Thursday, October 23, 2025

சூடு தணியாத கரூர் சம்பவம்


 கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. ஆனாலும்,பலர் அதில் இருந்து மீளவில்லை. சிபிஐ விசாரணை யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன.

தமிழக வெற்றிக் கழகமும், விஜயும் எடுத்த சில முடிவுகள் அக்கட்சியினரை கடுமையான கோபத்திற்கும், விவாதத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. கட்சியில் என்ன நடக்கிறது.. எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடப்பது வேறொன்று என்று ரசிகர்கள் சொல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

 தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக நம்பியது. தமிழ்நாடு அதிகாரிகள் உள்ள SIT அமைப்பது சரியாக இருக்காது.. இதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெகவினர் கோரிக்கை விடுத்தனர்.

 பலியான குழந்தையின் அப்பா என்பவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மனுவில் கைய்ந்ழுத்திட்ட விவகாரம் புலைஅக் கிளப்பி உள்ளது. நீதிமன்ரா விசாரணைக்காக கையெழுத்திடவில்லை என்கிறார் இறந்தசிறுவனின் தந்தை. உயர் நீதிமன்றம் உருவாக்கிய அஸ்ரா கார்க் தலைமையிலான SITஐ கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சிபிஐ விசாரணைக்கு சென்ற பின்பும் கூட தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை  விஜய் கரூர் செல்வார்.  இதற்காக அனுமதி கேட்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் விஜய் அதையும் செய்யவில்லை.புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக்கிவிட்டு வெளியே வந்த பின் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவரும் மீடியா முன் பேசவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முன்பும் பேசவில்லை புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் நடவடிக்கை  எடுப்பார் . அவர் தலைமறைவாக இருந்ததற்கு விளக்கம் கோரப்படும்  என்றும் கூறப்பட்டது. ஆனால் அப்படியும் எதுவும் நடக்கவில்லை.

புஸ்ஸி ஆனந்த் திரும்பி வந்த பின்  கரூரில் பலியான மக்களின் புகைப்படங்களுக்காகவாது புஸ்ஸி ஆனந்த் மாலை போடுவார். அல்லது விஜய் மாலை போடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

 இரந்தவர்கலின்  முடுப்ப உறுப்பினர்களுடன் விஜய் பேசியதாக தகவல் வெளியானது.  41 குடும்பங்களியும் விகஜ் தத்தடுப்பார் என அறிவிக்கப்பட்டது. 41 குடும்பங்களுக்கும் ஒரு நிறுவனம் மாதம் 5 ஆயிரம் ரூபா கொடுக்கும் என ஆதவ் அர்ஜுனா  தெரிவித்தார்.


 தமிழக சட்ட சபைத் தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  ஒரே கூட்டணியில் உள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமையிலான       கூட்டணி, என அமித்ஷாவே  சொல்லிவிட்டார்.  ஆனால், முதலமைச்சர் யார் என‌ அமித்ஷா சொல்லவில்லை.  எடப்பாடிதான் முதலமைச்சர் என அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன்  போன்ற பாரதீய ஜனதாத் தலைவர்கள்  சொல்கிறார்கள்.  இறுதி முடிவை அமித்ஷா   அறிவிப்பார் எனவும் அவர்கள் சொல்கிறார்கள். முதலமைச்சர் யார் என்ற பட்டிமன்ற‌ம் இன்னமும் தொடர்கிறது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாவும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டன.  இரண்டு கட்சிக்ளும்  ஒரே கூட்டணியில் இருக்கின்றன. ஆனாலும், வேறு வேறாக கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரேமலதாவுடன்  கூட்டப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றது. 2024  பாராமுனறத்  தேர்தலின்போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டனியில்  விஜயகாந்தின்  தேமுதிக இடம்பெற்றிருந்தது. எனினும்,  ராஜ்ய சபா எம்பி பதவி காரணமாக  பிணக்கும் ஏற்பட்டது.

  2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களவை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், 2026-ல் பதவி ஒதுக்கப்படும் எனஎடப்பாடி தெரிவித்தார். இது இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

  இந்த அதிருப்தியைத் தொடர்ந்து,  ஜனவரியில் இறுதி முடிவை அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்தார். மறுபுறம் திராவிட முன்னேறாக் கழகத்துடன்  பிரேல‌தா  கதைத்துக் கொடு இருக்கிறார்  : தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக முயன்று வருகிறது.  தேமுதிகவை தன் பகம் ஈர்ப்பதற்கு திமுகவும் முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2025 நிலவரப்படி, தேமுதிக எந்தக் கூட்டணியில் இணைம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தேமுதிகவின் இறுதி முடிவை எதிர்பார்க்கலாம்.

கரூர் சம்பவத்தை முன்வைத்து தவெகவை தங்களோடு சேர்த்துக் கொள்ளஎடப்பாடி முயற்சி செய்கிறார்.   அப்படி நடந்து விட்டால் அதிமுக கூட்டணி பலமானதாகிவிடும் என்பதால் இப்போது மெல்ல அதிமுகவின்   கதவைத் திறந்து வைக்கிறது தேமுதிக. அதனால் தான் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதல் தொடுத்திருக்கிறார் பிரேமலதா என்கிறார்கள். இருந்த போதும் அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாமல், விமர்சனம் செய்த மறுநாளே பிரேமலதாவின் தயார் இறப்புக்கு அஞ்சலி செலுத்தச் சென்றுவிட்டார் ஸ்டாலின்.

தேமுதிகவுக்கு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை குறைந்தது 8 எம்எல்ஏக்களை அந்தக் கட்சி பெறவேண்டும். அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் குறைந்தது 10 தொகுதிகளாவது நமக்கு நிச்சயம் கிடைக்கும் என கணக்குப் போடும் பிரேமலதா, விஜய்யும் வந்தால் மட்டுமே அதிமுக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.

அப்படி இல்லாத பட்சத்தில் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தனக்கானதைக் கேட்டுப் பெறலாம் என நினைக்கிறார். ஆக எது வெற்றிக் கூட்டணியோ அதில் இணைவது என்பது தான் பிரேமலதாவின் திடமான முடிவு. அதனால் தான் வெற்றிக் கூட்டணிகள் முடிவாகும் வரை காத்திருப்போம் என தனது முடிவை ஜனவரிக்கு ஒத்திவைத்திருக்கிறார்.

11 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும்  கொடுப்பதறு எடப்பாடி தயராக  இருக்கிறார்.

சென்னை பனையூர் இல்லத்தில் பாட்டாளி மக்கள்கட்சித்  தலைவர் அன்புமணி ராமதாஸை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு 1 மணி நேரமாக நீடித்தது. இந்த நிலையில் விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு வந்திருந்த பைஜெய்ந்த் அன்புமணியுடன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து பேரங்களும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  

 

No comments: