Monday, September 22, 2025

இரண்டாவது முறை பாகிஸ்தான வீழ்த்தியது இந்தியா


 ஆசியக் கிண்ண கிறிக்கெற்  தொடரில் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.  துபாயில் நடைபெற்ர போட்டியில் இந்தியாவும்  பாகிஸ்தானும்  மீண்டும் மோதின.

நாணயச்  சுழற்சியில்  வெற்ரி பெற்ற இந்தியா  பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 171  ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியா 18.5 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து  174 ஓட்டங்கள் எடுத்து  6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

  பாகிஸ்தானுக்கு  பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்  பர்ஹான்  ஓட்டம்  எடுக்காமல் கொடுத்த   கேட்ச்சை அபிஷேக் ஷர்மா கோட்டை விட்டார். அதைப் பயன்படுத்திய அவர்  9 பந்துகலில்  15 ஓட்டங்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். சாய்ம் ஆயுப்  21, ஹுசைன் தாலத் 10  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஃபர்கான் அரை சதத்தை அடித்து 58 (45)  ஓட்டங்கள்  குவித்த போது சிவம் துபே வேகத்தில்வெழ்ளியேறினார். அடுத்து வந்த முகமது நவாஸ்  21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பகீம் அசரப் 20* (8), கப்டன் சல்மான் ஆகா 17* (13)  ஓட்டங்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் பாகிஸ்தான்  5 விக்கெற்களை இழந்து  171 ஓட்டங்கள் எடுத்தது.  இந்திய அணிக்கு சிவம் துபே 2 ஹர்டிக் பாண்டியா , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா  1 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இந்திய அணி  ல் பீல்டிங் செய்த போது 4 கேட்ச்களை நழுவ விட்டது.

172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. அபிஷேக் சர்மா   ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 105 ஓட்டங் கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், 28 பந்துகளில் 47  ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

 : அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போதும் அபிஷேக் சர்மா தனது அதிரடி பாணி ஆட்டத்தை தொடர்ந்தார். 39 பந்துகளில் 74  ஓட்டங்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 6 ஃபோர்கள் , 5 சிக்ஸர்களை விளாசினார்., சஞ்சு சாம்சன், 13  ஓட்டங்கள் எடுத்தார்  திலக் வர்மா  ஆட்டமிழக்காமல் 30, ஹர்திக் ஆட்டமிழக்காமல்  7  ஓட்டங்கள் எடுத்தனர்.  ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார். இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174  ஓட்டங்கள்  எடுத்து வெற்றி பெற்றது. 

  இந்திய அணியின் ஓப்பனர்கள் அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் சிறந்த தொடக்கம் கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டனர். அதன் வெளிப்பாடாக அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஹரிஸ் ரவூப் ,ம் ஷாஹின் ஷா அப்ரிடி ஆகியோர் அபிஷேக் மற்றும் ஷுப்மன் உடன் பஞ்சாபி மொழியில் பேசி வம்பிழுத்தனர். ஆட்டத்துக்கு நடுவே நடுவர் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டார்.

அபிஷேக்   ஷுப்மன் கில்  இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் இணைந்து அதிகம் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆட்டம் தான் பேசும்; பேச்சல்ல என கில்லும், ‘நீங்கள் பேசுங்கள்; நாங்கள் வெல்கிறோம் என அபிஷேக்கும் ஆட்டத்துக்கு பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

  

No comments: