Monday, March 25, 2019

ஹைதராபாத்தை விரட்டி வென்றது கொல்கட்டா


ஐபிஎல் தொடரின் இரண்டாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கட்டா நைற் ரைடர்ஸ் ஆகியவறுக்கிடையே போட்டி கொல்கட்டா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் மூன்று விக்கெற்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது. கடினமான இலக்கை விரட்டிய கொல்கட்டாவுக்கு  நான்கு விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் அடித்து  ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது. கடைசி மூன்று ஓவர்களில் ரசல்ஸ், சுப்பமன் ஜோடி அதிரடியாக விளையாடி ஹைதராபாத்திடம் இருந்து வெற்றியைப் பறித்தார்கள். கடைசி 11 பந்துகளில் 39 ஓட்டங்கள்  அடித்த ரசல்ஸ் ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா கப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பந்தைச் சேதப்படுத்தியதால் விளையாடத் தடை விதிக்கப்பட்ட டேவிட் வானர் ஹைதராபாத்துக்காக களம் இறங்கினார். ஹைதராபாத் அணித் தலைவ்ர் கேன் வில்லியம்சன் காயமடைந்ததால் புவனேஸ்வர் குமார் தலைமையேற்றார்.


  ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக களம் இறங்கிய வானர், பேர்ஸ்டோவ் ஜோடி நம்பிக்கையளித்தது.  118 ஓட்டங்கள் எடுத்தபோது 39 ஓட்டங்களில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். வானருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். தடை தாண்டிவந்த வானர் 53 பந்துகளில் மூன்று சிக்ஸர், ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய யூசுப் பதான் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.விஜய் சங்கர் ஆட்டமிழக்காது 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் அடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். மணீஸ் பாண்டே ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்த ஹைதராபாத் 181 ஓட்டங்கள் எடுத்தது. ரசல் இரண்டு விக்கெற்களையும் பியூஸ் சாவ்ல ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

182 என்ற கடினமான இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா ஆரம்பத்தில் தடுமாறியது. ஆரம்ப்த் துடுப்பாட்ட வீரரான கிறிஸ்லின் ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.  ஆரம்பத்தில் தடுமாறிய நிதுஷ் ரானா, ரொபின் உத்தப்பா ஜோடி பின்னர் அதிரடி காட்டியது. இவர்கள் இருவரும் 80 ஓட்டங்கள் எடுத்தபோது உத்தப்பா 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் இரண்டு ஓட்டங்களுடன் வெளியேறினார். ரானாவுடன் ரசல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய ராணா 47 பந்துகலில் மூன்று சிக்ஸர் எட்டு பவுண்டரி அடங்கலாக 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

15.3 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 118 ஓட்டங்கள் எடுத்தபோது களம் இறங்கிய ரசல், சுப்மன் ஜோடி ஹைதராபாத்தின் வெற்றிக் கனவைத் தகர்த்தது.  கடைசி மூன்று ஓவகளில் முறையே  19.21.14 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார்கள். ரசல் சந்தித்த 11 பந்துகளி, முறையே 6,6,4,1,4,6,4,0,6,1 ஓட்டங்கள் அடித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரசல் நான்கு சிக்ஸர் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்கள் அடித்தார். ஷுப்மன்கில் 18 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்ட  நாயகன் விருது ரசலுக்ல்கு வழங்கப்பட்டது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்த் ஹைதராபாத் இம்முறை முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது.



No comments: