Saturday, November 23, 2013

நிறைவடைந்தது சாதனைப் பயணம்

                ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டியிலிருந்து விடை பெற்றார். ஒருநாள், ரி20 போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திய சச்சின் .பி.எல்., ரஞ்சி, சம்பியன் லீக், டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் விளையாடினார். .பி.எல்., ரஞ்சி, சம்பியன் லீக் ஆகியவற்றிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் மேற்கு இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு தனது கிரிக்கெட் சீருடையைத் துறந்தார்.

                கிரிக்கெட் என்றால் சச்சின். சச்சின் என்றால் சாதனை என்பது கிரிக்கெட் உலகின் பொன்மொழி போல் உள்ளது. தனது 16வது வயதில் இந்திய அணியில் சச்சின் இடம்பிடித்த போது அவர் மீதான எதிர்பார்ப்பு எதுவும் இருக்கவில்லை. மிகப் பெரிய ஜாம்பவான்களுக்கு முன்னால் ஒரு குட்டிப் பையனாகவே அவர் வலம் வந்தார். கிரிக்கெட் போட்டியின் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டபின் எதிரணியை மிரட்டும் வீரராக விஸ்வரூபம் எடுத்தார்.

                டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அவர் நிலைத்து நின்று ஆடத்தொடங்கிவிட்டால் எதிரணி வீரர்களும், ரசிகர்களும் பதற்றமடையத் தொடங்கிவிடுவர். சுழல் பந்துகளையும், வேகப்பந்துகளையும் தனக்குச் சாதகமாக்கி ஓட்டங்களைக் குவித்துப் போட்டியை இவர் தனது கையில் எடுத்து விடுவார். அப்போது, சச்சினின் சதத்தைத் தடுப்பதில் எதிரணி வீரர்கள் முனைப்புக் காட்டுவார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கி சதத்தில் சாதனை படைத்தார் சச்சின்.

                ஜென்டில்மன் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஜென்டில் மென்னாக வலம் வருபவர்களில் டெடண்டுல்கர் முதன்மையானவர். தென் ஆபிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் மைதானத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சினையில் ஹர்பஜனுக்குச் சார்பாக சாட்சியளித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. சதத்தை நெருங்கும் போடு ஆட்டமிழந்தால் கவலைப்படாது வெளியேறி விடுவார். சதத்தை நெருங்குகையில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டாலும் அமைதியாகச் சென்று விடுவார்.

                இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடையும் அணித்தலைவர்கள் தாம் சச்சினிடம் தோல்வியடைந்ததாகவே கருதுவர். வருடம் கூடக்கூட சச்சினின் ஓட்ட எண்ணிக்கை அதிகமானது. ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்கும் போது சாதனைப் பட்டியல் நீளமாகியது. சச்சினுக்கு உலகெங்கும் இலட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விளையாட்டை ரசித்தவர்க
ள் பலர் கிரிக்கெட் வீரர்களாக மாறினர்டென்னிஸ் வீரர் ஜோன் மைக்கன்ரோவின் தீவிர ரசிகர் சச்சின்அவரைப் போன்றே தலைமயிர் வளர்த்து தலையிலே பட்டி அணிந்து வலம் வந்தார்ஜோன் மன்கன்ரோபீட்சாம்ராஸ்பொரிஸ்பெக்கர்மரடோனாகவாஸ்கர்விவியன்ரிச்சட்ஸ்இம்ரான்கான் ஆகியோரின் விளையாட்டை விரும்பிப் பார்ப்பார்ரெனிஸ்கார்ரேஸ் ஆகிய போட்டிகளில் மனதைப் பறிகொடுத்த சச்சின் அப்போட்டிகளைக் கண்டு ரசிப்பதற்காக மைதானத்துக்குச் செல்வார்.


 சச்சின் மீது தீராத மோகம் கொண்ட ரசிகர்கள் பலர் தமது பெயருடன் சச்சின்  என இணைத்தனர்அதிதீவிர ரசிகர்கள் சிலர் தமது பிள்ளைகளுக்கு சச்சின்  எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்ஹிந்தி இசை அமைப்பாளர் சச்சின் தேவ் பரமனின் இசையில் மயங்கியதால் தான் தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் எனப் பெயர் சூட்டினார் சச்சினின் தகப்பன்.

                சச்சினின் அதிரடியால் கலங்கிய இங்கிலாந்து பந்துவீச்சாளரான அலக் முல்லாவி அகலமான துடுப்பைப் பாவித்து சச்சின் விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்பரிசோதனையின் பின் அவரது குற்றச்சாட்டுப் பொய் எனக் கண்டறியப்பட்டது.


 

                கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டானதும் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்று விரும்பினார் சச்சின். டென்னிஸ் லில்லியிடம் பயிற்சிபெற சென்னைக்குச் சென்றார். சச்சினின் துடுப்பாட்ட உத்தியை நன்கு அவதானித்த லில்லி, அவரின் வேகப்பந்து ஆசைக்குத் தடைபோட்டுத் துடுப்பாட்டத்தில் பயிற்சி பெறும்படி ஆலோசனை கூறினார். லில்லியின் ஆலோசனைப்படி செயற்பட்ட சச்சின் இன்று கிரிக்கெட் உலகின் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகள் பலவற்றின் நாயகனாக விளங்குகின்றார்.

                ரஞ்சி, இராணி, துலீப் போட்டிகளில் அறிமுகமானபோது சதமடித்து தனது திறமையை நிரூபித்தார். சச்சினின் திறமையால் கவரப்பட்ட தேர்வுக் குழு அவரை இந்திய அணியில் விளையாடச் சிபார்சு செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றி னார் சச்சின். தனது 79வது போட்டியில் முதலாவது சதத்தை அடித்தார். இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது சதத்தை அடித்தார். அதன் பின் தனது விஸ்வரூப ஆட்டத்தின் மூலம் சதத்தில் சதம் கண்டார்.


                1992ஆம் ஆண்டு இங்கிலாந்து லக்ஷையர் அணிக்கு விளையாடினார். அந்த அணியில் விளையாடிய முதலாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார். ஆட்ட இழப்பில் சந்தேகம் ஏற்பட்டால் மூன்றாவது நடுவரின் முடிவுக்குக் காத்திருப்பதை ரசிகர்கள் அறிவார்கள். மூன்றாவது நடுவரின் முடிவால் ஆட்டமிழந்த முதலாவது வீரர் சச்சின் டெண்டுல்கள் 1992ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக கேப்டவுணில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

                1995ஆம் ஆண்டு வேர்ல்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியப் பணத்தில் 31.5 கோடி ரூபா பெற்றார். அதிக தொகைக்கு ஒப்பந்தமான முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி வரை தனது துடுப்பில் ஸ்ரிகர் எதனையும் ஒட்டவில்லை. மதுபானம், புகையிலை போன்ற விளம்பரங்களில் இவர் தோன்றியதில்லை


வலது கை துடுப்பாட்ட வீரரான சச்சின் இடது கையால் எழுதுவார். பஸ்ஸில் பயணம் செய்கையில் இடது பக்க முன் ஆசனத்தில் இருப்பார். இடது கால் சொக்ஸையே முதலில் போடுவார். சச்சினைத் திருமணம் முடிக்கமுன்பு அஞ்சலிக்கு கிரிக்கெட்டைப் பற்றி எதுவுமே தெரியாது. சச்சின் துடுப்பெடுத்தாடும் போது சாப்பிடமாட்டார். தொலைபேசியில் கதைக்கமாட்டார்.

                தனக்குக் கிடைக்கும் விருதுகளையும், பரிசுகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பார். 1990ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டபோது வழங்கப்பட்ட  ஷம்பெயன் போத்தலை எட்டு வருடங்களின் பின்னர் மகளின் முதலாவது பிறந்த நாளன்று உடைத்தார்.

                சச்சின் டெண்டுல்கர் துடுப்பெடுத்தாடக் களம் புகுந்தால் இந்திய ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை அதிர வைக்கும். சச்சின் ஆட்டம் இழந்துவிட்டால் எதிரணி வீரர்களும், ரசிகர்களும் அளவில்லா மகிழ்ச்சியடைவர். பந்து வீச்சாளர்கள் அனைவரும் சச்சினையே குறைவைப்பார்கள். சச்சினின் விக்கெட்டை வீழ்த்துவதை செயற்கரிய செயலாகவே கருதினர். கடந்த மூன்று வருடங்களாக சச்சினின் ஆட்டம் சோபை இழந்தது. புதிய பந்து வீச்சாளர்களை தடுமாற்றத்துடன் எதிர்கொண்டார். மிகப்பெரிய ஜாம்பவான்களுக்கே தண்ணிகாட்டிய சச்சின் இன்று அறிமுக வீரர்களிடம் சரணடைகிறார்.

                சச்சின் ஓய்வுபெற வேண்டும் என்ற பட்டிமன்றம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடைபெற்றது. சச்சின் ஓய்வு பெறுவதையே அவருடைய ரசிகர்கள் விரும்பினார்கள். சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்கமுடியாது எனப்பலர் கூறுகின்றனர். எதற்கும் ஒரு முடிவு வேண்டும். எனது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வருகிறது. எனது குடும்பத்தவருடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என ஆறுதல் கூறினார் சச்சின்.


                கிரிக்கெட் போட்டியிலிருந்து தான் ஓய்வுபெறுகிறாரே தவிர அவரது சாதனைகளும் சரித்திரங்களும் கிரிக்கெட்டில் நீண்டு நிலைத்திருக்கும். சச்சினை பலர் பாராட்டுகின்றனர். இணைந்து விளையாடியவர்கள் தமது அனுபவங்களை வெளிப்படுத்துகின்றனர். சச்சினுக்கு உரிய மதிப்பும் கௌரவமும் வழங்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு இந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்பாடு செய்தது.

                கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறும்போது கடைசிப் போட்டியிலன்று கௌரவம் வழங்குவது தான் நடைமுறை. டெஸ்ட் தொடரின் போது ஓய்வு பெற்றால் இறுதி நாளன்று அவருக்கு பிரியாவிடை கொடுப்பார்கள். சச்சினின் ஓய்வின் போது இந்த விதிமுறைகள் மாற்றமடைந்தன. அவர் விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களையும் பிரமாண்டமாக நடத்தி கௌரவமளித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை.

                அடுத்த சச்சின் இவர்தான். சச்சினின் சாதனையை இவர்தான் முறியடிப்பார் என்று சிலர் இப்போதே கட்டியம் கூறத்தொடங்கிவிட்டனர். சச்சின் என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் இடம் எதிர்காலத்தில் இட்டு நிரப்பப்படக் கூடியதல்ல. அந்த இடத்தை எட்டிப் பிடிப்பது மிக இலகுவானதல்ல. எவருடனும் முரண்படாது தனது மதிப்பையும் கௌரவத்தையும் உயர்த்திக் கொண்டவர்.

                அணியிலே இடம்பிடித்து ஓரளவு பிரகாசிக்கத் தொடங்கினால் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆசை அதிக வீரர்களின் மனதில் துளிர் விடுவது வழமை. தன்னைத் தேடி வந்த தலைமைப் பொறுப்பைத் தட்டிக்கழித்து டோனியை அடையாளம் காட்டினார். இந்திய அணித்தலைவராக ட்ராவிட் இந்தபோது துடுப்பாட்டத்திறன் குன்றியதால் தலைமைப் பதவியைத் துறக்க முடிவு செய்தார். அன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைரான சரத்யாதவிடம் தனது முடிவைத் தெரிவித்தார் ட்ராவிட்.

                இந்திய அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து ட்ராவிட் விலகிய போது சச்சினிடம் தலைமைப் பதவியைக் கையளிக்கலாம் எனச் சிபாரிசு செய்தார். இரண்டு முறை அணித்தலைவராக இருந்தும் பெரிதாக எதனையும் சாதிக்காத சச்சின் மூன்றாவது முறை தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்து டோனியை அடையாளம் காட்டினார். டோனியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க சரத்யாதவ் தயங்கினார். சச்சினின் சிபாரிசினால் டோனிக்கு தலைமைப் பதவி கிடைத்தது. அவரின் தீர்க்க தரிசனம் இன்று நிஜமாகி உள்ளது. டோனியின் தலைமையிலான கிரிக்கெட் அணி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

                சச்சினின் சாதனைப் பட்டியல் மிக நீளமானது. எல்லா நாடுகளுக்கும்  எதிராக‌  சதமடித்து சாதனை செய்த‌  சச்சின் கிரிக்கெட்டின் புகழ் பெற்ற  லண்டன் ஓவல் மைதானத்தில் சதம் அடிக்கவில்லை. நிறைவான அவரின் கிரிக்கெட் வாழ்வில் இது ஒரு குறையாக உள்ளது.

                சாதனைகள் என்றோ ஒரு நாள் முறியடிக்கப்படலாம். ஆனால் சச்சினின் சாதனைகள் அனைத்தையும் தனி ஒரு வீரரால் முறியடிக்க முடியாது. கிரிக்கெட் உள்ளவரை சச்சினின் சாதனைகள் நிலைத்து நிற்கும்.

ரமணி
சுடர் ஒளி 17/11/13

2 comments:

Anonymous said...

வணக்கம்

அவரின் புகழ் எங்கும் நிலைத்திருக்கட்டும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா