Friday, February 1, 2008

"அண்ணாவும் மூன்றெழுத்தே !"

"அண்ணாவும் மூன்றெழுத்தே !"தெள்ளுத் தமிழ்த் தீஞ்சுவையிற் துள்ளுதமி ழேயுதிர்
தீரனே திறமையென்னே
வள்ளுவர்தம் வேதமதை வாழ்வதனிலேதந்த‌
வள்ளலே வண்மையென்னே
கள்ளமில்லமனது கொண்டவொரு கொளகையே
கண்டவுயர் பண்புமென்னே
உள்ளுதொறு முந்னுரு செந்தமிழர் சிந்தைமிசை
எங்கணமி வங்குமன்றோ.

இருள்கொண்ட சமுதாய இன்னல்கள் தீரவே
இரவியே எனவுதித்தாய்
பொருள் கொண்டு வாழுயர் பேதமில்லாரிடைப்
பொன்னான காலமெல்லாம்
தெருள் கண்ட கல்வியால் தீனர்தம் பந்துவாய்த்
தென்னனாங் கோகார்த்தாய்
அருள் கொன்ட பார்வையால் அகிலமும் மேயாண்ட‌
அறிவான அண்ணலண்னா.

வால்காட்டி யேயிங்கு வகை காணும் மோர்தவம்
வளமார் தளைகாட்டிடும்
மால்காட்டு மாந்தருள் மாணிக்கமேயென்ன
ம‌கித‌ல‌ங் க‌ண்ட‌வுன்
பால்காட்டு வேத‌மாம் பண்போடு வ‌ரும்ரைப்
போத‌மே ய‌ணியுமானாய்
சூல் காட்டு குழ‌வியுஞ் சொல்லுமே யெங்ங‌ணும்
சொன்த‌மே எங்க‌ளண்ணா.

போதவிழ் பொயை போதெல்லாம் வாழ்ந்திடும்
பொலந்த ஈண்டுகமெல்லாம்
தாதவிழ் தேன்கொளத் தகமையில் லாததால்
தொலைதவுன் மேவு காணின்
நாதமர் வண்டினம் நாடியே வந்துயர்
நறியதேனுண்டு மீளும்
போதமர் க்தையினைப் புரியவே வைத்திடும்
புகழ்மேவும் அண்ணலாற்றல்.

தென்னாட்டிலே யுயர் சிவமெனப்போற்றிடும்
தெய்வமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே நல்ல சங்கம் வளர்த்ததமிழ்
தூயமொழி மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே பழம் பதியெனப் போற்றுயர்
தலமதுரை மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேதனித் தீர்த்தமாங் காவிரித்
தாயுமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபுகழ் உற்றவைகள் யாவுமே
தெளிவான மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபெருஞ் சோதியாய்த் தோன்ருமெம்
அண்ணாவும் மூன்றெழுத்தே.

கா.சூ.ஏகாம்பரம்
கரவெட்டி
03.02.1971
மித்திரன்

இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி இந்தக் கவிதையை பிரசுரித்துள்ளேன். சிலவரிகள் விடுபட்டுள்ளன. காரணம் தெளிவற்ற பிரதி. உங்களின் பார்வைக்காக பத்திரிகையின் ஸ்கேன் வடிவம்.

3 comments:

Thamizhan said...

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில்
அவரது மனித நேய மாண்புகளை எண்ணிப் பெருமை யுறுவோம்!
முதுகலைப் பட்டம் தங்கப் பதக்கத்துடன் பெற்றும் பொருள் தேடாமல் பெரியாரிடம்
தொண்டாற்றச் சென்றது.
காமராசரை ஆச்சாரியாரை எதிர்த்து முதலமைச்சருக்கு நிற்கச் சொல்லி ஆதரித்தது,
தேர்தலில் வென்றதும் நேரே திருச்சி சென்று அவரைத் தீவிரமாக எதிர்த்த
பெரியாரைச் சந்தித்து ஆலோசனைகள்
பெற்றது.
தன்னைத் தூற்றிய அனைத்துப் பெரியவர்களுக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் மரியாதை செய்தது.

DMK your days are numbered என்றக்
காங்கிரசுக் காரருக்கு Our steps are measured!என்று புன் சிரிப்புடன் பதிலளித்த சட்ட மன்ற வரலாறு.

மறப்போம்,மன்னிப்போம்!

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்!
அவரது பெயரைச் சொல்வோர் அவரைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருந்தால்
நல்லது.

ஜித்தன் said...

வாழ்வு மூன்று எழுத்து
வாழ்விற்கு தேவையான
பண்பு - மூன்று எழுத்து
பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து
அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து
காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து
வீரர் சொல்லும் களம் மூன்று எழுத்து
களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து
நம்மையெல்லாம் வாழ்வித்த அண்ணாவும் மூன்று எழுத்து

வர்மா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழன் மற்றும் ஜித்தன்.