Wednesday, August 29, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 40


பெங்களூரில் உள்ள பெண்ணொருத்திக்கு அமெரிக்காவில் உள்ள இளைஞனை நிச்சயதார்த்தம் செய்கிறார்கள் பெற்றோர். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்க மாப்பிள்ளை எனத் தன்னை அறிமுகம் செய்து பழகுகிறான். உண்மை தெரிந்த அப்பெண் அதிர்ச்சியடைகிறாள். நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையைத் திருமணம் செய்
வதா? ஐந்து நாட்கள் மட்டும் பழகிய மனதில் இடம் பிடித்த இளைஞனைத் திருமணம் செய்வதா எனத் தடுமாறும் பெண்ணின் கதைதான் மின்னலே.

மாதவனும் அப்பாஸூம் ஒரே கல்லூரியில் படித்திருக்கிறார்கள். மாதவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பாஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கலாட்டா, அடிதடி, நையாண்டி என்பனவற்றில் காலம் கடத்தும் குண இயல்வுடையவர் மாதவன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும் அப்பாஸ்ஸைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் எப்பவும் இருக்கும். கல்லூரியில் எதிரும் புதிருமாக இருக்கும் மாதவனும், அப்பாஸூம் தமக்கென ஒரு கோஷ்டியை வைத்திருப்பதால் இரண்டு கோஷ்டிகளும் சந்திக்கும் போது முறுகல் ஏற்படும்.கல்லூரி இறுதி நாளில் ஒருவருடன் ஒருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி பிரிகிறார்கள். இன்று பிரிந்தாலும்
என்றோ ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் உள்ளது. இதுதான் இறுதிச் சந்திப்பு. இனிமேல் நாங்கள் சந்திக்கக் கூடாது என்று கூறி மாதவனும் அப்பாஸூம் விடை பெறுகின்றனர்.

தொழில் கிடைத்து அப்பாஸ் அமெரிக்காவுக்குச் செல்கிறார். மாதவனுக்கு இந்தியாவில் வேலை கிடைக்கிறது. 10 ஆயிரம் டொலர் சம்பளத்துடன் சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லும்படி மாதவனிடம் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கிறது. பணத்தைவிட தாத்தாதான் முக்கியம் என்று சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல மறுக்கிறார் மாதவன். திருமணம் முடிக்கும்படி மாதவனின் தாத்தா நாகேஷ் நெருக்குதல் கொடுக்கிறார். திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் மாதவன். மாதவனுக்கு அறிவுரை கூறும்படி நண்பன் விவேக்கிடம் கூறுகிறார் நாகேஷ். யாருடைய ஆலோசனையையும் கேட்காது திருமணம் செய்வதில்லை என்ற முடிவை மாற்ற முடியாதுது என்கிறார் மாதவன்.

பெங்களூரில் ஒருநாள் இரவு கடும் மழை பெய்துகொண்டிருக்கும் போது பொதுத் தொலைபேசியிலிருந்து நாகேஷிடம் கதைக்க டயல் செய்கிறார் மாதவன். மழையில் நனைந்தபடி சில சிறுவர்கள் வெள்ளத்தில் விளையாடினார்கள். வீதி ஓரத்திலே இயந்திரக்கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்து ஒரு அழகு தேவதை இறங்கி அச்சிறுவர்களுடன் மழையில் நனைந்து விளையாடியது. மழை இருட்டில் மின்னும் வெளிச்சத்தில் அந்தஅழகு தேவதை ரீமாவைக் காண்கிறார் மாதவன். நாகேஷýடன் கதைக்க டயல் செய்ததையும் மறந்து ரீமாவின் அழகில் சொக்கிப் போனார் மாதவன். இயந்திரம் சீராக்கப்பட்ட பின் காரில் ஏறிச் சென்றார் ரீமா. ரீமா சென்று வெகு நேரமாகியும் அந்த அழகு சிலையை மறக்க முடியாது தன்னை மறந்து நின்றார் மாதவன்.
சென்னையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ரீமாவைக் கண்டு மோட்டõர் சைக்கிளையும், பின்னால் இருந்த விவேக்கையும் நடு றோட்டில் விட்டுவிட்டு ரீமாவைத் தேடி ஓடிய மாதவன். ரீமாவைக் கண்டு அவர் பின்னால் செல்கிறார். அங்கே விவேக்கும் வருகிறார். பெங்களூரில் கண்ட அழகு @தவதை ரீமாவை விவேக்குக் காட்டுகிறார் மாதவன். ரீமா சிநேகிதியுடன் செல்ல இருவரும் பின் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் ரீமாவையும் சிநேகிதியையும் தவறவிட்டுவிட்டான். ரீமாவின் நினைவால் பைத்தியம் போலாகி விட்டார் மாதவன். ரீமா தன் சிநேகிதியை மரக்கறிச் சந்தையில் கண்ட விவேக் மாதவனை உடனே வரும்படி அழைக்கிறார். இருவரும் சிநேகிதியிடம் ரீமாவைப் பற்றி விசாரிக்கின்றனர். ரீமாவின் சிநேகிதி என்றும் தொலைபேசி இலக்கம் தவறி விட்டதாகவும் கூறி தொலைபேசி இலக்கத்தை வாங்குகிறான் மாதவன். பெங்களூரிலிருந்து மாற்றலாகி ரீமா சென்னைக்கு வந்து விட்டதாகக் கூறுகிறார் சிநேகிதி. வாய் உளறி இருவரும் உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். அப்போது ரீமாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை அடுத்த வாரம் போவதாகக் கூறி தொலைபேசி இலக்கத்தை மறந்து விடும்படி கூறுகிறார் ரீமாவின் சிநேகிதி. அதைக் கேட்ட மாதவன் தன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக உணர்கிறார்.

அமெரிக்க மாப்பிள்ளையை ரீமாவுக்கு தெரியாது. தொலைபேசியில் கதைப்பார் என்பதை மாதவன் அறிகிறார். இன்னொருவனுக்கு நிச்சயம் பண்ணிய பெண் என்றாலும் ரீமாவை இழப்பதற்கு மாதவன் விரும்பவில்லை. விவேக்கும் நண்பிகளும் ரீமா வீட்டின் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கின்றனர். ரீமா அமெரிக்கா மாப்பிள்ளையை பார்க்கவில்லை என்பதனால் அமெரிக்க மாப்பிள்ளையாக செல்லும்படி தாத்தா நாகேஷ் ஆலோசனை கூறுகிறார். முதலில் தயங்கிய மாதவன் பின்னர் ஆள் மாறாட்டம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

ரீமாவின் வீட்டிற்குத் திடீரென ஒருநாள் சென்ற மாதவன் தான்தான் அமெரிக்க மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்துகிறார். ரீமா ஆச்சரியப்படுகிறார். மாதவன் தான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்று தவறாக நினைத்து மகிழ்ச்சியடைகிறாள். இருவரும் பல இடங்களுக்கும் செல்கின்றனர். ஐந்து நாட்களில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர்.

அமெரிக்க மாப்பிள்ளையின் பெற்றோர் தம் மருமகள் ரீமாவைச் சந்தித்து தமது மகன் இந்தியாவுக்கு வரப்போவதாகக் கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளை ஐந்து நாட்களாகத் தன்னுடன் ஊர் சுற்றியதை ரீமா அவர்களுக்குச் சொல்லவில்லை. மாப்பிளையை பார்க்க ரீமாவும் பெற்றோரும் பெங்களூர் சென்றனர். வீட்டில் அனைவரும் பழைய ஞாபகங்களைக் கூறியபடி சந்தோஷமாக இருக்கின்றனர். மாப்பிள்ளையைக் கூப்பிடும்படி ரீமாவின் பெற்றோர் அவசரப்படுத்தினர்.தலை குனிந்து இருந்த ரீமா தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அங்கே மாதவன் இல்லை. அப்பாஸ் கையை நீட்டிக் கொண்டிருந்தார். அப்பாஸை முதன் முதல் கண்டதும் ரீமா அதிர்ச்சியடைந்தார். தன்னை யாரோ ஏமாற்றி விட்டதாக அப்போது உணர்ந்தாள். தன்னை ஏமாற்றியவர் யார்? ஏன் அவர் ஏமாற்ற வேண்டும் என்று சிந்தித்தாள். உண்மையைச் சொல்ல முடியாது தடுமாறினாள். தன்னை சுதாகரித்துக் கொண்ட ரீமா அப்பாஸின் கையைப் பிடித்து போலியாகச் சிரித்தாள். 

சென்னைக்குத் திரும்பிய ரீமா தான் ஏமாந்த கதையைத் தன் சிநேகிதியிடம் கூறுகிறார். அமெரிக்க மாப்பிள்ளை என்று தன்னை ஏமாற்றியவன் யாரென தெரியாதெனக் குமுறுகிறாள். அப்போது இரண்டு பேர் தன்னிடம் ரீமாவைப் பற்றி விசாரித்ததை கூறுகிறார் சிநேகிதி. ரீமாவிடம் உண்மையை கூறுவதற்காகச் சென்ற மாதவனை அடையாளம் காண்கிறாள் சிநேகிதி. ரீமாவின் மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டார். அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது எனக் கூறி மாதவனைப் போகச் சொல்கிறார் சிநேகிதி.ரீமாவை ஏமாற்ற விரும்பவில்லை. உண்மையைக் கூறத்தான் வந்தேன். ரீமாவை விரும்புகிறேன் என்கிறார் மாதவன். தன்னை ஏமாற்றிய மாதவனை வெளியே போகும்படி கூறுகிறார் ரீமா.

ரீமா தன்னை வெறுப்பதைத் தெரிந்து கொண்ட மாதவன் அடுத்து என்ன செய்வதென்று நண்பர்களுடன் ஆலோசனை செய்தார். அமெரிக்க மாப்பிள்ளையைத் தூக்க வேண்டும் என்று நண்பர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அமெரிக்க மாப்பிள்ளையை மிரட்டுவதற்காக மாதவனும் நண்பர்களும் செல்கின்றனர். அங்கே எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று மாதவனுக்கு ஏற்படுகிறது. ரீமாவை மணமுடிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த மாப்பிள்ளை மாதவனின் பரம எதிரியான அப்பாஸ் என்பது தெரியவருகிறது. இனி நாம் சந்திக்கக்கூடாது என்று கல்லூரியில் சபதம் செய்து பிரிந்த மாதவனும் அப்பாஸும் ஒரு பெண்ணை மணப்பதற்காக மீண்டும் சந்திக்கின்றனர்.

மாதவனின் மிரட்டலுக்குப் பயப்படாத அப்பாஸ் ரீமாவைத் திருமணம் செய்வதில் உறுதியாக உள்ளார். திருமண ஏற்பாடு தடல் புடலாக நடைபெறுகிறது. ரீமாவின் மனம் மாதவனை நினைத்து குமுறுகிறது. மாதவனுக்காக அப்பாஸிடம் தூது செல்கிறார் நாகேஷ். மாதவனின் மிரட்டுதலுக்கு பயப்படாது ரீமாவைக் கரம் பிடிக்கப் போவதாகக் கூறுகிறார் அப்பாஸ். ரீமா தனக்குக் கிடைக்கமாட்டார் எனத் தெரிந்ததும் மனமுடைந்த மாதவன் ரீமாவின் திருமண நாளில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் . தேவாலயத்தில் பாதிரியார் முன்னிலையில் ரீமாவின் கையைப் பிடிக்கிறார் அப்பாஸ். பாதிரியார் சொல்வது எதுவும் ரீமாவில் மனதில் ஏறவில்லை. மணப்பெண்ணின் பிடி நழுவுவதை தெரிந்து கொண்ட அப்பாஸ் ரீமாவுடன் தனியாகப் பேசவேண்டும்  என்கிறார். அப்பாஸ் என நினைத்து மாதவனுடன் பழகியதையும் மாதவனை மறக்க முடியாததையும் கூறுகிறார் ரீமா.நண்பர்களிடம் விடை பெற்று விமானத்தை நோக்கிச் செல்கிறார் மாதவன். அப்போது அப்பாஸ் அங்கு வருகிறார். இருவருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்படுமோ என்று நினைக்கும் போது ரீமாவை மாதவனிடம் ஒப்படைக்கிறார் அப்பாஸ்

.வித்தியாசமான திரைக்கதையை கையியலெடுத்து தமிழ்த்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் கௌதம். ரீமா சென்னின் முதல் தமிழ்ப்படம். இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஹரிஸ் ஜெயராஜ் ரசிகர்களின் மனதில் சட்டெனப் புகுந்து இடம்பிடித்தார். மாதவன், அப்பாஸ் நாகேஷ், விவேக், ரீமா சென் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்தனர்.
ஓ..மாமாமா மாமு மாமு..., அழகிய தீயே எனை வாட்டுகிறாயோ, இவன் யாரோ இவன் யாரோ, இரு விழி இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே..., வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்காமேகத்துக்கா சொல்லு.. ஆகிய பாடல்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தன. வசீகரா என் நெஞ்சினிக்க... என்ற பாடலை முணு
முணுக்காதவர்களே இல்லை.

ரமணி
மித்திரன்26/08/12

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான, விளக்கமான விமர்சனம்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன் வர்மா