Thursday, March 19, 2015

அசத்துமா அவுஸ்திரேலியா?

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண கால் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று ரசிகர்கள அவுஸ்திரேலியா திருப்திப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஏ பிரிவில் நான்கு வெற்றி ஒரு தோல்வி  என 9 புள்ளிகளுடன் இரண்டாவ்து இடத்தில் உள்ளது அவுஸ்திரேலியா.மழை காரணமாக் பங்களாதேஷுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால்  ஒரு புள்ளி கூடுதலாகக் கிடைத்தது. இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான்,இலங்கை,ஸ்கொட்லாந்து ஆகியவற்றுடனான போட்டியில் வென்ற அவுஸ்திரேலியா நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்தியாவிடமும் மேற்கு இந்தியத்தீவுகளிடமும்  மிக மோசமாகத்தோல்வியடைந்த பாகிஸ்தான் சிம்பாவ்வே,ஐக்கிய அரபு  நாடுகள் தென் ஆபிரிக்கா, அயர்லாந்து ஆகியவற்றுடனான போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று 8 புள்ளீகளுடன் கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றது.


பலம் வாய்ந்த நியூஸிலாந்திடம் அவுஸ்திரேலியா தோல்வியடந்தது.இந்தியா மேற்கு இந்தியா ஆகியவற்றிfஅம்தோல்வியடைந்த பாகிஸ்தான்  தென் ஆபிரிக்காவை வென்றது ஏனைய நாடுகள் பலம் குறைந்த நாடுகள்.

இங்கிலாந்துக்கு எதிராக 324 ஓட்டங்களும் இலங்கைக்கு எதிராக் 376 ஓட்டங்களும் அடித்த அவுஸ்திரேலியாஆப்கனுக்கு எதிராக 417 ஓட்டங்கள் அடித்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விரட்டிய இலங்கை 312 ஓட்டங்களில் வீழ்ந்தது நியூஸிலாந்துக்கு எதிராம போட்டியில் 151 ஓட்டங்களில் அடங்கியது அவுஸ்திரேலியா.

ஐக்கிய அரபு க்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 339 ஓட்டங்கள் அடித்தது. இந்தியா 300 ஓட்டங்களும்மேற்கு இந்தியா 310 ஓட்டங்களும் அடித்தன.
அவுஸ்திரேலிய வீரர்களான்பிஞ்ச், டேவிட்வானர், மக்ஸ்வெலாகியோர் சதமடித்துள்ளனர், சிமித் 95 ஓட்டங்கள் அடித்து சதத்தை தவறவிட்டார். ஸ்ரக் ஜோன்சன் ஆகிய இருவரும் விக்கெட்களை வீழ்த்து நம்பிக்கையளித்துள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிராக அஹம ட் சதம் அடித்துள்ளார்.இன்சமாம் நான்கு முறை அரை சதம் கடந்துள்ளார்.
அவுஸ்திரேலியா  வலுவான நிலையில் உள்ளது.

No comments: