Thursday, July 30, 2026

டில்லியில் நசுக்கப்படும் ஜனநாயகம் தமிழகத்தில் கொண்டாடப்படும் ஜனநாயகன்


 

டில்லியில்  நசுக்கப்படும் ஜனநாயகம்

தமிழகத்தில் கொண்டாடப்படும் ஜனநாயகன்

 

   விஜய்க்கு உண்மையான  எதிரிகள் வெளியே இல்லை. கூட இருக்கும் கறுப்பு ஆடுகள் செய்யும் அட்டகாசங்களால் கடும் விமர்சனம்.

00000000000000000000000000

நீட் தேர்வுக்கு எதிராகக் கொந்தளித்த  பாடகர் தெருக்குரல் அறிவு கைதாகி விடுதலை. ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கண்டனம்.

0000000000000000000000000000000

நாடாளுமன்றத்தில் திமுக கொடுத்தநோட்டீஸால் கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸுக்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார் அரசியல் திறனாய்வாளர் முனைவர் பொன்ராஜ் .

000000000000000000000000

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் தொடர் போராட்டங்கள் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சிக்கு பெரும் நெருக்க்கடைய ஏற்படுத்தி உள்ளன.இந்திய எதிர்க் கட்சிகத் தலைவர்களின் வரட்டுக் கெளவரங்களால்  தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிரதமராகிய மோடி சரித்திரம் படைத்துள்ளார்.மோடிக்கு முடிவுரை எழுத யாரும் வரமாட்டார்களா என ஏங்கியவர்களுக்கு கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியில் அதிரடிப் பிரவேசம் உற்சாகத்தை அளித்துள்ளது.நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனல் பறந்த போராட்டம் நடைபெற்றது.  22 மாணவர்க்ள் தற்கொலை செய்தனர். அப்போது மெளனமாக இருந்த டில்லி இப்போது நீட் தேர்வுக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. நீட் தேர்வின் காரணமாக விரக்தியடைந்த 18  மாணவர்கள் டில்லியில் தற்கொலை செய்ததனா. கரப்ப்பான் பூச்சி ஜனதா தளம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

 நீட் தேர்வு முறைகேடுகள் உள்பட, கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகளை கண்டித்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூலை 20ஆம்திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது அவர்களை கலைக்க  பொலிஸார்  தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசியதால் பதற்றமான சூழல் நிலவியது. சுமார் 150  பேர் காயமடைந்தனர். 70  பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர், கல்வியாளர் ,சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். 20 நாட்களுக்கும் மேல் உண்ணா விரதப் போராட்டம்  போராட்டம் தொடர்ந்த நிலையில், கடந்த ஜூலை 19ஆம் திகதி  சோனம் வாங்சுக்  பொலிஸாரால்  மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டார். இது,  பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் திகதி  தொடங்கியது.  கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினரும்,  போராட்டக்காரர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பேரனியில் கலந்து கொண்டனர். நிலமை விபரீதமாவதை உணர்ந்த  பொலிஸார், கண்ணீர்ப் புகைக் குண்டு, தடியடி என்பனவற்றைப் பிரயோகித்துக் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டம் வன்முறையாக மாற்ற மடைந்தது.

 போராட்டத்தால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், இருதரப்பினரும் காயமடைந்தனர்.  இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, இதில் 20 அரசு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் டெல்லி பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

  மூன்று முக்கிய கோரிக்கைகளை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைத்துள்ளது. 

மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகளால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா  1 கோடி  ரூபா நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அந்த கோரிக்கைகள் ஆகும். 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தரப்பிலிருந்து பிரிதினிதிகள் இருவர் மத்திய சுகாதாரத்துறை ஜே.பி.நட்டாவை சந்தித்து கோரிக்கை கடிதத்தை வழங்கினர். அப்போது போராட்டத்தை கைவிடுமாறு நட்டா பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். இதனால், தர்மேந்திர பிரதான் பதவி விலகலாம் என்று பேச்சுவார்த்தை அடிபடுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தவர் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுங்,  26  ஆம் நாள் உண்ணாவிரதத்தை நள்ளிரவில்  முடித்து கொண்டார்.

  நள்ளிரவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா ,மத்திய அணுசக்தி துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் சேனாம் வாங்சுக்கை சந்தித்து பேசினர். அப்போது சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள ஒப்புக்கொண்டார். ஜேபி நட்டா குவளையில் கொடுத்த திரவஆகாரத்தை சோனம் வாங்சுக் குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இந்த சமயத்தில் மத்திய அரசு சார்பில் சில முக்கிய வாக்குறுதிகள் சோனம் வாங்சுக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது.  ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் வினாத்தாள் கசிவு பற்றியும், கல்வி சீர்த்திருத்தங்கள் பற்றியும் நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்தப்படும். நீட் வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்தவர்களின் குடும்பங்களின் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து தான் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  திராவிட முன்னேற்றக் கழகம்,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியன மட்டுமே  ம் மட்டுமே தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.தேர்தலுக்கு முன்னர், விஜய்யை விமர்சித்த காங்கிரஸ்,விசிக, மதிமுக,முஸ்லீம் லீக், இடஹு சாரிக் கட்சிகள் ஆகிய அனைத்தும் முட்டுக் கொடுக்கின்றன.  பாரதீய ஜனதா விரும்பியவற்றை தமிழக அரசு நிறைவேற்றுகிறது. ஆகையால் பிஜேபி  மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தவெகவின் உட்கட்டமைப்பும், சில நிர்வாகிகளின் செயல்பாடுகளும், அமைச்சர்களின் அத்துமீறல்களும் விஜய்யின் அரசுக்கு  கெட்ட பெயரைக் கொடுக்கின்றன.

  நிர்வாக இடர்பாடுகள்,  அழுத்தங்கள் ,கொள்கை ரீதியான மோதல்கள், எதிர்க்கட்சிகளின் கூர்மையான விமர்சனங்கள் என்பன  ஒரு புதிய கட்சி, ஆட்சி சந்திக்கும் வெளிப்புற எதிர்ப்புகள் அனைத்தும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் விஜய்க்கு வெளியில் இருந்து வருவதை விட உள்ளே இருந்துதான் அதிகநெருக்கடி ஏற்படுகிறது.

 கட்சி தொடங்கி, குறுகிய காலத்தில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்த விஜய், உள்கட்சி நிர்வாகத்தில் சில முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். கட்சிப் பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கும் சில நிர்வாகிகளின் செயல்பாடு, அவர்கள் செயல்படும் விதம் ,அவர்களின் துறை சார்ந்த அறிவு போன்றவை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருப்பது தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தடுமாற்றம், களப்பணியில் காட்டும் அலட்சியம், , அரசியல் களத்தில் எவ்வாறு பேச வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் கூட சில நிர்வாகிகளிடம் இல்லை  என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திரையில் தன்னை பார்த்து ரசித்த ரசிகர்கள், அரசியலில் களமிறங்கிய பின் ஒரு நிர்வாகியாகச் செயல்பட வேண்டும்.. என்ற விஜய்யின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ய பலரால் முடியாமல் போயுள்ளது.

அரசியல் கட்சியை வழிநடத்தும்போது, தொண்டர்களையும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. அதிலும் ஆட்சிக்கு வந்த பின் நிர்வாகிகள் செய்யும் தவறுகள் உற்று கவனிக்கப்படும். அப்படி விஜய் காதுக்கு சில நிர்வாகிகளின் தவறுகள் சென்றுள்ளது. இதை எல்லாம் கேட்டு கடுமையாக கொதித்து போய் இருக்கிறாராம் விஜய். முக்கியமாக சில கறுப்பு ஆடுகள் விஜய்யை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

  சில தலைவர்கள் ,ட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், கட்சியின் பிம்பத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைவதைத் தடுக்க, அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதே விஜய்க்கு பெரும் போராட்டமாக மாறியுள்ளதாம். ஒவ்வொரு சிறு தவறையும் எதிர்க்கட்சிகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உள்கட்சிப் பூசல்களையும், நிர்வாகிகளின் அறியாமையையும் சரிசெய்வதற்கே விஜய்யின் பெரும்பாலான நேரம் செலவாகிறதாம்.

 அரசியல் மேடைகளில் எதிர்க்கட்சியான திமுகவையோ அல்லது பிற மாற்றுக் கட்சிகளையோ கொள்கை ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் எதிர்கொள்வது விஜய்க்கு ஒரு பெரிய விஷயமல்ல. ஏனெனில், அது ஒரு நேரடிப் போர். அதற்குத் தேவையான திட்டங்களையும் , பிரசார அமைப்புகளையும் எளிதாக உருவாக்கிவிட முடியும். ஆனால், வீட்டிற்கு உள்ளே இருக்கும் பிரச்னையை சரிசெய்வது என்பது மிகவும் சிக்கலானது. தவெகவின் உண்மையான வெற்றி அல்லது பின்னடைவு என்பது, விஜய் தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளை எப்படிப் வழிநடத்துகிறார், அவர்களுக்கு அரசியல் தெளிவையும் பணி ஒழுக்கத்தையும் எப்படி கற்றுக்கொடுக்கிறார் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதேவேளை ரசிகர்கள்      இன்னமும் தொண்டர்களாக மாறவில்லை.

விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படத்தைப்பார்ப்தற்கு அமைச்சர்கள் படையெடுத்துச் சென்றமையும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

  நாடாளுமன்றத்தில் மேகதாது அணை குறித்து முதன்முதலில் விவாதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் கொடுத்திருப்பது மிகச்சரியான நகர்வு. இது கர்நாடகாவில் ஆட்சி நடத்தும் காங்கிரஸுக்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் திறனாய்வாளர் முனைவர் பொன்ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 நடைமுறையில் கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய  வேண்டிய காவிரி நீர்  கொடுக்கப்படவில்லை. 2023-ல் இதே சூழல் வந்தபோது, திமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, மத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தண்ணீரைத் திறக்க வைத்தது. காவிரி நீர் உரிமை ஆனால் இப்போது கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடமோ அல்லது   கூட்டணிச் சகோதரர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிடமோ பேசினீர்களா? அவர்களிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று கர்நாடக அமைச்சர் சொல்கிறார். காவிரி நீர் உரிமையைப் பெற எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், சோசியல் மீடியாவில் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் தமிழக அரசு கைது செய்கிறது என்ற பரவலான குற்றச் சாட்டு உள்ளது.

  இந்த அடக்குமுறையை விட்டுவிட்டு, மாநில சுயாட்சி மற்றும் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்க அரசு ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

  நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்கள் மீது பொலிஸார்  தடியடி நடத்தியதால் நூற்றுக் கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர்.  சென்னையிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லிப் போராட்டத்துக்கு ஆதர்வாக  சென்னை தலைமை செயலகம் முன்பாக பிரபல   பாடகர் தெருக்குரல் அறிவு கோஷமிட்டபடியே உள்ளே நுழைய முயன்றார். தெருக்குரல் அறிவையும் மேலும் நால்வரையும்   பொலிஸார்  தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அறிவு கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, சிறிது நேரத்தில் தலைமைச் செயலகத்திற்கு அறிவு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் அரை மணி நேரம் கழித்து, வெளியே வந்த அறிவை கார் வரை வந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழியனுப்பி வைத்தார். தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை அறிவு சந்தித்து பேசியதாகவும் தகவல் பரவியது.இதனை அறிவு மறுத்துள்ளார்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஜனநாயகன் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

 

ரமணி

26/7/26

 

 

No comments: