Tuesday, January 26, 2016

பாலித்தீவு இந்துத் தொன்மங்களைத் நோக்கி

 மடத்துவாசல் பிள்ளையார் ,உலாத்தல்,ஈழத்து முற்றம் ஆகிய வலைப்பூக்கள் மூலம் உலகில் பல்லாயிரக் கணக்கான வாசகர்களை தன்னகத்தே கொண்டுள்ள கானா பிரபாவின் பாலித்தீவு இந்துத் தொன்மங்களை நோக்கி எனும்  புத்தகம் பாலித்தீவுபற்றிய புதிய பல விஷயங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. அவுஸ்திரேலிய வானொலியில் கடமையாற்றும் கானா பிரபாவின் விரல் நுனியில்சினிமாத்தகவல்கள்உள்ளன.நடிகர்கள்,நடிகைகள்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள்,இயக்குநர்கள்,இசையமைப்பாளர்கள்  என  சினிமாத்துறையில் உள்ள சகலரைப்பற்றியும் ஆவணம்போல் தரவுகளுடன் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் பாலித்தீவு பயணம் பற்றிய இந்த நூலும் ஒரு ஆவணம் போன்ற அரிய பொக்கிஷமாக உள்ளது.
பாலித்தீவு பற்றி நாம் ஊடகங்களின் மூலம் அறிந்தவற்றுக்கும் கானாபிரபா  சொல்வதற்குமிடையில் நிறைய  வேறுபாடு உள்ளது.பாலித்தீவு என்றதும் போதைவஸ்து,உல்லாசம்,கடற்கரை,குண்டுவெடிப்பு என்பனதான் எம்முன் நிழலாடும்.இந்தியா இந்துசமயம் என்பனவற்றுக்கும் பாலித்தீவுக்கும் இடையி உள்ள தொடர்பை கானாபிரபாவின் பாலித்தீவு பயணக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இது  பயணம் சார்ந்த புத்தகம் அல்ல.பாலித்தீவின் வரலாறு,சமயம்,கலை,கலாச்சாரம்,பண்பாடு,வாழ்வியல்,பொருளாதாரம் ஆகியவற்றை ஆய்வு நூல்களைப் படித்து அறிந்தபின் வாசகர்களுக்குக் கொடுத்துள்ளார். கி.பி 914 ஆம் நுற்றாண்டு முதல் இன்றுவரையான பாலித்தீவின் சரித்திரத்தை விலாவாரியாகத் தந்துள்ளார்.பாலித்தீவை ஆண்ட கேசரி வர்மன்,தபேனேந்திர வர்ம தேவன்,சிங்கவர்மதேவன்,உதயணன் போன்ற மன்னர்களின் பெயர்கள் இந்தியத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.  உயர் வகுப்பில் இந்து நாரிகத்தைப் படித்போதே  இந்துக் கோயில்களைப் பற்றிய ஆர்வம் அதிகமானது என குறிப்பிடுகிறார்.
 சிட்னியில் இருந்து பாலித்தீவுக்கு செல்பவர்கள் எப்படிச்செல்ல வேண்டும்.எவ்வளவுபனம் செலவளிக்க வேண்டும். விமான நிலையங்களில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் அங்குள்ள ஹோட்ட்டல்கள், பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிய குறிப்புகளுடன் பயண வழிகாட்டியாகவும் இந்த நூல் உள்ளது. கஜா,நாகா,புத்ரி,கப்பால்,சிங்கராஜா போன்ற வடமொழி ச் சொற்களும் தமிழ்ச்   சொற்களும் பாலித்தீவில் உள்ளன. இராமாயண,மகாபாரதக்கதைகள் அங்கே நாட்டியமாக நடத்தப்படுகின்றன.இராமன்,சீதை,ஆஞ்சநேயர் போன்ற பெயர்கள் வாழக்கத்தில் உள்ளதாக இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.
பிள்ளையார்,சிவன்,உமாதேவி,காளி,இலட்சுமி,சரஸ்வதி,பிரமா,விஷ்ணு  ஆகியோருக்கு பிரமாண்டமான் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோயில்களில் மிகப்பெரிய சிலைகளும் உள்ளன. கடோற்கஜன்,பீமன், கருடன் ஆகிய சிலைகள்  பாலித்தீவின் அடையாளத்துக்குச் சான்றாகும
பாலித்தீவு இந்தோனேசியாவின் ஒரு மாநிலமாகும். இங்கு வாழும் மக்களில் 84.5வீதமானோர் 
இந்துக்கள்.மீதிப்பேரில் 12 வீதமானோர் இஸ்லாமியர்களாகவும்,மற்றும் சிறுபான்மை பெளத்தவ்ர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இன்பத்தை இப்புத்தகத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
பாலித்தீவு எவ்வளவுதூரம் உல்லாசப்பயண‌த்துக்கு  பெருவிருப்ப ஸ்தலமாக இருந்தாலும் அதன் பின்னால் மோசமான இன்னொரு பக்கமும் இருக்கின்றது.நீங்கள் எந்த இடத்திலிருந்து பயணிக்க ஆரம்பித்தீர்களோ அங்கே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கு அளவான அமெரிக்க டொலர்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன்ற எச்சரிக்கை கலந்த சிறுகுறிப்புகளை ஆங்காங்கே தந்துள்ளார். 106 பக்கங்களில் உள்ள இந்த நூல் மிக நேர்த்தியாக உயர்த்ர கடதாசியில் அச்சிடப்பட்டுள்ளது.  23 சிறிய படங்களும் ஒன்பது பக்கங்களில் முழுப்படங்களும் உள்ளன. காநா பிரபா எழுத்தாளர்,வானொலியில் வேலை செய்பவர் மட்டுமல்ல. சிறந்த புகைப்படப் பிடிப்பாளர் என்பதையும் அவருடைய புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.
பயணம்  என்பது வெறும் இடங்களைப்பார்த்து சுகம் கொண்டாடுவது அல்ல.அது பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும் அவர் தம் தனித்துவமான பண்புகளையும் எடுத்துச்சொல்லும் அனுபவப்பாடமாக அமைந்திருக்கிறது.அந்தவகையில் என் பாலித்தீவுப் பயணம்  என்பது  இன்னொரு சுகானுபவமாக அமைந்த திருப்தியோடு  2013 ஆண்டுக்கு விடை கொடுத்தேன் என கானா பிரபா கூறுகிறார். வாசகர்களுக்கு இப் புத்தகம் ஒரு சுகானுபவமாக உள்ளது.
நூல் ;    பாலித்தீவு  இந்துத் தொன்மங்களைத் தேடி.
ஆசிரியர் ; கானா பிரபா,
வெளியீடு  மடத்துவாசல் பிள்ளையாரடி
சூரன்  

தினக்குரல்
24/01/16

Sunday, January 24, 2016

தமிழகத்தில் கால் பதிக்கமுயலும் தேசியக்கட்சிகள்

இந்திய மத்திய அரசை தீர்மானிக்கும் காங்கிரஸ் பாரதீய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் கால் பாதிக்கமுடியாது திண்டாடுகின்றன. 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக‌த்திடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தயவில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவின் நிலையும் இதுதான்.   கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரின் துணையுடன் தான் தமிழகத்தில் தாமரை பூத்தது.  இந்தியாவை மாறிமாறி ஆட்சிசெய்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளையும்  நெருங்கமுடியாதுள்ளது. இரட்டை  இலைக்குள் தாமரை சங்கமமாகும் என்ற சந்தேகம் தமிழகத்தில்நிலவுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாரதீய ஜனதா சேரும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிலவுகிறது.

தமிழகம்,புதுச்சேரி,அஸாம்,கேரளம்,மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத்தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற உள்ளன. காங்கிரஸும்  பாரதீய ஜனதாவும் இந்த ஐந்து சட்டசபைகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. தமிழகத்தில் பலமான வாக்கு வங்கி உள்ள கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றி பெறலாம் என்பதை தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

2ஜி  ஊழல்  விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளதால்  காங்கிரஸுடன் தமிழகக் கட்சிகள் சேரத் தயங்குகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளவல் ஸ்டாலினும் காங்கிரஸின் இளவல் ராகுலும்  எதிரும் புதிருமாக நிற்பதனால் இணைப்பு சாத்தியமாக இல்லை. காங்கிரஸுடன் சேர ஸ்டாலின் விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர ராகுல் விருப்பப்படவில்லை. கருணாநிதி,கனிமொழி ஆகியோர் காங்கிரஸுடன் சேர விரும்புகிறார்கள். சோனியா பா.சிதம்பரம் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதை வரவேற்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை சட்ட சபைத் தேர்தலிலும் தொடர இரண்டு கட்சித் தலைவர்களும் விரும்பவில்லை.

தமிழக கங்க்ராஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே .எஸ்.இளங்கோவன்,முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு உட்பட 13தலைவர்கள் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இல்லையென ராகுல் அறிவித்துள்ளார். இதனால் இளங்கோவன் ஆறுதலடைந்துள்ளர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலைமையில் மற்றம் ஏற்படுவதை ராகுல் விரும்பவில்லை. தமிழக சட்ட சபைத் தேர்தலைசந்திக்க இளங்கோவனின் பங்களிப்பு முக்கியம் என ராகுல் நினைக்கிறார்.

காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு கட்சியும் திரும்பியும் பார்க்கவில்லை. பேரம் பேசி அதிக தொகுதிகளைப் பெற்ற   காங்கிரஸ் கட்சி கூட்டணிக்காக ஏங்கிகுறது   கடைசி நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

விஜயகாந்தின் வரவுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. பாரதீய ஜனதாவுடன் சேர்ந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் விஜயகாந்த் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க பாரதீய ஜனதா காய் நகர்த்துகிறது. மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், நிலக்கரித்துறை இணை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக பாரதீய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார்.

தமிழக மக்களின்    உணர்வுப் போராட்டமான ஜல்லிக்கட்டை அமித் ஷா கையில் எடுத்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்   அடித்து  கூறுகிறார். ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி வ்ழநக்கியது. உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. காங்கிரஸ் கூட்டணி அட்சியில் இருந்தபோது    2011 ஆம் ஆண்டு  அப்போதைய   சுற்றுச்சுழல் அமைச்சர்  ஜெயராம் ரமேஷ்  சிங்கம், புலி என்பனவற்றோடு காளையையும் காட்சிப்படுத்தல் பட்டியலில் சேர்த்ததனால்  ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இன்றைய சுற்றுச்சுழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேக்கர்  விழியிட்ட அறிக்கையின் பிரகாரம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சுழல் அமைச்சின் அறிக்கையை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் பீட்டா அமைப்பு என்பன உச்ச   நீதி மன்றத்தை நாடியதால் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இதனால் தமிழக மக்கள் அனைவரும் மோடியின் அரசாங்கத்தின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.  தமிழக அரசியல் கட்சிகளும்  தமது எதிர்ப்பை வெளியிட்டன.  ஜல்லிக்கட்டை நடத்ஹ்டுவதற்கு 2014 ஆம் ஆண்டு  உச்ச நீதி மன்றம் தடை விதித்த பின்னரும் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவந்து ஜல்லிக்கட்டை நடத்தாததை   தமிழகமே எதிர்த்து கேள்வி கேட்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜல்லிக்கட்டுடன் தொடர்புள்ள விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேக்கர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என பாரதீய ஜனதா கருதுகிறது.
தமிழ் மக்களின் உணர்வுடன்  கலந்த ஜல்லிக்கட்டை  தடையின்றி நடத்தினால் தமிழக மக்களின் மனதி இடம் பிடிக்கலாம்என்று  பாரதீய ஜனதா கருதுகிறது. பாரதீய ஜனதாவின் ஜல்லிக்கட்டு அரசியல் வாக்கு வங்கை அதிகரிக்குமா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்

ரமணி 
தமிழ்த்தந்தி
24/01/16

Saturday, January 23, 2016

பாதுகாப்பான தொகுதியை தேடும் தலைவர்கள்

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.தேர்தல் திணைக்களம் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவது போன்ற வேலைகளை துரிதகதியில் நடைபெறுகின்றன.   தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை பிரதான கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.  மெகா கூட்டணிக்கனவில் இருக்கும் கட்சிகள் இன்னமும் கூட்டணி சேரவில்லை. தலைவர்களின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் காத்திருக்கின்றனர். உறுதியான முடிவை எடுக்க தலைவர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.
விஜயகாந்தை  கூட்டணியில் சேர்த்தால் இலகுவாக வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் அவருடன் கூட்டணி சேர பாரதீய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், மக்கள் நலகூட்டணி என்பன காத்திருந்தன. விஜயகாந்த்தின் பிடிகொடாத அரசியலினால் வெறுப்படைந்த கட்சிகள் அவரை கைவிடத்தயாராகிவிட்டன. தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதாவுடன் பேரம் பேசினார். துணைமுதல்வர் பதவியுடன் பலம் வாய்ந்த அமைச்சர்கள்   அதிக தொகுதிகள் வேண்டும்  என திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கோரிக்கை விடுத்தர். மக்கள் நலக் கூட்டணி  வெற்றிபெறாது எனத்தெரிந்துகொண்டு மற்றைய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகஅதனுடன்  பேச்சு வார்த்தை நடத்தினார்.
பாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்தை கைகழுவி விட்டது. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கலாம் என . வைகோ கூறினார். விஜயகாந்த் வரமாட்டார் எனத்தெரிந்ததும் நல்லகண்ணுவா வைகோவா முதல்வர் வேட்பாளர் என்ற கருத்து உருவானது. தேர்தலுக்கு பின்னரே முதல்வரை அறிவிக்கலாம் என வைகோ கூறியதால் அந்தப் பிரச்சினை  அடங்க்கிவிட்டது
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால் வெற்றிபெறலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. எதற்கும்கிறங்காத விஜயகாந்த் வழமைபோல கூட்டணி பற்றி வாய்திறக்கவில்லை. அவரின் மனைவி பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வசைபாடுவதிலே  கண்ணும் கருத்துமாக இருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரின் அரசியல் சாணக்கியம் அனுபவம் ஆகியவற்றை கருத்தில் எடுக்காது அவர்களை தரக்குறைவாக விமர்சித்து கைதட்டல் வாங்குவதில் குறியாக உள்ளார். விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரின் அரசியல் பாதையை திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்களும் தொண்டர்களும் விரும்பவில்லை.  
தமிழக சட்ட சபைக்கான தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ளது. கூட்டணி  பற்றிய அறிவிப்பை தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்த ஜெயலலிதா இறங்கிவந்து  கூட்டணிக் கதவைத் திறந்து வைத்துள்ளார்.  பாரதீய ஜனதாவைத் தவிர பெரிய கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் சேரத்தயராக இல்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பதனால் அக்கட்சியை இணைப்பதற்கு ஜெயலலிதா தயங்குகிறார். இப்போதைக்கு திராவிட முன்னேற்றக் கழகம்,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக்கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியனவே களத்தில் உள்ளன. நானும் உள்ளேன்   அய்யா என ராமதாஸ் சத்தமாகக் கூறுகிறார். யாரும் கணக்கில் எடுப்பதாகத்தெரியவில்லை.
 விஜயகாந்த் சேருவதற்கு தகுதியான ஒரே ஒரு இடமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் கதவைச்சாத்தத்  தயாராகி விட்டது.விஜயகாந்தை வருந்தி அழைத்த கருணாநிதி அவர் வந்தால் வரட்டும் என தெரிவித்து விட்டார். கருணாநிதி அழைத்தபோது சென்றிருந்தால் கணிசமான தொகுதிகளைப் பெற்றிருக்கலாம். விஜயகாந்த் தானாகப் போனால் கொடுப்பதை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்ததனால் விஜயகாந்தின்  வாக்கு வங்கி அதிகரித்தது.  அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அவரது வாக்கு வங்கிபடுத்துவிட்டது. இந்த உண்மையை உணராது தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக விஜயகாந்த் நம்புகிறார்.

விஜயகாந்தை   தூக்கிப்பிடிப்பதனால் அவர் அளவுக்கு மீறி பந்தாகாட்டுகிறார் என்ற எண்ணம்  எழுந்ததனால் அவரைக் கைவிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிரான வாக்குகள் விஜயகாந்தை அரசியலில் மின்னச்செய்தன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக பாரதீய ஜனதா,மக்கள் நல கூட்டணி, நம் தமிழர்,பட்டாளி மக்கள் கட்சி ஆகியன இருப்பதனால் விஜயகாந்துக்குச்செல்லும் வாக்குகள் பிரிந்துவிடும்  நிலை உள்ளது. விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் விட்டார்ல் அவராக வருவர் அல்லது கவிழ்ந்து விடுவர் என திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.  இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத்தேர்தலில் தொடர்ந்து ஒரே தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடவில்லை. முதலமைச்சர் தொகுதி என்ற பந்தாவுடன் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்   ஜெயலலிதா  அதன் பின்னர் தொகுதிப்பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு வேறு தொகுதியில் சங்கமமாகி விடுவர் ஜெயலலிதா.இது வரைகாலமும் சென்னைக்கு வெளியே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்விடுதளையான பின்னர் சென்னை ஆர்.கே  நகரில் போட்டியிட்டு வரலாறு காணாத  வெற்றி பெற்றார்.
சென்னையை   சீரழித்த மழை  வெள்ளம் ஜெயலலிதாவை யோசிக்க வைத்துள்ளது. சென்னைக்கு வெளியே போட்டியிடுவதுதன் புத்திசாலித்தனம் என அவர் நினைக்கிறார். தென் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவர் எனத்தெரிகிறது. சென்னை மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளம் முதலமைச்சரையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையிலே முகாமிட்டு வெற்றிபெற்ற கருணாநிதி  2011 ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தனது ஊரான திருவரூரில் போட்டியிட்டார். சொந்த ஊர் கைவிடாது என்பதனால் மீண்டும் திருவாரூரில்  போட்டியிடுவர் என உடன் பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த தேர்தலின் போது இதுதான் கடைசித்தேர்தல்  என வாக்குக்கேட்டர். இம்முறை என்ன சொல்லப்போகிரரோ தெரியவில்லை.ஸ்டாலின் கடந்த ஐந்து மாதங்களாக நமக்கு நாமே என்ற கோஷத்துடன் வளம் வருகிறார். தமிழகம் முழுவதும்  செல்வதே இவரின் திட்டம். கடந்த தேர்தலில் கொளத்தூரில்  போட்டியிட்டார். தலைமை அனுமதித்தால் மீண்டும் கொளத்தூரில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
 2006 ஆம் ஆண்டு விருத்தாசலத்திலும்  2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்ட விஜயகாந்த் இம்முறை மீண்டும் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுவர் என கருதப்படுகிறது. ரிஷிவந்தியத்தில் அவரது ரசிகர்கள் அதிகமாக இருப்பதனால் வெற்றிபெறலாம் என நினைக்கிறார்.
 வைகோவின் செல்வாக்கு நலிவடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள வைகோ தேர்தலில் போட்டியிடுவர். வெற்றி வாய்ப்புள்ள  தொகுதியை அவரது விசுவாசிகள் தேடுகின்றனர். வைகோவை விழுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் களத்த்தில்   இறங்குவார்கள் அதனை அவர் எப்படி சமாளிப்பார் எனத்தெரியவில்லை.
 பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி  நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. விஷப்ரீரிட்சையில்  இறங்குவதற்கு அவர் தயாராகவில்லை.  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர்    ஜி,ராமகிருஷ்ணன்,  இந்திய   கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர்   இராமுத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சட்டசபைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.
பலமான கூட்டணி இல்லாமையால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்கிகின்றனர். திராவிட முன்னேற்றக் கழக‌தத்தித் தவிர  வேறு கட்சிகள் எதனுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டுச்சேர  முடியாத நிலை உள்ளது. கடைசி நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக  காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது  வாரிசுகளும் போட்டியிடுவார்கள்.

கூட்டணி சேரும் தாற்பரியத்தை சகல கட்சித்தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.  தமிழக அரசைத்தெரிவு செய்யப்போவது  கட்சி சார்பற்ற நடுநிலை வாக்காளர்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்
வர்மா
தமிழ்த்தந்தி
24/01/16

Wednesday, January 20, 2016

தமிழ்த் தேசியத்துக்கு சவால்விடும் தேசியப் பொங்கல்

இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களின் அரசாங்கம் தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் அரசாங்கம் என்ற எண்ணம் தமிழ் மக்களின் மனதில் இருக்கிறது. அந்த என்னத்தைக் களைவதற்காக   இன்றை அரசாங்கம் மிகச்சிரமத்தின் மத்தியில்  காரியமாற்றுகிறது. சிங்கள மக்களைத் திசை திருப்பும் சில அரசியல்வாதிகள் அதனைத்தமக்கு சாதகமாக்க முயற்சிக்கின்றனர். கடும் தீவிரவாதப் போக்கில் இருந்து சிங்கள மக்களை விடுவிக்க வேண்டும் என  ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் முயற்சி செய்கின்றனர். ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்லெண்ண  சமிக்ஞைகள்  தமிழ் மக்களின் மனதில் அவரைப்பற்றிய புதியதொரு சிந்தனையை உருவாக்கி உள்ளது

தமிழரின் திருநாளான பொங்கலை தேசியப் பொங்கலாக   யாழ்ப்பணத்தில் நடத்தி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. அனால், . தேசியப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.  பிரதமர் ரணிலின் தலைமையில் தேசியப் பொங்கல் விழா நடந்தது. உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவும், வீரசிங்கம் மண்டபத்தில்  கலைவிழாவும் நடைபெற்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறுவர் மற்றும் மகளிர் விவகார  ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  பாராளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராஜா  ஆகியோர்   பலாலியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.  உயர் பாதுகாப்பு வலயத்தில் பொங்கல் நடைபெற்ற இந்த விழாவுக்கான  முன்னேற்பாடுகள் அதி உச்ச பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தன. பொங்கல் வ விழாவில் கலந்து கொள்ள விரும்பியவர்களின் பெயர்   முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது. பொங்கல் விழாவுக்கு சென்றவர்கள் கடுமையாக சோதனை செய்யப்பட்டனர். மாலை பொன்னாடை என்பனவும் படையினரின் சோதனைக்குத் தப்பவில்லை 

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த கோவில்கள் பாடசாலைகள்வீடுகள்  என்பன படையினரால் அழிக்கப்பட்டன. அவை இருந்த அடையாளமே இப்போது இல்லை. இந்த நிலையில் பரிகாரம் தேடும் நோக்கில் அங்கு தப்பிப்பிழைத்த ஆலயத்தில் பொங்கிப் படையலிட்டார்கள்.  அரசாங்கத்தின் தேசியப் பொங்கல்விழாவில் விருப்பமின்றி கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவரின் கூற்று பொய்யல்ல. பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அங்கிருக்கும் படையினர் வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

 வடக்கில் உள்ள  இராணுவத்தின் தொகையைக் குறைக்கப்போவதில்லை என அழுத்தம் திருத்தமாக இதுவரைகாலமும் கூறிவந்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று கீழிறங்கி வந்து வடக்கில் உள்ள படையினர் வேறு இடங்களுக்கு  மாற்றப்படுவர்கள் என்றார். வடக்கில் நிலவும் சமாதான சூழல் தான் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்றார்.  இந்திய மீனவர்களின் அத்து மீறல் முற்றாக  ஒழியும் வரை வடக்கில் உள்ள  கடற்படையினரின் தொகை குறைக்கப்பட மாட்டாது. என்ற குண்டை  பிரதமர் தூக்கிப்போட்டுள்ளார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க,பிரிட்டிஷ் பொதுனலவாய அலுவல்கள் அமைச்சர் ஹியூகோஸ்வயர்,வடமாகாண  முதலமைச்சர். சீ.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையே முறுகல் ஆரம்பித்துவிட்டது.  என கடந்தகாலம் மின்னிய   தலைப்புச்செய்திகள்  மங்கிவிட்டன.இருவரும் கைலாகு  கொடுத்து மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும்  தேசியப் பொங்கல் விழாவில்  கலந்து கொண்டது அரசாங்கத்துக்கு வெற்றியை கொடுத்துள்ளது. வடமாகான சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கமும் அனந்தியும் தேசியப் பொங்கல் விழாவை எதிர்த்து  யாழ்ப்பணத்தில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பட்டம் செய்தனர்.  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும், காணமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும்,பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவர்களினால் முன்மொழியப்பட்டன.அவர்களின் கோரிக்கைகள் தவறனவை அல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் யழ்ப்பனத்துக்கு விஜயம் செய்யும் நாளில் ஆர்ப்பட்டம் செய்யாது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பட்டம் செய்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். தலைவர்கள் வரும்போது எதிர்ப்புக் கட்டுவது தான் வழமையான  எதிர்ப்பின் அடையாளம். நாங்கள் எதிர்ப்பு காட்டினோம் என்பதை வெளி உலகத்துக்குத் தெரிவிக்கவே அவர்கள்  கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டம் நடத்தினர்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்ற உண்மையை பிரதமர் மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார். அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்களின் உயிர்  எப்படி யாரால்  பறிக்கப்பட்டது யார் கட்டளையிட்டது போன்றவற்றையும் பிரதமர் வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். தமிழ் மக்கல் மீது இதுவரை களமும் திணிக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை  வருத்தம் தெரிவிக்கவில்லை. அவைபற்றி நேர்மையுடன் கூறும் துணிவு சிங்களத்தலைவர்களுக்கு இல்லை. தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறும் சிங்களவர்கள் துரோகிகளாகப்பர்க்கப்படுகிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யாழ்ப்பணத்தில் வலுவாகக் கால்  ஊன்ற தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. தேசியப் பொங்கல் போன்ற விழாக்கள அதற்கு துணைபோகின்றன. 

வானதி 
சுடர் ஒளி
ஜனவரி 20.26/16

Monday, January 18, 2016

சூரன்

வடமராட்சியிலே இ,ந்து சமயம் தளைத்தோங்க வித்திட்டவர்களில் திருகா.சூரன் முதன்மையானவர் மிஷனரிகளின் துரித வளர்ச்சியால் இந்துக்கள் மதம் மாறியபோது மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.

,ந்து ஆலயங்களில் மிருகபலி என்ற அநாகரீகம் வியாபித்திருந்தபோது வதிரி பூவற்கரை என்று ,இன்று அழைக்கப்படும் அண்ணமார் ஆலய வேள்வியின் போது ஆட்டுக்குப் பதிலாக தனது தலையை வெட்டுமாறு கூறி தலையை கொடுத்து மிருகபலியை நிறுத்தினார்.

வதிரி அல்வாய் கொற்றாவத்தை சமரபாகு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் மதம் மாறாமல் ,இதுக்களாக இ,ன்று,இருப்பதற்கு திரு சூரனின் பங்களிப்பே மிகமுக்கியமானது. வசதி குறைந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து,இயங்கிய காலம். வதிரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவப் பாடசாலை உருவானது. அங்கு கிறிஸ்தவ மதபோதனை நடைபெற்றது இ,ந்து சமயம் புறக்கணிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறக்கூடாது என்பதற்காக தேவரையாளி சைவ வித்தியாசாலையை சூரன் நிறுவினார்.

சூரனின் இ,ந்த முயற்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவருமான மு.சிவசிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதலியார் (சித்தமணியம்) வழிகாட்டினார். தோன்றாத்துணையாக சித்தமணியம் ,இருந்தபடியால் தான் தாழ்த்ப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சூரனால் பாடசாலையை உருவாக்க முடிந்தது.

1891 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி கரவெட்டி மேற்கில் வே. காத்தார் வள்ளியார் தம்பதிக்கு ஐந்தாவது புத்திரனாகப் பிறந்தார். கரவெட்டி மேற்கு (நாவேலர்மடம்) கரவெட்டி கிழக்கு (சண்டில்) அகிய பாடசாலைகளில் படித்தார். அப்பாடசாலைகளும் மிஷன் பாடசாலையாக ,இருந்தும் தாழ்;த்தப்பட்ட சமூக மாணவர் உள்ளே சென்று படிக்க முடியாத காரணத்தால் பாடசாலையை வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தட்டுக்கொத்தல், கிந்துவானடித்தல், எகிறிப்பாய்தல்,அரைப்பாய்தல், ஓட்டம் போன்றவற்றில் பொழுதைக் கழிக்கலானார். பதினாறு வயதான போது தகப்பனின் வற்புறுத்தலினால் தகப்பனுடன் தச்சுத் தொழிலுக்குச் சென்றார்.
தச்சு வேலை அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. தச்சு வேலையில் சித்திர வேலையும்,மரப்பூச்செடி, உருவம் கொத்துதல், கூத்து சோடனை, சப்பறம், திருவாசி, வாகனம் முதலிய பல வேலைகளை திறம்பட செய்தார் தச்சு வேலை காரணமாக தமிழ்க் கல்விமான்களின் தொடர்பும் ,இவருக்குக் கிடைத்தது. , ,ந்து சமயத்தின் பால் கொண்ட அன்பினால் மாமிசம் புசிப்பதைத் தவிர்த்தார். பின்னாளில் ,இரின் சீடர்களான கவிஞர் மு.செல்லையா சைவபுலவர் சி.வல்லிபுரம், சமூக ஜோதி ஆ.ம.செல்லத்துரை, கலாவினோதன், பெ.அண்ணாச்சாமி, வித்துவான் முருகேசு,இவரி பிள்ளைகளான  சூ ஏகாம்பரம், செல்வி சூ.சிவபாக்கியம் போன்றவர்களும் புலால் தவிர்த்தனர். ,இன்றும் மூன்றாவது தலைமுறையாக இ,து தொடர்கின்றது.

கரவெட்டி தேவ மாதா  கோயிலில் மாதாவின் உருவம் வைப்பதற்காக மூன்றடி உயரத்தில் ஒரு கண்ணாடிக்கூடு,இரண்டு சிகரம், மத்தியில் சிலுவை ஸ்பிரீத்து  சாந்து (புறா உருவம்) கீழ் நோக்கிப் பறந்தபடி செய்து கொடுத்தார். அதைப் பார்த்து வியந்த ஒருவர் ,இதைச் சூரன் செய்ததென்று சொல்லவேண்டாம் என்றார். சூரன் நிற்பது தெரியாமல் கதைத்த போது சூரன் நிற்பதை இ,ன்னொருவர் சுட்டிக்காட்டினார். அவர் சூரனைப் பார்த்த போது எனக்கு பெயர் வேண்டாம் என்று சூரன் சொன்னார்.

, ,ந்து மதத்தைப் பற்றி யாராவது அவதூறு செய்தால் பொறுக்கமாட்டார் உடனே சண்டைக்குப் போய்விடுவார்;.ஞானப்பிரகாச சுவாமி கத்தோலிக்க மதத்தைப் பரப்பிவந்த வேளையில் அவருடன் கடிதமூலம் , ,ந்து சமயத்தின் சிறப்புக்களை தர்க்கித்தார். சூரன் தாழ்த்தப்பட்டவர் எனத்தெரிந்த  கொண்ட ஞானப்பிரகாசர் அவரை மதம் மாற்ற‌ முயற்சி செய்தார். ,ந்து மதம் தான் எனது மதம் அதிலிருந்த நான் விலகமாட்டேன் என உறுதியாகக் கூறினார். உயர் சாதி , ,ந்து ந்துக்கள் தாழ்ந்த சாதி இ,ந்து,ந்துக்களை அவமானப்படுத்துவதை ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டிய போது, நான் ஆசாரமான சுத்த , ,ந்து ந்து என அடித்துக் கூறினார். மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதி எழுதியஎம்மை வாழ வைத்தவர்கள் எனும் நூலில் சூரனைப்பற்றி வியந்து எழுதி உள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள 28 பாடசாலைகளின் அதிபர்களைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்ட திரு.பொ.கனகசபாபதி வடமராட்சியின் உள்ள ஹாட்லிக் கல்லூரிக்கு , ,ணையாக தேவரையாளி இந்துக் கல்லூரியையும் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாதியம் பீடித்த சமூகத்திலே சுதேச நிறுவனங்களிலும் ,இடமில்லாமல் அதை மற்றவர்கள் பயன்படுத்தும் உள்நோக்கையும், கல்விக்காக மதம் மாறும் பிரமையையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்டகப்பட்ட தேவரையாளி கல்வி நிறுவனம் சுயமரியாதையின் ஈழத்தமிழ் வெளிப்பாடும் என எம்மை வாழவைத்தவர்கள் என்ற நூலின் அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை , ,ந்து மதம் புறக்கணித்ததனால் டாக்டா அம்பேத்கார் புத்த மதத்துக்கு மாறினார். அப்பொது அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 ,லட்சம் மக்கள் , ,ந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்கள். ஆனால் சூரன் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. தனது கிராமத்து மக்களும் அயல் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் மதம் மாறக்கூடாது என்பதற்காக இ,ந்துப் பாடசாலையை உருவாக்கினார் என்கிறார் திருபொ.கனகசபாபதி.

தேவரையாளி ,இந்துக் கல்லூரி எனும் போது ,இருவர் எமது எண்ணத்தின் முன் தோன்றுவார்கள். அவர்களில் தேவரையாளி சைவப் பாடசாலையின் ஆரம்ப கர்த்தா பெரியார் கா.சூரன் அவர்களும் தொடர்ந்து தேவரையாளி கனிஸ்ட பாடசாலையை வதிரி தேவரையாளி இ,ந்துக் கல்லூரியாக்கி வடமாகாணத்திலே முன்னோடிக் கல்லூரிகளில் ஒன்றாக வளர்த்தெடுத்த பெருமை அதிபர் க.மூ.சி.சீனித்தம்பிக்கே உரியதாகும்.

1914 ஆம் ஆண்டிலே பெரியார் சூரன் அவர்களின் முயற்சியாலும் வதிரி மக்களின் ஒத்துழைப்பாலும் தேவரையாளி சைவக்கலைஞான சபை என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் மூலம் தேவரையாளி ,இந்துக் கல்லூரி முதலில் ஓர் ஆரம்பப் பாடசாலையாக ஒரு சிறிய ஓலைக் கொட்டிலில் ஸ்தாபிக்கப்பட்டது. ஏறக்குறைய 22 ஆண்டுகளின் பின்னர், 1936 ஆம் ஆண்டிலே சைவக் கலைஞான சபைபரவலாக்கப்பட்டமையால் வதிரி, அல்வாய் கொற்றாவத்தை,கரவெட்டி மேற்கு ஆகிய கிராம மக்களின் உதவியுடன் ,இந்தப் பாடசாலை மேலும் விருத்தியாக்கப்பட்டது. அக்காலம் வடமாகாணத்தில் சாதி என்ற பெயரால் அநியாயமாக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்விகூட வழங்குவதற்கு கருணை காட்டாத ,இருண்ட காலமாகும். நல்ல சமயமடா ,தை நழுவ விடுவாயோ என்ற கோட்பாட்டிலே அச்சமூகத்தினரிடையே சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் காட்டி  தவிச்ச முயலை அடிப்பது போன்று சமய மாற்றம் செய்ய மிஷனரிகள் பெரிதும் உழைத்தகாலம். விரக்தியின் காரணமாகவே சலுகைகளின் காரணமாகவோ மனம் மாறாமல் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் வாழ விரும்பிய ஒரு சமூகம், கல்வியையும் பொருளாதார சுதந்திரத்தையும் கையிலெடுத்து தமக்கென ஒரு பாடசாலையையும் யாரதும் தலையீடு ,இல்லாத சுதந்திரமான தொழிலையும் தேர்ந்தெடுத்து, தமக்கென வழிபாட்டுக்கான ஒரு கோயில் போன்றவற்றையும் தாமே ஸ்தாபித்து யரிலும் தங்கியராத வியாபார நிறுவனங்களை உருவாக்கிய பொருளாதார தன்நிறைவைக் கண்டதால் அவர்களின் பொருளாதாரப் பின்னணியே தங்குதடையின்றி ,இந்தப் பாடசாலை நிறுவ பக்கதுணையாக நின்றதென்றால் மிகையில்லை.

அத்தோடு வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த சிறுபான்மைத் தமிழ்ச சமூகத்தினரில் ஒரு பகுதியினர் பெரும்பான்மைச் சமூகங்களின் காணிகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் ,அப்பகுதி மக்கள் தமக்கென சொந்தமான காணிகளில் வாழ்ந்ததனால் பெரும்பான்மை சமூகத் தலையீடெதுவுமின்றி சுதந்திரமாக பாடசாலையை ஸ்தாபிக்கத் தலைப்பட்டார்.

,இச்சுதந்திரம் ,இல்லாத நிலையொன்று ,இருந்திருந்தால் அவர்களி; கல்வி வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் வாழும் காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும். , ப்படியான சூழ்நிலையே 90 வருடங்களுக்கு முன்பு வடமாகாணத்தில் நிலவியது. பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழினத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடுரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன், கல்வி, அறிவு அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவசமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும், மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும், தொலை நோக்குடனும் செயற்பட்டள்ளார்.

தமிழழையும் சைவத்தையும் காத்தவரென போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆ றுமுகநாவலர் இந்தத் தமிழ்ச் சமூகத்தை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். நாவலர் ,இறந்து (1879) ,இரண்டு ஆண்டுகளின் பின்னர் ,பிறந்த (1881) சூரனோ, ,இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு ஒருபுறம் ஆறுமுகநாவலரின் வழித்தோன்றல்களின் கொடுரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும், ,தன் பொருட்டு வதிரி, தேவரையாளி வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசியப் பெரியாராக் கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,ச்சமூக மக்கள் அனைவருமே மதமாற்றம் செய்து கொண்டிருந்தாற்கூற அது தவறாகக்கொள்ளப்பட்டிருக்க மாட்டாது. என அமரர் ராஜ‌ஸ்ரீ;காந்தன் அவர்கள் சூரன் சுயசரிதை என்ற நூலுக்கு எழுதிய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார். நான் ,இந்த செயற்றிறனை வைத்தே மேதை அம்பேத்காரிலும் பார்க்க பெரியவர் சூரனை மதிக்கிறேன். மதம் பிழையானதா மதத்தைக் கையாள்பவர்களுடைய நெறி பிழையானதா என்பதே கேள்வி. அம்பேத்கார் அவர்கள் மதத்தைக் கையாளர்பவர்கள் மேலுள்ள கோபத்தால் மதத்துக்கு எதிராக இயங்கினார். பெரியவர் சூரனோ மதத்தை வெறுத்து ஒதுக்காமல் அதற்குள்ளேயே ,இருந்து தனது போராட்டங்களை நடத்தினார். அம்பேத்கர் அவர்கள் மதமாற்றத்தினால் பெற முனைந்ததை சூரன் சைவத் தமிழ்ச் சமூகமாகவே நின்று பெற முனைந்தார். அவரது திடசித்தம் பாரட்டப்படவேண்டியது. என்கிறார் அதிபர் போ.கனகசபாபதி

தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளுக்கு மத்தியில் தமது சமயத்தை வளர்க்கவேண்டுமெனும் உள்ளார்ந்த நோக்கத்தோடாயினும் ஓரளவு கல்வியறிவை ஊட்ட முன்வந்த கிறிஸ்தவர்களின் மதத்தாக்கம் காரணமாகவே உடனடியாகத் தேவரையாளி சைவ வித்தியாசாலையை உருவாக்க வேண்டிய சமூகத்தேவை திருகா.சூரனுக்கும் அவரைச் சார்ந்த சைவ அபிமானிகளுக்கும் உண்டானது என பிரபல எழுத்தாளர் தெணியான் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உடுப்பிட்டி தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.வ.சிதம்பரத்தின் பாட்டன் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்) வீட்டில் மிகவும் சகஜமாகப் பழகுபவர் சூரன். சித்த மணியத்தின் பிள்ளையார் கோயிலக்கு சாதி குறைந்தவர்களும் பணம் கொடுப்பதுண்டு. சாதி குறைந்த பிள்ளைகள் எதற்காக கிறிஸ்தவ பாடசாலையில் படிக்க வேண்டும். உங்கள் பாடசாலையில் அவர்களை படிக்க வைக்கலாம் தானே என சூரன் கேட்டார்.

தாழ்ந்த சாதியின் பிள்ளைகளுக்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் படிப்பிப்பதில்லை என்பதால் தாழ்ந்த சாதிப் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதற்கு உரிய ஏற்பாட்டைச் செய்த பின் மிஷன் பாடசாலையில் படித்த பிள்ளைகளை படிப்பிக்க கொட்டில் ஒன்றை சித்தமணியம் கட்டினார். அன்று அதனை புதுப்பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்பு மாணிக்கவாசக வித்தியாலயமானது.
சித்தமணியகாரன் வீட்டிற்கு அலுமாரி, கட்டில், கதிரை முதலிய தளபாடங்களை சூரன் செய்தார். அப்போது தனது சமூக பிள்ளைகளுக்காக பாடசாலை அமைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வதிரியில் எம்சமூகத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட குடிகள்  உண்டு. அதற்கு வடக்கு மேற்கில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடிகளுண்டு. ,இதற்கிடையில் ,இரண்டு குடி கிறிஸ்தவர்களாயிருக்கின்றனர். அவர்கள் மற்றையோரையும் கிறிஸ்தவராக்க முயலுகின்றார்கள். ஆகையால் வதிரியில் ஓர் சைவப் பாடசாலை உண்டாக்கலாமென்று எண்ணுகிறேன். அதற்காகிய வழிதுறைகளை சொல்லி உதவ முடியுமா என சூரன் கேட்டார். வதிரியில் சைவப் பாடசாலை கட்டுவதற்கு உதவி செய்வதாக சூரனுக்கு சித்தமணியம் உறுதியளித்தார்.

வதிரியில் சைவப் பாடசாலை கட்டும் முயற்சி பற்றி தனது மைத்துனர் சி.சிவம்பு வைத்தியருடன் ஆலோசித்தபின் இ,துபோன்ற காரியங்களுக்கு உதவி செய்யும் க.வே.சின்னப்பிள்ளையையும் அழைத்துக்கொண்டு சித்த மணியத்திடம் சென்றனர். சித்தமணியத்தின் உதவியுடன் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலை உதயமானது. ,இன்று தேவரையாளி , ,ந்துக்  கல்லூரி என பெரு விருட்சமாக உயர்ந்து நிற்கின்றது.

பல நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழனத்தின் அடிப்படை மனித உரிமைகள் கூட கொடூரமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான சூரன் கல்வியறிவு, அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவ சமயப்பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும் மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டுள்ளார். நமது சமகாலத்தில் வாழும் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கொள்ளப்படும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தந்தையார் மாணிக்கம் என்றழைக்கப்பட்ட கரவெட்டிக் கார்த்திகேசு உத்தியோகம் பெறுவதற்கான முதற்கதவு சூரனாலேயே திறந்து வைக்கப்பட்டது.

உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஓராவது இ,லக்கியகர்த்தாவாகக் கொள்ளப்படுபவர் அல்வையூர்க் கவிஞர் மு.செல்லையா. ,அச்சமூகத்தில் ஓராவது பயிற்றப்பட்ட ஆசிரியரும் ,வரே தான் என்ற தகவலும் அவரது சுயசரிதையில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ,அப்போ தலைமையாசியாராகவிருக்கும் மு.செல்லையா ஏழாம் வகுப்புப் பாசு பண்ணி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் அவரை ஆசிரிய கலாசாலைக்கு விட்டுப் படிப்பிக்கில் எட்டாம் வகுப்புப் பாஸ்  பண்ண வேண்டும் அல்லது பிரவேச பண்டிதர் பாசு பண்ண வேண்டும். அதற்காகச் செல்லைய ,இலக்கண ,இலக்கியம் படிப்பதற்காகச் கற்கும்பான் மயில்வாகனம் வாத்தியாரிடம் ஒப்படைத்தேன். அவர் படிப்பிக்கும் நேரம் மாலை ஆறரை தொடங்கி எட்டரை மணி நேரமாகும். செல்லையா தனிமையில் போய்வர முடியா,து. ஆகவே ஓர் அரிக்கன் விளக்குடன் நானே மூன்று மாதமாகக் கூட்டிக்கொண்டு சென்றேன். (கற்கும்பான் வதிரியிலிரந்து சுமார் 5-6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது). சூரனின் ஆளுமையாளர்களை நிர்மாணிக்கும் திறன் ,இயல்பாகவே ஆக்கத்திறன் கொண்ட மு.செல்லையா அவர்களைக் கவிஞராக்கி தேசிய மட்ட அங்கீகாரத்திற்கு உயர்த்தியுள்ளது என சுயசரிதையில் சூரன் பதிந்துள்ளார்.

தமிழையும் சைவத்தையும் காத்தவரெனப் போற்றிக் கொண்டாடப்படும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் இ,ந்தத் தமிழ்ச் சமூகத்தினரை மனிதர்களாகவே மதிக்கக்கூடாதென்று உறுதிபடக்கூறி, அதற்கிணங்கச் செயலாற்றி, தனது சைவ வினாவிடையில் தெளிவாகப் பதிவு செய்துமுள்ளார். நாவலர் இ,றந்து (1879) ,ரண்டு ஆண்டுகளின் பின்னர் பிறந்த (1881) சூரனோ இ,ரட்டை முட்கிரீடங்களைச் சுமந்து கொண்டு  ஒருபுறம் ஆறுமுகநாவலர்களின் வழித் தோன்றல்களின் கொடூரமான உரிமை மறுத்தல்கள், மறுபுறம் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மதமாற்றல்கள் - சைவத்தை உறுதியாகக் கடைப்பிடித்தமையும் ,தன்பொருட்டு வதிரி, தேவரையாளி சைவ வித்தியாலயத்தை நிறுவியமையும் தேசிய மட்டத்தில் சூரனைத் தேசிய பெரியாராக கொள்ளவேண்டும் என்ற பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பவையாக உள்ளன.

ஆறுமுகநாவலரின் சைவசமயக் கோட்பாடுகள் ,இன்று மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டாய அவசியப்பாடு எழுந்துள்ளமையும் கவனத்திற் கொள்ளத்தக்கது. சைவத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டு வந்த கொடுமைகளுக்காக ,அச்சமூக மக்கள் அனைவரும் மதமாற்றம் செய்திருந்தாற்கூட அது தவறாகக் கொள்ளப்பட்டிருக்கமாட்டாது.
,ந்திய அரசியல் யாப்பின் பிதாமகர் டாக்டர் அம்பேத்கர் யால்டா பிரகடனத்தில் நான் தாழ்த்தப்பட்ட ,இந்துவாகப் பிறந்தேன். ,இதைத் தடுத்து நிறுத்துவது என்பது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன் நான் இ,றக்கும் பொழுது ,இந்துவாக ,இறக்கமாட்டேன் என்று குறிப்பிட்டு ,லட்சக்கணக்கான தனது மக்களோடு புத்த மதத்தைத் தழுவிக் கொண்டார் என்பது உரத்த சிந்தனைக்கு உரியது. இ,ந்த பகைப்புலத்தில் சூரனின் பிம்பப் பிரகாசம் மேலும் ஒளிர்கிறது.
சி.சுந்தர் (சி.க.சரவணமுத்துவின் தந்தையார்) என்பவரால் கொட்டன் வைத்து வழிபாடு செய்யப்பட்ட வதிரி, பூவற்கரை அண்ணமார் என்ற சிறுதெய்வ ஆலயத்தில் பலல்லாண்டுகளாக ,இடம்பெற்று வந்த மிருக பலியை அன்றைய  காலச் சூழலில் நிறுத்தத் துணிந்தமையும் அதனை வெற்றிகரமாகச் சாதித்தமையும் சூரனுடைய சைவப் பற்றின் வலிமையையும் அதற்கிணங்க வாழ்ந்தமையையும் துல்லியமாகப் பரிணாமம் பெற்று அதற்கெனப் பெரும் பொருட் செலவில் சித்திரத் தேர் ஒன்று உருவாக்கப்பட்டது. ,அச்சித்திரத் தேரின் வெள்ளோட்டம் 2003.08.01 ஆம் திகதி நிகழ்வுற்றது. ,அத்தினம் சூரனின் 122 ஆவது ஜனன தினம் என்பது முற்றிலும் எதேச்சையாக ஏற்பட்ட ஒத்த நிகழ்வாகும்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி ,இலங்கைக்கு வந்து ,இந்தியா திரும்பிய பின்னர் கல்கியில் தொடர்ச்சியாக எழுதிய,இலங்கையில் ஒரு வாரம் என்ன கட்டுரையில் சூரனைப் பற்றி எழுதும் போது ,ப்பெரியார்  நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனாரை எனக்கு ஞாகப்படுத்தினார். என்று குறிப்பிட்டுள்ளார். தலித் ,இலக்கிய முன்னோடியாகக் கொள்ளப்படும் டானியல் தனது தண்ணீர் என்ற நாவலில் சூரனைப் பற்றி எழுதியுள்ளார். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்என்ற தனது சுயசரிதை சூரனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
சூரனை மீளக் கொணர்வதிலும் அவர் குறித்த முறையான தகவல்களை ப ரவலடையச் செய்வதில் முனைப்பாகச் செயற்பட்டவர் தெணியான். எமது நாவலர் ஆசாரியர் சூரன்’, ‘சைவச்கூசூரனின் சமயப் பணிகள்’, ‘கல்கி பாரட்டிய வதிரிப் பெரியார்’, ‘தேவரையாளிச் சூரனின் பட விமர்சனம்’, ‘சூரனும் கல்விப் பணியும்’, அகிய பத்திரிகைக் கட்டுரைகளிலும்தேவரையாளி , ,ந்து  மலரிலும் முருகேசு ஆசிரியர் பவளவிழா மலரிலும் மல்லிகை ஆண்டு மலர் - 2003 சிறுகதை ஒன்றிலும் சூரன் பற்றிய பல தகவல்கள் இ,வர் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கியப் பணியும் என்ற ஆய்வு நூலில் சூரன் பற்றிய பல தகவல்களைத் தெளிவாகத் தந்துள்ளார். ,ந்நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் சு .வித்தியானந்தன் சூரனைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு சூரனின் பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை கலைஞர் வைரமுத்து பற்றிய ஆய்வு நூலில் சூரனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளர். நாடகக் கலைஞர் கிருஷ்ணாழ்வாரின் நூற்றாண்டு மலரில் சூரனைப் பற்றி குறிப்புக்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. அதிபர் மூ.சி.சீனித்தம்பி அவர்களால் வெளியிடப்பட்ட தேவரையாளி , ,ந்து என்ற மலரில் சூரன் பற்றிய குறிப்புக்கள் ஆதாரபூர்வமாகத் தரப்பட்டுள்ளன. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் மறைவையொட்டி எழுதிய கட்டுரையில் சூரனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ.ச. வெளியீடான உயிர்ப்பு என்ற தொகுதியில் வெளிவந்த தத்து என்ற சிறுகதையில் எங்கடை சைவத்தையும் எங்கடை தமிழையும் காப்பாத்தியது ஆறுமுகநாவலர் அல்ல சூர்ப்புதான், சூரன்தான் என்று பதிவு செய்துள்ளார் ராஜ ஸ்ரீகாந்தன்.
தமிழினத்தில் குறித்த சமூகத்தின் உரிமைகள் மறுத்துவந்த சமூகத்தைச் சேர்ந்த பல முற்போக்கானவர்கள் பெரியார் சூரனின் பணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் உறுதுணையாளர்களாகவும் விளங்கினார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் பேரனார் வீ.மு.சிற்றம்பல முதியார் (சித்தமணியம்), ,இவருடைய மைத்துனர் தா.சிதம்பரப்பிள்ளை, ‘, பத்திரிகையின் ம.க.திருஞானசம்பந்தர், வித்தியாதரிசி சதாசிவ ஐயர் (,வருடய சொந்தப் பாடசாலையான ஆரிய திராவிட பாடசாலையில் சமாசனமில்லாக் காலத்திலேயே பிரவேச பண்டிதர் சோதனையின்போது மு.செல்லையாவிற்கு மேசையும் இ,ருக்க ஸ்ரூலும் கொடுத்தவர்), பாடசாலை முகாமையாளர் சி.சபாபதிப்பிள்ளை, இந்துபோட்’ ,இராசரத்தினம், ஹன்டி பேரின்பநாயகம், தா.,ராமலிங்கம் அப்புக்காத்து, கொழும்புச் சீமான்களான காராளபிள்ளை முதலியார், செல்லமுத்து முதலியார் ஆகியோர் உட்பட இ,ன்னும் பலர் சூரனால் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் தந்தையார், பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் வீரசிங்கம் 1952 ,இல்  ,ப்பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் மீது அளவிலா மதிப்பு வைத்திருந்தவர் சூரன், மகாத்மாவை யாரோ சுட்டுக்கொலை செய்துவிட்டதாக அறிந்த சூரன் மிகுந்த கவலையடைந்தார். காந்தியின் பிறப்பு முதல் அஸ்தி கலக்கும் வரை இ,ரங்கல் பாவும், காந்தி அந்தாதியும் எழுதினார். பின்னர் நெல்லியடி மகாத்மா தியேட்டர் அதிபர் திரு.சி.வல்லிபுரம் பிள்ளையினால் அப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய பெரிய சேலைகளை எல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும்; மஹாத்மாவாகிய சின்னஞ்சிறு உருவம் தனது உடல், பொருள், ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்ததாலன்றோ ,இன்று எல்லா உலகமும் அவர் தத்துவங்களை பின்பற்றும்படி பிரகாசம் செய்கின்றன என்று அப்புத்தக்தில் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி  திரைப்படம் , ,ந்து மதத்தையும் ,இந்துக் கடவுனையும் ஏளனம் செய்வதாக அறிந்ததால் அப்படத்தைப் பார்க்க சூரன் விரும்பவில்லை. பராசக்தி படக்கதை புத்தகத்தைப்படித்து அதிலே சமயம் சார்பான கருத்துக்கள் ,இருப்பதை அறிந்து திறனாய்வுடனான விமர்சனம் எழுதி புத்தகமாக வெளியீட்டார்.
,இவர் எழுதிய பராசக்தி பட விமர்சனமே நமக்குத் தெரிந்த வரையில் ஈழத்தில் முதன்முதலாக வெளிவந்த ஒருபட விமர்சன நூல் ஒன்று வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் ,இலக்கிய வளமும் எனும் நூலில் கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா கூறியுள்ளார்.

ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் கிறிஸ்தவப் பாடசாலையில் அடிப்படைக் கல்வியை பெற்ற சூரன் தனது திறனாய்வு சித்தாந்தக் கருத்துக்களைஆதாரபூர்வமாகக்கொண்டு   ,இந்நூலை எழுதி உள்ளமை பெரும் வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரியதெனலாம். ஈழத்துத் தமிழ் உலகம் சூரனின் திறனாய்வினை திரைப்படம் சார்ந்த  கலைத்துறையினுள் ,இணைத்து  நோக்காது விடினும் சமயம் சார்ந்த பல்கணிப்பு என்ற வகையிலும் ,ன்னும் கருத்தில் கொள்ளாதிருப்பது  ;வேதனைக்குரியது என்று எழுத்தாளர் தெணியான் ஆதங்கப்படுகின்றார்.

அடக்கப்பட்ட மக்களின் மத்தியில் , ,ந்து மதத்தை ஆழமாக வேரூன்றிய திருகா.சூரன் 01.08.1956 ஆம் ஆண்டு,இறைபதமடைந்தார். ,இரட்டை முட்;கிரீடங்களைச் சுமந்த நமது பெரியார் சூரன் எனும் சுதந்தரநாயகன் என பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியர் வியந்து போறப்பட்ட சூரனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை.

தேவரையாளி ,இந்துக் கல்லூரியில் செல்லக்குட்டி கணேசனின் முயற்சியினால் சிலை வைக்கப்பட்டுள்ளது. வதிரி பூவற்களை விநாயகர் ஆலய சித்திரத் தேரில் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. சைவம் வளர்த்த பெரியவர்கள் வரிசையில்,வரது பெயர் பதியப்படவில்லை. அவரின் சேவையைப் பாராட்டி முத்திரை வெளியிடப்படவில்லை. சமய பாட நூலில்,இவரின் பெயர் ,இடம்பெறவில்லை. இதனை நிறைவு செய்வதற்காக பேராசிரியர் சிவத்தம்பி பெரு முயற்சி செய்தார். ,,ந்து மத நிறுவனங்கள் முன்னின்று ,வற்றை செய்யவேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் , ,ந்து மதத்தை பாதுகாத்த சூரனுக்கு ,இந்த நூற்றாண்டில் உரிய கௌரவம் வழங்கவேண்டும்.

  உசாத்துணை நூல்கள்

சூரன் சுயசரிதை     ; தொகுப்பு  ராஜஸ்ரீ காந்தன்
எம்மை வாழ‌வைத்தவர்கள்  ; பொ.கனகசபாபதி

இலங்கையில் ஒரு வாரம்   ;கல்கி
தண்ணீர்   ;கே.டானியல்
 ஈழநாடு  ;தெணியான்
ஈழமுரசு  தெணியான்
எழுதப்படாத கதைக்கு  வரையப்படாத சித்திரங்கள் டொமினிக்ஜீவா
தேவரையாளி இந்து

வடமராட்சியின் கல்விப்பாரம்பரியமும் இலகியப் பணியும்.  ;பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராஜா
 தினக்குரல்  ;பேராசிரியர் கா சிவத்தம்பி
தத்து சிறுகதை   ;   ராஜஸ்ரீ காந்தன்
முரசொலி;    ;புலவர் .க.சி.குலரட்ணம்
  
நன்றி  விக்கிபீடியா