Wednesday, January 20, 2016

தமிழ்த் தேசியத்துக்கு சவால்விடும் தேசியப் பொங்கல்

  
இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களின் அரசாங்கம் தமிழ் மக்களை உதாசீனப்படுத்தும் அரசாங்கம் என்ற எண்ணம் தமிழ் மக்களின் மனதில் இருக்கிறது. அந்த என்னத்தைக் களைவதற்காக   இன்றை அரசாங்கம் மிகச்சிரமத்தின் மத்தியில்  காரியமாற்றுகிறது. சிங்கள மக்களைத் திசை திருப்பும் சில அரசியல்வாதிகள் அதனைத்தமக்கு சாதகமாக்க முயற்சிக்கின்றனர். கடும் தீவிரவாதப் போக்கில் இருந்து சிங்கள மக்களை விடுவிக்க வேண்டும் என  ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் முயற்சி செய்கின்றனர். ஜனாதிபதி முன்னெடுக்கும் நல்லெண்ண  சமிக்ஞைகள்  தமிழ் மக்களின் மனதில் அவரைப்பற்றிய புதியதொரு சிந்தனையை உருவாக்கி உள்ளது

தமிழரின் திருநாளான பொங்கலை தேசியப் பொங்கலாக   யாழ்ப்பணத்தில் நடத்தி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. அனால், . தேசியப் பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.  பிரதமர் ரணிலின் தலைமையில் தேசியப் பொங்கல் விழா நடந்தது. உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொங்கல் விழாவும், வீரசிங்கம் மண்டபத்தில்  கலைவிழாவும் நடைபெற்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறுவர் மற்றும் மகளிர் விவகார  ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  பாராளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராஜா  ஆகியோர்   பலாலியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.  உயர் பாதுகாப்பு வலயத்தில் பொங்கல் நடைபெற்ற இந்த விழாவுக்கான  முன்னேற்பாடுகள் அதி உச்ச பாதுகாப்புடன் நடைபெற்று முடிந்தன. பொங்கல் வ விழாவில் கலந்து கொள்ள விரும்பியவர்களின் பெயர்   முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது. பொங்கல் விழாவுக்கு சென்றவர்கள் கடுமையாக சோதனை செய்யப்பட்டனர். மாலை பொன்னாடை என்பனவும் படையினரின் சோதனைக்குத் தப்பவில்லை 

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த கோவில்கள் பாடசாலைகள்வீடுகள்  என்பன படையினரால் அழிக்கப்பட்டன. அவை இருந்த அடையாளமே இப்போது இல்லை. இந்த நிலையில் பரிகாரம் தேடும் நோக்கில் அங்கு தப்பிப்பிழைத்த ஆலயத்தில் பொங்கிப் படையலிட்டார்கள்.  அரசாங்கத்தின் தேசியப் பொங்கல்விழாவில் விருப்பமின்றி கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவரின் கூற்று பொய்யல்ல. பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு அங்கிருக்கும் படையினர் வெளியேற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

 வடக்கில் உள்ள  இராணுவத்தின் தொகையைக் குறைக்கப்போவதில்லை என அழுத்தம் திருத்தமாக இதுவரைகாலமும் கூறிவந்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று கீழிறங்கி வந்து வடக்கில் உள்ள படையினர் வேறு இடங்களுக்கு  மாற்றப்படுவர்கள் என்றார். வடக்கில் நிலவும் சமாதான சூழல் தான் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்றார்.  இந்திய மீனவர்களின் அத்து மீறல் முற்றாக  ஒழியும் வரை வடக்கில் உள்ள  கடற்படையினரின் தொகை குறைக்கப்பட மாட்டாது. என்ற குண்டை  பிரதமர் தூக்கிப்போட்டுள்ளார்.

வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க,பிரிட்டிஷ் பொதுனலவாய அலுவல்கள் அமைச்சர் ஹியூகோஸ்வயர்,வடமாகாண  முதலமைச்சர். சீ.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையே முறுகல் ஆரம்பித்துவிட்டது.  என கடந்தகாலம் மின்னிய   தலைப்புச்செய்திகள்  மங்கிவிட்டன.இருவரும் கைலாகு  கொடுத்து மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும்  தேசியப் பொங்கல் விழாவில்  கலந்து கொண்டது அரசாங்கத்துக்கு வெற்றியை கொடுத்துள்ளது. வடமாகான சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கமும் அனந்தியும் தேசியப் பொங்கல் விழாவை எதிர்த்து  யாழ்ப்பணத்தில் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பட்டம் செய்தனர்.  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும், காணமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும்,பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவர்களினால் முன்மொழியப்பட்டன.அவர்களின் கோரிக்கைகள் தவறனவை அல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் யழ்ப்பனத்துக்கு விஜயம் செய்யும் நாளில் ஆர்ப்பட்டம் செய்யாது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆர்ப்பட்டம் செய்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். தலைவர்கள் வரும்போது எதிர்ப்புக் கட்டுவது தான் வழமையான  எதிர்ப்பின் அடையாளம். நாங்கள் எதிர்ப்பு காட்டினோம் என்பதை வெளி உலகத்துக்குத் தெரிவிக்கவே அவர்கள்  கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டம் நடத்தினர்.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்ற உண்மையை பிரதமர் மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளார். அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்களின் உயிர்  எப்படி யாரால்  பறிக்கப்பட்டது யார் கட்டளையிட்டது போன்றவற்றையும் பிரதமர் வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். தமிழ் மக்கல் மீது இதுவரை களமும் திணிக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை  வருத்தம் தெரிவிக்கவில்லை. அவைபற்றி நேர்மையுடன் கூறும் துணிவு சிங்களத்தலைவர்களுக்கு இல்லை. தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனக் கூறும் சிங்களவர்கள் துரோகிகளாகப்பர்க்கப்படுகிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யாழ்ப்பணத்தில் வலுவாகக் கால்  ஊன்ற தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. தேசியப் பொங்கல் போன்ற விழாக்கள அதற்கு துணைபோகின்றன. 

வானதி 
சுடர் ஒளி
ஜனவரி 20.26/16
No comments: