அதிமுகவை சிதைத்து தமிழகத்தில் கால் பதிக்கிறது பாரதீய ஜனதா
விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்திய பவன் கல்யாண்
சசிகலாவுடன்
டாக்டர் ராமதாஸ் கைகோர்த்ததால் அதிமுகவுக்கு பின்னடைவு
தமிழகத்தில் எடப்பாடியின் பெயரைச் சொல்லாத பிரதமர்
மோடி
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் மாறுபடுகிறது. காங்கிரஸ், தேமுதிக, மதிமுக ஆகியவற்றுக்கு எததை தொகுதிகள் என்பதை திமுக முடிவு செய்துவிட்டது. மற்றைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சு வார்த்தையை அதிமுக இன்னமும் ஆரம்பிக்கவில்லை. எடப்பாடி அடிக்கடி டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்திப்பதால் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார்.தமிழகத் தேர்தலில் அதிமுகவின் தலமையில்தான் கூட்டணி அறுதிப் பெரும்பானமையுடன் வெற்றி பெற்று நான் முதல்வராவேன் என எடப்பாடி சூளுரைத்துள்ளார்.ஆனால்,
அவரது கூட்டணியில் இருக்கும் பாரதீய ஜனாவின் கணக்கு வேறு மாதிரி உள்ளது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணி என பாரதீய ஜனதா சொல்வதில்லை. என்டிஏ கூட்டணி எனத்தான் பாரதீய ஜனதா முன்னிலைப் படுத்துகிறது. தமிழகத்தில் அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பெரியாரின் சிலை அகற்றப்பட்டது. பாரதீஜ ஜனதாக் கட்சியின் முதல் எதிரி பெரியார்.திராவிடன் கழகம்,
திமுக, அதிமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் பெரியாரின் படம் பிரமாண்டமாக முன்னிலைப் படுத்தப்படும். எம்ஜிஆர் காலத்த்ஹில் இருந்து இன்றுவரை காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் பெரியானின் படத்தை பாரதீய ஜனதா அகற்றியதறும் எதிராக அதிமுகவில் உள்ள எவரும் வாயைத் திறக்கவில்லை. எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெரியாரின் கொள்கைகளில் தமிழகம் கட்டுண்டு கிடக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த அனைவரும் பெரியாருக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள். நடிகர் விஜயும் பெரியாரைத் தூக்கிப் பிடிகிறார். பெரியாரைப் பெரிதும் புகழ்ந்த சீமான், இப்போ பெரியாரை இகழ்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளார்.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்திலே வழமையாகப் பேச்சுவார்த்தை நடைபெறும். அமித்ஷா தமிழ்கத்துக்கு விஜயம் செய்த பின்னர் அவருக்குப் பின்னால் எடப்பாடி டிலிக்குச் சென்ரு பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் எனப்து புரியாத புதிராக உள்ளது. மதுராந்தகம், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற பிர்மாண்டமான மாநாட்ட்சில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். எங்குமே எடப்பாடியின் பெயரையும், அதிமுகவையும் மோடி உச்சரிக்கவில்லை. கடசியாக திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர்களின் படங்கள் காட்சிப் ப்டுத்தப் பட்டிருந்தன. எடப்பாடியின் ப்டம் அங்கு இல்லாதது பேசு பொருளாக இருந்தது.
தமிழகத்தில் திமுகவுக்குப் போட்டியாக இருந்த அதிமுக எனும் பிரமாண்டமான கட்சியை பாரதீய ஜனதா விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்ட அதிமுகவின் அடுத்த கட்டத் தலைவர்கள் திமுகவிடம் சரணடைந்துள்ளனர். அதிமுகவுக்குப் போட்டியாக விஜயை முன்னிலைப்படுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது. கடைசிக் கட்ட ஆயுதமாக பவன் கல்யாணை பாரதீய ஜனதா தூது விட்டுருக்கிறதாக அரசல் புரசலாக செய்தி வெளியாகி உள்ளது.
விஜய்க்கு இணையான நடிகர் சிரஞ்சீவி அவர் அரசியக் கட்சி ஆரம்பித்தபோது ஆந்திர மக்கள் அவர் பின்னால் இருந்தனர். அடுத்த முதல்வர் சிரஞ்சீவி என்பது அவரின் பின்னாள் திரண்ட கூட்டம் உறுதிப்படுத்தியது. 2008-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். சமூக நீதி , ஊழலற்ற ஆட்சியை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இக்கட்சி, 2009 தேர்தலில் போதிய வெற்றியைப் பெறாததால், 2011-ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் சிரஞ்சீவி காணாமல் போய்விட்டார். பவன் கல்யாணின் கதை அப்படியானதல்ல பாரதீய ஜனதாவுடன் இணைந்த பவன் கல்யாண் இன்று துணை முதல்வராக இருக்கிறார். இவை எல்லாம் விஜய்க்கு எடுத்துச் சொல்லப்பட்டது. விஜயின் முடிவுக்காக பாரதீய ஜனதா காத்துக் கொண்டு இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினும் , வைகோவும் கூட்டணி பேச்சிவார்த்தையை முடித்து விட்டனர். மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டன் மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் பொதுச் சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது.
