Saturday, January 9, 2016

சமாதானத்துக்கு எதிரான யுத்தம்


இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரமடைந்த நாளில் இருந்து முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பிரச்சினையில்  ஆரம்பமான யுத்தமேகம் இன்றுவரை தணியவில்லை. இந்திய பாகிஸ்தான் எல்லை என்றைக்குமே பதற்றம் நிறைந்ததாகவே இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உச்சக்கட்ட யுத்தத்தில் பங்களாதேஷ் பிறந்தது. கார்க்கில் எல்லையில் இந்தியாவுக்குள்  பாகிஸ்தான் படை ஊடுருவியது மீண்டும் ஒரு மோசமான விளைவைக்கொடுத்தது.
இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் பேச்சுவார்த்தை  நடத்துவதும் முறிவடைவதும் வழமையானது. பாகிஸ்தானில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அவ்வப்போது ஊடுருவி இந்தியாவை  அச்சுறுத்துகிறார்கள். இந்தியப்பிரதமர்  மோடி கடந்தவாரம் திடீரென பாகிஸ்தானுக்குச்சென்று  பிரதமர் நவாஸ்   செரீப்பைச் சந்தித்தது சிறிது நம்பிக்கையை ஊட்டியது. இம்மாத  இறுதியில் இருநாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பது எனத்திட்டமிடப்பட்டது. அந்த நம்பிக்கையை பதன்கோட் விமானப்படைத்தளம் மீதான  தாக்குதல் தகர்த்தது.
பஞ்சாப் மாநில எல்லையான பதன்கோட் விமானப்படைத்தலத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு இராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தியஏழு    பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். புது வருடத்தை வரவேற்க உலகம் தயாராக இருந்தபோது இந்தியாவை சீர்குலைக்க  தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இரண்டு நாட்டு அரசுகளும்  பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தவேளை அதனைச் சீர்குளைக்கத் தீவிரவாதிகள் திட்டம் தீட்டினர்.

தீவிரவாதிகளின் திட்டத்தை இந்திய புலனாய்வு மோப்பம் பிடித்து அறிந்ததனால் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 30 ஆம்  திகதி பஞ்சாப்பின் கதுவாகுர்டாஸ்பூர்   வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்தனர். டிசம்பர் 31 திகதி  கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தமது  இலக்கை நோக்கி பயணமானார்கள். வாகனம் பழுதடைந்தமையினால் வீதியில் வந்த கரை மறித்து காரில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி  கடத்தினர். தீவிரவாதிகள் கடத்தியது கதுவாகுர்டாஸ்பூர் எஸ்.பி சல்வீந்தர் சிங்கின்கார். சல்வீந்தர் சிங்கையும் அவரது காவலர்களையும் நடுவழியில் இறக்கிவிடு  காரைக்கடத்தினர். அவருடைய தொலைபேசி மூலம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் பேசினார். ஒரு பயங்கரவாதியின் தயார் சாகமுன் சாப்பிடு எனச்சொன்னதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


பயங்கரவாதிகளின் தொலைபேசிகள் மூலம் அவர்களது நடமாட்டத்தைத் துல்லியமாக அறிந்து கொண்ட பாதுகப்புதரப்பு உஷாரடைந்தது. ஜனவரி 2 ஆம் திகதி  பதன்கோட்  விமானப்படைத் தளத்துனுள் நுழைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டுக்கொண்டு  முன்னேறினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதலில் மூன்று இராணுவவீரர்கள்   மரணமடைந்தனர்.  மூன்று நாட்கள் நடந்த தேடுதலில் ஏழு பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப் பட்டன. காயமடைந்த மேலும் நான்கு இராணுவவீரர்கள்  இறந்ததால் இறந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்தது. 
பதன்கோட் விமானப் படைத்தளம்  மீதான தாக்குதலுக்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் பொலிஸாரம் உதவியிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். போலிஸ் அதிகாரி  சல்விந்தர் சிங்கின் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரது கடத்தல் நாடகம் பொய் என்ற சந்தேகம் உள்ளது.  தனது எதிரிகளின்  பழிவாங்கல் என கூறியுள்ள சல்வேந்தர்சிங் விசாரணையில் உண்மை தெரியவரும் என்கிறார்.
 அண்மையில் கேரள உளவாளியான முன்னாள்  விமானப்படையின் முன்னாள்  அதிகாரியான ரஞ்சித் மீதும் சந்தேகம் உள்ளது. பேஸ் புக் மூலம் ரஞ்சித்துடன் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ இரகசியங்களை ரஞ்சித் கொடுத்துள்ளார். இதனை மோப்பம் பிடித்த இந்திய புலனாய்வாளர்கள் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்..பஞ்சாப்பில் கடமையாற்றிய போது பலமுறை பதன்கோட் விமானப்படைத்  தளத்துக்கு சென்று வந்ததாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். விமானப் படைத்தளம் பற்றிய துல்லியமான  தகவல்களை ரஞ்ச்சுத் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில்விசரனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காமல்வெல்த் துப்பாக்கி சுடும்போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் இந்தியாவுக்கு  பெற்றுக்கொடுத்த  சுபேதார் பகேத் சிங்க [51 ] மரணமானது இராணுவத்துக்கு மட்டுமலல் துப்பாக்கி சுடும் சங்கத்துக்கு பெரிசப்பு என அச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
திருமணமாகி 45 நாட்களில் நாட்டுக்காக தனது உயிரைத்துறந்த குருஷேவக் சிங்குக்காக ஹர்நாலா கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தின் அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய இக்கிராமத்தில் உள்ள ஏழை  விவசாயி சுசாசிங் தனது இரண்டு மகன்களையும் இராணுவத்துக்கு அர்ப்பணித்துள்ளார். இளைய மகனான குருஷேவக் சிங் தனது வழிகாட்டியாக பகவத் சிங்கை ஏற்றுக்கொண்டவர்.
திருமண  வளையல்களைக் கழற்றாமல் கணவனின் வரவுக்காக காத்திருந்தாள், மனைவி ஐபிரீத் கவுர். வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் அழைத்தபோது பின்னர் கதைப்பதாக எஸ்.எம்.எஸ்  அனுப்பினர். கதைக்கமலே  போய்விட்டார் என அவரது புதியமனைவி கண்ணீருடன்  சொன்னாள. பதன்கோட் தாக்குதலில் குருஷேவக் சிங் இறந்துவிட்டதாக அவரது நண்பர்கள்  கூறியபோது மனைவி  நம்பவில்லை. பெப்ரவரி  5ஆம் திகதி ஐபிரீத் கவுரின் பிறந்த நாள் .என்பதால் ஜனவரி 13 திகதி விடுமுறையில் வருவதாக குருஷேவக் சிங் அறிவித்திருந்தார். கணவனின் வருகைக்காக காத்திருந்த இளம் மனைவி அவரின் சடலத்தி கண்டு பரிதவித்தாள்.
பதன்கோட் தாக்குதலில் மரணமான  51 வயதான் சஞ்ஜீவன் சிங் ராணா  ஓய்வு பெற்றபின்பும் இராணுவத்தில் கடமையாற்றினர். இவரது குடும்பம் இராணுவத்துக்கு அர்ப்பணம் செய்யப்படாது. குடும்பத்தில் ஒருவர் இராணுவத்தில் பணியாற்றுவது வழமை.
.
 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இந்திய பாகிஸ்தான் பெச்சுவர்த்தி முடங்கியது மும்பை தாக்குதலுக்கு  பாகிஸ்தானில் திட்டம் தீட்டப்பட்டது என இந்திய கூரியபோது பாகிஸ்தான் மறுத்தது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான கசாப் உயிருடன் பிடிபட்டதனால் தாக்குதலுக்கு மூளையாக  செயற்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரியவந்தது.
பதன்கோட்டில் தாக்குதல் நடத்திய அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆகையினால் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாது.
இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போது  ஆரம்பமாகும் முன்னரே  முடிவு கட்டப்பட்டுள்ளது.இந்திய பாகிஸ்தான் சமாதனத்தை விரும்பாத சக்திகள் இன்னமும் வலுவுடன் இருக்கின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்ற பயங்கரவாதிகளிடம் உள்ளது
ரமணி
தமிழ்த்தந்தி
10/01/16

No comments: