Monday, August 6, 2012

மது இல்லாத தமிழகம் ஜெயலலிதாவின் புது வியூகம்



இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார். தமிழகப் பெண்களின் மனதில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளõர் ஜெயலலிதா. தமிழ் நாட்டில் உள்ள மதுபானக் கடைகளை இழுத்து மூடுவதற்கு முடிவு செய்துள்ளõர் ஜெயலலிதா.

தமிழ் நாட்டுக்கு அதிக வருமானத்தை அள்ளிக் கொடுப்பவை மதுபானக் கடைகளே. மது அருந்துவதனால் குடும்பங்களுக்குள் பெரும் பிரச்சினைகள் உருவாகின்றன. இள வயதுடையவர்கள் மதுவுக்கு அடிமையாவதனால் அவர்களது எதிர்காலம் பாழாகிறது. மது அருந்துபவர்களினால் கலை, கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்ற காரணங்களினால் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது. அந்தக் கோரிக்கையை தனக்குச் சாதகமாக பயன்படுத்தும் காரியத்தில் முனைப்புக் காட்டுகிறார் ஜெயலலிதா.

தமிழகத்தில் மது விலக்கு அமுல்படுத்தினால் பல குடும்பங்கள் மகிழ்ச்சியடையும். பெண்களின் ஆதரவு அபரிமிதமாகக் கிடைக்கும். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனால், தகப்பனால் ஏற்படும் களேபரம் இல்லாது ஒழிந்து விடும் என நம்பும் பெண்கள் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள். தமிழகத்துக்கு அதிக வருவாயை தரும் மதுபானக் கடைகளை மூடினால் இழக்கப் போகும் வருமானத்தை எப்படிப் பெறுவது என்று நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஜெயலலிதா. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளது. அங்கு மதுபானக் கடைகள் எவையும் இல்லை. மது விலக்கால் இழந்த வருமானத்தை குஜராத்மாநிலம் எப்படிச் சமாளிக்கிறது என்பதை அறிந்து அதேபோன்று அல்லது அதற்கு ஒப்பான வருமானத்தைப் பெறும் திட்டங்களை நிபுணர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா.
இலவசங்களால் பெற்ற ஆட்சியை ஜி 2 அலைவரிசையினால் இழந்த கருணாநிதி அடுத்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார். இதேவேளை, காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லாத டெசோ மாநாட்டைப் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார். கருணாநிதியின் வியூகத்தை முறியடிப்பதற்காகவே மது விலக்கு என்ற பிரமாஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா.

காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் 2ஆம் திகதி அல்லது ”தந்திர தினமான ஓகஸ்ட் 15ஆம் திகதி தமிழகத்தில் மது விலக்கு அமுல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் உயர்தர ஹோட்டல்களில் வெளிநாட்டினருக்கு மது வகை வழங்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் தோல்வியடைந்தாலும் அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத அவர் இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசை அமைக்கும் சக்தியை எதிர்பார்க்கிறார். தமிழகத்தின் ஆட்சி ஜெயலலிதாவிடம் இருந்தாலும் இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு எதிராகவே உள்ளது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுடன் இணைந்து இருப்பதனால் ஜெயலலிதாவினால் நினைத்தைதைச் சாதிக்க முடியவில்லை. ஆகையினால் மத்திய அரசை அமைக்கும் பொறுப்பை எதிர்பார்க்கிறார் ஜெயலலிதா
.
தமிழகத்தில மதுபானக் கடைகளைப் பூட்ட வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி பீடம் ஏறினால் மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அடிக்கடி அறிக்கை விடுக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ். மதுக் கடைகளைப் பூட்டியதால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

மதுவுக்கும் புகைத்தலுக்கும் கடுமையான எதிர்ப்பைக் காட்டி வரும் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் மதுவிலக்குக்கு பூரண ஆதரவு கொடுப்பார்கள். வைகோ, விஜயகாந்த் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் மது விலக்கு அமுல்படுத்தினால் சந்தோஷப்படுவார்கள். ஜெயலலிதா அமுல்படுத்தத் தயாராகும் மது விலக்கு கருணாநிதிக்கு பெருந்தலையிடியைக் கொடுக்கப் போகிறது.
ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கிடையேயான அதிகாரப் போட்டி மதுரை மாநகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற அழகிரியின் ஆதரவாளர்கள் வெறும் கையுடன் மதுரைக்குத் திரும்பியுள்ளனர். மதுரையில் அழகிரியின் செல்வாக்கு உள்ளது. அங்கு ஸ்டாலினின் ஆதவாளர்களினால் பெரிதாக எதனையும் Œõதிக்க  முடியாதுள்ளது.

தமிழகம் எங்கும் இளைஞர் அமைப்பை வலுப்படுத்தும் ஸ்டாலின் மதுரையிலும் இளைஞர் அமைப்பை உருவாக்கினார். ஸ்டாலினின் மதுரை விஜயம் அழகிரியின் ஆதவாளர்களினால் ஏற்றுக் கெள்ளப்படவில்லை. அவர்களையும்மீறி மதுரையில் காலடி வைத்து சில நியமங்களைச் செய்தார் ஸ்டாலின்.
ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்களை மாற்றுவதற்கு கருணாநிதி விரும்பவில்லை என அழகிரியின் ஆதரவாளர்கள் அறிந்து கொண்டார்கள். ஸ்டாலின் நியமித்த இளைஞர் அணி உறுப்பினர்களுடன் அழகிரியின் ஆதரவாளர்கள் இணைந்து செயற்படத்தயாராக இல்லை. அழகிரி ஸ்டாலின் பிரச்சினையில் மதுரையில் மீண்டும் ஒரு சிக்கலை எதிர்நோக்க உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஸ்டாலின் நியமித்த இளைஞர் அணி உறுப்பினர்களுடன் அழகிரியின் ஆதரவாளர்கள் இணைந்து செயற்படத்தயாராக இல்லை. அழகிரி ஸ்டாலின் பிரச்சினையில் மதுரையில் மீண்டும் ஒரு சிக்கலை எதிர்நோக்க உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு05/08/12

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... பகிர்வுக்கு நன்றி ஐயா...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

வர்மா said...

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா