கரூர் அசம்பாவிதம் இந்திய அரசியல் வரலாறில் ஒரு கரும் புள்ளியாகப் பதியப்பட்டுள்ளது.
விஜயைப்
பார்க்க முண்டியடித்தபோது நெரிசல்லில் சிக்கிய 41 பேர் மரணமானார்கள். ஒரு
கைக்குழந்தை, 10 சிறுவர்கள்
மரணமானது கல் நெஞ்சையும் கரைத்து விட்டது. 111 பேர்
காயமடைந்துள்ளன.
இந்தக் கொடூரங்கள்
அனைத்தையும் தெரிந்துகொண்டும்
கட்சித்தலைவர் பாதுகாப்பாக சென்னைக்கு ஓடிவிட்டார்.
புஸ்ஸி
ஆனந்த், ஆதவ்
அர்ஜுன் ஆகியோர் எங்கே போனார்கள் எனத் தெரியவில்லை.
கரூர்
மரணங்கள் பற்றி
திருச்சி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட
போது பதிலளிக்காமல் சென்றுவிட்டார்
விஜய்.
மரணமானவர்கள்
அனைவரும் தன்னைப் பார்க்க
வந்தவர்கள என்பதை தலைவர் விஜய் உணரவில்லை.
தமிழ்த்திரை
உலகில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததும், தமிழக
அரசியல் களம் மாற்றமடையத் தொடங்கியது.
திராவிட
முனேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு மாற்றீடாக விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கரூர்
சம்பவம் நடைபெற்று இரண்டு
வாரங்கள் முடிந்து
விட்டன. கள நிலை மெது
மெதுவாக மாறத்தொடங்கி விட்டது. அதற்கிடையில்பல சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ராகுல் காந்தி கரூர் சம்பவம் பற்றி விஜயிடம் கேட்டறிந்தார் அமித் ஷா அதிக அக்கறை
காட்டினார். எடப்பாடி, அண்ணாமலை, வானதி சீனிவாசன் அமைச்சர்
முருகன் ஆகியோர் வரிசையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஸ்டாலினைக்
கண்டித்தார்கள்.ஏனைய கட்சிகள் அனைத்தும் விஜயைக் கண்டித்தன.விஜயை ஏன் கைது செய்ய வில்லை என திராவிட
முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பின.
விஜயைக் கைது செய்தால் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்துவார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ,பாரதீய ஜனதாக் கட்சிகள் அவர்களின் பின்னால் நிர்பார்கள். இதனால் ஸ்டாலின் பொறுமை காக்கிறார்.கரூரில் பாதிக்கப்பட்டவர்கலின் குடும்பத்துடான் விஜய் வீடியோகோலில் கதைத்து ஆறுதல் சொன்னார். அவர்கள் விஜய் மீது இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
கரூர்
சம்பவத்தை நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதிகளின் கேள்விகளால்
விஜய் தரப்பு திணறுகிறது. தமிழக அரசை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள். ஜெயலலிதா
முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த
நேரம் விஜய்
சிறையில் இருந்திருப்பார். கருணாநிதியை
கதறக் கதற இழுத்துச் சென்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் போன்ரு முரட்டுத்தனமாக ஸ்டாலின் செயற்படுவதில்லை. அதனால்
விஜய் சந்தோஷமாக வீட்டில் இருக்கிறார்.
தமிழக
அரசு விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளது. ஜனவரியில் அதன் அறிக்கை கிடைக்கும். தமிழக சட்ட சபைக்கான தேர்தல் ஜூரம் அடுத்த ஆண்டு ஆரம்பித்துவிடும்.
அந்த அறிக்கை விஜயின் அரசியல் எதிர் காலத்தை முடிவு செய்யும். இதேவேளை உண்மை
கண்டரியும் குழுவை இந்திய
மத்திய அரசு ஆரம்பித்துள்ளது. அந்டஹ்க்
குழுவின் அறிக்கை எப்படி இருக்கும் என்பதை ஆய்வளர்கள் இப்போதே கணித்து
விட்டார்கள்.
கரூர்
சம்பவம் தொடர்பாக
ராகுல் காந்தி தொலை
பேசியில் விஜயுடன் கதைத்துள்ளார். அமித்ஷா அதிக அக்கறை காட்டுகிறார்.அமித்ஷாவும் ராகுலும் விஜயுடன் தொடர்புகொண்டதால் கூட்டணி களம் மாறுமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
திராவிடக்
கட்சிகளும் பாரதீய ஜனதாவும் இல்லாத கூட்டணி அமைக்க
வேண்டும் எனப்தே விஜயின் நிலைப் பாடு. கட்சிஐயும் தன்னையும் பாதுகாப்பதற்காக விஜய்
பாரதீய ஜனதாவிடம் சரணடையலாம் என் சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் எடப்பாடிதரப்பு விஜயுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக
வெற்றிக் கழகத்துடனான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழ்நாடு
சட்டமன்ற தேர்தலை ஒட்டி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், எடப்பாடி
பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இரண்டு முறை திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பயணம்
மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து
கூட்டத்திற்கு மத்தியில் பேசுகையில், அதிமுகவின் கொடிகள் மட்டுமின்றி சிலர் தவெகவின் கொடிகளையும் கையில் ஏந்தி அசைத்தபடி இருந்தனர்.
அப்போது,
“திமுக தலைமையில் அமைக்கின்ற கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார்.
உண்மையா? அது வெற்றுக் கூட்டணி. வெல்லும் கூட்டணி என்பது அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி. ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருக்கிறார். கூட்டணி தேவைதான், ஆனால் அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி வலுவானதாக இருக்கும். அங்க பாருங்க கொடி பறக்குது (தவெக கொடியை குறிப்பிட்டு), பிள்ளையார் சுழி போட்டாச்சு ஆகாயத்தில்
கோட்டை கட்டி கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். அது கானல் நீராக தான் போகும் என்றார்.
விஜயின்
கட்சிக் கொடியை வைத்திருந்தவர்கள் உண்மையின்
அந்தக் கட்சியினரா அல்லது எடப்பாடி
அழைத்து வந்தவர்களா எனத் தெரியவில்லை.
தேர்தல்
நெருங்குகையில் இதைப்போல பல மாயாஜாலங்கல் நடை
பெறலாம் விஜய் சிக்கினால் எடப்பாடி பாரதீய ஜனதாவைக் கழற்றி விட்டு விடுவார்.
அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரனைக்குழு செயற்படத்தொடங்கிவிட்டது. அந்த
அறிக்கையில் சகல உண்மைகளும்
வெளியாகும்.
அரசியல்
தலைவர்களுக்கு கரூர் சம்பவம் ஒரு
பாடமாக அமைந்துள்ளது.
ரமணி
12/10/25
No comments:
Post a Comment