Wednesday, August 22, 2012

திரைக்குவராதசங்கதி 43


தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு'' என்ற பாடலைஎழுதியவர் நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படும் வெ. ராமலிங்கம்பிள்ளை. அந்தக்காலத்திலே அப்பாடல் ஒலிக்காத இடமேஇல்லை.நாமக்கல்கவிஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைவிமர்சிப்பவர்களில் கலைஞரும் ஒருவர்.இருவருக்கும் இடையே தொடர்பு எதுவும்இல்லாததும் இருவரும் எதிரெதிர் முகாம்களில்இருந்ததும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்தது.

நாமக்கல் கவிஞர் எழுதிய மிகச் சிறந்த நாவல்"மலைக்கள்ளன்'. அந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த கோவை பட்சி ராஜபிலிம்ஸ் அதிபர் ஸ்ரீராமுலுநாயுடு அதனைப்படமாக்க விரும்பினார். கலைஞரின் திரைக்கதையில் வெளியான படங்கள் பெருவெற்றி பெற்றதால் அப்படத்துக்குக்கதை,வசனம் எழுதும்படி கலைஞரைக்கேட்டார் ஸ்ரீராமுலு நாயுடு.

நாமக்கல் கவிஞரின் நாவலுக்கு திரைக்கதைவசனம் எழுதுவதற்கு கலைஞர்மறுத்துவிட்டார். அப்படத்தின் நாயகனான,எம்.ஜி.ஆரையும் டி.பாலசுப்பிரமணியத்தையும் கலைஞரிடம் தூதுவிட்டார்ஸ்ரீராமநாயுடு. அவர்களின் வேண்டுகோளுக்குமதிப்பளித்த கலைஞர், மலைக்கள்ளன்படத்துக்கு திரைக்கதை வசனம்எழுதினார்.எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் பெரு வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருது பெற்ற முதலாவதுதமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல்கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின்சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கலைஞர்.திருச்சியில் ஓவியன் என்ற நாடகம் எம்.ஜி.
ஆரின் முன்னிலையில் கலைஞரின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவிலேபேசிய கலைஞர் ""புரட்சி நடிகர்'' என எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டார். அன்றிலிருந்துபுரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் என்று அனைவரும் அழைத்தார்கள். பின்னர் அதுவே ""புரட்சித் தலைவர்'' என்ற பெயர் வரக்காரணமானது.
கலைஞரால் புரட்சி நடிகர்என அழைக்கப்பட்டவர்தான் புரட்சித் தலைவராகிகருணாநிதியைஎதிர்த்துதமிழகத்தில்ஆட்சி புரிந்தார்.இதன்பின்னணியிலேயே ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்றார்கள். விஜயகாந்தைபுரட்சிக் கலைஞர்என்றார்கள்.புரட்சிஎன்றபட்டப்பெயர்உடையஅனைவரும்அரசியலில் கலைஞருக்கு எதிரானவர்களாகவே உள்ளனர்.


மேகலா பிக்ஸர்ஸ் தயாரித்த வெற்றிப்படங்களில் ஒன்று குறவஞ்சி. குறவஞ்சி படத்துக்குகதை வசனம் எழுதியவர் கலைஞர்.மேகலா பிக்ஸர்ஸ் தயாரிப்பாளர்களில்கலைஞரும் ஒருவர்."குறவஞ்சி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடித்தனர். அப்படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் எஸ்.எஸ்.ஆர்.,விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர்.எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோரின் நடிப்பில் குறவஞ்சிஐயாயிரம் அடிக்கு மேல் படமாக்கப்பட்ட நிலையில் முக்கியமான வசனம் ஒன்றைப் பேசுவதற்கு ராஜசுலோசனா மறுத்துவிட்டார்."கடவுளே உனக்கு கண் இல்லையா' என்ற வசனம் கடவுளைத்திட்டுவதாகக் கூறி அதனைப் பேசராஜசுலோசனா மறுத்துவிட்டார். வசனத்தை மாற்றிஎழுதும் படி ராஜசுலோசனாவின்கணவர் கலைஞரிடம் கூறினார். கலைஞர் அதற்கு மறுத்துவிட்டார். ராஜசுலோசனாவை நீக்கிவிட்டு சாவித்திரியை ஒப்பந்தம் செய்தனர்.இந்த நிலையில் எஸ்.எஸ்.ஆரும் விஜயகுமாரியும் திருமணம் செய்தனர். அவர்களினால் படப்பிடிப்பு தடைப்பட்டது.படம் பாதிக்கு மேல் முடிந்துவிட்டது.அவர்கள் இல்லாமல் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குறவஞ்சி படத்தின் நிலையை நடிகர்திலகத்திடம் கூறி குறவஞ்சி படத்தில்நடிக்க வேண்டும் எனக் கேட்டார்கலைஞர். நடிகர் திலகமும் ஒப்புக்கொண்டார்.
பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில்படமாக்கப்பட்ட குறவஞ்சி வெற்றிப்படமானது.அப்படத்தின் வெற்றிக்குநடிகர் திலகம் தான் காரணம் என்பதை கலைஞர் ளிப்படையாகஒப்புக்கொண்டார்
.இளையராஜாவின்இசை தமிழ்த்திரைப்படங்களில் கோலோச்சத் தொடங்கிய காலகட்டத்தில்அவருக்கு காரைக்குடியில் பாராட்டுவிழா நடந்தது. அந்த விழாவில் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜா கலைஞரின் நெருங்கிய நண்பர்.இளையராஜாவுடன் கலைஞர் பழகவில்லை.நண்பனின் தம்பிக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் கலந்து கொள்வதற்குசென்னையிலிருந்து காரைக்குடிக்குச் சென்றார் கலைஞர்.

காரில் பயணம் செய்யும்போது இளையராஜாவின் இசையைக் கேட்டுக்கொண்டேசென்றார் கலைஞர். இளையராஜாவின்இசை கலைஞரைக் கட்டிப்போட்டது.இளையராஜாவுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அவரது இசையைப்பற்றி பலரும் புகழ்ந்து பேசினார்கள்.
அங்கு பேசியவர்கள் இளையராஜாவின்இசைக்கு மயங்கியவர்கள்.நிறைவுரையாற்றகலைஞர் மைக்கின் முன்னே சென்றார்.அந்த மேடையில் இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் இசைஞானி.இன்று இசைஞானி என்றால்அது இளையராஜாதான்என்றுமாறிவிட்டது.
ரமணி
மித்திரன்07/01/2007
102


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்தேன்... பகிர்வுக்கு நன்றி...

வர்மா said...


தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்நன்றி
அன்புடன்
வர்மா