மினித்தேர்தலை எதிர்நோக்கும் தமிழகம்
தவெகவின்
வெற்றிக்கு அக்கினிப் பரீட்சை
காங்கிரஸின் துரோகம் காரணமாக இந்தியா கூட்டணி
கூட்டத்தில் திமுக பங்கேற்காது.
0000000000000000000000000000
மேகதாது அணை அணைகட்ட கர்நாடகா எடுத்த முடிவு விஜய்க்கு
அக்கினிப் பரீட்சை
0000000000000000000000000
லட்டுபோல் கிடத்த எம்பி பதவியை காங்கிரஸுக்குத்
தாரை வார்த்தது தவெக
00000000000000000000000
திமுகவில் இருந்து வெளியேற மூட்டைமுடிச்சுடன்
தயாராகும் வைகோ
00000000000000000000000
பாஜகவில்
இருந்து வெளியேறிய அண்ணாமலை அதிரடி காட்டத்
தயாராகிறார்
தமிழக
சட்ட மன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின்
ஆதரவுடன் ஆட்சியை நடத்துகிறது.
தினம் தினம் பல்வேறு பல்வேறு அதிரடி திருப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறி
வருகின்றன. அதிமுகவில் இருந்து பிரிந்த 25 பேர்
தவெகவில் இணைந்து அமைச்சுப் பதவி பெற முயன்றனர். முயற்சி தோல்வியடைந்ததால் ஆறு பேரைத்தவிர ஏனையவர்கள்
மீண்டும் அதிமுகவில் தஞ்சமடைந்தனர். இரண்டு பேர் முடிவு எடுக்க முடியாது தவிக்கின்றனர். அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை இராஜினாமா
செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம்
, அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள்
காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே
முதலமைச்சர் விஜய் இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து
தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்ட சபையில்
தவெகவில் பலத்தை அதிகரிக்க விரும்புகிறார் விஜய்.
திருச்சி
கிழக்கைத் தவிர மீதமுள்ள நன்கு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. நான்கு தொகுதிகளில் கிடைத்த வெற்றியைத் தக்க வைப்பதுடன், திருச்சி கிழக்கையும் கைப்பற்ற அதிமுக
கணக்குப் போடுகிறது.
திருக்கி
கிழக்கில் திமுகவின் முன்னாள் உறுப்பினர் இரண்டாவது இடத்திப் பிடித்தார். விட்டதைப் பிடிக்க
திமுக முயற்சி செய்யும். அது மட்டுமல்லாது ஏனைய தொகுதிகளிலும் திமுக தனது பாய்ச்சலை வெளிப்படுத்தத் தயாராக உள்ளது.
காலியாக
உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற
உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 107-லிருந்து
112 ஆக உயர்த்த ஆளுங்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இடைத்தேர்தலில் பெரும்பாலான
இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மேலும் வலுப்பெற வேண்டும் என திமுக திட்டமிட்டுள்ளது.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும்
என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சிகள் வெற்றி
பெற்றுள்ளன. கடந்த 25 ஆண்டுகால தரவுகளை ஆராய்ந்தால்
மேற்குறிப்பிடப்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரத்தைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே அதிக ஆதிக்கம்
செலுத்தியுள்ளது. இந்த 5 தொகுதிகளும் பெரிய
அளவில் திமுகவிற்கு சாதகமாக இருந்தது இல்லை.
தமிழக
சட்டசபைத் தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இருந்த மதிமுக நான்கு தொகுதிகளில் போடியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. நான்கு தொகுதிகளிலும்
மதிமுகவின் சின்னத்தில் போட்டியிட வைகோ விரும்பினார். ஸ்டாலின் அதற்குச் சம்மதிக்கவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றனர். மதிமுக சின்னத்தில்
போட்டியிடு வெற்றி பெற்றிருந்தால் அவர்களில் ஒருவர் இன்று அமைச்சராக இருந்திருப்பார். வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் மனம் கலங்கியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம் என துரை
வைகோ வெளிப்படையாகச் சொல்லியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதல்வர்
விஜய் நேரில் சென்ற போது மதிமுக எம்.பி துரை
வைகோ திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்யை வரவேற்றிருந்தார். அந்த எம்பி பதவியையும் துரை வைகோவுக்குக் கொடுத்தவர் ஸ்டாலின் .