மதிமுகவின் எதிர்காலம் , தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதா வைகோ தெரிவித்தார். "கட்சியின் தனித்தன்மையை நிலைநாட்டவும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் குறைந்தது ஒரு தொகுதியிலாவது தனிச் சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என கட்சியின் உயர்நிலைக் குழு முடிவெடுத்தது. அதன் அடிப்படையிலேயே இந்த தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது," என்று அவர் கூறினார். மனிதநேய மக்கள் ,இந்திய முஸ்லீம் கட்சிக ஆகியவற்றுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் கிங் மேக்கராக முன்னொரு காலத்தில் கோலோச்சிய டாக்டர் ராமதாஸை இன்று கவனிப்பார் எவரும் இல்லை.
அவருடைய மகன் அன்புமணி பாரதீய ஜனதாவின் ஆதரவுடன் எம்பியாகிறார். ரமதாஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எப்படும் எட்டாப்பொருத்தம். ஆகையால் திமுகவின் பக்கம் வண்டியைத் திருப்பினார். அங்கே நந்தியாக திருமாவளவன் குந்தி இருக்கிறார். விஜய்யின் பக்கம் முயற்சித்தார். அங்கும் கதவு திறக்கப்படவில்லை. இப்போ சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்ற அடைமொழியுடன் அரசியலில் கோலோச்சிய சசிகலாவும் அரசியல் அநாதையாகி விட்டார். இந்தக் கூட்டணி வெற்றி பெறாது. ஆனாலும், அதிமுகவின் வாக்கு வங்கிக்கு ஆப்பு வைக்கப்போகிறது.
தைலாபுரம் ச் என்ற சசிகலா அங்கு டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார். பலமான கட்சிகள் ஒன்றிணைவது அதிசயமல்ல. பெரிய கட்சிகளால் தனித்து விடப்பட்ட ராமதாஸும், சசிகலாவும் இணைந்தது ஆச்சரியமாகக்ப் பார்க்கப்படுகிறது. 30 சத வீதத்துக்கும் அதிகமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி 20 சதவீதமாகக் குறாஇந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா, ராமதாஸ் கூட்டணியும் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்கப்போகிறது.
சசிகலாவின் செயற்பாடு , "துரோகங்களை வீழ்த்துவது" என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது.. சசிகலாவும் அதிமுகவில் தனக்கான இடத்தை இழந்து தனித்து விடப்பட்டுள்ள நிலையில், ராமதாஸுடன் அவர் கைகோர்ப்பது என்பது தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும் வட மாவட்ட வன்னியர் வாக்குகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சியாகும்.
அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளில் வாக்குகளை பிரிப்பதன் மூலம்,
அதன் வெற்றி வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வலிமை இந்த அணிக்கு உண்டு.
அதேபோல் பாஜகவின் வாக்கு வேட்டைக்கும் இது முட்டுக்கட்டையாக அமையும். அதேசமயம் தங்களை ஓரங்கட்டியவர்களுக்குத் தரும் பதிலடியாகவும் இது அமையக்கூடும்.
பெரிய கட்சியும், சிறிய கட்சிகளும் ஒன்றிணைந்து பலமான கூட்டணியை உருவாக்குவதே தேர்தல் கால முக்கிய வேலைத்திட்டமாகும். 2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் இந்த நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது.
மகாராஷ்டிராவின் அசுர பலத்துடன் இருந்த சிவசேனாவுக்குள் ஊடுருவிய பாரதீய ஜனதா,
அந்தக் கட்சியை இரண்டாக்கியது. இப்போ பாரதீய ஜனதாவின் உதவியில் அங்கு ஆட்சி நடக்கிறது.அருணாசலப் பிரதேசத்தில் மக்கள் கட்சியை மென்று விழுங்கியது பாரதீய ஜனதா. மணிப்பூர், கோவா,
சிக்கிம், பீகார் வரை பாரதீய ஜனதாவின் அசுரக் கை நீண்டுள்ளது.
பாரதீய ஜனதாவின் உறவால் வலிமையிழந்த மாநிலப் பட்டியல் மிக நீளமானது. அந்த வரிசையில் கடைசியாக அதிமுக சேர்ந்துள்ளது.
ரமணி
15/3/16


No comments:
Post a Comment