அழகான கிராமத்துப் பெண் அழகில்லாத கிராமத்தவனை மணப்பதனால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி.
வண்டிச்சோலை என்ற அழகான கிராமத்தில்செம்பட்ட என்ற இளைஞன். அந்த ஊரில் உள்ள அனைவரும் அவனை செம்பட்ட என்றே அழைப்பார்கள். அழுக்கான உடையும் அவலட்சணமாக உள்ள அவனை முதன் முதலில் பார்ப்பவர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். அந்த கிராமத்திலுள்ள சகலரின்தேவைகளையும் நிறைவேவற்றுபவன். அக்கிராமமக்கள் அவனிடத்தில் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செம்பட்டபோபாகும்போது தமக்குதேதவையானவைகளை சகலரும் சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்லிவிட்ட பொருட்களை மறக்காமல் வாங்கி வந்து அவர்களிடம் கொடுப்பான் செம்பட்ட.
செம்பட்டயாக சிவகுமார் மிக இயல்பாக நடித்தார். சிவகுமாரின் மனைவி தீபா மிகவும் அழகானவள். தன் அழகு பற்றி மிகப் பெருமைக் கொள்வாள். தன் கணவன் அழகற்றவன் என்ற எண்ணம் தீபாவின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. வெறுப்புடனேயே கணவனுடன் வாழ்ந்து வந்தாள் தீபா. அந்த கிராமத்துக்கு வன இலாகா அதிகாரியாக வருகிறார் சிவச்சந்திரன். சிவச்சந்திரனின் அழகும் நாகரிக நடை உடை பாவனையும் தீபாவைக் கவர்ந்துவிட்டது.
தீபாவும் சிவச்சந்திரனும் நெருங்கி பழகுகின்றார்கள். சிவச்சந்திரனின் அழகில் மயங்கிய தீபா கால போக்கில் சிவச்சந்திரனிடம் தன்னை@ய இழக்கிறாள். தீபாவுக்கும் சிவச்சந்திரனுக்கும் இடையேயான உறவு பற்றி ஊர் மக்களுக்கு தெரிய வருகிறது. தீபாவைப் பற்றி சிவகுமாரிடம் ஊர் மக்கள் கூறுகின்றனர். தன் மனைவி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள சிவகுமார். அவற்றை நம்பவில்லை. சிவச்சந்திரனுடன் தீபா ஊரை விட்டு ஓடியதால் அதிர்ச்சியில் சிவகுமார்தற்கொலைசெய்கிறார் இறந்துவிடுகிறார்.
சிவகுமார், தீபா, சிவச்சந்திரன், வினு சக்கரவர்த்தி, ஹெரான் ராமசாமி ஆகியோர் நடித்தனர். சிவகுமாரின் 100 வது படமான ரோஜாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. வசனம் கிருஷ்ணா இயக்கம் இரட்டையர் தேவாஜ்மோகன்.
புலமைப் பித்தன், கங்கை அமரன் ஆகியோரின் பாடல்களுக்கு இமை அமைத்தவர் இளையராஜா. வெத்தல வெத்தல வெத்தலயோ, மாமன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுத்தான், என்னுள் எங்கோ ஏங்கும் கீதம், உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி உச்சி மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ரமணி
மித்திரன் 04/02/12
No comments:
Post a Comment