Wednesday, March 27, 2019

ஐபிஎல்லை அசிங்கப்படுத்திய அஸ்வின்


இந்திய கிரிக்கெற் போட்டிகளின் பிரதான பந்துவீச்சாளராக விளங்கிய அஸ்வின் மோசடியான முறையில் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச்செய்து விளையாட்டின் மாண்பை குழி தோண்டி புதைத்துள்ளார். அஸ்வினின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி  184 ஆட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ்  12 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை இழந்து 108  ஓட்டங்கள் எடுத்தது. ஜோஸ் பட்லரை அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியதால் தோல்வியடைந்து விடுவோமோ எனப் பயந்த அஸ்வின் 13.5 ஆவது ஓவரில் எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் மன்கட் முறையில் அவரை ஆட்டமிழகச் செய்தார்.

பந்து வீச்சாளர் பந்தை வீசுமுன்னர் அவருக்கு அருகே நிற்கும் துடுப்பாட்ட வீரர்  கிரீஸை விட்டு வெளியேறினால் அவரை ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச்செய்வதே மன்கட் அவுட் எனப்படும். இந்த விதியை கிறிக்கெற் உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். 1947 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் சகல துறை வீரரான பில் பிரவுணை எச்சரிக்கை செய்தபின் இந்திய பந்து வீச்சாளரான மன்கட் என்பவர் ஆட்டமிழக்கச்செய்தார். ரன் அவுட் ஆனால் அந்த பந்து கணக்கில் எடுக்கப்படமாட்டாது. ரன் அவுட் இல்லை என்றால்  கணக்கில் சேர்க்கப்படும்.

இதில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அஸ்வினும் ஜோஸ் பட்லரும் இதற்கு முன்னர் இலங்கையில் மன்கட் சர்ச்சியில் சிக்கினார்கள்.  2011 ஆம் ஆண்டு இலங்கை வீரர் திரிமானேயை மன்கட் முறையில் அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்தார். இன்றைய இந்திய கப்டனான சேவக் மூத்த வீரர்களுடன் கலந்து பேசி அந்த ஆட்டமிழப்பை வாபஸ் வாங்கி திரிமானேயயை விளையாட அனுமதித்தார். எதிரணிக்க் கப்டன் இந்த முடிவை மாற்றலாம். கப்டனான அஸ்வின் முடிவெடுத்தபடியால் எதுவும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது.
2014 ஆம் ஆண்டு இலங்கை வீரர் சுசித்ர செனநாயக்கவினால் மன்கட் முறையில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.

No comments: