Tuesday, March 17, 2015

சாதிப்பாரா சங்ககார

உலகக்கிண்ண முதலாவதுகால் இறுதிப்போட்டியில் தென்.ஆபிரிக்காவும் இலங்கையும் மோத உள்ளன.பீ பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த  தென் ஆபிரிக்காவும்  பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த இலங்கையும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து  எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன.
இந்தப்போட்டியில் சங்ககாரவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தென் ஆபிரிக்காவுக்கு உள்ளதுதொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் சதம் அடித்து சாதனை செய்த  சங்ககார ஐந்தாவது சதத்தையும்    அடித்து சச்சினின் சாதனனையை   சமப்படுத்துவார் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


பீ பிரிவில் தென் ஆபிரிக்கா இரண்டாம் இடம் பிடித்தது. பிரிவில் இலங்கை மூன்றாம் இடம் பிடித்தது.இரண்டு நாடுகளும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து எட்டு புள்ளிகளைப்பெற்றுள்ளன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்று  முக்கிய போட்டிகளில் தோல்வியடையும் சோகம் இரண்டு அணிகளுக்கும் பொதுவானது.

2007ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிடமும் 2011 ஆம் ஆண்டு இந்தியாவிடமும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து சம்பியன் கனவை சிதறடித்தது இலங்கை. 2011ஆம் ஆண்டு  கால் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது  தென் ஆபிரிக்கா. உலகக்கிண்ண ரி20 இறுதிப்போட்டிகளில் சதம் அடித்த சங்ககார டில்ஷான், மஹேல ஆகியோர் அணியில்  இருப்பது இலங்கைக்கு  நம்பிக்கை யளிக்கிறது.

இரண்டு முறை 400 ஓட்டங்களையும் இரண்டு முறை 300 ஓட்டங்களையும் கடந்து துடுப்பாட்ட வலிமைய வெளிப்படுத்தி உள்ளது தென் ஆபிரிக்கா. .மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 400 ஓட்டங்களை கடந்ததைப் பாராட்டலாம்.சிம்பாப்வே அயர்லாந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிக்கு எதி ராக  300 ஓட்டங்க பெற்றதையும் அயர்லாந்துக்கு எதிராக 400 ஓட்டங்கள் கடந்ததையும் சாதனை என கருத முடியாது


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தலை எடுக்க முடியாது தோல்வியடைந்ததுஇந்தியா 300 00ட்டங்கள் அடிக்க 177 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் 222 ஓட்டங்கள் அடித்தது. எட்டிவிடும் இலக்கைத் துரத்திய தென் ஆபிரிக்கா 202 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது

நியூஸிலாந்து அவுஸ்திரேலியாஆகிய பலமான வற்றிடம் தோல்வியடைந்த இலங்கை ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ்,இங்கிலாந்து,,ஸ்கொட்லாந் ஆகிய நாடுகளுடனான போட்டியில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து ,இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியன இலங்கைக்கு எதிராக 300 ஓட்டங்களைத்தாண்டின.இங்கிலாந்தி 309 ஓட்டங்கள் அடிக்க விரட்டிச்சென்று 312ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா 376 ஓட்டங்கள் அடித்த ப்பொது 312 ஓட்டங்கள் அடித்து மிடட்டியது.இலங்கைக்கு எதிராக் மோன்று நாடுகள் 300 ஓட்டங்களை கடந்தன. கடைசி நான்கு போட்டி களிலும்    300 ஓட்டங்களை கடந்து வலிமையை  நிரூபித்தது இலங்கை

உலகக்கிண்ணப்போட்டியில் எட்டு சதம் அடித்து முன்னிலையில் உள்ளது இலங்கை. சங்ககார தொடர்ச்சியாக நான்கு சதம் அடித்து அச்சுறுத்தலாக உள்ளார்.ரூட்டும் மக்ஸ்வெலும் இலங்கைக்கு எதிராக சதம் அடித்துள்ளனர். த்ர்ன் ஆபிடிக்காவின் ஐந்து வீரர்கள் சதம் அடித்துள்ளனர். கோஹ்லி தென் ஆபிடிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார்.

துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.நெருக்கடியில் இருந்து மீளும் உத்தியில் இலங்கை முன்னணியில் உள்ளது.

No comments: