துடன் ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நடால் தனது நான்காவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார், இதற்கு முன்பு 2008 பீஜிங் விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் தங்கப் பதக்கத்தையும், ரியோ 2016ல் இரட்டையர் தங்கப் பதக்கத்தையும் பெற்றிருந்தார். நடால் தனது வாழ்க்கையை 92 ATP பட்டங்களுடன் முடிப்பார். வெற்றிகள் - ஓபன் சகாப்தத்தில் மற்ற எந்த வீரரையும் விட இரண்டு மடங்கு அதிகம்.

 38 வயதாகும் நடால், கடந்த சீசன்களாக காயம் காரணமாக சரிவர விளஐயாடவில்லை. கடந்த வருடமே தான் 2024 இறுதியில் ஓய்வு பெறக் கூடும் என்று கூறியிருந்தார் நடால். சொன்னபடி தற்போது ஓய்வை அவர் அறிவித்துள்ளார். அவரது ஓய்வு முடிவு, நடால் ரசிகர்களை ஏமாற்றத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஒற்றையர் போட்டியில் நோவாக் ஜோகோவிக்குக்கு அடுத்து சிறந்த வீரர் நடால்தான். களிமண் தரையில் சிறப்பாக விளையாடக் கூடியவரான டால், 14 முறை பிரெஞ்ச் ஒபன் ஒற்றையர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரெஞ்சு ஓபன் போட்டியில் தான் விளையாடிய 116 போட்டிகளில் 112ல் வென்று அசத்தியவர். 112 பிரெஞ் ஓபன் போட்டிகளில் 4 தோல்வி என்பது முறியடிக்க முடியாத சாதனைகள்.

அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை நான்கு முறையும், ஆஸ்திரேலியா ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை தலா 2 முறையும் அவர் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஒலிம்பிக்கில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்ற அவர், டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் வெல்ல 5 முறை உதவியுள்ளார். கடைசியாக 2019 டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் வென்றிருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளாக டென்னிஸ் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் ரோஜர் பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம் வென்றவர் பெடரர்), ஜோக்கோவிக் மற்றும் நடால்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் "பிக் த்ரீ" ஆக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆண்கள் டென்னிஸில் நடால் முன்னணிவீரராகஇருந்து வருகிறார். ஸ்பானியர் 209 வாரங்களாக ஏடிபியால் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர். 1 இடத்தைப் பிடித்துள்ளார், மேலும் ஆண்டு இறுதியில் நம்பர் 1 ஆக ஐந்து முறை முடித்துள்ளார்.

நடாலின் தொழில் வாழ்க்கையின் முதல் பாதியானது நெருங்கிய நண்பர் பெடரருடனான அவரது போட்டியால் வரையறுக்கப்பட்டது; ஜோகோவிச்சுடனான அவரது போர்களால் பிந்தைய பகுதி பார்க்கப்படுகிறது.

  கமராவிலிருந்து விலகி, நிகழ்வுகளில் துணை ஊழியர்களுடனான சிறு உரையாடல்களில், அவர் தவறாமல் கண்ணியமாகவும் அடக்கமாகவும் இருந்தார், அதுவே மனிதனின் உண்மையான அளவுகோலாகும்.

  2005 இல்  19 வயதில் பிரெஞ்ச் ஓபன் வெற்றியுடன்  பிரகாசமானார்.அதே வழியில் ரோஜர் பெடரரை அரையிறுதியில் தோற்கடித்தார்..

பின்னர் அவர் ரோலண்ட் கரோஸில் மேலும் 13 பட்டங்களை வென்றார், ஒன்பது அவரது முதல் 10 முயற்சிகளில் வந்தது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் எந்த விளையாட்டிலும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஆனார்.

24 வயதிற்குள் அவர் கிடைக்கக்கூடிய அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றார் - இந்த செயல்பாட்டில் இதுவரை இல்லாத இளையவர் ஆனார் - மேலும் ஸ்பெயினுக்காக இரண்டு முறை ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றார்.

'உங்கள் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, போராடும் குணம் பல தசாப்தங்களாக கற்பிக்கப்படும். உங்கள் மரபு என்றென்றும் வாழும். ஒரு வீரராக என்னை மிகவும் பாதித்த எங்களின் போட்டியில் பலமுறை என்னை மிகவும் வரம்பிற்குள் தள்ளியதற்கு நன்றி " என்று 60 முறை நடாலை எதிர்கொண்ட ஜோகோவிச் கூறினார்

ரமணி

13/10/24

 

Saturday, October 12, 2024

பாஜகவை கைவிட்ட காஷ்மீர் காஷ்மீரை கோட்டைவிட்ட காங்கிரஸ்

இந்திய நாடளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  ஜம்மு காஷ்மீர்,ஹரியானா   தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பாடம் எடுத்துள்ளன.

இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தியக் கூட்டணி, வெற்றி பெறும் எனவும்  பாரதீய ஜனதா படு  தோல்வியடையும் எனவும்  கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

தேர்தல் முடிவும் எதிர்பார்த்தது போல வெளியாகின.    மாநிலமாக இருந்த ஜமு காஷ்மீரை ஜூனியன் பிரதேசமாக மாற்றிய பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அந்த மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஹரியானாவில் காலையில் காங்கிரஸ் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு நேரம் செல்லச் செல்ல பாரதீய ஜனதாவின் பக்கம் சாய்ந்தது.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது பாரதீய ஜனதா

ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பா... 29 இடங்களிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

 ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், 48 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் இரண்டு இடங்களிலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஹரியானாவில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸின் வெற்றி எட்டாமல் போனது.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் காங்கிரம் ஹரியானா தேர்தலில் மோசடி அநபெற்றிருக்கிறதென்ற குற்றச் சாட்டுடன் தேர்தல் திணைக் களத்தில் புகார் செய்துள்ளது.

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீருக்கு  மட்டும்சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு நடந்த முதல் தேர்தல் இது என்பதால், இந்த நடவடிக்கைகள் குறித்த மக்களின் மனநிலையை அறியத் தரும் தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தரத்தக்க வகையில் தோல்வியடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஒமர் அப்துல்லா மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவோம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

திமிருடன் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தைப் பறித்த பாரதீய ஜனதாவும் மீண்டும் மாநில அந்தஸ்து தருவதாக  உறுதியளித்தது. மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்  அந்த மாநிலத்தில் ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என அறிவித்துவிட்டதால், வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அவர்களிடம் ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவில் அதிக இடங்களும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் முடிவுகள் தீர்க்கமாக பா..கவுக்கு எதிராக வந்திருக்கின்றன. 370 நீக்குவதன் மூலமாக காஷ்மீரிகள் என்ற உணர்வை அம்மாநில மக்களிடம் நீக்க முடியவில்லை.

  நீண்ட நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக வைத்திருக்க முடியாது. விரைவிலேயே அதன் மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டியிருக்கும். 370வது பிரிவை திரும்ப கொண்டுவர மாட்டார்கள் என்றாலும் சில அம்சங்களாவது திருப்பியளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் நாங்கள் எடுத்த முடிவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் அதற்கு நேரெதிராக, தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள்.

2014ல் இருந்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளித்தஅம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி  இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 81 இடங்களில் போட்டியிட்டு, சுமார் 9 சதவீத வாக்குகளையும் மூன்று இடங்களையும் மட்டுமே அக்கட்சி பிடித்திருக்கிறது.

: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கின.

 பாரதீய ஜனதா  இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும்   வாக்கு சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

அதேநேரத்தில் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 18% வாக்குடன் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கு 38 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் வாக்கு 12% ஆக குறைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தோல்வியை சந்தித்தாலும், ஜம்மு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

அங்கு பாஜக போட்டியிட்ட 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சிக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் மொத்தமாக பாஜக 25%, தேசிய மாநாடு கட்சி 23% பெற்றுள்ளன.

பாரதீய ஜனதாவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும் என்பதை ஆம்  ஆத்மி இன்னமும் உணரவில்லை என்பதால் ஹரியானாவின் வெற்றி  கையை விட்டுப் போனதுஇந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விரைவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜார்க்கண்டிலும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாதக காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியில் தானே பலம் வாய்ந்த கட்சி என்ற காங்கிரஸின் இமேஜ், இந்தத் தோல்வியால் சற்று மங்கக்கூடும். இது இடங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எதிரொலிக்கக்கூடும்.

"ஆனால், மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தள்ளிப்போடுவதே, காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

ரமணி

13/10/24