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரை வைகோ,
“நாங்கள் இனி தனி இயக்கம். நாங்கள் துரதிர்ஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியனில்
போட்டியிட்டுவிட்டோம். உதய சூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் தவெக-விற்கு ஆதரவு
தரமுடியவில்லை.
மதிமுக
பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருக்கிறோம். திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து
27 ஆம் திகதி நடக்கும் பொதுக்குழுவில் முடிவு எடுப்போம்”
என்று தெரிவித்திருக்கிறார். திமுக கூட்டனியில் இருந்து மதிமுக வெளியேறும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற இருவரும் இராஜினாமாச் செய்வார்கள். அப்போது ஏழு தொகுதிகள்
காலியாகிவிடும். அவர்கள் மதிமுகவின் பம்பரம்
சின்ந்த்தில் போட்டியிடுவார்களா அல்லது தவெகவின் விசில் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்ற கேள்விக்கான விடை தெரிய
சில நாட்களாகும். மதிமுகவின் சின்னத்தில் அவர்கள்
போட்டியிட்டால் மீண்டும் பல்டி அடிக்க
மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
மேகதாது
அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியான நிலைப்பாட்டை
எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அணை கட்டும் திட்டத்தில்
இருந்து பின்வாங்காது என்று கர்நாடக முதலமைச்சர்
டி.கே.சிவகுமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
மேகதாது
அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டிய முழு அதிகாரமும் மத்திய அரசிடம் தான் உள்ளது தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை
என டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்தால் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆட்சி அமைக்க
கேட்கமுன்னரே ராகுல் காந்தி ஓடிப்போய்
ஆதரவு தெரிவித்தார். 58 வருடங்களின் பின்னர் தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் வீற்றிருக்கிறார்கள்
என காங்கிரஸ் பெருமைப்படுகிறது. தமிழக விவசாயிகலின் வயிற்றில் அடிக்கும் மேகதாது அணையைத்
தடுக்க தமிழக காங்கிரஸ் அமைச்சர்களால் மட்டுமல்லாது ராகுல் காந்தியாலும் முடியாது.
கர்நாடகத்தில்
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மேகதாது
அணிப்பிரசனை அங்கிம் அரசியலாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகத்துகும் இடையே சுமார்
40 வருடங்களாக இழுபறிப்பட்டு வதுகிறது மேகதாது அனை விவகாரம். தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசன ஆதாரமாக விளங்கும் காவிரி நீரின் வரத்தை இந்த அணை முற்றிலும் தடுத்துவிடும் என்பதே தமிழ்நாட்டின் பிரதான கவலையாகும். ஆனால், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தங்களின் சொந்த அரசியல் லாபங்களுக்காக மட்டுமே இந்த மேகதாது அணை விவகாரத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், மாறாகக் கர்நாடக அரசு தங்களின் மாநில மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து அடுத்தகட்ட வேலைகளைச் சத்தமில்லாமல் செய்து வருவதாகவும் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது
அணை கட்டுவதற்கான விரிவான இறுதித் திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு ஏற்கனவே தயார்
செய்து, அதனை மத்திய அரசின் ஒப்புதலுக்காக முறைப்படி அனுப்பி வைத்துள்ளது. இது ஒருபுறமிருக்க,
கர்நாடக அரசு தயாரித்த இந்த மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை தற்போது உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டதாக டி.கே.சிவகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் அணை கட்டுவதற்கான தங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மேலும் வலுவடைந்துள்ளதாகக்
கர்நாடகத் அரசு நம்புகிறது.
இத்தகைய
சூழலில், கர்நாடக அரசின் இந்தத் தொடர்ச்சியான அதிரடி நகர்வுகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கவும், தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கவும் தமிழ்நாடு
அரசு உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அடுத்து என்ன மாதிரியான சட்டப் போராட்டங்களை
முன்னெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாரதீய
ஜனதாக் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள்
இணைந்து ஆரம்பித்த இந்திய கூட்டணியின் கூட்டம் ஜூன் 8-ஆம் திகதி டெல்லியில்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்
கூட்டணி அமைவதற்கு ஸ்டாலினின் பங்கு முக்கியமானது. இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், பங்கேற்கப்போவதில்லை என திராவிட முன்னேற்றக் கழகம் ப அறிவித்துள்ளது.
சட்டமன்றப்
பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த
துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற
வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என்று திமுக
தலைமை தெரிவித்துள்ளது.
திராவிட
முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத்
தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு
- ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட – ஜனநாயகத்திற்கும்,
மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே,
முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக
ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள்
மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும்
வந்திருக்கிறது.
இந்தியா
கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம்
இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக்
குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின்
தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
காங்கிரஸுக்கு
திமுக ஆதரவு தெரிவிப்பதால் அரசியல் ரீதியான நெருக்கடிகளை பாரதீய ஜனதா விடுத்தது. அதற்கெல்லாம்
அஞ்சது கடைசி வரை காங்கிரஸுக்கு தோள் கொடுத்தது திமுக. திமுக தோல்வியுற்று துவண்டிருக்கும்
நேரம் வெற்றி பெற்ற தவெகவை காங்கிரஸ் பற்றிப்
பிடித்துள்ளது.
இக்கூட்டத்தில்
பங்கேற்காத அதேநேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும்
நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல்
கொடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
திமுகவின்
இந்த நிலைப்பாடு காரணமாக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியில் நீடிக்கும் வரை, திமுகவும் இதன் கூட்டங்களில் பங்கேற்காது
என்றே கருதப்படுகிறது. எனவே இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது திமுக
விலகுமா என்ற கேள்விகள் வலுத்துள்ளன.
திமுகவின்
முடிவால் டெல்லியில் உள்ள எதிர்க் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. காங்கிரஸை வெறுக்கும்
மம்தா பானர்ஜி, அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர்
அதிருப்தியடைந்துள்ளனர். திமுகவின் இடத்தைப்
பிடிக்க தவெக முயற்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சி அதற்கு உறுதுணையாக இருக்கும். ஆனால்,
ஸ்டாலினுக்கு ஆழுமையும், போராட்ட குணமும் விஜய்யிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திமுக வெளியேறுவதால் ஏற்படும் வெற்றிடத்தை பிடிக்கவும்
தீவிரம் காட்டி வருகிறதாம். இதன் மூலம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற
தங்களது இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறதாம். அதேநேரம், நிர்வாக ரீதியாகவும்
வெளிப்படையாக பாஜகவை எதிர்ப்பதாக முதலமைச்சர் விஜய் இதுவரை எங்கும் அறிவிக்கவில்லை.
ஏற்கனவே, காங்கிரஸுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்ததால் பாஜக தலைமை விஜய் மீது அதிருப்தியில்
உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா கூட்டணியில் இணைந்தால் அது மேலும் அதிகரிக்கும்
எனவும் கூறப்படுகிறது.
வரும்
2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என விஜய்
விரும்புகிறராம். இதற்காக தென்மாநிலங்களில் தனக்கு செல்வாக்கு உள்ள பிராந்தியங்களில்
தவெகவை விரிவுபடுத்துவதோடு, இந்தியா கூட்டணியில்
அங்கம் வகிக்க வேண்டியது அவசியம் எனவும் கருதுகிறாராம்.
ஆனால், அந்த கூட்டணியில் திமுக இருக்கும் வரை தவெகவிகு
வாய்ப்பில்லை என்ற சூழல் நிலவியது. அதேநேரம், தேசிய அளவிலான கூட்டணியில் திமுக தொடர்கிறது
என அண்மையில் காங்கிரஸ் தலைவர் சொன்னதையும் விரும்பவில்லையாம்.
திமுக விலகியதை அடுத்து இந்தியா கூட்டணியில் அங்கம்
வகிப்பதற்கான காய்களை வேகமாக நகர்த்தி வருவதாகவும், இது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு
வெளியாகும் என்றும் தவெக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமணி
7/6/25


No comments:
Post a Comment